டிசம்பர் 24. இன்றைய நாள் தொண்டு செய்து பழுத்த பழத்தின் நினைவு நாள். 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ம் நாள் சென்னை தியாகராய நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தனது தள்ளாத வயதிலும் மாபெரும் உரையாற்றினார்.அந்தப் பேருரையே பெரியாரின் இறுதி உரையாகிப் போனது.பெரியாரின் மரண சாசனம் அது.கீழே இணைத்திருக்கும் காணொளியைப் பாருங்கள் பெரியாரின் சிந்தனைகள் எத்தகையது என வியந்தே போவீர்கள்.
எழுந்து நிற்கவே சிரமப்படும் அந்த வயதில் ஓயாது பேருரை ஆற்றினார் என்றால் அது தமிழர்களுக்கு தன்மானத்தையும் பகுத்தறிவையும் ஊட்டுவதற்காகவும் புறந்தள்ளப்பட்ட திராவிடத்தமிழனை மீட்டெடுப்பதற்காகவும் தான்.
சுயமரியாதைக்காக போராடி போராடி மானமுள்ள சமுதாயத்தை உருவாக்குவதே தனது முதற்கண் பணியென ஓய்வே இல்லாமல் தன் வாழ்நாளின் கடைசி வரைக்கும் உழைத்த பெரியார் சென்னை தி.நகரில் டிசம்பர் 19 ம் நாள் தனது மரண சாசனத்தை அறிவித்துவிட்டு டிசம்பர் 24 ல் நம்மை விட்டு மறைந்து போனார்.
தன்னை மறந்து கண்ணை மூடிய பெரியார்
பெரியாருக்கு அஞ்சலி செலுத்தும் தலைவர்கள்
அஞ்சலி செலுத்தும் பகுத்தறிவாளர்கள்
பெரியார் அவர்கள் இறப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பாக பேசிய மரண சாசனம் அடங்கிய காணொளியை கீழே இணைத்திருக்கிறேன்.பாருங்கள்.. வாசியுங்கள்..
பகுதி-1
பகுதி-2
பகுதி-3
பகுதி-4
பகுதி-1
பகுதி-2
பகுதி-3
பகுதி-4
ஈரோட்டு சூரியன் என்று ஈரோட்டு மதுமதி
ReplyDeleteபாராட்டு வாசிப்பது நன்று.அவர் ஒரு சமூக போராளி சமத்துவ காப்பாளர் அதனால் தான் அவர் தொண்டு அனைவராலும் பாராட்டப்படுகிறது
தமிழ்நாட்டிற்கு அப்போது தொலைக்காட்சி வராத சமயம். செய்தியைத் தெரிந்து கொள்ள பத்திரிகைகள் மற்றும் வானொலிதான். உங்கள் பதிவினைக் கண்டதும், பெரியாரின் இறுதி ஊர்வல நிகழ்ச்சியின் நேர்முக வர்ணனையை வானொலியில் கேட்டதும் நான் கண்ணீர் விட்டதும் ஞாபகம் வந்தது.
ReplyDeleteதமிழ்நாட்டில் வாழ்ந்ததற்காக புறக்கணிக்கப்பட்ட மாமேதை பெரியார் .
ReplyDeleteஇன்றைய சமுதாயத்திற்கு சென்று சேர வேண்டிய பதிவு. இன்று இவ்வளவாவது தலை நிமிர்ந்து நிற்கிறோமென்றால் அது யாரால் எப்படி என உணரவைக்கும் பதிவு. பகிர்தலுக்கு நன்றி
ReplyDeleteஅன்பின் மதுமதி - தந்தை பெரியாரின் நினைவு நாளன்று - அவரின் இறுதி நாட்களில் - 5 நாட்களுக்கு முன்னதாக அவர் ஒரு மணி நேரம் ஆற்றிய உரையினைக் காணொளியாக வெளியிட்டமைக்கும் - இறுதி நாள் நிக்ழ்வுகளையும் பழைய அரிய புகைப் படங்களை வெளியிட்டமைக்கும் பாராட்டுகள்.
ReplyDelete1973 டிசம்பர் 24 நான் சென்னையில் பல்லவன் போகுவரத்தின் பாடி கார்ட் சாலையில் உள்ள பணிமனையில் பணி புரிந்து கொண்டிருந்த நாள். அன்று காலையிலேயே - முதல் நாள் இரவுப் பணி முடித்து - நேராக ராஜாஜி ஹாலுக்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியது இன்றும் நினைவில் இருக்கிறது. அன்றைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களின் கூட்டம் மாபெரும் கூட்டம் அன்று பிரமிக்க வைத்தது.
மூதறிஞர் இராஜாஜிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சக்கர நாற்காலியில் தந்தை பெரியார் சோக மயமாக வந்தது நினைவிற்கு வருகிறது. கொளகைகள் எதிரும் புதிருமாக இருப்பினும் நட்பின் அடிப்படையில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தியது மனம் நெகிழச் செய்தது.
இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட மாபெரும் கூட்டம் - எவ்வளவு நேரம் வரிசையில் நின்று பொறுமையாக அஞ்சலி செலுத்திய மக்கள் வெள்ளம் பிரமிக்க வைத்தது.
நல்லதொரு பதிவு மதுமதி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பின் தொடர்வதற்காக
ReplyDelete