சந்து பொந்து இண்டு இடுக்குகளிலெல்லாம் விநாயக சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகளும் புனஸ்காரங்களும் கோலாகலமாக நடக்க ஆரம்பித்துவிட்டன.சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படும் வரை பொதுமக்களுக்கு எந்தவித ஊறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு.விநாயக சதுர்த்தி நாட்களில் கலவரம் நடக்க வாய்ப்புகள் அதிகம் என்பதை அரசு உணர்ந்திருப்பதால் அதற்கான பாதுகப்புகளை பலப்படுத்த அரசு முனைந்திருக்கிறது.
இந்த நிலையில் நேற்று தமிழகத்தின் தென் கோடி முனையான கன்னியாகுமரி மாவட்டத்தில் சதுர்த்தி கொண்டாட்டம் பொதுமக்களுக்கு இடையூறாகிறது என்று ஒரு தரப்பு சொன்னதன் பேரில் கலவரம் ஆரம்பித்து மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
குமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே விழுந்தயம்பலத்தில் விநாயக சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 4 இடங்களில் விநாயக சிலைகள் நிறுவப்பட்டிருந்தன.காலையில் ஒலிபெருக்கியில் சத்தத்தோடு பாடலை ஒலிபரப்பியதால் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் அங்கே பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது.இந்த நிலையில் விநாயக சிலை முன்பு நேற்று மாலை இந்து சமய வகுப்பு மாணவிகள் திருவிளக்கு பூஜை நடத்த வந்திருந்தனர்.இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் அங்கே மீண்டும் பதற்றம் திரண்டது.தகவல் அறிந்து போலீசார் அங்கே விரைந்தனர்.வஜ்ரா வாகனமும் வரவழைக்கப்பட்டது. தாசில்தார், போலீசார் இருதரப்பினருடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
தொடர்ந்து இந்து சமய வகுப்பு மாணவிகள் திருவிளக்கு பூசை நடத்தினார்கள்.ஆனால் ஒலிபெருக்கியை போலீசார் அனுமதிக்கவில்லை. ஆனாலும் அங்கே பதட்டமான சூழ்நிலை தொடர்ந்து நிலவுவதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் அதிரடிப்படையினருடன் விரைந்து வந்தார்.சூழ்நிலையை உணர்ந்து விழுந்தயம்பலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.4 பேருக்கு மேல் பொது இடத்தில் கூடி நின்று பேசினார் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்னும் சிலை ஊர்வலமே ஆரம்பிக்கவில்ல.அதற்குள் கலவரம் ஆரம்பித்துவிட்டது என நினைக்கும்போது சாற்று மன வருந்தத்தான் செய்கிறது.விநாயக சதுர்த்தி கொண்டாடும் தோழர்களே..கொண்டாடுங்கள்.. உங்கள் சுதந்திரத்தை யாரும் பறிக்க மாட்டார்கள் அதேகனம் பிறரது சுதந்திரத்தையும் நீங்கள் பறிக்காது செயல்படவேண்டும் என்பதே எமது வேண்டுகோள்..
சாஞ்சியில் நடைபெறும் விழாவில் பங்கேற்க ராஜபக்ஷே டெல்லி வந்து சேர்ந்த
போது எடுத்த படம் என்று ராஜபக்ஷே கையை அசைத்தபடி இருக்கும் புகைப்படத்தை
செய்தித்தாளில் பார்க்கும் போது தமிழனின் போராட்டம் வீரியமில்லாமல் போய்
விட்டதோ என்று நினைத்து மனம் புழுங்கத்தான் வேண்டியிருக்கிறது.
கொடுங்கோலன் ராஜபக்ஷெவை இந்தியாவில் அனுமதிக்கக்கூடாது என்பதை
வலியுறுத்தி தங்களின் எதிர்ப்பை சாஞ்சியிலேயே காட்ட மூன்று தினங்களுக்கு
முன்னர் 15 பேருந்துகளில் வை.கோ மற்றும் தொண்டர்கள் சாஞ்சி
கிளம்பியிருந்தனர்.சிந்துவாரா மாவட்டம்-மராட்டிய மாநிலங்களின் எல்லையில்
அமைந்துள்ள பந்துர்னா என்ற இடத்துக்கு சென்ற போது அங்கு
குவிக்கப்பட்டிருந்த போலீசார் பேருந்துகளை வழிமறித்தனர்.சிந்துவாரா
பகுதியில் குற்றவியல் சட்டத்தின் படி 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.எனவே
அனுமதிக்க முடியாது.பந்துர்னா,சவுன்சார் உள்ளிட்ட இடங்களில்
அமைத்திருக்கும் தற்காலிக சிறைகளுக்கு செல்லுங்கள் என்று காவல்துறை சொல்ல,
கொந்தளித்த வை.கோ மாநில முதலமைச்சர் சவுகான் இது குறித்து விவாதிக்கலாம்
என்றார்.ஆனாலும் எங்களை எல்லையிலேயே தடுத்து நிறுத்தியிருக்கிறீர்கள் என்று
கடுமையாக சாடினார்.ஆனாலும் அதே இடத்திலேயே அமர்ந்து வை.கோ தலைமையில் அவரது
தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டு வருகிறார்கள்.
இத்தனை எதிர்ப்புக்களை மீறியும் ராஜபக்ஷே இந்தியா வருவதிலிலும் புத்த
பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் எந்த பின்னடைவும் ஏற்படாதது
மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கிறது.மதிமுக வினர் போல மற்ற கட்சியினரும்
போராட்டத்தில் முழுமையாக தங்களை ஈடுபடுத்தியிருந்தால் ஒருவேளை
ராஜபக்ஷேவின் வருகை தடை பட்டிருக்குமோ என்றே யோசிக்கத் தோன்றுகிறது.தம்ழர்களின் நிலை குறித்து மற்ற மாநிலங்கள் எள்ளளவும் கவலைப்படவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
ஒலிபெருக்கியால் மக்களை இம்சித்து ஆன்மீகம் வளர்க்க வேண்டும் எந்தக்கடவுளும் சொன்னதில்லை.
ReplyDeleteஆனால் மாறாகத்தான் இங்கே நடக்கிறது.
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி என்பது 20 வருடங்களுக்கு முன்பு வீட்டில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கொண்டாடப்பட்டு வந்தது. அப்போது எந்த பிரச்சினையும் எழவில்லை. தெருவுக்குத் தெரு சிலைகளை வைத்து விழா கொண்டாடி அவைகளை கடலில் கரைக்க எடுத்து செல்வதால் தான் பிரச்சினை வருகிறது. ஏன் முன்புபோல் வீட்டிலே மட்டும் விழா கொண்டாடக்கூடாது? அரசு தான் இதில் தலையிட்டு ஏதேனும் செய்யவேண்டும்.
ReplyDeleteதமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லாதவரை, ஆயிரம் இராஜபக்கேஷக்கள் வருவார்கள். போவார்கள். நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கவேண்டியதுதான்.
ஆமாம் ஐயா..நல்லதொரு கருத்தைப் பகிர்ந்து கொண்டீர்கள்..
ReplyDeleteதமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லாதவரை, ஆயிரம் இராஜபக்கேஷக்கள் வருவார்கள்! போவர்கள்!என்று நாம் எல்லாம் ஒன்றுபட்டு நிற்போமோ அன்று தான் இவர்களையெல்லாம் அடித்து வெளியே விரட்ட முடியும்...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
சரியாகச் சொன்னீர்கள்..
Deleteமத நம்பிக்கை என்ற பெயரில் மற்ற மதத்தினரை காயப்படுத்துவதால் என்ன ஆனந்தமோ தெரியலை சிலருக்கு
ReplyDeleteஇலங்கை இனப்படுகொலைக்கு எதிராக எழுதியமைக்கு நன்றி.
ReplyDeleteஇதையும் படித்துப் பார்க்கவும்:
"இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தொடரும் போராட்டம் - பசுமைத் தாயகத்தின் நீதிக்கான பயணம்!"
http://arulgreen.blogspot.com/2012/09/UN-Human-Rights-Council-SriLanka.html
தம்ழர்களின் நிலை குறித்து மற்ற மாநிலங்கள் எள்ளளவும் கவலைப்படவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
ReplyDelete-உண்மை!
விநாயக சதுர்த்தி கொண்டாடும் தோழர்களே..கொண்டாடுங்கள்.. உங்கள் சுதந்திரத்தை யாரும் பறிக்க மாட்டார்கள் அதேகனம் பிறரது சுதந்திரத்தையும் நீங்கள் பறிக்காது செயல்படவேண்டும் என்பதே எமது வேண்டுகோள்..
ReplyDelete-இதைப் புரிந்து கொண்டால் கலவரங்கள் உருவாக வாய்ப்பில்லை!