உலகில் எங்கு பார்த்தாலும் மதச் சண்டை.. மனிதனுக்கு மனிதன் மதம் என்னும் கொடுவாளால் வெட்டிக்கொண்டு சாகிறான். உன் மதம் பெரிதா? என் மதம் பெரிதா? என அனுதினமும் உலகின் எங்கோ ஒரு மூலையில் முட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இசுலாமியர்களுக்கு கிறித்தவர்கள் எதிரியென்றும் இந்துக்களுக்கு இசுலாமியர்கள் எதிரிகள் என்றும் நாள்தோறும் நடக்கும் சம்பவங்களே சாட்சிகளாக மாறி நிற்கின்றன..
இறைவன் பெயரில் மதவாதிகள் செய்பவற்றை விமர்சிக்கும் நாத்திகர்கள் அனைத்து மதத்தினருக்கும் எதிரிகளாகப் பார்க்கப்படுகிறார்கள்.யார் மதம் பெரிது என்பதை தீன்மானிப்பது அந்த மதத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையே ஆகும். எனவேதான் மதவாதிகள் மற்ற மதத்தினரையும் தமது மதத்தில் இணைத்துக்கொண்டு உலகின் மாபெரும் சக்தியாக நம் மதம் விளங்கட்டும் என்ற நோக்கில் மத போதனைகளைகளின் மூலம் மக்களை மூளைச்சலவை செய்து வருகின்றார்கள்..ஆக பெரும்பான்மையான மக்கள் பின்பற்றும் மதம் உலகின் பெரிய,ஆதிக்க மதம் என்று குறிப்பிடப்படுகிறது
ஆன்மீகம் போற்றுபவர்கள், மதவாதிகள் என எல்லோரும் நாத்திகம் பேசுபவர்கள் சிறுபான்மையினர் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறான தகவல் ஆகும். அண்மையில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி உலகில் உள்ள மதங்களைப் பின்பற்றுவோர் பட்டியலை மனோரமா இயர் புக் 2012(ஆங்கில பதிப்பு)வெளியிட்டு இருப்பதாக மருதூர் சு.செம்மொழி அவர்கள் உண்மை இதழில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.அந்த பட்டியலைக் கீழே பாருங்கள்..
1. கிறித்துவர்கள் : 2.1. பில்லியன் (210 கோடி)
2. இசுலாமியர்கள்: 1.3 பில்லியன் (130 கோடி)
3. நாத்திகர்கள்: 1.1. பில்லியன் (110 கோடி)
4. இந்துக்கள்: 900 மில்லியன் (90 கோடி)
5. சீனாவின் பழைமைவாய்ந்த மதங்கள்: 394 மில்லியன் (39.4 கோடி)
6. புத்தமதம்: 376 மில்லியன் (37.6 கோடி)
7. பிரைமல் இன்டிஜினியஸ்: 300 மில்லியன் (30கோடி)
8. ஆப்பிரிக்காவின் பழைமையான மதங்கள்: 100 மில்லியன் (10 கோடி)
9. சீக்கியர்கள்: 23 மில்லியன் (2.3 கோடி)
10. ஜுக்: 19 மில்லியன் (1.9 கோடி)
11. ஸ்பிரிடிசம்: 15 மில்லியன் (1.5 கோடி)
12. ஜுடாய்சம்: 14 மில்லியன் (1.4 கோடி)
13. பஹாய்: 7 மில்லியன் (70 லட்சம்)
14. ஜைனமதம்: 4.2 மில்லியன் (42 லட்சம்)
15. ஷின்டோ: 4 மில்லியன் (40 லட்சம்)
16. கா டோய்: 4 மில்லியன் (40 லட்சம்)
17. ஜோரோஸ்டிரினிசம்: 2.6 மில்லியன் (26 லட்சம்)
18. டென்ரிக்யோ: 2 மில்லியன் (20 லட்சம்)
19. நியோ-பக்னிசம்: 1 மில்லியன் (10 லட்சம்)
20. யுனிட்ரியன்-யுனிவர்சலிசம்: 8 லட்சம் பேர்
21. ராஸ்டாஃபாரினிசம்: 6 லட்சம் பேர்
22. சயின்டாலஜி: 5 லட்சம் பேர்
இந்த ஆய்வின்படி உலகில் நாத்திகம்
பேசுபவர்கள்
110கோடி பேர் உள்ளனர், உலகளவில் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார்கள்
என்பது இதன் மூலம் தெரிய வருகிறது..நாத்திகர்கள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள்.இந்துக்களை விமர்சனம் செய்பவர்கள்தான் நாத்திகர் என்றில்லை. மற்ற மதங்களில் நடைபெறும் மூடநம்பிக்கைகளையும் மற்ற நாட்டினர் விமர்சித்தே வருகிறார்கள் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது..
நாத்திகர் யார்?
பொதுவாக எல்லா மதத்தினரும் கருதும் பொருட்டு கடவுளைத் விமர்சிப்பதை தொழிலாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் தான் நாத்திகர் என்பது பொருளில்லை.கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டு சமுதாயக் கலவரம் ஏற்படுத்தும்போது கடவுளையே விமர்சிப்பவன்தான் நாத்திகன். கடவுள் இருப்பதை ஒப்புக்கொள்ளாதவன் ..
புராண, இதிகாச, வேத சாஸ்திரங்களை நம்பாதவர்களை நாத்திகர் என்று பார்ப்பனர்கள் சொல்கிறார்கள் என்று பெரியார் சொல்லுகிறார்..
புராண, இதிகாச, வேத சாஸ்திரங்களை நம்பாதவர்களை நாத்திகர் என்று பார்ப்பனர்கள் சொல்கிறார்கள் என்று பெரியார் சொல்லுகிறார்..
மத ரீதியான கோட்பாடுகளைத் தூக்கி எறிந்து அதற்கு உட்படாமல் சுயமாய் சிந்தித்து பகுத்தறிந்து ஒன்றை உறுதிபடுத்தி மதம் என்னும் ஏற்றத்தாழ்வுகளில் மனதை செலுத்தாமல் சமுதாயத்தில் சுய மரியாதையோடு உலகில் ஏதோ ஒரு சக்தி இருக்கிறதே தவிர அதை கடவுள் என்று எம்மால் ஒப்புக் கொள்ளமுடியாது என்றும் வேத சாஸ்திரங்களின் அடிப்படையில் மனிதன் கடைப்பிடிக்கும் முட்டாள்தனங்களையும் மூடநம்பிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவ்வாறு தொடர்ந்து மத வளர்ச்சியில் கடவுள் பெயரை சொல்லி சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்துவோரை விமர்சனம் செய்து கொண்டு இருப்பவனே நாத்திகன்.
சமுதாயத்திற்கு தீங்கு ஏற்படாத வகையில் ஒருவன் இறை போற்றுதலையும் வேத சாஸ்திரங்களை கடைப்பிடிப்பானால் அவனை எந்த விதத்திலும் நாத்திகன் விமர்சிக்க மாட்டான்..மாறாக இறை வழிபாட்டு முறைகளையும் வேத சாஸ்திர சம்பிரதாயங்களையும் கொண்டு சமுதாயத்தில் ஆளுமை செலுத்தும்போதும் மனித ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும்போதும் அதற்கு காரணகர்த்தாவான கடவுளையும் கட்டாயம் விமர்ச்சிக்கத் தயங்காதவன் நாத்திகன்..
சமுதாயத்திற்கு தீங்கு ஏற்படாத வகையில் ஒருவன் இறை போற்றுதலையும் வேத சாஸ்திரங்களை கடைப்பிடிப்பானால் அவனை எந்த விதத்திலும் நாத்திகன் விமர்சிக்க மாட்டான்..மாறாக இறை வழிபாட்டு முறைகளையும் வேத சாஸ்திர சம்பிரதாயங்களையும் கொண்டு சமுதாயத்தில் ஆளுமை செலுத்தும்போதும் மனித ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும்போதும் அதற்கு காரணகர்த்தாவான கடவுளையும் கட்டாயம் விமர்ச்சிக்கத் தயங்காதவன் நாத்திகன்..
இந்த அறிக்கையின் படி உலக மக்கள் தொகையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தித்திருப்பவர்கள் நாத்திகர்கள் ஆவார்கள்..
மிக வியப்பான தகவல். ஆன்மீகத்திலும் முழுமையாக இல்லாமல் நாத்திகனாகவும் ஆக முடியாமல் குழம்பித் தடுமாறித் தத்தளிக்கும் ஒரு கூட்டம் இருக்கே கவிஞரே... அது எத்தனை சதவீதமோ?
ReplyDeleteஅவுங்களையெல்லாம் ஒண்ணு திரட்டுங்க தலைவரே..உங்களை தலைவரா போட்டு புதுசா ஒரு மதத்தை உருவாக்கிவிட்டிடலாம்..
ReplyDeleteவர்க்கப்போராட்டத்துல தொழிலாளி வர்க்கத்திலும் சேராம,முதலாளி வர்க்கத்திலும் சேராம ஒரு வர்க்கம் இருக்குன்னு ஜெயகாந்தன் சொல்வார்-!அது மாதிரியா!
Deleteஆத்திகம் தழைக்க நாத்திகம் தேவை!
தல அப்படித்தான் சொல்றாருன்னு நெனைக்கிறேன்..
Deleteநாத்திகம் இருந்தால்தான் மூடநம்பிக்கைகள் நீக்கப்படும் என்கிறீர்கள்..அப்படித்தானே ஐயா..
உண்மையான நாத்திகனாக இருப்பவர் மிகக் குறைவே நாத்திகம் பேசுவது தற்போது பேஷனாகிவிட்டது.
ReplyDeleteஉண்மையான நாத்திகனாக இருப்பவர் மிகக் குறைவென்றால் உண்மையான ஆத்திகனாக இருப்பது மிக மிக மிகக்குறைவே.. தங்கள் மதங்கள் சொல்கிறபடி கேட்டு இறைவன் தண்டித்துவிடுவார் என பயந்து சுத்தமான பக்திமானாக இருப்பவர் எத்தனை பேர்..கொலை செய்பவர்களிலும் கொள்ளையடிப்பவர்களிலும் இறை நம்பிக்கை உடையவர்கள் இருக்கிறார்கள்.அந்தப் பணத்தையேதான் இறைவனுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்கள்..அதை விடுங்கள் தான் வணங்கும் இறைவனுக்கு கட்டுப்பட்டு இருப்பவர் எத்தனை பேர்..வாய்ப்பேயில்லை தலைவரே..
Deleteநாத்திகம் பேசுவது தற்போது பேஷனாகிவிட்டது என்கிறீர்கள்.தன்னை ஆன்மீகவாதியாக காட்டிக்கொள்வது பேஷனாகி வெகுகாலமாகிவிட்டது.
விடுமுறையைக் கழிக்கவும் பொழுது போக்கிற்காகவும் தான் வெளியூர் கோயில்களுக்கு செல்கிறோம் தோழரே அதுதான் உண்மை.கன்னிப்பெண்கள் பட்டுசேலை உடுத்திவிட்டோம் என்பதற்காகவெல்லாம் கோயிலுக்குச் செல்லும் நிலை நம்மூரில் இருக்கிறது..பட்டு வேட்டி கட்ட ஆசை அதைக் கட்டிக்கொண்டு எங்கு போவது..அப்படியானால் கோயிலுக்குப் போவோம்..இப்படி அனைத்திற்கும் இறைவனை காரணகர்த்தாவாக்கிக் கொண்டிருக்கிறோம்..தோழரே..
அருமையான கட்டுரை நன்றி .......................
ReplyDeleteவாங்க செல்வின்..நன்றி
ReplyDeleteநல்லதும் பௌஅன்படக்கூடியதுமான தகவலும் செய்திகளும்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
நன்றி தோழரே...
Deleteபடம்: ராமன் அப்துல்லா
ReplyDeleteஏய்... எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு...
கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு...
சுத்தமாக சொன்னதெல்லாம் போதலையா...?
மொத்தமாக காதுல தான் ஏறலையா...?
உன் மதமா...? என் மதமா...? ஆண்டவன் எந்த மதம்...?
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்...!!!
அட போங்கடா போங்கடா போங்கடா...
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா...?
கூட வாங்கடா வாங்கடா வாங்கடா...
சொல்லாத சங்கதி சொல்லுறேன் கேளுடா...
அந்த ஆண்டவன் தான் கிருஸ்துவனா...?
முஸ்லிமா...? இல்லை இந்துவா...?
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்...?
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்...!!!
மனசுக்குள்ள நாய்களும் நரிகளும
நால்வை பேய்களும் நாட்டியமாடுதடா...
மனிதனென்னும் போர்வையிலிருக்குது
பார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா...
அட யாரும் திருந்தலயே... இதுக்காக வருந்தலயே...
அட யாரும் திருந்தலயே... இதுக்காக வருந்தலயே...
நீயும் நானும் ஒன்னு... இது நெசந்தான் மனசுல எண்ணு...
பொய்யையும் புரட்டையும் கொன்னு... இந்த பூமிய புதுசா பண்ணு...
சும்மா சொன்னத சொன்னத சொல்லவா...?
சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா...?
அட உன்னதான் நம்புறேன் நல்லவா...
உன்னால மாறுதல் வந்திடுமல்லவா...???
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்...?
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்...!!!
கணக்கிலொரு கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும் இருப்பது உண்மையடா...
கூட்டல் மட்டும் வாழ்க்கையில் நடக்குது...
பாவத்தை பெருக்குது... இது என்ன ஜென்மம்மடா...?
இப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்லப்பொழுது...
இப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்லப்பொழுது...
அடியே... ஞான தங்கம்... இங்கு நானொரு ஞானச்சிங்கம்...!
இதை பார்த்தா பொய்களும் ஓடும்... இரண்டு போட்ட உலகமும் மாறும்...!
அட பத்திரம் பத்திரம் பத்திரம்... தீர்ப்பு நாள் பக்கத்தில் பக்கத்தில் வருது...
இது சத்தியம் சத்தியம் சத்தியம்... சத்தியத்தின் சந்ததி சீக்கிரம் வருது...
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்...?
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்...!!!
நன்றி...
நல்லதொரு பாடலை பகிர்ந்து சென்றமைக்கு நன்றி தலைவரே..
Deletebaalan sako...
Deletepaadiye kalakkureenga...
அது சரிதான்,,,
ReplyDeleteபகுத்தறிவு பெற்ற சமூகம் மலர்ந்தால் தான் நாளைய தலைமுறைகளாவது இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழும்..
ஆமா,, திண்டுக்கலாருக்கு என்னவாயிற்று,,, புதுசு புதுசா என்னெல்லாமோ செய்யுறார்..!!
நாத்திகம் என்பது மதமோ அல்லது மார்க்கமோ அல்ல. சிந்திக்க தெரிந்தவர்களே நாத்திகர்கள்.நானும் நாத்திகன் என்பதில் பெருமை கொள்வேன்.அதற்காக மதத்தை போற்றுபவர்களை தவறாகவும் சொல்ல மாட்டேன்,காரணம் நம்பிக்கை.
ReplyDeleteputhiya thakaval....
ReplyDeletepakirvukku nantri!
உண்மையான ஆத்திகர்கள் கிடையாது. எல்லோரும் நாத்திகர்களே! கடவுளை நம்பாதவர்களே! புராணத்தில் சொன்ன படி கடவுளை மட்டும் நம்புவோர் யாரும் கிடையாது. அப்படி நம்புவன் தான் ஆத்திகன்...அதுவும் கதையில் மட்டும் சாத்தியம்...
ReplyDeleteகடவுள் = பரிகாரம் = உண்டியல் = காசு = செல்வம் = சொத்து = புகழ் = பதவி= பெண்ணாசை = மண்ணாசை = ஆட்சி = அதிகாரம் = கடவுள் = பரிகாரம்...மறுபடியும் முதிலில் இருந்து!
கடவுளை வைத்து வைத்து வியாபாரம் செய்யும் கூட்டத்திற்கு படி அடியளக்கும் [கடவுள்களே] ...the so-called ஆத்திகர்கள்!
நாத்திகத்தில் போலி தனம் இல்லை. சிந்திக்க வைப்பது அது. இயற்கை வழியானது.
ReplyDeleteதெரியாத எதோ ஒன்றிடம் எல்லா பொறுப்பையும் ஒப்படைத்து விட்டு, சோம்பி திரிந்து குறுக்கு வழியில் அநீதிகள் செய்து வாழ செய்வது ஆத்திகம்.
அதிலும் பார்ப்பனீயம் என்பதற்கு அநீதி என்ற ஒன்றை தவிர வேறு சிறப்பான பொருள் இல்லை.
ரொம்ப பெரிய விசயம்லாம் சொல்றீங்க. எனக்குதான் புரியலை போல.. அவ்வ்வ்வ்
ReplyDeleteசகோ.மதுமதி
ReplyDeleteதாங்கள் குறிப்பிட்ட மக்கள் தொகை மொத்தம் 666 .77 கோடி என அறிகிறேன்...ஒரு குறிப்பிட்ட மக்களை கருத்து கணிப்புக்காக இல்லாமல் மொத்த உலக மக்களின் கணக்கையும் காட்டியிருப்பதாகவே தெரிகிறது...ஒருவன் இந்து ,முஸ்லிம் ,கிறிஸ்தவம் என மதங்களை பின்பற்றினால் அவர்களை கண்டறிவது அரசு உதவியுடன் ஓரளவு சாத்தியமே....ஆனால் நாத்திகம் என்பது எந்த அரசு கசட்டிலும் இருப்பதாக தெரியவில்லை ...அவர்களை எவ்வாறு கண்டறிவார்கள்...நாத்திகம் பேசுவோர் தான் நாத்திகன் என்று பதிந்து கொள்ள உலக அளவில் வாய்ப்பு இருந்தால் தான் இந்த இந்த புள்ளி விவரம் துல்லியமாக இல்லாவிட்டாலும் ஓரளவு ஒப்புக்கொள்ளலாம் ...தமிழ் நாட்டில் மட்டுமே நாத்திகம் பேசுவோர் எத்தனை பேர் என்று கணக்கெடுக்க முடியுமா...???
செங்கொடி,இக்பால் செல்வன் ,சார்வாகன் போன்றவர்கள் அரசு கசட்டிலுள்ள தங்களின் மதம் சார்ந்த பெயரையே மாற்றாமல் தன்னை நாத்திகர் என்று சொல்லி திரிகிறார்கள்..அவர்கள் உங்கள் கணக்கு படி உள்ள புள்ளி விவரத்தில் எந்த அடிப்படையில் வருவார்கள்....110 கோடியிலா ..அல்லது 130 கோடியிலா ....அல்லது 210 கோடியிலா ...அல்லது 90 கோடியிலா...
""நிச்சயமாக நாத்திகர்கள் சார்ந்த இந்த புள்ளி விவரங்கள் போலியானவையே...""
இது உங்களது தளத்தில் எனது முதல் பின்னூட்டம் ...முதல் பின்னூட்டமே எதிர் கருத்தாக இருப்பதற்கு வருந்துகிறேன்.....
நன்றியுடன்
நாகூர் மீரான்
புள்ளி விபரங்கள் என்றாலே தோராயமாக எடுக்கப்படுவதுதான்..அதில் எதையும் துல்லியமாக சொல்லிவிட முடியாது..எந்த மதத்தை சார்ந்தவர் என்ற பிரிவின் கீழ் கணக்கெடுக்கப்படுவதை நீங்கள் அறிவீர்கள் அதன்படி எந்த மதத்தவரையும் சாராதவன் என்று பதிவு செய்தவர்களின் கணக்குதான் அது.. ""நிச்சயமாக நாத்திகர்கள் சார்ந்த இந்த புள்ளி விவரங்கள் போலியானவையே..."" என்று நீங்கள் சொன்னால் மற்ற அனைத்தும் பொய்யானவை என்றுதானே பொருள்..நாத்திக வாதிகளையும் அரசு இந்துக்கள் பட்டியலில் தான் வைத்திருக்கிறது..அப்படி பார்க்கும்போது இன்னும் இந்துக்களின் எண்ணிக்கை குறையும்..நீங்கள் குறிப்பிட்டதைப் போல ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறினவர்கள் கூடத்தான் இன்னும் தங்கள் மதத்தை அரசு பதிவேட்டில் மாற்றாமல் இருக்கிறார்கள் அதற்கு என்ன செய்ய தோழரே..
Deleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
//சமுதாயத்திற்கு தீங்கு ஏற்படாத வகையில் ஒருவன் இறை போற்றுதலையும் வேத சாஸ்திரங்களை கடைப்பிடிப்பானால் அவனை எந்த விதத்திலும் நாத்திகன் விமர்சிக்க மாட்டான்..மாறாக இறை வழிபாட்டு முறைகளையும் வேத சாஸ்திர சம்பிரதாயங்களையும் கொண்டு சமுதாயத்தில் ஆளுமை செலுத்தும்போதும் மனித ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும்போதும் அதற்கு காரணகர்த்தாவான கடவுளையும் கட்டாயம் விமர்ச்சிக்கத் தயங்காதவன் நாத்திகன்..//
ReplyDeleteஅருமை. நாத்திகர்கள் யாரென்று சில நல்ல கருத்துக்களை இப்பதிவின் மூலம் அறிந்துகொண்டேன். நன்றி தோழரே!
மகிழ்ச்சி தோழரே..
ReplyDeleteநல்லதொரு அலசல்..
ReplyDeleteமிகவும் பயனுள்ள கருத்துக்கள்...............
ReplyDeleteபகிர்வக்கு நன்றி ..................
நல்லப் பதிவு சகோ. ஆனால், உண்மையில் நாத்திகரின் தொகை 110 கோடிக்கும் அதிகமே என்பேன், ஏனெனில் பல நாடுகளில் நாத்திகர்களையும் அவர் பிறந்த மதக் கணக்கிலே வைத்துள்ளார்கள் ( இந்தியா உட்பட ) ... !
ReplyDeleteமூன்றில் ஒரு மனிதர்கள் நாத்திகர்களாக இருக்கக் கூடும் என்பது எனது எண்ணம் !
பதிவு பிடிச்சிருக்கு.
ReplyDelete//இந்துக்களை விமர்சனம் செய்பவர்கள்தான் நாத்திகர் என்றில்லை//
இந்துக்களை விமர்சிப்பது மட்டுமே பகுத்தறிவு,நாத்திகம் என்று தமிழகத்தில் மட்டும்(மற்ற நாடுகளில் அல்ல)பதிய வைக்கபட்டுள்ளது. இப்படியான போலி நாத்திகமும் இருப்பதினால் தமிழ்நாட்டில் நாத்திகர் தொகை வளரவில்லை.
வணக்கம் தோழரே,
ReplyDeleteநல்ல பதிவு.நாத்திகம் என்பது சம்ஸ்கிருதம் இதன் நெருங்கிய தழிழாக்கம் இறைமறுப்பு எனலாம். வாழ்வில்தான் சுயமாக பரிசோதித்து அறிந்த உண்மைகளை மட்டுமே பின்பற்றுபவன் எனலாம் அதெப்படி அனைத்தும் உன்னால் அறிய முடியுமா என்றால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் அறிய முயல்பவனே பகுத்தறிவாளன்.
தத்துவத்தில் பொருள் முதல் வாதம், அறிவியலில் பரிணாமம்,வாழ்வில் இயற்கை பாதுகாப்பும் இறைமறுப்பாளனின் கொள்கைகளாக இருக்க வேண்டும்
அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதைவிட இக்கால சூழலுக்கு ஒரு கொள்கை எப்படி பொருந்துகிறது என்பதே முக்கியம்.
நம்மீது அதிக அன்பு கொண்ட சகோ நாகூர் மீரான் ஏன் நான் பிறந்த மதத்தில் தொடர்கிறேன் என்று கேள்வி கேட்கிறார்.
பேகன்(பல இறை) மதங்களில் நாத்திகமும் ஒரு பிரிவாக அங்கீகரிக்கப்படுகிறது. ஓரிறைக் கொள்கைகள் போல் நம்பிக்கையாளர், மறுப்பாளர் என கோடு போட்டு பிரிப்பது இல்லை. பவுத்தம்,சமண மதங்களில் கடவுளே இல்லை.
சார்வாகம் என்பதும் இந்திய தத்துவ மரபின் புகழ்பெற்ற பொருள் முதல் வாதக் கொள்கை ஆகும்.
ஆகவே நான் பிறந்த மதத்தினர் என்னை வெளியே அனுப்பினால் மட்டுமே நீங்கள் கூறியது பலிக்கும். நடந்தால் கவலை இல்லை!.எனினும் பேகன் மதங்கள் தங்கள் நம்பிக்கைகளை புத்தகங்களுக்குள் சுருக்குவது இல்லை!!!
நன்றி!!!
நாத்திகர் பற்றிய விளக்கம் மிக நன்று.
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு.
தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாத இறை மறுப்பாளர் உலகெங்கிலும் உள்ளனர்.
அவர்களையும் சேர்த்தால் நாத்திகர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.
நாத்திகம் பற்றிய நிறைய தகவல்கள் கிடைத்தது அருமையான பதிவு தோழர்
ReplyDelete