புது வரவு :
Home » , , » என் காதல் மனைவியோடு 9 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்

என் காதல் மனைவியோடு 9 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்

        ணக்கம் தோழமைகளே.. எந்தன் வாழ்வில் மறக்கமுடியாத நாளும் சந்தோசமான நாளும் இன்றைய நாள்தான் எனச் சொல்லலாம்.

         ஆமாம் தோழமைகளே..மூன்றாண்டுகள் காதலித்து முறையாக என் காதல் மனைவியை நான் கரம் பிடித்த நாள்.

         காதலிக்கும் நாட்களிலேயே திருமணம் நடக்கும் நாளைப் பற்றிய எந்த கவலையும் இல்லை. ஜாதகம், பொருத்தம் என்று எதுவும் பார்க்கவில்லை. இருவருக்கும் பொருத்தம் இருக்கிரது என்று நாங்களாகவே தீர்மானித்துக் கொண்டோம் அவ்வளவே..தோழர்கள், சொந்தங்கள் கலந்து கொள்ள ஏதுவான நாளாக இருந்தால் போதும் என்றுதான் நினைத்திருந்தோம்.அன்றைய நாள் சுபமுகூர்த்த நாளாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்திருந்தோம்.

            பகுத்தறிவையும் முற்போக்கையும் விதைத்துவிட்டு விதையாகிப் போன ஈரோட்டுச் சூரியன் உதித்த நாளில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது என் பள்ளி பருவத்தில் எழுந்த ஆசை.அதன்படி செப்டம்பர் 17 2004 அன்று திருமணம் செய்து கொள்ளவே எண்ணியிருந்தேன். ஆனால் அன்றைய நாளில் எனது சகோதரர் பணியின் நிமித்தமாக டெல்லி செல்ல வேண்டியிருந்ததால் முன்கூட்டியே திருமணம் செய்ய வேண்டியிருந்தது. ஏதோவொரு நாளில் திருமணம் புரிய எனக்கு விருப்பமில்லையாததால் பெரியாரின் அன்புத்தம்பி அறிஞர் அண்ணா பிறந்தநாளை தேர்வு செய்தேன். அதன்படி  செப்டம்பர் 15 2004 அன்று எனது திருமணம் சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஈரோட்டிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணத்திற்கு தேவையில்லாத சம்பிரதாயங்களை தவிர்த்து  நடந்தது.

          காதல் திருமணம் என்றாலும் ரெஜிஸ்டர் அலுவலகத்திலோ கோவிலிலோ நடைபெறாமல் முறைப்படி  மண்டபம் பார்த்து பத்திரிக்கை அடித்து வரவேற்பு கொடுத்தே நடந்தது எம் திருமணம். அவசரத்தில் நடத்தப்பட்டதல்ல.நன்கு யோசித்து திட்டமிடப்பட்டு நடந்ததுதான்.எந்த வித சம்பிரதாயங்களும் இல்லாமல் நான் விரும்பியபடியே நடந்தது.இன்றோடு எட்டாண்டுகள் முடிந்துவிட்டன.என் மனைவியோடு ஒன்பதாம் ஆண்டில் பயணிக்க இருக்கிறேன்.


        

       காதல் திருமணத்திலும் கலப்பு திருமணம் எங்களுடையது.இருவருமே வெவ்வேறு துருவத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும் காதல் எனும் நேர்க்கோட்டின் வாயிலாக வாழ்கையில் ஒருசேர மாற்றுக்கருத்தின்றி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

            என் எழுத்தின் முதல் வாசகியாக இப்போதும் அவர் இருக்கிறார்.என் கவிதைகள், நான் எழுதும் மாத நாவல்கள், நான் எழுதும் திரைப்பாடல்கள் என அனைத்தையும் முதலாவதாக வாசித்து உற்சாகமூட்டுவார்.

             குமுதம் ,ராணின்னு பெரிய பத்திரிக்கையிலெல்லாம் நாவல் எழுதிட்டு இருந்தீங்க அதை விட்டுட்டு இப்படி பாட்டெழுதுறேன்னு கனவுத்தொழிற்சாலையை நம்பி போயிட்டீங்களே இது சரியா வருமா? என்று என்னை திசை திருப்ப முயன்றவர்களையெல்லாம் என் மனைவி திசை திருப்பி விட்டிருக்கிறார்.

            நான் பாடலாசியர் ஆவேன் என்று எனக்கு இருந்த நம்பிக்கையைக் காட்டிலும் என மனைவிக்கு அதிகம் இருந்தது.அவரின் நம்பிக்கை பலித்து பாடலாசிரியர் ஆகிவிட்டேன்.இனி வெற்றி பாடல் கொடுத்து பிரபலம் ஆகவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.என் மனைவி தரும் ஊக்கமும் உற்சாகமும் விரைவில் என்னை வெற்றியடைய வைக்கும்.நான் அடையப் போகும் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என் மனைவிக்கு இன்றைய நன்னாளில் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன்.

            நான், என்னைப் புரிந்த என் மனைவி, எங்கள் இருவரையும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் மூன்றரை வயதான எங்கள் அன்பு மகள் மஞ்சரி என நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற அடிப்படையில் எம் குடும்பம்..       .
          
          காதலித்து கலப்புத்திருமணம் செய்தால் இவர்களைப்போல வாழவேண்டும் என்று எம்மை உதாரணமாக ஊர் சொல்ல வேண்டும் என்ற ஆசை திருமணம் ஆன நாளிலிருந்தே இருவருக்கும் உண்டு.அதற்கேற்ப எட்டாண்டுகள் வாழ்ந்து முடித்து ஒன்பதாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறோம்.

                                                                                                                                      மகிழ்ச்சியுடன்
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

106 comments:

 1. இங்கு முதல் வாழ்த்து சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனைத்து முயற்சிகளிலும் உங்கள் மனைவி தரும் ஊக்கம் அற்புதமானது நீடூழி வாழ இந்த நண்பனின் வாழ்த்து

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி தோழரே.

   Delete
 2. ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் உங்கள் திருமண வாழ்க்கை....

  இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து மகிழ்ச்சியில் திளைத்திருக்க வாழ்த்துகள் தோழரே....

  தொடரட்டும் உங்களது வெற்றிகள்.

  ReplyDelete
 3. பெரியார் பிறந்த நாளில் திருமணம் செய்ய விரும்பி அண்ணா பிறந்த நாளில் மணம் செய்தீர்களா? சுவாரஸ்யம் !

  ReplyDelete

 4. உங்களுக்காக திருமண நாள் வாழ்த்துக்களுடன் எனது சிற சிந்தனை படைப்பை சமர்பிக்கிறேன்
  உன்னை பார்க்க வேண்டும்
  உன்னுடன் பழக வேண்டும்

  மடிமீது படுக்க வேண்டும்
  மனக்கவலை விலகவேண்டும்

  இதமாக நீ வருடவேண்டும்
  இளைப்பாறி நான் மகிழ வேண்டும்

  தலைகோதி தழுவ வேண்டும்
  தலை சாய்ந்து படுக்க வேண்டும்

  எல்லா கவலையும் மறக்க வேண்டும்
  என்னுடனே நீ சேர வேண்டும்

  தடையில்லா இன்பம் வேண்டும்
  தழுவி தழுவி சுவைக்கவேண்டும்

  இதழ் முத்தமும வேண்டும்
  இடையிடையே பேசவேண்டும்

  முக்கனிசாறுதடன் பருக வேண்டும்
  முதன்முதலாய் இருப்பதாக நினைக்க வேண்டும்

  புதிதாக நீ நினைக்க வேண்டும்
  பூவுலகில் மெய்மறந்து பறக்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அன்பான வாழ்த்துக்கும் ,கவிதைக்கும் மிக்க நன்றி

   Delete
 5. அன்பு திருமணநாள் நல்வாழ்த்துகள் மதுமதி தம்பதியருக்கு....

  என்றும் இதே அன்புடன் ஆரோக்கியத்துடன் தெய்வ சிந்தனையுடன் வாழ்வாங்கு பல்லாண்டு வாழ இறைவனிடம் அன்பு பிரார்த்தனைகள்....

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பிரார்த்தனைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.

   Delete
 6. வாழ்த்துக்கள் மேலும் மேலும் வாழ்வில் எல்லா நலனும் வளமும் பெறவே மணமக்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி சகோதரரே பகிர்வுக்கு .

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ.

   Delete
 7. திரைப்பட பாடலாசிரியராகவும் வெற்றிகள் குவிக்க அன்பு வாழ்த்துகள் சகோ.....

  ReplyDelete
 8. எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் மேலும் சிறப்பாய் இருவரும் வாழ்வின் பயணிக்க

  ReplyDelete
 10. திருமணநாள் நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 11. திருமணநாள் வாழ்த்துக்கள்.//இனி வெற்றி பாடல் கொடுத்து பிரபலம் ஆகவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.// விரைவில் உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி சகோ..

   Delete
 12. இதே அன்போடும் புரிதலோடும் நீங்கள் இருவரும் மகிழ்வுடன் நூறாண்டுகள் வாழ என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். நீங்கள் ஏற்றம் பெற்று வெற்றிக்கொடி பறக்க விடும் நாள் அதிக தூரத்தில் இல்லை கவிஞரே...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி தலைவரே..

   Delete
 13. என்றும் தங்கள் மணவாழ்வு சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
 14. மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள். உங்களின் ஊக்க சக்தி உங்களுடனேயே இருக்கும் போது நீங்கள் நினைக்கும் வெற்றியை அடைவது கடினமான காரியமல்ல.

  S பழனிச்சாமி

  ReplyDelete
 15. இந்நாள் போல எந்நாளும் வாழ வாழ்த்துக்கள் அண்ணே

  ReplyDelete
 16. இதயம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் பாஸ்

  ReplyDelete
 18. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சகோ. சிறந்த பகிர்வு. எண்ணங்களை எழுத்தாக்கி பெண்மைக்கு நன்றி தெரிவித்த விதம் அருமை.

  ReplyDelete
 19. மனம்நிறைந்த வாழ்த்துகள். இதே அன்பும், புரிதலும் தொடரட்டும்.

  ReplyDelete
 20. ஆமாம் தோழமைகளே..மூன்றாண்டுகள் காதலித்து முறையாக என் காதல் மனைவியை நான் கரம் பிடித்த நாள்.//

  வாவ்வ்வ்வ்... இதை விட சந்தோஷம் என்ன வந்துவிட முடியும்...

  அண்ணியை பற்றி சொன்ன ஒவ்வொரு விஷயமும் உடலை சிலிர்க்க செய்தது.. உங்களின் வெற்றிக்கு பின்னால் அவரின் பங்களிப்பு அதிகம் என தெரிந்துக்கொள்ள முடிந்தது... அவருக்கு என் பாராட்டுக்களை சொல்லிடுங்க...

  உங்கள் திருமணமும் முன்மாதிரி... வாழ்த்துகள்

  இருவரும் இதே காதலோடும் பாசத்தோடும், இறுதி வரை ஒத்த கருத்தோடும் புரிதலோடும் வாழ்க்கையை தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. உங்களின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி.

   Delete
 21. அன்பான இனிய வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டு இதே அன்புடன்.

  ReplyDelete
 22. இனிய இருமணம் இணைந்த நாள் வாழ்த்துகள் மதுமதி!

  ReplyDelete
 23. கவிஞரே உங்களின் திருமண வாழ்க்கை மட்டுமின்றி திரையுலக வாழ்க்கையும் வெற்றியடைய நண்பனின் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. மணநாள் வாழ்த்துக்கள் நணபரே!

  இன்று என் தளத்தில்
  பிள்ளையார் திருத்தினார்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_15.html
  வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5435.html  ReplyDelete
 25. உங்கள் இருவரிடையேயான அன்பு வளர, எழுத்துத் துறையில் நீங்கள் இன்னும் வளர என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 26. என்னங்க இப்படி...


  உங்க காதல் திருமணத்தில்

  ரன்னிங, சேசிங், பைட்டிங், சூட்டிங்,-ன்னு ஒன்னும் இல்லியா...


  சரிங்க.. பல்லாண்டு வாழ்க

  ReplyDelete
  Replies
  1. அதெல்லாம் இல்லாமையா?

   Delete
 27. இனிய திருமண வாழ்த்துகள்

  உங்கள் டி.என்.பி.எஸ்.சி பதிவுகள் என்றும்

  தொடரட்டும்

  ReplyDelete
 28. இனிய திருமண வாழ்த்துகள்

  உங்கள் டி.என்.பி.எஸ்.சி பதிவுகள் என்றும்

  தொடரட்டும்

  ReplyDelete
 29. திருமணநாள் நல்வாழ்த்துகள் மதுமதி தம்பதியருக்கு.

  ReplyDelete

 30. இன்று போல் என்றும் வாழ்க!-நல்
  இல்லறம் வளமொடு சூழ்க!
  குன்றென உறுதி கொண்டே-திருக்
  குறள்தரும் வழியைக் கண்டே
  என்றுமே வாழ வேண்டும்-என
  இறைவனை வேண்டி மீண்டும்
  தென்றலின் குளுமை பூணபீர்-வெற்றி
  திரைப்பட உலகில் காண்பீர்

  ReplyDelete
 31. நிலவும் மலரும் போல்
  என்றும் இன்றுபோல மனமொப்பி வாழ்வும்
  கவிதை வானில் உச்சம் தொடவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 32. வாழ்த்துக்கள்! வாங்க நம்ம "கா.தி" சபைக்கு!
  உங்களுக்கு சீனியர் என்ற முறையில் எனது சிறப்பு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 33. பல்லாண்டு வாழ்க வளமுடன், இன்றும் போலவே என்றும் இனிமையுடன்!

  வாழ்துக்கள்!

  ReplyDelete
 34. வாழ்த்துக்கள் மதுமதி

  ReplyDelete
 35. இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே! தொட்டதெல்லாம் துலஙக-திக்கெட்டும் உம்புகழ் பரவ என் வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
 36. மனம் நிறைந்த இனிய வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
 37. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். தமிழும் சுவையும் போல நீடித்த ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன். நீண்ட நாட்களுக்குப்பின் தமிழ்மணம் வந்தததால் தங்களது பொறுப்பு குறித்து அறியாதிருந்து விட்டேன். வருத்தமே. நட்சத்திர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அதனாலென்ன பரவாயில்லை தோழர்.தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

   Delete
 38. வெற்றிகரமான திரைப்படப் பாடலாசிரியர் ஆவதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறது. உங்கள் கனவு நனவாக மனதார வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 39. மதுமதி அண்ணேன். பதிவை கவனிக்கலை. லேட்டா வந்துருக்கேன்.

  உங்களுக்கு எனது இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். :-)))

  ReplyDelete
 40. வாழ்த்துக்கள்! வாழ்க பல்லாண்டு

  ReplyDelete
 41. இனிய மணநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 42. திருமணநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 43. இன்றுபோல் என்றும் வாழ்க! நெஞ்சம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 44. வணக்கம் தோழரே,
  "மனைவி அமைவதெல்லாம்
  இறைவன் கொடுத்த வரம்"
  என்பதற்கேற்ப...
  உள்ளத்தில் ஊறிவரும் காதலுடன்
  உறுதுணையாய் நட்புடன்
  சந்தர்ப்பங்களில் ஆசானாய்க்
  கிடைத்த தங்கள் துணைவியாருடன்
  கனவுத் தொழிற்சாலை என்ன
  இவ்வுலைகையே ஆளும்
  திறம் பெற்றிடுக...
  என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
  வாழிய நீடூழி...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழர்.

   Delete
 45. அன்பின் மதுமதி - இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் - 9ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் காதல் தமபதிக்களுக்கு நல்வாழ்த்துகள் - மூன்றாண்டுகள் காதலித்து- முறையாக காதலியை மனைவியாக பதவி உயர்வு கொடுத்தது நன்று. பகுத்தறிவுப் பகலவன் இருந்த ஈரோட்டில், அவரது கொள்கைகளின் படி - அறிஞர் அண்ணா பிறந்த நாளில் திருமணம் செய்து கொண்டது பாராட்டத் தக்கது - மஞ்சரி உள்ளிட்ட மதுமதி தம்பதியருக்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 46. வாழ்த்துகள் நண்பரே!!

  அகிலமே வியக்கும் படி அன்பினைப் பரிமாறி, இதயங்கள் இனிக்க இன்னும் பல்லாண்டுகள், உலகம் போற்றும் உதாரணத் தம்பதியராய்ச் சிறக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 47. இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 48. மனம் நெகிழச் செய்த பதிவு அண்ணா... உங்களது வலைத்தளத்தில் எனது முதல் கமெண்ட் என நினைக்கிறேன். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

  உங்கள் இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள்.. பாப்பாவுக்கு ஒரு ஹாய் :-)

  ReplyDelete
 49. அண்ணாவுக்கும் அண்ணிக்கும் தங்கையின் இனிய நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...

  இவைன் ஆசீர் பெற்று இன்னும் பல்லபண்டு காண வாழ்த்துகிறேன்.........................

  ReplyDelete
 50. வணக்கம் தோழர்,
  இப்போது தான் பதிவு பார்த்தேன்....
  காதல் தம்பதியருக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 51. Last but not least boss..

  I wish you to have a peaceful & successful life..

  With prayer,
  Me

  ReplyDelete
 52. பிந்தினாலும் என் அன்பு வாழ்த்தும்கூட உங்களும் உங்கள் துணைக்கும் மது !

  ReplyDelete
 53. வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

கணித பாடத்திட்டம்

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

காலமும் வேலையும்

எண்ணியல்

Followers

மீ.சி.ம

Popular Posts

சராசரி

Google+

Tips Tricks And Tutorials

வயது கணக்கு

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com