புது வரவு :
Home » , » சரணடைகிறேன்

சரணடைகிறேன்

என் நிர்வாண தேசத்தின்
மன்னனாக முடி சூட்டிக் கொண்ட
மறுநாள் இரவே
என்னை சிறையிலிட்டவன் நீ

இத்தனை வருடங்களாக
சுமந்து கொண்டிருக்கும்
இளமைதனை உன்னிடம்தான்
இறக்கி வைக்கிறேன்..


ஆடைகளிடம்
அடிமைப் பட்டிருக்கும் 
என் இளமை தனை
விடுதலை செய்ய வேண்டி 
கண்களால் விண்ணப்பித்தேன்..
நீ விடுவித்த அந்நொடியே 
என் இளமை
உன்னிடத்தில் அடிமையாகிறது!..


உன் விரல்களே
என் உடைகளைத் திறக்கும்
சாவிகள் என்றிருந்தேன்..
உணர்ச்சிகளுக்கும் அவைதான்
திறப்புவிழா நடத்துகிறது..

குமரியாய் வந்தவளை
குழந்தையாக்கினாய்..


நீ அவிழ்த்தெறிந்த
என் ஆடைகள் உன்னை
சரமாரியாக திட்டிக் கொண்டிருக்க
உனது ஆடைகளைக் கழட்டி
அதனிடம் போட்டாய்.. 
அவை மாற்றி மாற்றி
அணிந்துகொள்கின்றன..
அஃறிணைகளும் 
அதற்குத்தான் அலைபாய்கிறது..

ஆரம்பமானது
அந்தரங்க அத்தியாயம்..

பக்கங்களைப்
புரட்டுவது போல-என்
வெட்கங்களைப் புரட்டுகிறாய்..
அதை மூச்சுக் காற்றினால்
மெதுவாக விரட்டுகிறாய்..


முத்த அம்புகளை எய்தி
என்னை வீழ்த்திவிடுகிறாய்..
மத்த எதையும் நினைத்து 
நேரத்தை நான் தாழ்த்த்வில்லை..

என்னை உனக்கு கொடுக்க 
முற்படுவதற்குள் நீயே
என்னை எடுத்துக் கொள்கிறாய்..

நிர்வாண தேசத்தை
முழுவதுமாய் 
ஆட்சி புரிய ஆரம்பிக்கிறாய்..
அவற்றை வார்த்தைகளில்
அடக்கவே முடியாது..
அவை அடங்கவும் அடங்காது.
முடிவில் சரணடைந்தேன்..


சரணடையும் தருவாயில்
பிறவிப் பயனை அடைவது என்னவோ
அந்தரங்கப் போரில் மட்டும்தான்..
-------------------------------------------------
வாசித்துவிட்டீர்களா..உயிரைத்தின்று பசியாறு
                                              ஈரோட்டு சூரியன்
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

30 comments:

  1. அந்தரங்களை ஆபாசமின்றி
    மிக அழகாகக் காட்டிப் போகும்
    அருமையான பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //பக்கங்களைப்
    புரட்டுவது போல-என்
    வெட்கங்களைப் புரட்டுகிறாய்..
    அதை மூச்சுக் காற்றினால்
    மெதுவாக விரட்டுகிறாய்..//

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அந்தரங்கப் போர் பற்றி அந்த அங்க வர்ணனை சேர்த்துச் சொல்லும் அருமையான அழகியற் கவிதையினைத் தந்திருக்கிறீங்க.



    அஃறிணைகளும்
    அதற்குத்தான் அலைபாய்கிறது..
    //
    இது என் மனதைக் கவர்ந்துள்ள கவிதையின் மையச் சொல் என்று கூறலாம்! அருமையான சொற் கோர்வைகள்.

    ReplyDelete
  4. நண்டு@நொரண்டு/ரமணி/ரியாஸ்/நிரூபன்/

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  5. அருமையான பதிவு வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. நன்றி..
    /தனசேகரன்/

    ReplyDelete
  7. வாங்க சசி..முகவரிய கண்டு பிடிச்சுட்டீங்களா..ஹி.ஹி.ஹி

    ReplyDelete
  8. ஒவ்வோறு பெண்ணுக்குள்ளும் புழுங்கிக்கிடக்கும் யுகங்களின் வரலாறு...


    அழகிய கவிதை..
    வாழ்த்துக்கள்.. மதுமதி

    ReplyDelete
  9. "அஃறிணைகளும்
    அதற்குத்தான் அலைபாய்கிறது..."

    இந்த வரிகள் மிகவும் ஆழமானவை....

    ReplyDelete
  10. ஆஹா ஆபாசமில்லாத விரசமில்லாமல் கவிதையாக அந்தரங்கம், அசத்தல் கவிஞரே வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  11. ஆபாசமோ அருவருப்போ இன்றி அருமையாய் வந்திருக்கிறது கவிதை.

    ReplyDelete
  12. த.ம.8.
    கத்தி முனையில் நடக்கும் வேலையை லாவகமாகச் சிறப்பாகச் செய்து விட்டீர்கள்.நன்று.

    ReplyDelete
  13. உயர்திணையின் காமம் அஃறிணைக்கும் ஆசை வருகின்றதோ! ஆபாசமில்லாமல் உறவின் அழகை வடிக்கும் பாடல்!

    ReplyDelete
  14. கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
    ஒவ்வோறு பெண்ணுக்குள்ளும் புழுங்கிக்கிடக்கும் யுகங்களின் வரலாறு...


    அழகிய கவிதை..
    வாழ்த்துக்கள்.. மதுமதி.

    நன்றி //சௌந்தர்//

    ReplyDelete
  15. சேகர் கூறியது...
    "அஃறிணைகளும்
    அதற்குத்தான் அலைபாய்கிறது..."

    இந்த வரிகள் மிகவும் ஆழமானவை....
    -------------------------------------
    எனக்கும் பிடித்த வரிகள் அது..
    நன்றி சேகர்..

    ReplyDelete
  16. MANO நாஞ்சில் மனோ கூறியது...
    ஆஹா ஆபாசமில்லாத விரசமில்லாமல் கவிதையாக அந்தரங்கம், அசத்தல் கவிஞரே வாழ்த்துக்கள்...!!!
    ------------------------------------
    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..
    //நாஞ்சில் மனோ//

    ReplyDelete
  17. ரஹீம் கஸாலி கூறியது...
    ஆபாசமோ அருவருப்போ இன்றி அருமையாய் வந்திருக்கிறது கவிதை.
    -------------------------------------நன்றி..தோழர்..

    ReplyDelete
  18. veedu கூறியது...
    உயர்திணையின் காமம் அஃறிணைக்கும் ஆசை வருகின்றதோ! ஆபாசமில்லாமல் உறவின் அழகை வடிக்கும் பாடல்!
    ------------------------------------
    நன்றி சுரேஷ்..

    ReplyDelete
  19. துரைடேனியல் கூறியது...
    Vaarthaigalin Nadanam arputham.
    -------------------------------------
    நன்றி..துரை டேனியல்..

    ReplyDelete
  20. ஹேமா கூறியது...
    *ம்*...!
    -------------------------------------
    நன்றி..ஹேமா..

    ReplyDelete
  21. பக்கங்களைப் புரட்டுவதைப் போல் வெட்கங்களைப் புரட்டுகிறாய்னு போகிற போக்கில சொல்லீட்டீங்க...

    செம..பாஸ்..!!!! ரசித்துப் படித்தேன்!

    ReplyDelete
  22. ////உன் விரல்களே
    என் உடைகளைத் திறக்கும்
    சாவிகள் என்றிருந்தேன்..
    உணர்ச்சிகளுக்கும் அவைதான்////

    உணர்சிகரமான
    அருமையான வரிகள் நண்பரே...

    ReplyDelete
  23. அகப்பொருளில் வந்த கவிதை அகத்தில் தனியிடம் பிடித்தது. அழகு மிளிரும் வரிகள் மயக்கின கவிஞரே... எழுதிய உமக்கு வைர மோதிரம் அணிவிக்க ஆசையிருந்தும் வசதியற்றவனாய்ப் போனதில் அளிக்கிறேன் உம் கரத்துக்கு- அன்பு முத்தங்களை!

    ReplyDelete
  24. dheva கூறியது...
    பக்கங்களைப் புரட்டுவதைப் போல் வெட்கங்களைப் புரட்டுகிறாய்னு போகிற போக்கில சொல்லீட்டீங்க...

    செம..பாஸ்..!!!! ரசித்துப் படித்தேன்!

    அப்படியா மகிழ்ச்சி தோழர்..நன்றி..

    ReplyDelete
  25. கணேஷ் கூறியது...
    அகப்பொருளில் வந்த கவிதை அகத்தில் தனியிடம் பிடித்தது. அழகு மிளிரும் வரிகள் மயக்கின கவிஞரே... எழுதிய உமக்கு வைர மோதிரம் அணிவிக்க ஆசையிருந்தும் வசதியற்றவனாய்ப் போனதில் அளிக்கிறேன் உம் கரத்துக்கு- அன்பு முத்தங்களை!

    நீங்கள் தளம் வந்து வாசித்து கருத்திடுதலே ஆயிரம் வைர மோதிரத்துக்கு சமம்..உங்கள் அன்பு முத்தங்களை ஏற்றுக்கொள்கிறேன்..

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com