வணக்கம் தோழர்களே! இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம்.
சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அமையும்.அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும்.கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது.
அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது சிற்றிலக்கியம்.இவ்வகையில் தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி போன்ற பலவகை இலக்கியங்கள் சிற்றிலக்கியம் ஆகும்.தமிழில் சிற்றிலக்கியங்கள் எனப்படுபவை வடமொழியில் பிரபந்தங்கள் எனப்படுகின்றன. சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படுகின்றன. 96 சிற்றிலக்கியங்களை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்..
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !