பெரியாருடன் இருந்த அந்த நாளை மறக்க முடியாது-கலைஞர் - மதுமதி.காம்
புது வரவு :
Home » , , » பெரியாருடன் இருந்த அந்த நாளை மறக்க முடியாது-கலைஞர்

பெரியாருடன் இருந்த அந்த நாளை மறக்க முடியாது-கலைஞர்

        இன்றைய நாள் பகுத்தறிவு பகலவன் ஈரோட்டில் தோன்றிய நாள்.திராவிட பற்றாளர்கள் திருவிழாவாகக் கொண்டாடும் நாளும் இந்நாளே..

        இன்றைய நாளில் பெரியாருடன் தொடர்பில் இருந்த பெரியோர்களெல்லாம் பெரியாருடன் தானிருந்த மறக்க முடியாத சம்பவங்களை நினைத்து பார்ப்பதுண்டு. அந்த வகையில் நேற்று தி.மு.கழகத்தின் சார்பாக நடந்த முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிய முன்னாள் முதல்வரும் தந்தை பெரியாரின் பாசறையில் திராவிடம் கற்றவருமான கலைஞர் இன்று பெரியாரை பற்றி தான் விட்ட அறிக்கையில் அவருடன் இருந்த அந்த மறக்கமுடியாத சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

          புதுவையில் பெரியார், அண்ணா, தளபதி அழகிரிசாமி போன்ற தலைவர்களை அழைத்து மாநாடு போட்டோம்.ஆனால் எங்களின் எதிர்ப்பாளர்கள் "திராவிடத் தலைவர்களே திரும்பிச் செல்லுங்கள்" என்று கூச்சலிட்டனர்."வா என்றழைப்பது தான் தமிழ் பண்பு,போ என்று கூற காரணம் யாதோ" என்று அண்ணா தனது பேச்சை ஆரம்பித்து அரியதோர் உரையாற்றினார். அந்த உரையினைத் தொடர்ந்து கழக கொடியேற்றினார். கொடி ஏற்றப்பட்ட அடுத்த வினாடியே கொடிமரத்தை வீழ்த்தி விட்டார்கள் கலகக்காரர்கள். அவ்வளவுதான்,அமளி தொடங்கிவிட்டது.பெரியாரையும் அண்ணாவையும் பத்திரமாக வ்ண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டு, நானும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும்,காஞ்சி கல்யாண சுந்தரமும் நடந்து வந்து கொண்டிருந்தோம்.ஒரு பெருங்கூட்டம் எங்களை சூழ்ந்து கொண்டது.அந்தக் குழப்பத்தில் ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து விட்டோம்.என்னை அடி அடி என அடித்தார்கள்.


            என் மீது விழுந்த அடிகள் சிலவற்றை திருவாரூர் அண்ணன் ராசகோபால் வாங்கிக் கொண்டார்.என் சட்டையில் மாட்டப்பட்டிருந்த பெரியார் பேட்ஜை பறிப்பதற்காக ஒருவன் முயற்சித்தான். நான் அந்த பேட்ஜை விடாமல் என் கையால் பற்றியவாறு ஓட முயற்சித்தேன்.அன்று என் சட்டையோடு சேர்த்து பெரியார் பேட்ஜையும் பிடித்திருந்த நான் இன்று வரை அந்த நினைவுகளையும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறேன்.
            
         அடித்தவர்கள் களைத்துப்போய் நானும் செத்திருப்பேன் என்று கருதி அங்கிருந்த சாக்கடையோரத்திலளென்னை வீசிவிட்டு சென்றார்கள். "ஐயோ யார் பெற்ற பிள்ளையோ சாக்கடையில் சாகக் கிடக்கிறதே" என்று சொல்லிக் கொண்டே ஒரு மூதாட்டி அவரது வீட்டிற்கு கொண்டு போய் என்னைக் காப்பாற்றினார்.

          என் நிலைமை என்னவாயிற்று என்று தெரியாமல் பெரியாரும் அண்ணாவும் ஊர் முழுவதும் தேடச் சொல்லி பிறகு விடியற்காலை 4 மணியளவில் என்னைக் கண்டுபிடித்து மீண்டும் கலகக்காரர்கள் தாக்குவார்களோ என அஞ்சி, கை,நீண்ட ஜிப்பா, தலையில் குல்லா அணிவித்து பெரியாரிடம் அழைத்துச் சென்றார்கள்.என்னைக் கண்டதும், அதுவரை கண்ணுறங்காமல் காத்திருந்த பெரியார்,என்னைத் தழுவிக்கொண்டு "சுகமாக இருக்கிறாயா" என்று தழுதழுத்தார்.அவரே என் காயங்களுக்கெல்லாம் மருந்திட்டு ஈரோட்டுக்கு வா போகலாம் என ஆணையிட்டார்.

           என்று பெரியாருடன் தான் இருந்த அந்த முக்கிய சம்பவத்தை தான் இட்ட அறிக்கையின் வாயிலாக கலைஞர் நினைவு கூர்ந்தார்.
 
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

15 comments:

 1. நல்ல பகிர்வு சகோ...

  நன்றி

  ReplyDelete
 2. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 3. பெரியார் பிறந்த நாளில் பொருத்தமான பதிவு!

  ReplyDelete
 4. நினைக்க வைத்திருக்கிறீர்கள் நல்ல மனிதரை.நன்றி மது !

  ReplyDelete
 5. தலைப்பு பார்த்ததும் பெரியாரோடு பழகும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்ததோதுன்னு நினைச்சேன். பகிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete
  Replies
  1. என்னைப் பாத்தா 70 வயசு மாதிரியா தெரியுது.எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க..பலே..

   Delete
 6. அன்பின் மதுமதி

  முன்னாள் நிகழ்வுகளை நினைவு கூர்ந்து மகிழ்வது இயற்கை. அதிலும் கலைஞரின் நினைவாற்றல் அபாரம். பெரியாரின் பிறந்த நாளன்று அவருடன் இருந்த அந்த நாள் நிகழ்வுகளை - நினைவுகளை அறிக்கையாக வெளியிட்டமை நன்று.

  அறிக்கை பகிர்வினிற்கு நன்றி மதுமதி

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 7. கலைஞரை காப்பாற்றிய மூதாட்டி கடைசிவரை கலைஞருக்கு மூத்த சகோதரியாகவே வாழ்ந்தார். சென்னைக்கு வந்து அவ்வப்போது கலைஞரை உரிமையாக பார்த்து நலம் விசாரித்துவிட்டு செல்வார். அதுபோலவே கலைஞரும் பாண்டிக்கு செல்லும்போதெல்லாம் அவரை நேரில் போய் பார்ப்பார்.

  1967 தேர்தலின் போது கூட கலைஞர் மீது இம்மாதிரி கொலைவெறித் தாக்குதல் நடந்தது. அப்போது கோட்டூர்புரம் குடிசைவாசிகள் கலைஞரின் உயிரை காப்பாற்றினார்கள். இன்றும் கூட வெள்ளக் காலங்களில் கலைஞர் முதலில் போய் பார்ப்பது கோட்டூர்புரத்தைதான்.

  ReplyDelete
  Replies
  1. மேற்சொன்னவற்றில் முதல் தகவலை கேள்விப்பட்டும் வாசித்தும் இருக்கிறேன்.இரண்டாவது புதிய தகவல்தான்.பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..

   Delete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Recent Post

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

Random Posts

Best Blogger Tips

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com