ஒருவன் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துவிட்டு போகலாம்.ஆனாலும் இப்படித்தான் என்றவொரு வரையறையை வகுத்துக் கொண்டு வாழ நாளடைவில் மனிதன் தன்னைப் பழக்கிக்கொண்டான்.தன்னை நம்பாமல் பிறரை ஒருவன் நம்பும்போது அவன் செயலிழந்து விடுகிறான்.
அமைதி உங்களைத் தாமதமாக ஆனால் நிச்சயமாக வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். |
நல்ல குடும்பம் என்பது வரவுக்கு மிஞ்சி செலவு செய்யாமல் இருப்பதே. |
பகுத்தறிவுக்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும். |
அறிவாளிக்கும் இயற்கையை உணர்ந்தவனுக்கும் துன்பமே வராது. |
கடவுள் எண்ணம் அறிவையே கொன்றுவிட்டது. |
பகுத்தறிவைக் கொண்டு ஆய்ந்து, சரி என்று பட்டபடி நடவுங்கள். |
கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும். |
அறிவிற்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததை கடவுள் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனில்லை. |
மனிதனின் இறப்பு இயற்கை. பிறப்பு : அம்மா, அப்பா செயற்கை. |
மனிதனின் கடவுள் உணர்ச்சி மாறமாறத்தான் அறிவு வளர்ச்சியடைகிறது. |
ஒழுக்கம் என்பது சொல்லுகிறபடி நடப்பதும், நடந்தபடி சொல்வதும் ஆகும். |
நமது இழிநிலையை நீடிக்கும் மண்டபமே கோயில்கள். |
கோயில்கள் அறிவு, பணம் இரண்டையும் இழக்குமிடம். |
நமக்கு வேண்டியதெல்லாம் கோயிலல்ல. பள்ளிக்கூடம்தான். |
அறிவுள்ளவர்க்கு அறிவின் செயல். அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் செயல். |
மனிதனை முட்டாளாக்கும், பிரித்து வைக்கும் அமைப்பு மதம் ஆகும். |
கடவுளும் மதமும் நம்பிக்கைக்காரனை வெறியனாகவும் பைத்தியக்காரனாகவும்கூட ஆக்கிவிடும். |
பெண்களைக் கூண்டுக்கிளி ஆக்காமல் தாராளமாகப் பழகவிட வேண்டும். |
தனி உடைமை ஒழிந்துவிட்டால் வாரிசு உரிமை என்ற பிரச்சினைக்கே இடமில்லை. |
கடவுள் இல்லை என்று சொன்ன ஒரே காரணத்திற்காக மனித வாழ்க்கைக்குத் தேவையான பெரியாரின் பொன்மொழிகள் அனைத்தும் புறந்தள்ளப்படுகின்றன. பெரியார் ஏன் அவ்வாறு சொன்னார்.. சொன்னதன் பின்னணியும் நோக்கமும் என்ன என்பதை ஆராயாமற்போனதாலேயே பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர் என்ற அளவிலேயே இன்று வரை பார்க்கப்படுகிறார். சாதிகளை ஒழித்ததோ, தீண்டாமையை கொளுத்தியதோ, குழந்தை திருமணத்தை தடுத்ததோ, மறுமணம் புரிய பெண்டிருக்கு குரல் கொடுத்ததோ, மனிதனுக்கு சுய மரியாதை வேண்டும் என போராடியதோ இன்னும் பலருக்கு தெரியாமலேயே போய்விட்டது.
கருத்துக்கள் யார் மீதும் திணிக்கப்படவில்லை.மேற்கண்டவை பெரியாரின் சிந்தனைகள்.
(பெரியாரின் சிந்தனைகள் தொடரும்)
//தன்னை நம்பாமல் பிறரை ஒருவன் நம்பும்போது அவன் செயலிழந்து விடுகிறான்.// தன்னை மட்டும் நம்பி ஒருவன் வாழ முடியுமா? அப்படி வாழ வேண்டுமென்றால் அதீத சக்தி படைத்தவனாக இருக்கவேண்டும்.
ReplyDeleteதன்னை மட்டும் நம்பி இல்லை தோழரே..தன்னை நம்பாமல் பிறரை நம்புவன் தான் செயலிழந்துவிடுகிறான்.மீண்டும் வாசியுங்கள்.பிறர் உதவியில்லாமல் யாரும் வாழமுடியாது.தன்னை நம்பாமல் பிறரை நம்ப வேண்டாம் என்பதே கருத்து.
Deleteபெரியாரின் தீவீர மதத் துவேசம் கூட
ReplyDeleteகவனிக்கப்படவேண்டும் என்கிற நோக்கமே
கடைசியில் நீங்கள் சொல்வது போல்
அது மட்டுமே என்பது போல்
தமிழகத்தில் அவருடைய கருத்துக்கள்
சுருங்கிப்போய்விட்டன
அதற்குக் காரணம் அவர்களுக்கு
பின் வந்த தலைவர்களே
தெளிவூட்டும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வருகைக்கும் கருத்துக்கு நன்றி..
Delete‘கருத்துக்கள் யார் மீதும் திணிக்கப்படவில்லை.’
ReplyDeleteவழிமொழிகின்றேன்.
மகிழ்ச்சி ஐயா..
Deleteஒருவன் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துவிட்டு போகலாம். ஆனாலும் இப்படித்தான் என்றவொரு வரையறையை வகுத்து தருவதே இஸ்லாமிய மார்க்கம். நல்லதொரு முதல் பாராவுக்கு மிக்க நன்றி சகோ.மதுமதி.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் சுட்டிக்காட்டி கருத்திட்டமைக்கும் நன்றி தோழரே..
Deleteஅழகாகச் சொன்னீர்கள் கவிஞரே..
Deleteநீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றுதான் தங்கள் வலைப்பக்கம் வருகிறேன்
வலை வடிவமைப்பு மிகவும் அருமையாகவுள்ளது.
//ஒருவன் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துவிட்டு போகலாம். ஆனாலும் இப்படித்தான் என்றவொரு வரையறையை வகுத்து தருவதே இஸ்லாமிய மார்க்கம்//
Deleteமற்ற மதத்துக்காரன் எல்லாம் ரோட்ல போற பொண்ணுங்களை எல்லாம் கைய புடிச்சுட்டு இழுத்துட்டா இருக்கான்? போங்கய்யா போய் புள்ள குட்டிகள படிக்க வையுங்க...
//முனைவர்//
Deleteவாங்க வாங்க முனைவரே..எப்படியிருக்கீங்க.அப்படியா மகிழ்ச்சி..
//விஜய்//
Delete//ஒருவன் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துவிட்டு போகலாம். ஆனாலும் இப்படித்தான் என்றவொரு வரையறையை வகுத்து தருவதே இஸ்லாமிய மார்க்கம்//
விஜய் அது வேறொருவரின் கருத்து..உங்க கருத்தை சொல்லிட்டு போலாமே..
மதுமதி,
Deleteஉங்களுக்கு சொந்த கருத்து எல்லாம் கூட இருக்கா?
ரொம்ப தெளிவா தான் இருக்கீங்க,இப்படியே மெயிண்டயின் செய்யுங்க, பதிவர் சங்கம் வச்சு அடுத்த முதல்வர் ஆகிடலாம் :-))
உங்க கருத்தை எல்லாம், மது விருந்து , பதிவர் சந்திப்புன்னு போட்ட பதிவுகளில் பார்த்துக்கிட்டு தான் இருந்தேன், நல்லா கிளம்புறாங்கய்யா கருத்து சொல்ல :-))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வவ்வால்..
Deleteஇவை என கருத்தல்ல.பெரியாரின் கருத்துகள் என்பதை புரிக..பதிவுக்கு சம்பந்தப்பட்ட கருத்தை மட்டும் பதிவு செய்க..
Deleteயாராக இருந்தாலும் தன் மனதில் தங்களுக்கு பிடித்ததை / நினைப்பதை கடவுளாக நம்புவதுண்டு...
ReplyDeleteவானத்தில் இருந்து நேரடியாக குதித்த பலருக்கு, கடவுள் என்றவுடனே ஞாபகம் வருவது : பெரியார் தான்... அப்படியானால் அவர்களுக்கு பெரியார் யார்...?
எனது அடுத்த பதிவில் (தெய்வம் இருப்பது எங்கே ? - பாடல் வரிகள்) draft-ல் உள்ளதை அப்படியே copy and paste... (வேறு வழியில்லை... கரன்ட் கட் இங்கு 19 hours...)
தலைவரே... சரியா...?
//யாராக இருந்தாலும் தன் மனதில் தங்களுக்கு பிடித்ததை / நினைப்பதை கடவுளாக நம்புவதுண்டு...//
Deleteஇவ்வாறாக இருந்தால் எந்த பிரச்சனையும் யாருக்கும் இல்லை..
// சாதிகளை ஒழித்ததோ, தீண்டாமையை கொளுத்தியதோ, குழந்தை திருமணத்தை தடுத்ததோ, மறுமணம் புரிய பெண்டிருக்கு குரல் கொடுத்ததோ, மனிதனுக்கு சுய மரியாதை வேண்டும் என போராடியதோ இன்னும் பலருக்கு தெரியாமலேயே போய்விட்டது. //
ReplyDeleteஆம்... இவையெல்லாம் பாடபுத்தகத்தில் சிறிதளவு மேலோட்டமாக பார்த்ததோடு சரி.... அவரின் சமுதாயமாற்றத்திற்கான பிரச்சாரங்கள் எதுவும் அதிக அளவில் பேசப்படாமல் பெரியார் என்றாலே கடவுள் மறுப்பு மட்டுமே என்று சுருக்கிவிட்டார்கள்...
பகிர்வுக்கு நன்றி சகோ
வருகை புரிந்து கருத்திட்டு சென்றமைக்கு வாழ்த்துகள் சகோதரி..
Deleteபெரியார் செய்த எல்லா நன்மைகளையும் கடவுள் எதிர்ப்பு என்ற ஒன்றை வைத்து நம் மக்களை மூடராக்கி விட்டார்கள்; இந்த வெகு ஜனப் பத்திர்க்கைகள்...அவர்கள் புரட்டு இனி வேகாது! அவர்கள் பாஷையில், இனி இந்த பருப்பு வேகாது!
ReplyDeleteபெரியரார் இல்லாவிடில்... பெண்களே...தாய்மார்களே, மகள்களே, சகோதரிகளே, ஏன் பாட்டிகளே, நீங்கள் இன்ன்னும் மகா மகா மகா மகா மகா, மாக into "ONE' billion times---கேவலமான அடிமைகளாக இருந்திருப்பீர்கள்...
ஏன் பெரியார் கடவுளை இல்லை என்று சொன்னார் எனபதை நானும் ஏன் பதிவில் சொல்வேன்..
உண்மைதான்.. கட்டாயம் சொல்லுங்கள்..
Deleteஅனைத்தும் மிக அருமையாக உள்ளது....பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
நோ கமெண்ட்ஸ் :-)))
ReplyDelete:)
Deleteநூற்றுக்கு நூறு உண்மை...
ReplyDeleteஅருமையான பகிர்வு...
நன்றி..
Deleteகடவுள் மறுப்பாளரும் இன்று தனிமதம் போலவே தான் வாழ்கிறார்கள்! தங்கள் தலைவரை குருவாக எண்ணுகிறார்கள்! ஜெயந்தி' கொண்டாடுகிறார்கள் !குருவை நிந்திப்பவரை குதறுகிறார்கள்! தங்கள் குரு எதிர்த்த சாதி வலுவிழந்து நிற்கும்போதும்..விடாமல், மீண்டும் வலுப் பெற்றுவிவார்களோ என்ற அச்சத்தில்...குருபாதையிலே செல்கிறார்கள்!
ReplyDeleteகுருவின் மற்றக் கருத்துக்களை ஆராய்ச்சி செய்து, காலத்துக்கு தகுந்த நிலைப்பாடு எடுக்காமல்..இன்னமும் பிள்ளையாரின், அய்யப்பனின் பிறப்பை ஆராய்ச்சி செய்கிறார்கள்!
சாதி/மத எதிர்ப்பை மட்டுமே பிரதானமாக சீடர்கள் எடுத்துச் செல்லும்போது..அவர்களின் குருவும் அதே கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுவது..தவிர்க்க முடியாது!
நல்லதொரு கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தோழரே...
Deleteபெரியார் கடவுள் இல்லை என சொன்னது உண்மையானால் ,அது இந்து, இஸ்லாமிய,யூத,கிருத்துவ அனைத்து கடவுளும் இல்லை என்பதாகவே பொருள், ஆனால் அது என்னங்கண்ணா , புள்ளையார் இல்லைனு சொல்லிட்டு அல்லா இருக்குன்னு சொல்லுறவங்களோட கூட்டணி வச்சுக்கிட்டு கடவுள் இல்லைனு சொல்வது :-))
ReplyDeleteபெரியார் என்னமோ சொல்லிட்டு போனார் ஆனால் அவரு பேர வச்சு ஊர ஏமாத்த ஒரு கூட்டம் அலையுதுன்னு மட்டும் நல்லா தெரியுது :-))
ஆம்.அது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும்படியே சொன்னார்.அதில் மாற்றில்லை.
ReplyDelete//பெரியார் பேர வச்சுக்கிட்டு ஊர ஏமாத்த ஒரு கூட்டம் அலையுதுன்னு மட்டும் நல்லா தெரியுது//
அதனாலதான் பெரியார் சொன்ன கருத்துக்கள் பலரைச் சென்று சேரவில்லை.
மற்ற மதங்களில் பலதரப்பட்ட உருவ வழிபாடோ மூடநம்பிக்கைகளோ நிறைந்திருக்கவில்லை என்பதை நினைவில் கொள்க..
Deleteநீங்க எதுக்கும் இந்த வீடியோக்களைப் பாருங்க, அப்புறம் ஒரு முடிவுக்கு வரலாம். மூட்டைப் பூச்சி தொல்லை வீட்டில் இருக்கலாம், ஆனால் அதற்காக வீட்டைக் கொளுத்துவது புத்திசாலித் தனம் இல்லை. [If possible, please watch all the videos starting from number one, and then come to a conclusion].
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=iHJVX679w2k&feature=relmfu
http://www.youtube.com/watch?v=Y5cYO4H2GOk&feature=watch_response
http://www.youtube.com/watch?v=VBmzX252gSM&feature=watch_response
First Video:
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=WNlPbvPfg_E&feature=relmfu
கண்டேன்.கருத்துகள் பலவிதம்..அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் தனி மனித விருப்பம்..
Deleteகடவுள் என்ற ஒன்றால்தான் மனிதனுக்குள் பிரிவு, பகைமை, ஏற்றத்தாழ்வு, தீண்டாமை என அனைத்தும் ஏற்படுகிறது.மதம் ,இனம் என்று மனிதன் வெறி பிடித்து திரிகிறான்.இவற்றிற்கும் காரணமான அந்த கடவுளையே புறக்கணிப்போம் என்றதன் அடிப்படையிலேயே பெரியார் கடவுள் இல்லை என்ற நிலைப்பாட்டை கையில் எடுத்தார்.மற்றபடி கடவுளுக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.கடவுளைக் கொண்டாட விருப்பப்பட்டால் உலகை உருவாக்கிய சூரியனை கடவுளாக ஏற்றுக்கொள் என்றார்.ஏனெனில் உலகில் சூரியன் ஒன்றுதான்.ஆதலால் இதில் பிரிவினையோ சச்சரவோ வர வாய்ப்பில்லை.பெரியாரின் கொள்கைகளில் இதுவும் ஒன்றுதானே தவிர இது மட்டும் இல்லை.வருகைக்கு நன்றி தோழரே..
Deleteபெரியார் பெயர் சொல்லி நாத்திகம் பேசுவோரில் பெரும்பான்மையானோர் இறைவனை வழிபடுவோரை கிண்டல் செய்தைத்தவிர சமூகத்திற்கு பெரிதாக எதுவும் செய்ததாக வரலாறு இல்லை.
ReplyDeleteசிறுபான்மையோர் சமூகத்திற்கு செய்திருக்கிறார்கள் என்பது உங்கள் கருத்திலேயே இருக்கிறது.நாத்திகம் ஒரு மனிதனுக்குள் மாற்றத்தை ஏற்படுத்துவது.சுயமரியாதையை தானாகவே மீட்டெடுக்கச் சொல்லித் தருவது,பகுத்தறிய சொல்லிக் கொடுப்பதுதான்.50 வருடங்களுக்கு முன்பு இருந்த தமிழனைக் காட்டிலும் இன்றைய தமிழன் ஓரளவிற்கு சுயமரியாதையோடு இருக்கிறான்.வாரிசுகளையும் இருக்க வைக்கிறான்.தனி மனிதனும் சமூகம் சார்ந்தவன் தானே.
Deleteவருகை புரிந்து கருத்திட்டமைக்கு நன்றி சிவா..
@ சிவகுமார்
Deleteநாலு வார்த்தைன்னாலும் நச்....ன்னு இருக்கு!!
20ம் நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர் பெரியார்.தமிழகத்தில் பிறந்த ஒரே காரணத்தால் குன்றின் கீழிட்ட விளக்கு.
ReplyDeleteஆமாம் தோழரே..பெரியார் தமிழனுக்கு சொல்லாமல் மாறாக அமெரிக்கனுக்கு சொல்லியிருந்தால் பெரியாரின் பெயர் உலக சரித்திரத்தில் முக்கிய இடத்தை வகித்திருக்கும்..
Deleteபெரியாரை விமர்சிக்கிறவன் நித்யாணந்தாவையும் நல்லவனாக்க முயலும்போதுதான் அவன் எவ்ளோ பெரிய அயோக்கியன்னு தெரியும்!
ReplyDeleteஆனால் ஜெயவேல் போன்ற ஆட்கள் இருக்கும்போது, அவதூறில் இருந்து பெரியாரை என்ன அவரோட பகவானையே காப்பாத்த முடியாது!
பெரியார், காலத்துக்கு முன்னால கீழ்சாதி இந்துப் பெண்கள் மார்பை மறைக்காமல் இருக்கனும்னு சொல்லி, அவர்களை அரைகுறையாக விட்டு வேடிக்கை பார்த்தவனுக ஜெயவேல் கட்டி அழும் இந்துமத உயர்சாதிப் பயலுக.
ஜெயவேலுடைய முப்பாட்டனார்கள் எல்லாம் இந்தப் பெண்களைப் பார்த்து பொத்திக்கிட்டு இருந்து இருக்காங்க.
http://www.nambalki.com/2012/09/1_21.html
வந்துட்டாரு இவரு பெரியாரை கேவலபப்டுத்த நாலு லின்க்கோட. பெரியாருக்கு முன்னால கீழ்சாதி பெண்கள் அவமானப்படும்போது ஜெயவேல் மாரி ஆட்கள் ஏன் மூடிக்கிட்டு இருந்தாங்கனு தெரியலை.
http://www.nambalki.com/2012/09/1_21.html
Deleteமேற்கண்ட இணைப்பில் சென்றேன்..எப்படியெல்லாம் நடந்திருக்கிறது பாருங்கள்.என்ன கொடுமை..இதை மாற்றிக் காட்டியது பகுத்தறிவும் சுயமரியாதையும் தான் தவிர கடவுள் பக்தியால் அல்ல.அந்த அவலங்கள் எல்லாம் மதம் என்ற போர்வையிலும் கடவுள் என்ற போர்வையிலும் நம்பூதிரிகள் நடத்தியிருக்கிறார்கள்..
@ வருண்
Delete\\பெரியாரை விமர்சிக்கிறவன் நித்யாணந்தாவையும் நல்லவனாக்க முயலும்போதுதான் அவன் எவ்ளோ பெரிய அயோக்கியன்னு தெரியும்! \\ என்னுடைய பின்னூட்டத்துக்குப் பதில் போடும் போது இந்த மாதிரி எழுதி நான் ஏதோ கேமராவில் பெண்ணோடு மாட்டிய அயோக்கியனுக்கு வக்காலத்து வாங்குபவன் என்ற சாயத்தை பூசப் பார்க்கிறீர்கள், இது சரியில்லை வருண். தயவு செய்து இதை நிறுத்துங்கள். எனக்கு நாத்தீகர்கள் மேல் வெறுப்பு அவ்வளவாகக் கிடையாது, என் கையில் சட்டம் இருந்தால் இந்த மாதிரி நாதாரிகளை சாகும் வரை வெளியே வராமல் கலி தின்னச் செய்வேன்.
\\பெரியார், காலத்துக்கு முன்னால கீழ்சாதி இந்துப் பெண்கள் மார்பை மறைக்காமல் இருக்கனும்னு சொல்லி, அவர்களை அரைகுறையாக விட்டு வேடிக்கை பார்த்தவனுக ஜெயவேல் கட்டி அழும் இந்துமத உயர்சாதிப் பயலுக.\\ ஏங்க பாட்டியிடம் அவளோட எள்ளு தாத்த காலத்தில இருந்து நடந்த கதையைக் கேட்டிருக்கிறேன், இது மாதிரி நடந்ததாகத் தெரியவில்லை. அப்படி நடந்திருந்தால் அது கண்டிக்கத் தக்கதே. கண்ணில் காட்ராக்ட் இருந்தால் கண்ணை பிடுங்கிப் போடு என்பது தீர்வாகாது, அதைச் சரி செய்து பயன்படுத்த வேண்டும் என்பதே புத்திசாலித் தனமான முடிவாக இருக்கும்.
\\வந்துட்டாரு இவரு பெரியாரை கேவலபப்டுத்த நாலு லின்க்கோட.\\ சிலை வெறும் கல்லு அதற்க்கு மாலை போடுவது காட்டு மிராண்டித் தனம் என்று சொல்லிவிட்டு தனக்கு சிலை வைத்து அதற்க்கு மாலை போடச் சொல்லலாமா? பெண் திருமணத்தால் தான் அடிமையாகிறாள் என்று சொல்லி விட்டு, அவரே எதற்கு இரண்டாவது முறையும் திருமணம் செய்து அவளை இவருக்கு பணிவிடை செய்யும் ஒரு அடிமையாக வைத்திருக்க வேண்டும்? ஒரு பெண் திருமணம் செய்யாமல் இருக்கவே கூடாது என்பதை இன்றைக்கு ஷாலினி போன்ற மனோதத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள், அவர்கள் என்ன முட்டாள்களா? கொள்கை என்ற பெயரில் எந்த பைத்தியக் காரத் தனத்தையும் பரப்புவதா? உனக்கு என் குடுமி, உனக்கு என் பூணூல், உனக்கு என் குல்லா, லுங்கி என்று இறை நம்பிக்கையாளர்களைப் பார்த்து கேள்வி கேட்கும் இவர் எதற்காக கருப்பு சொக்காயை இவர் கட்சிக்காரகளுக்கு போட்டு விட்டார்? மற்றவர்கள் தங்களை அடையாள படுத்திக் கொள்வது தவறு என்றால் இவர்கள் என் தங்களைத் தனியாக அடையாள படுத்திக் கொள்ள வேண்டும்? இவர்கள் இவர்கள் கொள்கையைப் பரப்ப அவ்வாறு செய்வது சரி என்றால், ஒரு இறை நம்பிக்கையாளன் அவன் கொள்கையைப் பாப்பா தன்னை அடையாள படுத்திக் கொண்டால் என்ன தப்பு? மேல்சாதிக் காரர்கள் மற்றவர்களை அடிமைப் படுத்தினார்கள் அதை எதிர்த்தது வரை சரி, அதற்கும் மேல் இறை நம்பிக்கையே கூடாது என்பது, தனி மனித உரிமை மீறலாகத்தன் இருக்கும்.
//பெரியார், காலத்துக்கு முன்னால கீழ்சாதி இந்துப் பெண்கள் மார்பை மறைக்காமல் இருக்கனும்னு சொல்லி//
Deleteபெரியாருக்கும் தோள்சீலைப்போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம்.
மதுமதி,
பெரியார் ஒரு கலகக்காரராகவே இருந்தார். அவர் எதோ ஒரு தீர்வை நோக்கி தன்னுடைய கொள்கையை நகர்த்தவில்லை. ஆனால் அவருக்கு பின்னால் வந்தவர்கள் ஆதாயத்திற்காக சமரசம் செய்து கொண்டனர்.
//குட்டிப்பிசாசு//
Deleteபெரியாருக்கும் தோள்சீலைப்போராட்டத்திற்கும் சம்பந்தம் இலையென்பது அனைவரும் அறிந்ததே..சம்பந்தம் உண்டென குறிப்பிடப்படவில்லை.
போராட்டக்காரர் என்பதை கலகக்காரர் என்று சொல்கிறீர்கள்..
உங்களின் பார்வை அது.சிப்பாய் புரட்சியைக் கூட நம்மில் சிலர் சிப்பாய் கலகம் என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.பெரியார் கொண்ட கொள்கையால் சமூகம் கொஞ்சமேனும் பயன் அடைந்திருக்கிறது என்பதை யாரும் மறுத்திட முடியாது.
தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி..
மதுமதி,
Delete//பெரியார் கொண்ட கொள்கையால் சமூகம் கொஞ்சமேனும் பயன் அடைந்திருக்கிறது என்பதை யாரும் மறுத்திட முடியாது.//
100% உண்மை.
நான் மறுக்கவில்லை. மேலே குறிப்பிட்ட காணொளியில் பெரியார் முன்னுக்குபின் முரணாக பேசினார் எனச்சொல்லப்பட்டது. அதனால் தான் கலகக்காரர் என்றேன். அவர் எதையும் புனிதமாக்கவில்லை. அனைத்தையும் விமர்சித்தார்.
முன்னுக்கு பேசியவன் முரணாக பேசிய போது பின்னுக்கு பேசிய இவரும் முரணாகத்தான் பேசமுடியும்..
Deleteபுனிதம் என்று ஒரு சாரார் ஒன்றை சொல்லிக்கொண்டு பிறரை நெருங்கவிடாமல் செய்து கொண்டிருந்த விமர்சிப்பதை வேறென்ன செய்யமுடியும் தோழரே..
***ஏங்க பாட்டியிடம் அவளோட எள்ளு தாத்த காலத்தில இருந்து நடந்த கதையைக் கேட்டிருக்கிறேன், இது மாதிரி நடந்ததாகத் தெரியவில்லை.***
Deleteஜெயவேல்:
எங்களுக்கெல்லாம் பாட்டியே கெடையாது!
இந்து மதம் வளர்க்கும் உங்களுக்கு அதற்கு எதிரா வரும் எல்லாமே கட்டுக்கதைதான்.
நாங்கல்லாம் லூசுப் பயலுக, சும்மா இணையத்தில் வந்து கத்திக்கிட்டு இருக்கோம் விடுங்க. I have first-hand and second-hand information and I have seen with own eyes about high class hindus abusing "low-class"!
நீங்க பெரியாரை கெட்டவராக ஆக்குவதால் வரலாறு மாறாது. உயர்சாதி மேல்குடி உங்களமாரி அறியாமையில் வாழும் ஆட்களை வைத்தே தேவையானதை சாதிச்சுருவாங்க, சாதிச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க. இது காலங்காலமா நடந்துக்கிட்டு இருக்கு! இப்போதைக்கு பலிகடா அறியாமையில் வாழும் ஜெயவேல்!
பாவம் உங்க தலையெழுத்து இது. உங்க மதத்துக்கு எதிரா வரும் எல்லாத்தையும் கட்டுக்கதை..பெரியார் மட்டும்தான் அயோக்கியன்னு சொல்லிக்கிட்டே இருங்க! உங்களைப் பார்த்தால் பரிதாபமா இருக்கு.
நண்பரே கேரளத்தில் ஆதிவாசிகள் இப்போது அந்த நிலையில்தான் இருக்கிறார்கள் அவர்களுக்காக போராடிய ஜானுவை பொய் வழக்கு போட்டு கைது செய்தார்கள்,அன்று நம்பூதிரிகள்தான் செய்தார்கள் இன்று கேரளா அரசாங்கம் முதல் அங்குள்ள மக்கள் எல்லாரும் ஜாதி மத பேதமில்லாமல் ஆதி வாசிகளை கொடுமைப்படுத்துவது நடக்கிறது.இப்போதைய இந்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது முத்தங்கா என்னும் இடத்தில் ஆதிவாசிகளை போலிசைகொண்டு அடித்து ஒடுக்கியது மறக்க முடியாது. ஆனால் அவர்களின் தொலைகாட்சிகளில் தமிழ் நாட்டில் இரட்டை டம்ளர் உள்ளதாக மட்டும் காட்டுவார்கள்.
ReplyDeleteகொடுமையிலும் கொடுமை..அதற்காக மேற்கொண்ட போராட்டங்களின் விளைவால் இப்போது அந்த நிலை கிட்டத்தட்ட மாறிவிட்டதென நினைக்கிறேன்..தன் மாநிலத்தில் ஒரு இனத்தினருக்கு பாதுகாப்பு வழங்கமுடியாத அந்தோணி அவர்கள் இந்தியாவுக்கு பாதுகாப்பு அமைச்சர்..#முரண்#
Deleteதொடருங்கள் ...தொடர்கிறேன் ...
ReplyDelete//மனிதனை முட்டாளாக்கும் அமைப்பே மதம்//
ReplyDeleteஉண்மைதான் தோழரே...
நன்றி தோழரே..
Deleteநற் சிந்தனைகளின் பகிர்வு மிக அருமை மதுமதி.... எல்லோரும் தங்கள் கருத்துகளை சொல்லி இருக்கிறார்கள்.... யாருக்கும் எந்த துன்பமும் தராது யாரையும் துன்புறுத்தாது நல்லவைகளை மட்டுமே நினைத்து செயல்பட்டால் போதும்..
ReplyDeleteநற்சிந்தனை பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி..
ReplyDeleteகடவுள் இல்லை என்று சொன்ன ஒரே காரணத்திற்காக மனித வாழ்க்கைக்குத் தேவையான பெரியாரின் பொன்மொழிகள் அனைத்தும் புறந்தள்ளப்படுகின்றன.
ReplyDeleteமுற்றிலும் உண்மை தாங்க.
தங்கள் பதிவுகள் மூலம் உண்மையை புரிய வைக்க முயல்வோம் சிறந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
மதங்கள் ஏற்படுத்தப்பட நோக்கங்கள் வேறு...
ReplyDeleteஇப்போது அவை செயல் படும் நோக்கங்கள் வேறு..............
அருமையான கருத்து அண்ணா..............