முதன்முதலாய்
உன்னைப் பார்த்தபோது
நீ யாரெனத்தெரியவில்லை..
பிறகுதான் தெரிந்தது
நீதான் நானென்று..
சில வருடங்களாக
சிறை வைத்திருந்த
"உன்னைக் காதலிக்கிறேன்"
என்ற வாக்கியத்தை
உன்னை பார்த்தபிறகே
விடுதலை செய்ய முற்பட்டேன்..
உன் பார்வை
என் மீது பட்ட பிறகே
எனக்குள் முளை விட்டிருந்த
எனது காதல்
மெதுவாக வளரத் தொடங்கியது..
கவிதை எழுதும்போதும்
உன்னிடம் பேசும்போதும்
வார்த்தைகளைத் தேடித் தேடியே
சேர்க்க வேண்டியிருக்கிறது..
நாம் முதன்முதலாக
சந்தித்தபோது பேசிய
வார்த்தைகள் கொஞ்சம்தான்
பேசிய நேரமோ அதிகம்..
ஒளிச்சேர்க்கை
நடைபெறுவதனால்தான்
மண்ணில் பயிர் வாழ்கிறதென்பது
உண்மையெனில்-நம்
விழிச்சேர்க்கை
நடைபெறுவதனால்தான்
என்னில் உயிர் வாழ்கிறது.
இதுவும் உண்மைதான்..
நான் உன்னை
பலமுறை சந்திக்க
ஆசைப்படுகிறேன்..
எனது காதலோ
ஒரே ஒரு முறை
விவாகத்தை சந்திக்க
ஆசைப்படுகிறது..
------------------------------------------------------------
அழகிய காதல் கவிதை...
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்..
Deleteகாதலின் புது அர்த்தம் சொன்ன சுந்தர கவிதை
ReplyDeleteஅருமை அய்யா
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தோழர்..
Deleteஒளிச்சேர்க்கை
ReplyDeleteநடைபெறுவதனால்தான்
மண்ணில் பயிர் வாழ்கிறதென்பது
உண்மையெனில்-நம்
விழிச்சேர்க்கை
நடைபெறுவதனால்தான்
என்னில் உயிர் வாழ்கிறது.
இதுவும் உண்மைதான்..
அருமையான சொல்லாடல் தோழா!!
அழகான கவிதை வாழ்த்துகள்.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தோழர்..
Deleteம்ம்ம்.. நடக்கட்டும் .. நடக்கட்டும் .
ReplyDeleteகல்யாணம் தான் . சேர்க்கை உவமை ஆஹா !
பொங்கல் ஓஹோ போல சகோ ?
//நாம் முதன்முதலாக
ReplyDeleteசந்தித்தபோது பேசிய
வார்த்தைகள் கொஞ்சம்தான்
பேசிய நேரமோ அதிகம்..//
கண்களால் பேசினால் போதாதா ?
அருமை.
அழகு கவிதை.
ReplyDeleteவாழ்த்துகள்.
காதல் கல்யாணம் செய்ய ஆசைப்பட்டுவிட்டது.இனி என்ன !
ReplyDeleteஅது நடந்து முடிந்துவிட்டது சகோதரி..பொங்கல் எப்பவும் சிறப்புதான்..தங்கள் வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி..
ReplyDeleteதுளிர்விட்ட காதலின்
ReplyDeleteநிதர்சன ஆசை
நிறைவேறினால் அழகு.......
// ஒளிச்சேர்க்கை
ReplyDeleteநடைபெறுவதனால்தான்
மண்ணில் பயிர் வாழ்கிறதென்பது
உண்மையெனில்-நம்
விழிச்சேர்க்கை
நடைபெறுவதனால்தான்
என்னில் உயிர் வாழ்கிறது.
இதுவும் உண்மைதான்..//
அறிவியல் உண்மைகள் களவியலுக்கும் பொருந்தும் என்பதை வெகு அழகாக உங்கள் சொல்லாடலால் விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி ஐயா தாங்கள் வருகை தந்ததற்கும் கருத்துக்கும்..
Deleteஅழகாக சொல்லி சுபம் என முடித்த விதம் அருமை நன்றி
ReplyDeleteநன்றி சகோ..
Delete////சில வருடங்களாக
ReplyDeleteசிறை வைத்திருந்த
"உன்னைக் காதலிக்கிறேன்"
என்ற வாக்கியத்தை
உன்னை பார்த்தபிறகே
விடுதலை செய்ய முற்பட்டேன்..
////
அருமையான வரிகள்
அற்புதமான காதல் கவிதை பாஸ்
அப்படியா தோழர் மகிழ்ச்சி.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteஒளிச்சேர்க்கை
ReplyDeleteநடைபெறுவதனால்தான்
மண்ணில் பயிர் வாழ்கிறதென்பது
உண்மையெனில்-நம்
விழிச்சேர்க்கை
நடைபெறுவதனால்தான்
என்னில் உயிர் வாழ்கிறது.///
இந்த கவிதையில் நான் மிகவும் ரசித்த வரிகள் இவை.... சூப்பர்
அப்படியா தோழர் எனக்கும் அதுதான் பிடித்தது.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteகவிதை அழகாக இருக்கு...
ReplyDeleteநன்றி தோழர்..
Deleteமுதன்முதலாய்
ReplyDeleteஉன்னைப் பார்த்தபோது
நீ யாரெனத்தெரியவில்லை..
பிறகுதான் தெரிந்தது
நீதான் நானென்று.
>>>
உங்களை, காதல் முதல் பார்வையிலேயே பற்றிக் கொண்டதா?
Azhakaana kavithai!
ReplyDeleterasikkumpadi-
irunthathu!
நன்றி..தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்..
Deleteஒளிச்சேர்க்கை
ReplyDeleteநடைபெறுவதனால்தான்
மண்ணில் பயிர் வாழ்கிறதென்பது
உண்மையெனில்-நம்
விழிச்சேர்க்கை
நடைபெறுவதனால்தான்
என்னில் உயிர் வாழ்கிறது.
இதுவும் உண்மைதான்.
அருமை..
மீ்ண்டும் மீண்டும் படித்தேன் கவிஞரே.
நன்று.
தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி முனைவரே..
ReplyDelete//ஒளிச்சேர்க்கை
ReplyDeleteநடைபெறுவதனால்தான்
மண்ணில் பயிர் வாழ்கிறதென்பது
உண்மையெனில்-நம்
விழிச்சேர்க்கை
நடைபெறுவதனால்தான்
என்னில் உயிர் வாழ்கிறது.
இதுவும் உண்மைதான்..//
அழகிய உண்மை.அருமை.வாழ்த்துக்கள் சகோதரா.
மகிழ்ச்சி சகோதரி..நன்றி.
Deleteகவிதை மிக அருமை!! வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஒளிச்சேர்க்கை
ReplyDeleteநடைபெறுவதனால்தான்
மண்ணில் பயிர் வாழ்கிறதென்பது
உண்மையெனில்-நம்
விழிச்சேர்க்கை
நடைபெறுவதனால்தான்
என்னில் உயிர் வாழ்கிறது.
இதுவும் உண்மைதான்..//
பிடித்த வரிகள். அருமையான காதல் கவிதை மதுமதி அண்ணா.
நன்றி தோழர்..
Deleteஅதே தான் ஒளிச் சேர்க்கை வரி எனக்கும் பிடித்தது. அருமை! வாழ்த்துகள். (திறந்த கதவு....வரலாம் என் வலைக்கும். தயக்கம் தேவையில்லைச் சகோதரா.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
விழிச் சேர்க்கை ஒளிச் சேர்க்கை அருமைங்க வாழ்த்துக்கள்
ReplyDeleteபடிக்கத்தூண்டும் அழகு கவிதை
ReplyDeleteகோவைக்கவி..
ReplyDeleteநன்றி சகோ.
நன்றி..
ReplyDeleteகாளிதாஸ்
யசோதாகந்த்.
கவிதை சுமந்த காதல் மிக இனிமையானது .. வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.
ReplyDeleteநண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
ReplyDeleteநன்றி
யாழ் மஞ்சு