புது வரவு :

TNPSC - புரிந்து படித்தால் வெற்றி உறுதி

தேர்வுக்கு படித்துக்கொண்டிருக்கும் தோழர்களுக்கு வணக்கம்.. தேர்வாணையம் வெளியிட்ட இந்த வருடத்திற்கான அட்டவணையைப் பார்த்து எந்தளவிற்கு சந்தோசப்பட்டிருப்பீங்களோ அந்த அளவிற்கு இல்லேன்னாலும் கொஞ்சம் வருத்தப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். அதுக்கு காரணம் என்னான்னா தேர்வு முறையிலேயும்  தேர்வு செய்யுற முறையிலேயும் தேர்வாணையம் சில மாற்றங்களை கொண்டு வந்ததுதான்.


சென்ற ஆண்டுவரை குரூப் 2 தேர்வு என்பது இரண்டு சுற்றுக்களைக் கொண்டதாக இருந்தது. இந்த முறை மூன்று சுற்றுக்களைக் கொண்டதாக இருக்கும்.இது குறித்து தேர்வாணையம் என்ன சொல்லுதுன்னா இதுவரை நேர்முகத்தேர்வு கொண்ட சார்நிலை பதவிகளும், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளும் குரூப்–2 தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. இனிமேல், நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகள் தனியாக நடத்தப்படும். அதில் முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவை இடம்பெற்றிருக்கும். நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு தற்போது இருப்பது போல் ஒரேதேர்வுதான். மெயின் தேர்வு கிடையாது.

அதேபோல குரூப் 4 வி.ஆ.ஓ தேர்வுக்கும் சில பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்ன்னு சொல்லிருக்காங்க..வி.ஏ.ஓ. தேர்வில், பணிக்கு தேவையாக கருதப்படும் கிராம நிர்வாகம், வி.ஏ.ஓ. பணிகள் தொடர்பான கேள்விகளும் இடம்பெறும். இதுவரை, மருத்துவம், கால்நடை மருத்துவம், என்ஜினீயர், வேளாண் அதிகாரி போன்ற தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பணிகளுக்கான தேர்வில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டன.இதையும் சேர்த்து படித்துக்கொள்ள் வேண்டும்..


இனிமேல், கூடுதலாக பொதுஅறிவு, தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், தமிழ்ப்பண்பாடு தொடர்பான வினாக்களும், பொது விழிப்புத்திறன் (ஆப்டிடியூடு) கேள்விகளும் கூடுதலாக இடம்பெறும்.

அதனால் குரூப் 2 தேர்வுக்கு தயாராகி வந்தவர்களுக்கு மெயின் தேர்வு என்று ஒன்று இருக்கிறது என்றவுடன் மனச்சோர்வு ஏற்பட்டிருக்கலாம்.ஆனால் இதுதான் சரியான முறை என்பது எனது கருத்து.ஏனெனில் உயர்ந்த பதவிகளைக் கொண்ட பதவிகளுக்கு செல்லும்போது அதற்கான தகுதிகளையும் நாம் பெற்றிருப்பது அவசியம் அல்லவா.அதன்படி தகுதியான நபர்களைத் தேடி அந்தந்தப் பணிகளில்னாமர்த்த இதுவே சரியான முறை.

உண்மையில் நன்றாகப் படிக்கும்,தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியோடு உள்ளவர்கள் இந்த முறையை வரவேற்று இருக்கிறார்கள்.இனிமேல் தேர்விற்குப் படிக்கும் தோழர்கள் மேம்போக்காகப் படிக்காமல் பாடங்களைப் புரிந்துகொண்டு முழுமையாகப் படித்தால்தான் வருகின்ற தேர்வுகளில் வெற்றியை முகர்ந்து பார்க்க முடியும்.உங்கள் வெற்றிக்கு மதுமதி.காம் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன்..

படியுங்கள்..வெல்லுங்கள்.. வெற்றி நிச்சயம்!


Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

11 comments:

  1. விளம்பரமே இல்லாமல் இப்படி எல்லோருக்கும் உதவி செய்ய நல்ல மனம் வேண்டும்.பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Madhu Sir, Oru doubt neenga kandippa idhukku answer panniye aaganum, coaching class pogama TNPSC la win panna mudiyatha - ella veetla practice panni win panna mudiyuma sir? Please explain with some examples....

    ReplyDelete
  3. Madhu Sir, Oru doubt neenga kandippa idhukku answer panniye aaganum, coaching class pogama TNPSC la win panna mudiyatha - ella veetla practice panni win panna mudiyuma sir? Please explain with some examples....

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் சொல்லமுடியாது இப்படியும் சொல்ல முடியாது.பயிற்சி வகுப்புக்கு போகாமல் தேர்வானவர்களும் உண்டு.வகுப்புக்கு போய் தொடர் தோல்வியை சந்தித்தவர்களும் உண்டு.அது படிப்பவரின் திறமையை மற்றும் விருப்பத்தை பொறுத்தது.மற்றபடி வெற்றி தோல்விக்கு வகுப்பு காரணம் இல்லை படிப்புதான் காரணம்.

      Delete
  4. sir TNPSC grp 2 and grp 4 ku endha books refer pannalam, school books refer pannalama 8th to 10th std? plsss.. give me a suggestion

    ReplyDelete
    Replies
    1. http://www.madhumathi.com/2012/05/6.html

      மேற்கண்ட இணைப்பில் சென்று பாருங்கள்..

      Delete
  5. sir TNPSC grp 1 , Grp 2 ku entha books prepare pannalam ? 8th to 10th Std Samacheer Books prepare pannalama? pls give me a suggestion sir

    ReplyDelete
  6. sir nanu may 2013 B.E complete panunan, nanu 2013 la vrura group 2 exam eluthalama,nanu state board books refer pannuren, intha examla minimum pass mark evvalavu.

    ReplyDelete
  7. sir nanu may 2013 B.E complete pannunen,nan 2013 la varura group 2 exam eluthalama please answer my question.

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com