திராவிட நிறம்தான்
பெண்மைக்கு அழகென்று
உன்னைப் பார்த்த பின்புதான்
அறிந்து கொண்டேன்..
எந்த சுடிதாரும்
எனை சுண்டியிழுக்கவில்லை.
உன் பட்டுத் தாவணியால்
பட்டுப் போனவன் நான்..
உன் முகத்தில் உள்ள
சாந்தம் தான் - எனை
காந்தமென ஈர்த்துக்கொண்டது..
பெண்மைக்கு அழகென்று
உன்னைப் பார்த்த பின்புதான்
அறிந்து கொண்டேன்..
எந்த சுடிதாரும்
எனை சுண்டியிழுக்கவில்லை.
உன் பட்டுத் தாவணியால்
பட்டுப் போனவன் நான்..
உன் முகத்தில் உள்ள
சாந்தம் தான் - எனை
காந்தமென ஈர்த்துக்கொண்டது..
உன் கண்மை
கண்ணால்தான்
உன் பெண்மை
உன் பெண்மை
மெருகேறுகிறது..
ஒப்பனை இல்லாத
உன் உருவம்தான்
எனை தினம்
ஒப்பனை செய்கிறது..
குங்குமம்
குங்குமம்
குடிகொண்ட
உன் நெற்றிதான் - எனை
உன் நெற்றிதான் - எனை
பற்றி இழுத்தது..
உன் கொலுசொலிதான்
எனை கொலு பொம்மையாக்கியது..
உன் கொலுசொலிதான்
எனை கொலு பொம்மையாக்கியது..
உன் சிரிப்பொலிதான்
எனை சிலையென மாற்றியது.
நேர் வகிடெடுத்த
உன் கூந்தலில் சிக்கி
சீப்பென என் மனம்
தூளி ஆடுகிறது
ஆடிப் பாடுகிறது
எனைப் பின்னிக் கொள்கிறது..
செயற்கைக்கு உட்படாத
உன் புருவம்தான்
நீ அழகியென
கர்வம் கொள்ள வைக்கிறது..
உன்னைப் பார்த்த பின்புதான்
பல சித்திரங்களுக்கு
நீதான் முன்னோடியாய்
இருந்திருக்கிறாய் என்ற
உண்மையை உணர்ந்துகொண்டேன்..
உன்னைப் போர்த்தியிருக்கிற
இந்த நிறம் தான் உனக்கான
அழகை அள்ளிக்கொடுக்கிறது..
திராவிட பெண்டிர்தான்
உலகில் அழகிகள் என்று
உன்னைப் பார்த்தவர்கள்
சத்தியம் செய்கிறார்கள்..
-மதுமதி
அழகிய வர்ணனை ...
ReplyDeleteமென்மையான வரிகளால் ..
கவிதையின் நளினம் மனதை கொள்ளை கொள்கிறது ..
நன்றி தோழரே..
ReplyDeleteஅதிலே சந்தேகம் வேண்டாம்
ReplyDeleteபெண்ணின் எளிமைக்கு கவிதை என்னும் அணி பூட்டியிருக்கின்றீர்... அருமை...
ReplyDeleteஅருமை. படமும் தலைப்பிற்கேற்ற அழகி தான்.
ReplyDeleteஉண்மைத் தமிழன் நீங்கள் ! ஹஹஹா..
பட்டு போனேன் -க்கு பதில்
துளிர் விட்டு போனேன் என்று இருந்திருக்கலாமோ ?
மனசாட்சி says:
ReplyDeleteஅதிலே சந்தேகம் வேண்டாம்..
ஆமாம்..அதில் சந்தேகமே தேவையில்லை..
மரு.சுந்தர பாண்டியன் கூறியது...
ReplyDeleteபெண்ணின் எளிமைக்கு கவிதை என்னும் அணி பூட்டியிருக்கின்றீர்... அருமை...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்..
ஸ்ரவாணி கூறியது...
ReplyDeleteஅருமை. படமும் தலைப்பிற்கேற்ற அழகி தான்.
உண்மைத் தமிழன் நீங்கள் ! ஹஹஹா..
பட்டு போனேன் -க்கு பதில்
துளிர் விட்டு போனேன் என்று இருந்திருக்கலாமோ ?
வாங்கம்மா வணக்கம்..
இருந்திருக்கலாம்..வழக்கமான ஒன்றாக இருக்குமோ என்றுதான் அதில் முரண்பட்டேன்..
வர்ணனை
ReplyDeleteஅருமை!
திரும்ப ஒருமுறை
படித்தேன்!
மகிழ்ச்சி தோழர்..உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..
ReplyDeleteதங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .
ReplyDeleteகண்டேன்..நன்றி..
ReplyDeleteமுகமூடியில்லா அகம் நோக்க
ReplyDeleteஒரு மனம் வேண்டும் உங்களுக்கு அது வைத்திருக்கு
அருமை காட்சிகள் கண்முன்