புது வரவு :
Home » , , , » பிராமணர் அல்லாதோர் இயக்கம்-டி.என்.பி.எஸ்.சி

பிராமணர் அல்லாதோர் இயக்கம்-டி.என்.பி.எஸ்.சி


                                                                                            வரலாறு
 பிராமணருக்கும் பிராமணர் அல்லாதோருக்கும் இடையே நடக்கும் வகுப்புவாத மோதல்கள் இன்று ஆரம்பித்தது அல்ல.இருபதாம் நூற்றாண்டு துவக்கத்திலேயே ஆரம்பித்துவிட்டது.ஆட்சித்துறையில் முக்கிய பதவிகள் அனைத்தையும் பிராமணர்களே வகித்தனர்.மொத்த மக்கள் தொகையிம் 3 விழுக்காடே பிராமணர் என்ற போதிலும் ஆங்கில அரசு ஏராளமான பதவிகளை அவர்களுக்கு வழங்கியிருந்தது.பிராமணர் நல்ல கல்வியை அடைந்திருந்த காரணத்தினால் ஆங்கிலேயர் பிராமணருக்கு முக்கியத்துவம் கொடுத்தனர் என்பதையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.காரணம் நல்ல நிலையில் இருந்த பிராமணர் அல்லாதவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

     எனவே 1912 ம் ஆண்டு திருவல்லிக்கேணியில் டாக்டர் நடேச முதலியார்  இல்லத்தில் பிராமணர் அல்லாதோர் ஒன்று கூடினர்.இந்த வகுப்புவாதத்தைக் குறித்து ஆராய்ந்தனர்.இதன் முடிவாக 'சென்னை திராவிடச் சங்கம்' என்ற அமைப்பு ஒன்று உருவானது.நடேச முதலியார் அதே ஆண்டு பிராமணர் அல்லாதோருக்காக விடுதி ஒன்றையும் துவக்கினார்.

      1916 ல் டி.எம் நாயர் மற்றும் டி.பி.தியாகராயசெட்டி போன்றோர் அனைத்து பிராமணரல்லாதோரை ஒன்று திரட்டி 'தென்னிந்திய விடுதலைக்கழகம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.இந்த இயக்கம் 'திராவிடன்' என்ற தமிழ்ப் பத்திரிக்கையை நடத்தியது.இந்தப் பத்திரிக்கையே ஆங்கிலத்தில் 'ஜஸ்டிஸ்' என்றும் தெலுங்கில் 'ஆந்திர பிரகாசிகா' என்றும் வெளியாயின.1917 ஆம் ஆண்டு இந்த 'தென்னிந்திய விடுதலை இயக்கம்' 'நீதிக்கட்சி'(ஜஸ்டிஸ் கட்சி) என்று அழைக்கப்பட்டது.
          1920 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி ஆட்சியைப் பிடித்தது.சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக சுப்பராயலு ரெட்டி பதவியேற்றார்.1923 ல் நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்ற நீதிக்கட்சி,1926 ல் நடந்த தேர்தலில் தோல்வியை அடைந்தது.அதன் பின் அக்கட்சி தோல்வியிலிருந்து மீளவில்லை.1937 ல் நடந்த தேர்தலில் படு தோல்வியடைந்தது.


நீதிக்கட்சியின் சாதனைகள்:

1.தனது ஆட்சியில் அனைத்து சாதியினரையும் பங்கு பெறச் செய்வதற்காக வகுப்பு வாத ஆணையை 1921, 1922 ம் ஆண்டுகளில் வெளியிட்டது.

2.1921 ல் இந்து அறநிலையச் சட்டம் இயற்றப்பட்டது.இதன் அடிப்படையில் பிராமணர் அல்லாதோறும் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். 

3.பெண் நலனுக்கு இக்கட்சி பாடுபட்டது.1921 ம் ஆண்டு பெண்களுக்ககு வாக்குரிமை வழங்குவதற்கான சட்டத்தை இயற்றியது.

4.அரசாங்க பணியாளர்கள் எந்த பாகுபாடுமன்றி தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்பதற்காக 1924 ல் தேர்வாணையக் குழுவை அமைத்தது.இந்த அடிப்படையில் முதன் முதலாக இந்தியாவில் 1929 ம் ஆண்டு அரசு தேர்வாணையக்குழு ஏற்படுத்தப்பட்டது.

5.1929 ல் உயர்கல்வியை உயர்த்தும் வகையில் ஆந்திரப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் போன்றவற்றை ஏற்படுத்தியது.டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..

----------------------------------------------------------------------------------------------------------
 வாசித்தீர்களா?

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

7 comments:

 1. இப்பவும் ஆ .. வூ ... என்றால் பிராமணியம் , பிராமணன் என எதிர்ப்பது சரியா ? தவறா ? ( நான் பிராமணன் இல்லை ) ஆனால் நான் பார்த்த வரை எந்த பிராமண நண்பர்களும் அடுத்தவரை ஒழிக்க நினைக்க வில்லை .

  ReplyDelete
  Replies
  1. //இப்பவும் ஆ .. வூ ... என்றால் பிராமணியம் , பிராமணன் என எதிர்ப்பது சரியா ? தவறா ?//
   தவறு.

   Delete
 2. பிராமணர்களை குறை சொல்லும் நண்பர்கள் அந்த குறைகள் உங்கள் சாதியில் இருக்கா இல்லையா என யோசிக்கவும் ..எல்லா சாதியிலும் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு

  ReplyDelete
  Replies
  1. ராஜா..பதிவை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்.. பிராமணீயத்தை குறை சொல்லி எழுதப்பட்டிருக்கிறதா? இல்லை பிராமணர் இல்லாதோர் இயக்கம் எப்படி உருவானது என்பதை சொல்லியிருக்கிறதா? உங்கள் கருத்துகள் இரண்டும் இந்தப் பதிவிற்கு சம்பந்தம் இல்லாதவை..

   Delete
 3. அன்பின் மதுமதி - வரலாற்றினை எடுத்துக் கூறியது நன்று - பகிர்வினிற்கு நன்றி - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 4. நல்ல தகவல்கள்.
  //1921 ம் ஆண்டு பெண்களுக்ககு வாக்குரிமை வழங்குவதற்கான சட்டத்தை இயற்றியது//
  ஆச்சரியமாக தான் உள்ளது. இஸ்லாமிய நாடுகள் மாதிரியே இருந்திருக்கிறது!!!

  ReplyDelete
 5. பிராமணர் / பிராமணர் அல்லாதோர் என்ற பகுப்பு இன்றும் தேவைப்படுகிறது. இல்லாவிட்டால் பிராமணர் அல்லாதோர் முன்னேற்றம் என்பது மெல்ல மெல்ல குறைந்து, இல்லாமல் போகும்‌. பிறப்பால் உயர்ந்தவன் என்று பலர் பேச காரணமே பிராமணியம் என்ற புரிதல் வேண்டும்‌.

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com