புது வரவு :
Home » , » சந்தேகம்

சந்தேகம்

எதற்கெடுத்தாலும்
சந்தேகப்படுவதால்
நானும் மனிதன்தானா என
என்மீதே எனக்கு
சந்தேகம் வந்துவிட்டது..


நானும் நிற்காமல்
ஓடிக்கொண்டேயிருக்கிறேன்..
நாளும் ஓடிக்கொண்டேயிருக்கிறது..

நானும் தினம் தினம்
செத்துப் பிழைக்கிறேன்..
நாளும் தினம் தினம்
செத்துப் பிழைக்கிறது..

மயான அமைதி வேண்டும்..
ஏங்கித் தவிக்கும்
மனதிற்கு தெரியவில்லை..
அப்படியானால்
மயானத்திற்குதான்
செல்ல வேண்டும் என்பது..

எதுக்காகப் பிறந்தேன் 
என தெரியாததைப் போலவே
எதுக்காக வாழ்கிறேன்
என தெரியாமலே வாழ்கிறேன்..


உலகம்
என்னையும் தாங்கிதான்
சுற்றிக் கொண்டிருக்கிறது..
நானும் உலகத்தை
சுற்றிக் கொண்டுதானிருக்கிறேன்..
இருவருமே கடமைகளைச்
சரியாகத்தான் செய்கிறோம்..

தேடித் தேடி
பயணித்துக்கொண்டேயிருக்கிறேன்..
தேடியது இன்னும் கிட்டவில்லை..
நான் தேடியது 
என்னைத் தேடிக் கொண்டிருக்கிறது
என நினைக்கிறேன்...
நேருக்கு நேர்
சந்திக்கலாம்
சந்திக்காமலும் போகலாம்..
----------------------------------
வாசித்துவிட்டீர்களா..
மலையாளியின் கொலவெறி(கொக்கரக்கோ)
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

45 comments:

  1. //இருவருமே கடமைகளைச்
    சரியாகத்தான் செய்கிறோம்..//
    உண்மையா ?.

    ReplyDelete
  2. மயானத்தில் தான் மயான அமைதியா ?
    ஒரு விதத்தில் உண்மைதான்.
    நீங்கள் தேடுவதை நேருக்கு நேர்
    கண்டிப்பாக சந்திப்பீர்கள் . கவலை வேண்டாம்.

    ReplyDelete
  3. //மயான அமைதி வேண்டும்..
    ஏங்கித் தவிக்கும்
    மனதிற்கு தெரியவில்லை..
    அப்படியானால்
    மயானத்திற்குதான்
    செல்ல வேண்டும் என்பது..

    //

    அருமையான வரிகள்

    நல்லா எழுதுறீங்க.. கருவினை எங்கு தான் தேடுவீர்களோ :-)

    ReplyDelete
  4. அருமையான பதிவு
    வாழ்க்கையின் கண்ணமூச்சி ஆட்டத்தை
    மிக அழகாக விளக்கிப் போகிறீர்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
    //இருவருமே கடமைகளைச்
    சரியாகத்தான் செய்கிறோம்..//
    உண்மையா ?.


    உங்களுக்கும் சந்தேகமா..
    நன்றி..

    ReplyDelete
  6. ஸ்ரவாணி கூறியது...
    மயானத்தில் தான் மயான அமைதியா ?
    ஒரு விதத்தில் உண்மைதான்.
    நீங்கள் தேடுவதை நேருக்கு நேர்
    கண்டிப்பாக சந்திப்பீர்கள் . கவலை வேண்டாம்..

    நன்றி..நன்றி..

    ReplyDelete
  7. ஆமினா கூறியது...
    //மயான அமைதி வேண்டும்..
    ஏங்கித் தவிக்கும்
    மனதிற்கு தெரியவில்லை..
    அப்படியானால்
    மயானத்திற்குதான்
    செல்ல வேண்டும் என்பது..

    //

    அருமையான வரிகள்

    நல்லா எழுதுறீங்க.. கருவினை எங்கு தான் தேடுவீர்களோ :-)

    இந்த வரிகள் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி சகோ..
    நன்றி..

    ReplyDelete
  8. நேருக்கு நேர் சந்திக்கும் போது வாழ்வு அர்த்தமற்றதாய் மாறிவிடுமோ..!தேடல் கவிதை சிறப்பு.

    ReplyDelete
  9. என்னவென்று சொல்வது - மொத்தத்தில் அருமை அருமை

    ReplyDelete
  10. நிதர்சனம் மாப்ள!

    ReplyDelete
  11. \\தேடித் தேடி
    பயணித்துக்கொண்டேயிருக்கிறேன்..
    தேடியது இன்னும் கிட்டவில்லை..
    நான் தேடியது
    என்னைத் தேடிக் கொண்டிருக்கிறது
    என நினைக்கிறேன்...
    நேருக்கு நேர்
    சந்திக்கலாம்
    சந்திக்காமலும் போகலாம்\\

    சந்திக்கும் வேளையில் சக தேடல் இதுவென அடையாளங்காண இயலாமலும் போக நேரலாம்.

    வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கச் செய்யும் வலிமையான வரிகள்.. பாராட்டுகள்..

    ReplyDelete
  12. மது @ தேடல்ல இருக்கீங்க பாஸ்...!

    தேடும் பொருளேதான் தேடுது...! தேடலை நிறுத்தும் போது...பொருளே நாமதான்னு உணர முடியும்...!

    உணர்வுகளைப் பகிர்ந்த விதம் அருமை.. மது!

    ReplyDelete
  13. நேருக்கு நேர்
    சந்திக்கலாம்
    சந்திக்காமலும் போகலாம்..

    >>>
    இந்த சஸ்பென்ஸ் புள்ளியில்தான் வாழ்க்கையின் ஆதாரம் அடங்கியுள்ளது சகோ

    ReplyDelete
  14. தேடித் தேடி
    பயணித்துக்கொண்டேயிருக்கிறேன்..
    தேடியது இன்னும் கிட்டவில்லை..
    நான் தேடியது
    என்னைத் தேடிக் கொண்டிருக்கிறது
    என நினைக்கிறேன்...
    நேருக்கு நேர்
    சந்திக்கலாம்
    சந்திக்காமலும் போகலாம்..///

    இன்றைய வாழ்க்கை இப்படித்தான் உள்ளது.... பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  15. ""நானும் தினம் தினம்
    செத்துப் பிழைக்கிறேன்..
    நாளும் தினம் தினம்
    செத்துப் பிழைக்கிறது..""

    எளிய நடையில்
    அரிய செய்திகளை
    அறியச் செய்தீர்கள்
    அருமை

    ReplyDelete
  16. தேடுதல் ஒரு தனி சுகம் தான் நண்பரே.
    அதிலும் அமைதி தேடுதல்
    ஒரு நீள் பரீட்சை...
    தொடரட்டும் தேடுதல்கள்......

    ReplyDelete
  17. உங்க புனைப்பெயர் டவுட்டு டேவிட்டா?

    ReplyDelete
  18. தேடுதலிலேயே தான் வாழ்க்கை இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் என்றேனும் ஒருநாள் சந்தித்து விடுவோம் என்ற நம்பிக்கைகளைச் சுமந்து! நல்ல கவிதை கவிஞரே... நன்றி.

    ReplyDelete
  19. veedu கூறியது...
    நேருக்கு நேர் சந்திக்கும் போது வாழ்வு அர்த்தமற்றதாய் மாறிவிடுமோ..!தேடல் கவிதை சிறப்பு.

    நன்றி தோழர்..

    ReplyDelete
  20. மனசாட்சி கூறியது...
    என்னவென்று சொல்வது - மொத்தத்தில் அருமை அருமை..

    அப்படியா மகிழ்ச்சி தோழர்..

    ReplyDelete
  21. விக்கியுலகம் கூறியது...
    நிதர்சனம் மாப்ள!

    நன்றி விக்கி..

    ReplyDelete
  22. கீதா கூறியது...
    \\தேடித் தேடி
    பயணித்துக்கொண்டேயிருக்கிறேன்..
    தேடியது இன்னும் கிட்டவில்லை..
    நான் தேடியது
    என்னைத் தேடிக் கொண்டிருக்கிறது
    என நினைக்கிறேன்...
    நேருக்கு நேர்
    சந்திக்கலாம்
    சந்திக்காமலும் போகலாம்\\

    சந்திக்கும் வேளையில் சக தேடல் இதுவென அடையாளங்காண இயலாமலும் போக நேரலாம்.

    வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கச் செய்யும் வலிமையான வரிகள்.. பாராட்டுகள்..

    நன்றி சகோ..

    ReplyDelete
  23. dheva கூறியது...
    மது @ தேடல்ல இருக்கீங்க பாஸ்...!

    தேடும் பொருளேதான் தேடுது...! தேடலை நிறுத்தும் போது...பொருளே நாமதான்னு உணர முடியும்...!

    உணர்வுகளைப் பகிர்ந்த விதம் அருமை.. மது!

    நிச்சயமா தோழர்..நன்றி.

    ReplyDelete
  24. ராஜி கூறியது...
    நேருக்கு நேர்
    சந்திக்கலாம்
    சந்திக்காமலும் போகலாம்..

    >>>
    இந்த சஸ்பென்ஸ் புள்ளியில்தான் வாழ்க்கையின் ஆதாரம் அடங்கியுள்ளது சகோ..

    உண்மைதான் சகோ..

    ReplyDelete
  25. தமிழ்வாசி பிரகாஷ் கூறியது...
    தேடித் தேடி
    பயணித்துக்கொண்டேயிருக்கிறேன்..
    தேடியது இன்னும் கிட்டவில்லை..
    நான் தேடியது
    என்னைத் தேடிக் கொண்டிருக்கிறது
    என நினைக்கிறேன்...
    நேருக்கு நேர்
    சந்திக்கலாம்
    சந்திக்காமலும் போகலாம்..///

    இன்றைய வாழ்க்கை இப்படித்தான் உள்ளது.... பகிர்வுக்கு நன்றி..

    ஆமாம் தோழர்..நன்றி..

    ReplyDelete
  26. A.R.ராஜகோபாலன் கூறியது...
    ""நானும் தினம் தினம்
    செத்துப் பிழைக்கிறேன்..
    நாளும் தினம் தினம்
    செத்துப் பிழைக்கிறது..""

    எளிய நடையில்
    அரிய செய்திகளை
    அறியச் செய்தீர்கள்
    அருமை//

    நன்றி தோழர்..

    ReplyDelete
  27. மகேந்திரன் கூறியது...
    தேடுதல் ஒரு தனி சுகம் தான் நண்பரே.
    அதிலும் அமைதி தேடுதல்
    ஒரு நீள் பரீட்சை...
    தொடரட்டும் தேடுதல்கள்......

    ஆமாம்.தேடுதல் தனி சுகம்தான் தோழர்..நன்றி.

    ReplyDelete
  28. சி.பி.செந்தில்குமார் கூறியது...
    உங்க புனைப்பெயர் டவுட்டு டேவிட்டா?

    உங்களுக்கும் டவுட்டா?

    ReplyDelete
  29. கணேஷ் கூறியது...
    தேடுதலிலேயே தான் வாழ்க்கை இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் என்றேனும் ஒருநாள் சந்தித்து விடுவோம் என்ற நம்பிக்கைகளைச் சுமந்து! நல்ல கவிதை கவிஞரே... நன்றி.

    சந்தித்து விடுவோம் விடுங்கள்..மகிழ்ச்சி ஐயா நன்றி..

    ReplyDelete
  30. உலகம்
    என்னையும் தாங்கிதான்
    சுற்றிக் கொண்டிருக்கிறது..
    மிகச்சரியாக சொன்னீர்கள் எல்லோர் மனதிற்குமான போராட்டமே .

    ReplyDelete
  31. வாழ்க்கையே ஒரு தேடல்தான்!
    அருமை!

    ReplyDelete
  32. அருமையான அசத்தலான படைப்புகள்

    ReplyDelete
  33. //மயான அமைதி வேண்டும்..
    ஏங்கித் தவிக்கும்
    மனதிற்கு தெரியவில்லை..
    அப்படியானால்
    மயானத்திற்குதான்
    செல்ல வேண்டும் என்பது..//
    வலி மிகுந்த வரிகள்.அருமை.வலிகள் மட்டுமே வாழ்க்கையல்ல சகோதரா.வலிகளைத் தாண்டியும் எங்கோ ஓர் தொலைவில் வாழ்வின் இனிமையும் காத்திருக்கிறது.

    ReplyDelete
  34. Thedalukkana Thedal. Enakku romba piditha kavithai.
    TM 14.

    ReplyDelete
  35. நீங்கள் தேடுவதை கண்டிப்பாக சந்திப்பீர்கள் ... புத்தாண்டு வாழ்த்துகள்...

    ReplyDelete
  36. நானும் தினம் தினம்
    செத்துப் பிழைக்கிறேன்..
    நாளும் தினம் தினம்
    செத்துப் பிழைக்கிறது..

    மயான அமைதி வேண்டும்..
    ஏங்கித் தவிக்கும்
    மனதிற்கு தெரியவில்லை..
    அப்படியானால்
    மயானத்திற்குதான்
    செல்ல வேண்டும் என்பது..

    சந்தேகம் கொள்வதனால் ஏற்படும்
    பேரிழப்பு என்னவென மிகவும்
    தெளிவுபட இக் கவிதைமூலம்
    உணர்த்தியுள்ளீர்கள் .அருமை!..
    வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  37. sasikala கூறியது...
    உலகம்
    என்னையும் தாங்கிதான்
    சுற்றிக் கொண்டிருக்கிறது..
    மிகச்சரியாக சொன்னீர்கள் எல்லோர் மனதிற்குமான போராட்டமே .

    ஆம் சகோ..நன்றி..

    ReplyDelete
  38. சென்னை பித்தன் கூறியது...
    வாழ்க்கையே ஒரு தேடல்தான்!
    அருமை!

    10 ஜனவரி, 2012 8:08 பிற்பகல்


    ரஹீம் கஸாலி கூறியது...
    அருமையான அசத்தலான படைப்புகள்..


    நன்றி..
    /சென்னை பித்தன்/ரஹீம்/

    ReplyDelete
  39. சித்தாரா மகேஷ். கூறியது...
    //மயான அமைதி வேண்டும்..
    ஏங்கித் தவிக்கும்
    மனதிற்கு தெரியவில்லை..
    அப்படியானால்
    மயானத்திற்குதான்
    செல்ல வேண்டும் என்பது..//
    வலி மிகுந்த வரிகள்.அருமை.வலிகள் மட்டுமே வாழ்க்கையல்ல சகோதரா.வலிகளைத் தாண்டியும் எங்கோ ஓர் தொலைவில் வாழ்வின் இனிமையும் காத்திருக்கிறது.

    அதைத்தான் சகோ தேடிப் பிடிக்க வேண்டுயதாய் இருக்கிறது.நன்றி..

    ReplyDelete
  40. துரைடேனியல் கூறியது...
    Thedalukkana Thedal. Enakku romba piditha kavithai.
    TM 14.

    10 ஜனவரி, 2012 9:05 பிற்பகல்


    ரெவெரி கூறியது...
    நீங்கள் தேடுவதை கண்டிப்பாக சந்திப்பீர்கள் ... புத்தாண்டு வாழ்த்துகள்...

    11 ஜனவரி, 2012 12:06 முற்பகல்

    மிக்க நன்றி..
    /துரை டேனியல்/ரெவரி/

    ReplyDelete
  41. அம்பாளடியாள் கூறியது...
    நானும் தினம் தினம்
    செத்துப் பிழைக்கிறேன்..
    நாளும் தினம் தினம்
    செத்துப் பிழைக்கிறது..

    மயான அமைதி வேண்டும்..
    ஏங்கித் தவிக்கும்
    மனதிற்கு தெரியவில்லை..
    அப்படியானால்
    மயானத்திற்குதான்
    செல்ல வேண்டும் என்பது..

    சந்தேகம் கொள்வதனால் ஏற்படும்
    பேரிழப்பு என்னவென மிகவும்
    தெளிவுபட இக் கவிதைமூலம்
    உணர்த்தியுள்ளீர்கள் .அருமை!..
    வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .

    தங்கள் வருகைக்கு நன்றி சகோ..

    ReplyDelete
  42. "எதுக்காகப் பிறந்தேன்
    என தெரியாததைப் போலவே
    எதுக்காக வாழ்கிறேன்"
    மனதின் வலிகள் ......

    ReplyDelete
  43. தேடல் இருக்கும் வரைதான் தேடப்படுபவைக்கு அழகும்,மதிப்பும் இருக்கும்...

    ReplyDelete
  44. மனதைத்தொட்ட இந்த கவிதையில் நான் இரசித்த வரிகள்.

    // தேடித் தேடி
    பயணித்துக்கொண்டேயிருக்கிறேன்..
    தேடியது இன்னும் கிட்டவில்லை//

    அருமை!வாழ்க்கையில் தேடலே ஒரு சுகம் தான்.தேடுவது கிடைக்கிறதோ இல்லையோ தேடுவதை நிறுத்தக்கூடாது.

    ReplyDelete
  45. ''...தேடித் தேடி
    பயணித்துக்கொண்டேயிருக்கிறேன்..
    தேடியது இன்னும் கிட்டவில்லை..
    நான் தேடியது
    என்னைத் தேடிக் கொண்டிருக்கிறது
    என நினைக்கிறேன்...
    நேருக்கு நேர்
    சந்திக்கலாம்
    சந்திக்காமலும் போகலாம்..''
    arumai vatikal. vaalthukal.
    Vetha. Elangathilakam.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com