புது வரவு :
Home » , , , » காதல்.. காதல்.. காதல்..

காதல்.. காதல்.. காதல்..


பொருட்காட்சி 
செல்வதாய் சொல்லிவிட்டு
உன்னோடு நான்
பகல்காட்சி வந்தேன்..
இந்நிமிடம் வரைத் தெரியவில்லை
நாம் பார்த்தது
என்ன படம் என்று..




இரு சக்கர
வாகனத்திலிருந்து
இறக்கிவிட்டுச் சென்றாய்
நான் இறங்கி கொண்டேன்
என் நினைவுகள் இறங்காமல்
தொடர்ந்து உன்னோடு
பயணித்துகொண்டிருந்தது.


துணிகளை
துவைக்கும்போதுதான் தெரிந்தது.
பூங்காவில் அமர்ந்து
நாம் பேசிக் கொண்டிருந்தபோது
என் உடை மீது
காக்கை எச்சம் செய்திருப்பது.




பூங்காவில்
நாம் தின்று போட்ட மிச்சத்தை
கொத்தித் தின்ன
அந்த இரண்டு காக்கைகள்
இப்போது
என்ன செய்து கொண்டிருக்கும்?!..
ம்..காதல் செய்து கொண்டிருக்கும்..


தலையைச் சீவ
சீப்பெடுத்த போதுதான்
எனக்குப் பட்டது..
தலையை 
கலைத்து விட்டது நீயென்று..
சீப்பைத் தூக்கி
தூரத்தில் எறிந்தேன்.




மதியம் கடற்கரையில்
இருவரும்
காதல் கொள்ளும்போது
சுடாத சூரியன்
இரவு இல்லத்தில்
தனியாய் உறங்கும் போது சுடுகிறது..


இரவானதும்
இமைகளில் வந்து
அமர்ந்து கொள்கிறாய்..
நானும்
கண்கள் திறந்தபடியே
தூங்குவதற்கு பழகிக் கொண்டேன்..
 .........................................................................
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

20 comments:

  1. கவிதை நன்றாக உள்ளது...

    ReplyDelete
  2. இமைகளில் நீ அமர்கையில்
    கனமாக தோன்றினால்
    அந்த சுகமான சுமைக்காக
    காலமெல்லாம் காத்திருக்கிறேன்...
    காதல் உணர்வுகள் பொங்கி வழிகிறது
    கவிதையில் ..
    அழகு அழகு..

    ReplyDelete
  3. சபாஷ்...அருமையான அழகான காதல் கவி

    ReplyDelete
  4. அது எப்படிங்க விழித்துக் கொண்டே தூங்குவது அருமை அருமை அணைத்து வரிகளையும் ரசித்து படித்தேன் .

    ReplyDelete
  5. கவிதை அருமை என சொல்வது குறைத்து மதிப்பிட்டதுபோல் ஆகும். மிக அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. /பொருட்காட்சி
    செல்வதாய் சொல்லிவிட்டு
    உன்னோடு நான்
    பகல்காட்சி வந்தேன்..
    இந்நிமிடம் வரைத் தெரியவில்லை
    நாம் பார்த்தது
    என்ன படம் என்று..
    //

    ரொம்ப உண்மை

    ReplyDelete
  7. இதுதான் காதால் இந்த காதல் வந்தவற்ற்கள் எல்லாமே ஒரு மோன நிலையில் இருப்பார்கள் போலும் காதலி அருகில் இருக்கும் சுடாத சூரியன் பாதிஇரவில் வந்து சுடுகிராணம் பாருங்கள் இவரின் கற்பனை வரிகளை உண்மைதான் காதல் வந்து தொலைத்து விட்டால் சந்தனமும் சுடுமாமே அப்படியா பாராட்டுகள்

    ReplyDelete
  8. கலைந்த முடியைக் சீர்படுத்திக்கொள்ள விரும்பாததின் காரணம் அருமை.

    ReplyDelete
  9. காதலர்களின் உப்பைத் தின்றதால் காகமும்
    காதல் கொள்வது , சீப்பு ...... என அனைத்தும் டாப்பு .
    ம்ம்ம்.. காதலர் தின காய்ச்சல் இன்னும் அடுத்த ஆண்டு v 'day
    வரைத் தொடரும் போல் உள்ளதே.

    ReplyDelete
  10. மிக மிக உண்மையான வரிகள்! அருமை! அருமை! இதற்கு மேல் எதைக் கூற! வாழ்த்தகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  11. இரவானதும்
    இமைகளில் வந்து
    அமர்ந்து கொள்கிறாய்

    ரொம்ப நல்லா இருக்கு ..
    வாழ்த்துகள்

    ReplyDelete
  12. அனைத்துமே அழகான உணர்வுகள்.
    எனக்கு மிகவும் பிடித்தது:

    //இரவானதும்
    இமைகளில் வந்து
    அமர்ந்து கொள்கிறாய்..
    நானும்
    கண்கள் திறந்தபடியே
    தூங்குவதற்கு பழகிக் கொண்டேன்..//

    ReplyDelete
  13. போய்யா... எப்படித்தான் பாராட்டுறதுன்னு தெரியல. எதாவது சொல்லலாம்னா மத்தவங்க எல்லாத்தையும் சொல்லி முடிச்சுட்டாங்க... (இனிமே லேட்டா வருவியாடா கணேஷ்?) அதனால நான் ரொம்ப ரொம்ப ரசிச்சேன்னு மட்டும் சொல்லிட்டு கழண்டுக்கறேன் கவிஞரே...

    ReplyDelete
  14. சார் மதுமதி!

    கொன்னுடீங்க!
    வரிகள் துளைத்தது-
    அருமை!

    ரசித்தேன்!

    ReplyDelete
  15. எதை மிக ரசித்தேன் என்று தெரியவில்லை அனைத்துமே அழகான அருமையான வரிகள்.அண்ணா

    ReplyDelete
  16. உன் நினைவுகளால் எனக்குத் தூக்கம் வரவில்லையென்பதை கவித்துவமாய்ச் சொன்னவிதம் அழகு. காதலில் ஊறித்திளைத்த கவி வரிகள் அனைத்துமே அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  17. காதலின் இனிய உணர்வுகளை அழகுற சொல்லியைருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. யாருக்கோ கொடுத்துவச்சிருக்குண்ணே..! ஹிஹி..

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com