புது வரவு :

TNPSC - தேர்வுமுறையில் அதிரடி மாற்றம்

ணக்கம் தோழர்களே.. இந்த வருடத்திற்கு சுமார் 20000 காலியிடங்களுக்கான அறிவிப்பை தேர்வாணையம் வெளியிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் 10105 பணிகளுக்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது.

இந்த ஆண்டு அரசு பணியில் எத்தனை காலி இடங்களுக்கு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும்? என்ற விவரங்கள் அடங்கிய ஆண்டு தேர்வுபட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ், வருடாந்திர தேர்வுபட்டியலை வெளியிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது நட்ராஜ் கூறியதாவது:–


இந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. மூலமாக 10 ஆயிரத்து 105 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 27 துறைகளில் 37 விதமான பதவிகள் அடங்கும். அதிகபட்ச காலி இடங்கள் எண்ணிக்கை என்று பார்த்தால் குரூப்–2 தேர்வு மூலமாக 2,714 இடங்களும், குரூப்–2 தேர்வு மூலம் 1,300 பணி இடங்களும், 1,500 வி.ஏ.ஓ. இடங்களும், தொழில்நுட்ப பணியைப் பொருத்தவரையில், அதேபோல், 2,790 டாக்டர் பணி இடங்களும் 1,800 கால்நடை மருத்துவர்கள் இடங்களும் நிரப்பப்படும், இந்த காலி இடங்களின் எண்ணிக்கை தோராயமானதுதான். இந்த எண்ணிக்கை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக உறுப்பினர் எம்.ஷோபினி தலைமையில் ஒரு கமிட்டியும், பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து உறுப்பினர் கே.லட்சுமணன் தலைமையில் தனியாக ஒரு கமிட்டியும் போடப்பட்டது. இந்த இரு கமிட்டிகளின் பரிந்துரைஅடிப்படையில், தேர்வுமுறையிலும், பாடத்திட்டத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

அதன்படி, இதுவரை குரூப்–2 தேர்வில் இடம்பெற்றிருந்த நகராட்சி கமிஷனர், சார்–பதிவாளர், உதவி வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி மற்றும் தனித்தேர்வாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) ஆகிய பதவிகள் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படுகின்றன. முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு கொண்ட குரூப்–1 தேர்வில் விண்ணப்பதாரர் எடுக்கிற மதிப்பெண் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் பதவிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.



குரூப்–1 தேர்வில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இதுவரை மெயின் தேர்வுக்கு தேர்வுசெய்யப்படுவோரின் எண்ணிக்கை ஒரு காலி இடத்திற்கு 20 பேர் என்ற விகிதாச்சாரத்தில் இருந்து வந்தது. இனிமேல் ஒரு காலி இடத்திற்கு 50 பேர் என்ற வீதத்தில் மெயின் தேர்வுக்கு தேர்வர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

இதுவரை நேர்முகத்தேர்வு கொண்ட சார்நிலை பதவிகளும், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளும் குரூப்–2 தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. இனிமேல், நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகள் தனியாக நடத்தப்படும். அதில் முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவை இடம்பெற்றிருக்கும். நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு தற்போது இருப்பது போல் ஒரேதேர்வுதான். மெயின் தேர்வு கிடையாது.

மேலும், வி.ஏ.ஓ. தேர்வில், பணிக்கு தேவையாக கருதப்படும் கிராம நிர்வாகம், வி.ஏ.ஓ. பணிகள் தொடர்பான கேள்விகளும் இடம்பெறும். இதுவரை, மருத்துவம், கால்நடை மருத்துவம், என்ஜினீயர், வேளாண் அதிகாரி போன்ற தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பணிகளுக்கான தேர்வில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டன.

இனிமேல், கூடுதலாக பொதுஅறிவு, தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், தமிழ்ப்பண்பாடு தொடர்பான வினாக்களும், பொது விழிப்புத்திறன் (ஆப்டிடியூடு) கேள்விகளும் கூடுதலாக இடம்பெறும்.

பொதுவாகவே, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் நடப்புகால நிகழ்ச்சிகள் குறித்த கேள்விகள் அவ்வளவாக இடம்பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. இனிமேல், பொதுஅறிவு தாளில் நடப்பு கால நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதற்காக தனியாக வினா வங்கி தயாரிக்கப்படும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட குரூப்–2 தேர்வின் முடிவு பிப்ரவரி மாதம் 1–ந் தேதி வெளியிடப்பட்டு அதற்கான கவுன்சிலிங் 18–ந் தேதி தொடங்கும்.இவ்வாறு நட்ராஜ் கூறினார்.

இப்போது வெளியிடப்பட்டுள்ள ஆண்டு தேர்வு பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்திலும் உடனடியாக வெளியிடப்படும்.

நகராட்சி கமிஷனர், சார்–பதிவாளர் போன்ற பதவிகள், குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படுவதால் வயது வரம்பு விதிமுறையால் பாதிப்பு வருமே என்று கேட்கிறீர்கள். அதுபோன்று பாதிப்பு ஏதும் வராத வகையில், புதிதாக சேர்க்கப்பட்ட இந்த குரூப்–2 பதவிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படும். இதுதொடர்பாக தனியாக அறிவிப்பு வெளியிடப்படும். மேலும், மாவட்ட கல்வி அதிகாரி பணி இடம் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படுவதால் அதற்கு விண்ணப்பிப்பவர்கள் கல்வியியல் தொடர்பாக கூடுதலாக ஒரு தாள் எழுத வேண்டும் இவ்வாறு டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார்  கூறினார்.பேட்டியின்போது டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா உடனிருந்தார்.
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com