புது வரவு :
Home » , , , » டி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பாடத்திட்டம் - பாகம்-7

டி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பாடத்திட்டம் - பாகம்-7

 
                      பொதுத்தமிழ் பாடத்திட்டம்  

      டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வுக்கு பொதுவாக என்னென்ன புத்தகங்களைப் படிக்க வேண்டும்  என்று பாகம்-6 ல் தெரிந்து கொண்டீர்களா..சரி.இப்போது குரூப் 4  க்கான பொதுத்தமிழ் பிரிவில் எந்த மாதிரியான வினாக்கள் எந்த பகுதியிலிருந்து கேட்கப்படும் என்பதை பார்ப்போம்..(குரூப் 2 க்கும் இது பொருந்தும்)

         பொதுத்தமிழில் கடினமான இலக்கணப் பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படுவதில்லை.நான் ஏற்கனவே சொன்னது போல மொழிப்பயிற்சியின் அடிப்படையிலேயே தான் வினாக்கள் அமையும்.

          பொதுவாக 20 தலைப்புகளின் கீழ் வினாக்கள் அமையும் ஒவ்வொறு தலைப்பின் கீழ் 5 வினாக்கள் வீதம் மொத்தம் 100 வினாக்கள் கேட்கப்படும்.


                           வினா வகைகள்

வினாக்கள்

மதிப்பெண்கள்

1)அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்

5  வினாக்கள்

                   7.5
2)ஓரெழுத்து ஒரு மொழி 
5  வினாக்கள்

                   7.5

3)பெயர்ச்சொல்லின் வகையறிதல்
5  வினாக்கள்                     7.5

 4)வேர்ச்சொல்லை கண்டறிதல்
5  வினாக்கள்                     7.5

5)வேர்ச்சொல் மூலம் வினைமுற்று,பெயரெச்சம்,
வினையாலணையும்பெயர்,வினையெச்சம்,தொழிற் பெயர் போன்றவற்றை கண்டறிதல்
5  வினாக்கள்                     7.5

6)சொல்லும் பொருளும்(பொருத்துக)
5  வினாக்கள்                      7.5

7)ஒலி வேறுபாடு அறிதல்
5  வினாக்கள்                      7.5

8)ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்சொல் அறிதல்
5  வினாக்கள்                      7.5

9)எதிர்ச்சொல் அறிதல்
5  வினாக்கள்                      7.5

10)பொருந்தாச்சொல்லைக் கண்டறிதல்
5  வினாக்கள்                      7.5

11)இலக்கண குறிப்பறிதல்
5  வினாக்கள்                      7.5

12)பிரித்தெழுதுதல்
5  வினாக்கள்                      7.5

13)பிழை திருத்தி எழுதுதல்
5  வினாக்கள்                      7.5

14)சொற்களை வரிசைப்படுத்தி சொற்றொடரை கண்டறிதல்
5  வினாக்கள்                      7.5

15)வாக்கிய வகைகள் அறிதல்
5  வினாக்கள்                      7.5

16)தன்வினை,செய்வினை,பிறவினை வாக்கியங்களை அறிதல்
5  வினாக்கள்                      7.5

17)விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுத்தல்
5  வினாக்கள்                      7.5

18)எதுகை,மோனை,இயைபுத் தொடைகள் கண்டறிதல்
5  வினாக்கள்                      7.5

19)உவமைக்கேற்ற பொருள் அறிதல்
5  வினாக்கள்                      7.5

20)நூல்களும் நூலாசிரியர்களும்
5  வினாக்கள்                      7.5
                                                                    
                                           மொத்தம்
100 வினாக்கள்    150 மதிப்பெண்கள்

     மேற்கண்டவற்றிலிருந்துதான் பொதுத் தமிழுக்கான வினாக்கள் கேட்கப் படுகின்றன. இவையனைத்து பள்ளி தமிழ்ப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. அவற்றை புரிந்து படித்தால் நிச்சயம் பொதுத்தமிழில் கேட்கப்படும் 100 கேள்விகளுக்கும் எளிதாக பதில் அளிக்கலாம்.

         இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் தான் மேற்கண்டவை பிரிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்தப் பதிவில் பொது அறிவிற்கான பாடத்திட்டத்தைப் பற்றி காணலாம்..
==========================================================================


டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com