பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி விநாயக சதுர்த்திக்கு தமிழகம் தயாரானதா என்று வினா எழுகையில் யோசிக்காமல் விடை வந்து விழும் இல்லையே என்று.தமிழர்களெல்லாம் எப்போது இந்துக்களாக மாறிப்போனார்களோ அப்போதே கருப்பராயன்களையும் சுடலையாண்டிகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு விநாயகனை முன்னுக்கு அமர வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்..
இன்று கிராமம் தோறும் விநாயக சிலைகளை நிறுவி விழா எடுக்க ஆரம்பித்துவிட்டான் திராவிடத் தமிழன்.தமிழனின் பாரம்பரிய பண்டிகையாம் பொங்கல், அதை கொண்டாடுவதைக் காட்டிலும் சதுர்த்தியைக் கொண்டாடும் ஆவல் என்னமோ இந்த பத்தாண்டுகளில் தமிழனுக்கு அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது.தமிழ்க்கடவுள் என்று போற்றிக்கொண்டே முருகனை புறந்தள்ளி விநாயகனை முன்னுக்கு வைக்கிறானே தமிழன்.. பாழடைந்து சிதைந்து போய் கிடக்கும் குலதெய்வத்திற்கு சிலை திறக்காத தமிழன் வருடா வருடம் விநாயகனுக்கு சிலை திறக்க முதல் வரிசையில் வந்து நிற்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.
மூத்த தமிழர்கள் மூக்கின்மேல் விரலை வைக்கும் அளவிற்கு இளைய தமிழன் முன்னவன் ஸ்தோத்திரம் முறையாகப் பாடுகிறான்.மாரியம்மன்களும் பராசக்திகளும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன.இங்கே யார் யாரை வேண்டுமானாலும் வணங்கலாம் தப்பில்லை..முன்னவன் ஆகும் அளவிற்கு விநாயகனுக்கு முக்கியத்துவம் யார் தந்தது என யோசிக்கப் பார்க்கத் தோன்றுகிறது.
விநாயகன் யார்? தெய்வம் தானா? சிவபெருமானின் பிள்ளையா?பிறப்பெப்படி?பிறப்பில் சர்ச்சை இருக்கிறதே! பல கதைகளை புராணம் சொல்லுகிறதே! என நாத்திக பேசவும் விரும்பவில்லை. விநாயகப்பெருமான் இன்று இவ்வுலகில் அவதரித்த நாள் ஆகவே இன்றைய நாளில் நாம் எல்லோரும் இந்துக்கள் என சொல்லியபடி வாருங்கள் தமிழர்களே! சிலை தூக்கலாம்.. கடலில் சென்று கலக்கலாம் என்று நான் போற்றுவதிலும் அர்த்தமில்லை.
மராட்டியர்களின் குலதெய்வமான விநாயகன் எப்போது தமிழகம் நோக்கி வந்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் முன்னமே ஆய்வுகளை மேற்கொண்டு சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி பண்டை காலத்தில் இப்படி ஒரு தெய்வம் இருக்கும் செய்தி தெரியாமலே தமிழன் இருந்திருக்கிறான் என்ற உணமை பதியப்பட்டிருக்கிறது.அப்படியானால் விநாயகனை தமிழகத்திற்கு இறக்குமதி செய்தவன் யார்? விநாயகன் தமிழகம் வந்த பின்னணி என்ன என்பதையும் முன்னோர்களின் தேடல் நமக்கு பதிலாக நிற்கிறது.
விநாயகன் என்றொரு வடிவமே கி.பி.5 ம் நூற்றாண்டின் இறுதியில்தான் தோன்றிருக்கும் என்று தமிழர் வேதத்தில் மறைமலை அடிகள் குறிப்பிடுகிறார்.
அப்படியானால் 4 ம் நூற்றாண்டில் குப்த பேரரசு ஆட்சி நடத்தியது.அது முற்றிலும் இந்து மத ஆட்சிதான்.அப்போது அங்கு விநாயன் என்றொரு இந்து கடவுள் இருந்ததாக எந்தவொரு வரலாறும் இல்லை.இடைச்செருகல் தான். பல்லவர் காலத்தில்தான் விநாயகன் தமிழகம் வந்திருக்கிறான் என்று தனது ஆராய்ச்சியின் முடிவில் 'ஞான விநாயகன்' எனும் கட்டுரை வாயிலாக முனைவர்.சோ.ந.கந்தசாமி சொல்கிறார்.
முதலாம் நரசிம்மவர்மன் தானைத்தலைவராகிய பரஞ்சோதியார் என்னும் சிவத் தொண்டர் இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலைநகராகிய வாதாபியிலிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலையைத் திருச்செங்காட் டாங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இது உண்மைதான்.
"பொடி நுகரும் சிறுத் தொண்டர்க்கருள் செய்யும் பொருட் டாக
கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே "
என்று திருஞான சம்பந்தர் பாடுகிறார்.நம் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ் நூல்களில் இவ்விநாயகர் வழிபாடு சொல்லப்படவில்லை. திருஞான சம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகர் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். என்றும் சொல்கிறார்.திருஞான சம்பந்தர் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விநாயகனை வாதாபியிலிருந்து பல்லவர்கள் கொண்டுவந்ததால் 'வாதாபி கணபதி பஜேம் பஜேம்' என்ற தோத்திரத்தால் விநாயகனை போற்றுவர் என்று சைவப் பெரும்புலவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் தான் எழுதிய "சைவ சமயம்" என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும் சாளுக்கியர்கள் எந்த காலக்கட்டத்தில் வாழ்ந்தார்கள் என்று .தன் தந்தையான முதலாம் மகேந்திர வர்மனை தோற்கடித்த சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை அவனது தலைநகரான வாதாபி சென்று அவனை வீழ்த்தி அந்நகரை தீக்கிரையாக்கி விட்டு 'வாதாபி கொண்டான்' என்ற பட்டப்பெயரோடு நரசிம்ம வர்மன் வந்தான் என்பது வரலாறு.இது நடந்தது கி.பி 642 ம் ஆண்டு.அந்த நேரத்தில் பல்லவர்களின் கண்ணுக்குப் பட்ட வித்தியாசமான உருவச்சிலைதான் யானைமுகத்தோடு இருந்த விநாயகச் சிலை. அதை தமிழகம் கொண்டுவந்திருக்கலாம் என்பது புலப்படுகிறது அப்படி கொண்டு வந்த சிலையை வைத்த இடம் கணபதீச்சுரமாக இன்றும் நிற்கிறது.
சரி விநாயகன் தமிழகம் வந்தாகிவிட்டது.விநாக சதுர்த்தி வீறு கொண்டு எழுந்தது எப்போது?
சாளுக்கியர்கள் ஆண்ட வாதாபி இன்றைய மஹாராஷ்டிர மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.மராட்டியத்தை சத்ரபதி சிவாஜி ஆண்டபோது தேசிய விழாவாக இதை அறிவிக்க மராட்டிய மக்கள் தத்தம் வீடுகளில் வைத்து விழா எடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.இந்து மத ஈர்ப்பு கொண்டவர்கள் அவ்விழாவைக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.சுதந்திரப் போராட்டக் காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத்தலைவராக இருந்த பாலகங்காதர திலகர் இதை குடும்ப விழாவாகக் கருதாமல் ஊர் கூடி செய்யலாம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் செய்யலாம் என அறிவிக்க இந்துமத காங்கிரஸார் ஆங்காங்கு நடத்த அது மெதுவாக தமிழகத்திற்கும் இடம்பெயர்ந்தது.இன்று தமிழ்ர்கள் கொண்டாடும் ஒரு முக்கிய விழாவாக மாறிப்போயிருக்கிறது.இந்துக்கள் கூடி பக்தியைக் காட்டாமல் தங்களின் சக்தியைக் காட்டுவதாக இந்த விழா மாறிப்போனதுதான் வருத்தப் பட வேண்டியதாயிருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ஆயத்தமாகி வருகிறார்கள்.பொதுவாக விநாயகர் சதுர்த்தி என்றாலே இந்துக்களுக்கு கொண்டாட்டத்தையும் மற்ற சிறுபான்மை மதத்தினருக்கு திண்டாட்டத்தையும் கொடுக்கும் என கடந்த காலம் சொல்கிறது.
சிலை ஊர்வலத்தின் போது மற்ற மதத்தவரை இழிவு படுத்தும் நோக்கில் இந்துக்கள் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை ஒவ்வொரு சதுர்த்தியின் போதும் சிறுபான்மை இனத்தவர் குரலெழுப்ப கேட்டிருப்போம்.. சதுர்த்தி என்பது இந்துக்களின் பக்தியைக் காட்டுவதாக இல்லாமல் இந்துக்களின் பலத்தைக் காட்டுவது போல நாளடைவில் மாறிப்போனது வருத்தமளிக்கத்தான் செய்கிறது.
மற்ற மதத்தினரோடு இருக்கும் பிரச்சனையை தீர்த்துகொள்ளவும் அவர்களைப் பழி வாங்கவும் இந்நாள் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
என்னதான் வேற்றுமையில் ஒற்றுமை என்று நம் நாட்டைப் போற்றி புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தாலும் அனைத்தும் பொய்மை என்பது புத்திக்கு புலனாகத்தான் செய்யும்.மனிதனுக்கு மனிதன் மதச் சாயம் பூசிக்கொண்டுதான் சமத்துவம் பேசுகிறான்.எந்த திருவிழாவிற்கும் இல்லாத பாதுகாப்பை அரசு இந்த விழாவிற்கு தருகிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.கலவரம் நடப்பது உறுதி என்று அரசுக்கும் தெரிந்திருக்கிறது.கலவரம் என்றால் தடுப்பதற்கான வழிமுறைகளை அரசு வகுத்து வைத்திருக்கிறது.மாறாக கலவரமே நடைபெறாமல் இருக்க என்ன வழிமுறை வகுத்திருக்கிறதென தெரியவில்லை.
வட இந்தியாவில் இருந்து மத கலவரம் செய்யும் நோக்கத்துடன் இறக்குமதி செய்யப்பட்டது தான் இந்த விநாயகர் சதுர்த்தி என்னும் பிள்ளையார் பிறந்த நாள் (பிள்ளையார் உருவாக்கபட்ட நாள்). இந்த விநாயகர் சதுர்த்தி பல ஹிந்து மக்களால் அமைதியாக வீட்டிலே கொண்டாடபடுகிறது. சில ஹிந்து மத வெறியர்கள் விநாயகர் சதுர்த்தியை ஹிந்து முஸ்லிம் இடையே கலவரம் ஏற்படுத்துவதற்காகவே கொண்டாடுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் இந்த விநாயகர் ஊர்வலத்தால் நடந்த கலவரங்கள் ஏராளம் ஏராளம். அதில் அதிகமாக பாதிக்கப்பட்டது முஸ்லிம்களின் உயிர்களும் உடமைகளுமே....
என்று ஒருசாரார் வேதனையைடவது தொடர வேண்டாமே என்று ஊர்வலத்தில் கலந்துகொள்ளாமல் வீட்டிலிருந்தபடியே விநாயகனை வணங்குபவர்கள் வேண்டிக்கொள்ளுங்கள்..
பிறர் மனம் கோணாமல் விழா கொண்டாடுவோர் கொண்டாடலாம் என்ற உங்கள் கருத்து சரியானதே!
ReplyDeleteஆமாம் ஐயா அதைத்தான் நான் சொல்ல வந்தேன் என்பதை சரியாகப் புரிந்து கொண்டீர்கள்..
Deleteநல்ல ஆய்வு கட்டுரை ,சாமிக்கு கொடுப்பதை எண்ணி
ReplyDeleteசாமானியனுக்கு கொடுத்தால் சமயம் மறுக்கிறதா? இல்லை சாமிதான் வேறுக்கிறதா?
யோசிக்கணும்..யோசிக்க்ணும்..யோசிக்கணும்..
Deleteஅற்புதமான ஆய்வுப்பகிர்வு சார்.
ReplyDeleteமுன்பு இங்கே மலேசியாவிலும் இவ்விழா அவ்வளவு கோலாகலமாகக் கொண்டாடப்படவில்லை. இப்படி ஒரு நாள் இருக்கின்றதா என்பது கூட தெரியாமல் வளந்தோம் ஆனால் இப்போது எங்கு பார்த்தாலும் இது விசேஷ விழாவாகக் கொடிகட்டிப்பறக்கிறது. ஒரு மாதகால விரதம் எடுத்து, தீபாவளிபோல் புத்தாடைகள் வாங்கி, பட்டாசு கொளுத்திக் கொண்டாடுகிறார்கள். எனது அண்டைவீடுகளிலும், நேற்று இரவிலிருந்து அலங்காரங்கள் ஓயவில்லை.காலையிலிருந்து குறுந்தகவலும் ஓயவில்லை. சதூர்த்தி வாழ்த்துகள் என.. பெரிய விழாவாக வரும் போலிருக்கு. விநாயகரை சிறிய அளவில் பொம்மை செய்து ஆற்றில் விட்டுக் கரைப்பதைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். இது மிகப்பெரிய பரிணாம வளர்ச்சியில் முடியலாம்.வியாபார நோக்கமும் இந்நிகழ்விற்கு தூபம் காட்டுகிறது.கடைத்தெருக்களில் கூட்டங்கள் அலைமோதுகின்றன. தமிழ்நாட்டில் செய்வார்கள், இந்தியாவில் கடைபிடிப்பார்கள் என வியாபாரம் தூள் பறக்கிறது.இங்கே, கூடிய விரைவில் அரசாங்கத்திடம் மனு அனுப்பி, இந்நாளில் பொதுவிடுமுறை கொடுக்கச்சொல்லி விண்ணப்பம் வைத்தாலும் ஆச்சிரியப்படுவதிற்கில்லை.நன்றி சார், நானும் எனது வலைத்த்ளத்தில் இதைப் பகிர்ந்துக்கொள்கிறேன்.
ஆமாம் விஜி..நாளடைவில் தீபாவளியையும் தூக்கி சப்பிட்டு விடும் போல..பதிவை உங்கள் தளத்தில் பகிர்ந்து கொண்டீர்களா..மகிழ்ச்சி..
Deleteதீர்க்கமான சிந்தனை - பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteகருத்துக்கு நன்றி தோழர்..
Deleteநல்லதொரு ஆய்வுக் கட்டுரை! கலவரம் விளைவிப்பது கண்டிக்கத்தக்க ஒன்றுதான்!களையப்பட வேண்டிய ஒரு செயல்! நன்றி!
ReplyDelete-காரஞ்சன்(சேஷ்)
களையப் படாவிட்டாலும் கருத்தொற்றுமையுடன் அடுத்தவரை வேற்றுமைப் படுத்தால் போதுமானது.
Deleteநல்லதோர் கருத்து
ReplyDeleteசூப்பர்...................
வாடாம்மா..
Delete100% true. thanks for sharing
ReplyDeleteகருத்துக்கு நன்றி நண்பா..
Deleteதோழர் மதுமதி அவர்களுக்கு, விநாயகர் அதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள். :-)))
ReplyDeleteசிறப்பு..
Deleteஇங்குள்ள தமிழன் கணபதி வப்பா என்று மாரத்தியில் கோஷம் இடுவதைப் பார்க்கும் போது சிரிப்பாக இருக்கின்றது. மத சம்பிரதாயங்கள் அடுத்தவரை புண் படுத்தாத வரை நல்லதே அப்படி புண் படுத்தும் சடங்குகளை புறங்கணிப்பதை தவிர வேறு வழியில்லை....!தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
ReplyDeleteஆமாம் தோழரே..
Deleteநல்லதொரு ஆய்வுக் கட்டுரை சார்
ReplyDeleteநன்றி செய்தாலி..
Deleteஆடம்பரமில்லா விழா கொண்டாட்டங்கள் அமைதி தரும் என்பதே என் கருத்தும். சிறந்த சிந்திக்க வைக்கும் பதிவு.
ReplyDeleteகருத்துக்கு நன்றி சகோதரி..
Deleteபகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
ம் ...
ReplyDeleteம்க்கு ம்..
Delete
ReplyDeleteவிநாயகர் ஆய்வு விளக்கம் நன்று!
நன்றி ஐயா..
Deletehttp://charlestontamilanmegamandram.wordpress.com/2012/09/19/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/
ReplyDeleteஎன்று ஒருசாரார் வேதனையைடவது தொடர வேண்டாமே என்று ஊர்வலத்தில் கலந்துகொள்ளாமல் வீட்டிலிருந்தபடியே விநாயகனை வணங்குபவர்கள் வேண்டிக்கொள்ளுங்கள்..
ReplyDeleteநன்று
http://charlestontamilanmegamandram.wordpress.com/2012/09/19/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/
நன்றி..பதிவைப் பார்த்தேன்..காலக்கட்டத்தை கணிப்பதில் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கிறது..
Deleteவிநாயகர் சதுர்த்தியும் தமிழர்களின் வீரமும் - அறியாத தகவல்கள்!
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2012/09/vinayagar-chaturthi.html
சம்மந்தப்பட்ட பதிவிற்கு கருத்தையும் சொல்லிவிட்டு இணைப்பை தந்திருக்கலாம்..
Deleteவிநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பின் இவ்வளாவு விசயம் இருக்கா?!
ReplyDeleteஇன்னும் நிறைய இருக்குங்க..
Deleteஎந்த விழாக்களும் மற்றவர்களுக்குத் துன்பம்தராமல் இருப்பது நல்லது.
ReplyDeleteஎமது நாட்டில் ஆலய வழிபாடுகளுடன் கொண்டாடுகிறார்கள்.நாளடைவில் என்ன ஆகுமோ.
ஆமாம் சகோதரி...ஆதங்கத்தை வெளிப்படுத்த மட்டுமே நம்மால் முடிகிறது...
ReplyDeleteபிறர் மனம் புண்படாத வகையில் சொல்ல முயன்றுள்ளீர்கள்
ReplyDeleteநன்றி தோழரே..
Delete***வட இந்தியாவில் இருந்து மத கலவரம் செய்யும் நோக்கத்துடன் இறக்குமதி செய்யப்பட்டது தான் இந்த விநாயகர் சதுர்த்தி என்னும் பிள்ளையார் பிறந்த நாள் (பிள்ளையார் உருவாக்கபட்ட நாள்). இந்த விநாயகர் சதுர்த்தி பல ஹிந்து மக்களால் அமைதியாக வீட்டிலே கொண்டாடபடுகிறது. சில ஹிந்து மத வெறியர்கள் விநாயகர் சதுர்த்தியை ஹிந்து முஸ்லிம் இடையே கலவரம் ஏற்படுத்துவதற்காகவே கொண்டாடுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் இந்த விநாயகர் ஊர்வலத்தால் நடந்த கலவரங்கள் ஏராளம் ஏராளம். அதில் அதிகமாக பாதிக்கப்பட்டது முஸ்லிம்களின் உயிர்களும் உடமைகளுமே....***
ReplyDeleteதெளிவாக உண்மையச் சொல்லியிருக்கீங்க! நம்ம நாத்தீக வேடம் தரித்துத் திரியும் ஆண்மீகவாதிகள் எல்லாம் பொத்திக்கிட்டு இருப்பார்களே!!!!
இதேபோல்தான் பதிவுலகிலும் நடந்துக்கிட்டு இருக்கு. இவனுக சாமியை இவனுக கும்பிட மாட்டானுக. இன்னொருத்தன் அவன் சாமியை கும்பிட்டுக்கிட்டு திரிகிறான்னா, என்னனு தொலியிறான்னு விட்டுட்டு வரமாட்டானுக!
ஏதோ பொதுநலவாதியாகி, நாத்திக வேடம் ஒண்ணை போட்டுக்கிட்டு பல பதிவுலகக் கலவரத்தை உண்டாக்கி உள்ளதையும் நாசமா ஆக்கிப்புடுவானுக!
ஏதாவது இதுபோல் உண்மையை எழுதினால், "நீ வருணா இல்லை அப்துல் காதரா?" னு நாலு அனானிகள் வந்து குரைக்கும்ங்க!
விரிவான கருத்துக்கு நன்றி தோழரே..
Deleteதற்போதைய காலத்தில் அவரவருக்கு மத நம்பிக்கை என்பது பொங்கி வழிகிறது, மூழ்கித் திளைகிறார்கள். முன்பெல்லாம் நான் பிரதோஷம் என்பதை சிவன் கோவில்களில் நடைபெறுவதைத் தான் பார்த்திருக்கிறேன். தற்போது இவை விநாயகர், சக்தி, முருகன் கோவில்களில் கூட நடக்கிறது. எல்லாம் பணம், வியாபாரம் தான் காரணம். தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தியன்று பொதுஇடங்களில் பெரியசிலைகள் வைத்து வயழிபடும் வழக்கம் முன்பெல்லாம் இல்லை. இப்போதெல்லாம் தெருக்குத்தெரு சிலைகள். வெட்டி செலவுகள். ஆன்மீகத்தை அவனவன் வீட்டோடு வைத்துக் கொள்வதில்லை. வீதிக்குக் கொண்டுவந்துவிடுகிறார்கள். அமைதியை வழங்கும் ஆன்மீகம் என்று சொல்லிக்கொள்பவர்கள், அவர்களாகவே அதை வீதிக்குக் கொண்டுவந்து விபச்சாரியாக்கிவிட்டார்கள்.
ReplyDeleteகருத்து பகிர்வுக்கு நன்றி..
Deleteதங்களின் கருத்துப் போல் நடந்தால் சரி... விளக்கங்கள் அருமை... அறியாதவர்களுக்கு அறிந்து கொள்ள வேண்டிய பல தகவல்கள்... மிக்க நன்றி சார்...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே..
Deleteஅண்ணே Innocence Of Muslims பத்தின பதிவுகளுக்கு போய் கண்டிக்கவேண்டிய விஷயம்னு கமண்ட் போடும்போது மட்டும் மதம் புனிதமாகிடுச்சா?
ReplyDeleteசரி விடுங்க பெரியார் பண்ண அதே வெலையை தான் நீங்களும் பண்ரீங்க
நீங்கள் சொல்வது போல் எங்கும் கருத்திட்டிருக்க மாட்டேன்.. பெரியாரைப் போல எதுவும் செய்ய முடியலயேங்கிற வருத்தம் தான் தோழரே..
Deleteவினாயகர் சதுர்த்தி மாராத்திகாரங்களை பார்த்துதான் கடந்த 10 வருடமா கொண்டாடறோம் இல்லைன்னு சொல்லவே இல்ல...
ReplyDeleteஎங்கயோ பாலைவனத்தில பக்ரீத்துக்கு ஒட்டகம் வெட்டுறானுகன்னு பரமக்குடியிலும், உத்தமபாளையத்திலையும் ஒட்டகத்த வெட்டி குர்பானி குடுக்குறத தட்டிக்கேட்க தைரியம் இருக்கிறதா.... அப்படி கேட்டுட்டு வாங்க உங்க காலுல விழுந்து இனிமே வினாயகர் சதுர்த்தி உட்பட எல்லா பண்டிகையையும் புறக்க்ணிச்சிட்டு பகுத்தறிவாளர்கள் மாதிரி பெரியார் படத்துக்கு பூஜை பண்ண ஆரம்பிச்சிடறேன்:)
எந்த மதம் எங்கிருந்து வந்ததுங்கறது இப்ப முக்கியமில்ல தோழரே.. அந்த மதத்தால அதுக்கு சம்பந்தப்படாதவங்களுக்கு பிரச்சனை இருக்கக்கூடாதுங்கிறதுதான் நோக்கமே.. மத்த மதங்களால பெரிசா ஏதும் மத்தவங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கா.. ஆனா இந்து மத பண்டிகையால மற்ற சிறுபான்மை மதத்தோர் பாதிக்கபபடுறாங்கன்னு உங்களுக்கு தெரியாதா?எந்த திருவிழாவையும் கொண்டாட வேண்டாமுன்னு சொல்ல யாருக்கும் அதிகாரமில்லை.அதே சமயம் அதைச் சாராதவங்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்ன்னு யாரு வேணாலும் சொல்லலாம்.பதிவை ஒருதடவை முழுசா படியுங்க தோழரே..சொல்ல வந்த விசயம் புரியும்..
Delete//இவனுக சாமியை இவனுக கும்பிட மாட்டானுக. இன்னொருத்தன் அவன் சாமியை கும்பிட்டுக்கிட்டு திரிகிறான்னா, என்னனு தொலியிறான்னு விட்டுட்டு வரமாட்டானுக!//
ReplyDeleteஇந்த வார்த்தை எங்களை விட உங்களுக்கு சும்மா பக்காவா பொருந்தும் :)
கேரளாக்காரன்: நீங்க என்னையும் நாத்திக வேடமணிந்து திரியும் திராவிட இந்து பக்திமான்,னு சொன்னாலும் உங்களுக்குத் தோல்விதான்! நானும் உங்க கூட்டத்துல நேர்ந்துடுறேன் பாருங்க!
Deleteஇல்லை நீ இஸ்லாமியன் அல்லது கிருத்தவன்னு சொன்னால், அது உங்களோட அறியாமை!
எந்தமாரிப் பார்த்தாலும் நீங்க தோல்வியடையிறீங்க, பாவம்! :)
பிள்ளையாரிடம் வேண்டுங்க எல்லாம் சரியாயிடும்! :))))
/கேரளாக்காரன்/
Deleteநீங்க சொல்றபடி விடலாம்.மத்தவங்களுக்கு பிரச்சனை இல்லாத போது..
***//இவனுக சாமியை இவனுக கும்பிட மாட்டானுக. இன்னொருத்தன் அவன் சாமியை கும்பிட்டுக்கிட்டு திரிகிறான்னா, என்னனு தொலியிறான்னு விட்டுட்டு வரமாட்டானுக!//
ReplyDeleteஇந்த வார்த்தை எங்களை விட உங்களுக்கு சும்மா பக்காவா பொருந்தும் :)***
எனக்குத் தெரிய பிள்ளையார் சுத்தினா வீட்டை சுத்தம் செஞ்சு, தண்ணீரிவிட்டு அலசிவிட்டு, பெரிய செலவெதுவும் இல்லாமல், ஒரு மண்பிள்ளையாரை வாங்கிவந்து, வயித்துல ஒரு நாலணா காசை வச்சு, சுண்டல், கொழுக்கட்டையெல்லாம் செஞ்சு பிள்ளையார் பேரைச் சொல்லி சாப்பிட்டுப்புட்டு அடுத்த நாளோ என்னவோ கொண்டு போயி பிள்ளையாரை சிறுவர்கள் எடுத்துக்கொண்டு கிணற்றில் போட்டுக்கிட்டு எளிமையா அழகாத்தான் கொண்டாடிக்கிட்டு இருந்தா..
திடீர்னு சிலர் தூண்டுதளால் சனியன் பிடிச்சுருச்சு!!!வேணும்னே வட இந்திய கலாச்சாரத்தை நம்மில் கொண்டு வந்து வீம்புக்கு சாமிகும்பிட்டது யாரு?? நானா இல்லை நீங்களா? உங்களுக்கு தமிழ் கலாச்சாரம் எல்லாம் தெரியுமா என்னனு தெரியலை. நீங்க தான் கேரளாக்காரராச்சே! :))
பதிவரே பதில்கள் எதுவும் தங்களுக்கு சொல்லப்பட்டதல்ல
Deleteகவிஞரிடம் கேட்க்கப்பட்டவை.... உங்களுக்கான கேள்விகள் மென்ஷன் இல்லாமல் கேட்க்கப்பட மாட்டாது
பதிவரே பதில்கள் எதுவும் தங்களுக்கு சொல்லப்பட்டதல்ல
Deleteகவிஞரிடம் கேட்க்கப்பட்டவை.... உங்களுக்கான கேள்விகள் மென்ஷன் இல்லாமல் கேட்க்கப்பட மாட்டாது
கவிஞர் மதுமதி உங்களிடம் மட்டுமே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் தரவில்லை...... அயாம் வெயிட்டிங்
ReplyDeleteநீங்க கேரளாக்காரன்னு வேற சொல்றீங்க வைக்கத்துல என்ன நடந்ததுன்னு தெரியுமில்ல. இன்னைக்கு வைக்கத்துல ஓரளவிற்காவது தலித்துங்க சம உரிமையோட கோயிலுக்கு போய் சாமி கும்பிடுறாங்களே.. கடவுள் இல்லைன்னு சொல்லியா வைக்கத்துல பெரியார் போராடினார்? எல்லா மக்களும் கோயிலுக்குள்ள போய் சாமி கும்பிடனம்ன்னு போராடினார்.அதையும் தாண்டி இந்த கடவுள்தானே தீண்டாமைக்கும் பிரிவினைக்கும் காரணம்ன்னு அதை புறக்கணிக்க சொன்னார்.கேரளாவுல இருக்குற தலித்துகள் இப்போ சுயமரியாதை யோட இருக்காங்கன்னா அதுக்கு பெரியாரும் காரணங்கிறத மறந்துட வேண்டாம்.நீங்க ஒத்துக்கலைன்னாலும் அவுங்களுக்கு நல்லாத் தெரியும்.
Deleteசர்வஜனிக் கணேஷ் உத்சவ் என்ற பெயரில் மராத்தியத்தில் மிகுதியாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களை முன்னிறுத்தி முக்கியத்துவம் கொடுக்கவும், பல்வேறு துறைகளில் சமூகத்தில் முன்னேறிய முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்கு ஒரு தடை ஏற்படுத்தவும் இல் திலகரால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு விழாவை பற்றி சிறப்பாக ஆராய்ந்து அதன் விளைவுகளை பக்குவமாக பதிந்துள்ளீர்கள். அருமை.
ReplyDeleteஇன்னும் சில மராத்திய பகுதிகளில் "கணேஷ் உத்சவ்"தான்...!! சதுர்த்தி என்ற பெயர் பிற்பாடு தான் இணைந்துள்ளது.
கடவுளின் மீதான நம்பிக்கை இப்போதெல்லாம், கைப்பேசியில் சமிஞ்சை கிடைக்குமா கிடைக்காதா என்ற அளவில் "நேரத்திற்கு தகுந்தார் போலாகிவிட்டது. எனவே கடவுளை பற்றிய சர்ச்சைகள் தேவையேயில்லை.
ஆனால் கண்முன்னால் ஒரு விஷவிருட்சம் வளருவதை எளிதாய் அருமையாய் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.
திலகரால் ஆரம்பிக்கப்பட்ட வருடத்தை குறிப்பிட மறந்து விட்டேன்.. 1893 அல்லது 1894'ஆக இருக்கலாம்.
ReplyDeleteNalla paativu nandri thozaray
ReplyDelete