புது வரவு :
Home » , , , , » டி.என்.பி.எஸ்.சி- செய்வினை,பிறவினை போன்றவை கண்டறிதல் பாகம்-28

டி.என்.பி.எஸ்.சி- செய்வினை,பிறவினை போன்றவை கண்டறிதல் பாகம்-28

11. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை அறிதல்

               வணக்கம் தோழர்களே பாகம் 27 வாக்கிய வகைகளை கண்டறிவது எப்படி எனப் பார்த்தோம்.இன்றைய பதிவில் தன்வினை, பிறவினை, செயப்பாட்டு வினைகளை எப்படி கண்டறிவது எனக் காணலாம்.

         ஒரு வாக்கியத்தைக் கொடுத்து இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக என வினாக்கள் அமையும்.

1. தன் வினை வாக்கியம்

               ஒரு எழுவாய் தானே ஒரு செயலை செய்வது தன்வினை ஆகும்.
(எ.கா) செல்வி பாடம் கற்றாள்.

             முருகன் திருந்தினான்

  2. பிறவினை வாக்கியம்

               ஒரு எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால் அது பிறவினை வாக்கியம் ஆகும்.

              ‘பித்து’ ‘வித்து’ எனும் சொற்கள் சேர்ந்து வரும்.

(எ.கா) ஆசிரியை பாடம் கற்பித்தார்
               அவன் திருத்தினான்

தன்வினை                                                      பிறவினை
திருந்தினான்                                                   திருத்தினான்
உருண்டான்                                                    உருட்டினான்
பயின்றான்                                                       பயிற்றுவித்தான்
பெருகு                                                               பெருக்கு
செய்                                                                     செய்வி
வாடு                                                                    வாட்டு
நடந்தான்                                                            நடத்தினான்
சேர்கிறேன்                                                       சேர்க்கிறேன்
ஆடினாள்                                                           ஆட்டுவித்தாள்
பாடினான்                                                           பாடுவித்தான்
கற்றார்                                                                 கற்பித்தார்
தேடினான்                                                          தேடுவித்தான்
உண்டாள்                                                            உண்பித்தாள்
அடங்குவது                                                       அடக்குவது

3.செய்வினை வாக்கியம்

             ஒரு வாக்கியம் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமையும் வாக்கியத்தில், செயப்படுபொருளோடு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்துவரும். சில சமயம் ‘ஐ’ மறைந்தும் வரும்.
(எ.கா) பாரதியார் குயில்பாட்டைப் பாடினார்.

              தச்சன் நாற்காலியைச் செய்தான்
             அவள் மாலையைத் தொடுத்தாள்
              ராதா பொம்மையைச் செய்தாள்

4. செயப்பாட்டு வினை வாக்கியம்

             செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம்
அமையும். எழுவாயோடு ‘ஆல்’ என்ற 3-ம் வேற்றுமை உருபும், பயனிலையோடு‘பட்டது’ ‘பெற்றது’ என்ற சொற்கள் சேர்ந்து வரும்.

(எ.கா) கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது
           (செயப்படுபொருள்) (எழுவாய்) (பயனிலை)
            தஞ்சை சோழர்களால் புகழ்பெற்றது..
------------------------------------------------------------------------------------
                                                                                                                                         அன்புடன்





பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.


டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

8 comments:

  1. தொடருங்கள்.....

    ReplyDelete
  2. வணக்கம், செல்வி பாடம் கற்றாள் - தன் வினை வாக்கியம் என்பதை போன்று
    ராதா பொம்மை செய்தாள் - என்பதும் தன் வினை வாக்கியம் இல்லையா?

    ReplyDelete
  3. தனக்குள் நிகழும் ஒரு வினை தன் வினை..
    'செல்வி பாடம் கற்றாள்'

    'ராதா பொம்மை செய்தாள்'

    வினை அவளுக்குள் நடக்கவில்லை.கவனியுங்கள்.பொம்மைக்கும் அவளுக்குமான தொடர்பு.செய்தல் என்பது வெளிப்படையாகத் தெரிகிறதே கவனித்தீர்களா?

    ஒரு செய்வினை வாக்கியம் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமையும்..

    ராதா-எழுவாய்
    பொம்மை-செயப்படுபொருள்
    செய்தாள்-பயனிலை

    அதே 'செல்வி பாடம் கற்றாள்' என்பதில் 'பாடம்' என்பதை செயப்படுபொருளாக எடுத்துக் கொள்ள் முடியாது.

    ReplyDelete
  4. அப்படியானால் ராதா பொம்மை செய்தாள் என்பது "செய்வினை" அல்லவா? தாங்கள் பிறவினையில் எழுதியிருக்கின்றீர்களே?

    ReplyDelete
  5. அப்படியானால் ராதா பொம்மை செய்தாள் என்பது "செய்வினை" அல்லவா? தாங்கள் பிறவினையில் எழுதியிருக்கின்றீர்களே?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர்..கீழே எழுதுவதற்கு பதிலாக மேலே எழுதிவிட்டேன்.. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி..

      Delete
  6. முருகன் பாடினான் எவ்வகை வாக்கியம் ஏன்? விளக்கம் அளிக்க வேண்டும் சகோதரரே

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com