செல்வதாய் சொல்லிவிட்டு
உன்னோடு நான்
பகல்காட்சி வந்தேன்..
இந்நிமிடம் வரைத் தெரியவில்லை
நாம் பார்த்தது
என்ன படம் என்று..
இரு சக்கர
வாகனத்திலிருந்து
இறக்கிவிட்டுச் சென்றாய்
நான் இறங்கி கொண்டேன்
என் நினைவுகள் இறங்காமல்
தொடர்ந்து உன்னோடு
பயணித்துகொண்டிருந்தது.
துணிகளை
துவைக்கும்போதுதான் தெரிந்தது.
பூங்காவில் அமர்ந்து
நாம் பேசிக் கொண்டிருந்தபோது
என் உடை மீது
காக்கை எச்சம் செய்திருப்பது.
பூங்காவில்
நாம் தின்று போட்ட மிச்சத்தை
கொத்தித் தின்ன
அந்த இரண்டு காக்கைகள்
இப்போது
என்ன செய்து கொண்டிருக்கும்?!..
ம்..காதல் செய்து கொண்டிருக்கும்..
தலையைச் சீவ
சீப்பெடுத்த போதுதான்
எனக்குப் பட்டது..
தலையை
கலைத்து விட்டது நீயென்று..
சீப்பைத் தூக்கி
தூரத்தில் எறிந்தேன்.
மதியம் கடற்கரையில்
இருவரும்
காதல் கொள்ளும்போது
சுடாத சூரியன்
இரவு இல்லத்தில்
தனியாய் உறங்கும் போது சுடுகிறது..
இரவானதும்
இமைகளில் வந்து
அமர்ந்து கொள்கிறாய்..
நானும்
கண்கள் திறந்தபடியே
தூங்குவதற்கு பழகிக் கொண்டேன்..
.........................................................................
கவிதை நன்றாக உள்ளது...
ReplyDeleteஇமைகளில் நீ அமர்கையில்
ReplyDeleteகனமாக தோன்றினால்
அந்த சுகமான சுமைக்காக
காலமெல்லாம் காத்திருக்கிறேன்...
காதல் உணர்வுகள் பொங்கி வழிகிறது
கவிதையில் ..
அழகு அழகு..
சபாஷ்...அருமையான அழகான காதல் கவி
ReplyDeleteஅது எப்படிங்க விழித்துக் கொண்டே தூங்குவது அருமை அருமை அணைத்து வரிகளையும் ரசித்து படித்தேன் .
ReplyDeleteகவிதை அருமை என சொல்வது குறைத்து மதிப்பிட்டதுபோல் ஆகும். மிக அருமை. வாழ்த்துக்கள்!
ReplyDelete/பொருட்காட்சி
ReplyDeleteசெல்வதாய் சொல்லிவிட்டு
உன்னோடு நான்
பகல்காட்சி வந்தேன்..
இந்நிமிடம் வரைத் தெரியவில்லை
நாம் பார்த்தது
என்ன படம் என்று..
//
ரொம்ப உண்மை
இன்று ..
ReplyDeleteஉங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க ...
இதுதான் காதால் இந்த காதல் வந்தவற்ற்கள் எல்லாமே ஒரு மோன நிலையில் இருப்பார்கள் போலும் காதலி அருகில் இருக்கும் சுடாத சூரியன் பாதிஇரவில் வந்து சுடுகிராணம் பாருங்கள் இவரின் கற்பனை வரிகளை உண்மைதான் காதல் வந்து தொலைத்து விட்டால் சந்தனமும் சுடுமாமே அப்படியா பாராட்டுகள்
ReplyDeleteகலைந்த முடியைக் சீர்படுத்திக்கொள்ள விரும்பாததின் காரணம் அருமை.
ReplyDeleteகாதலர்களின் உப்பைத் தின்றதால் காகமும்
ReplyDeleteகாதல் கொள்வது , சீப்பு ...... என அனைத்தும் டாப்பு .
ம்ம்ம்.. காதலர் தின காய்ச்சல் இன்னும் அடுத்த ஆண்டு v 'day
வரைத் தொடரும் போல் உள்ளதே.
மிக மிக உண்மையான வரிகள்! அருமை! அருமை! இதற்கு மேல் எதைக் கூற! வாழ்த்தகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
இரவானதும்
ReplyDeleteஇமைகளில் வந்து
அமர்ந்து கொள்கிறாய்
ரொம்ப நல்லா இருக்கு ..
வாழ்த்துகள்
அனைத்துமே அழகான உணர்வுகள்.
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்தது:
//இரவானதும்
இமைகளில் வந்து
அமர்ந்து கொள்கிறாய்..
நானும்
கண்கள் திறந்தபடியே
தூங்குவதற்கு பழகிக் கொண்டேன்..//
போய்யா... எப்படித்தான் பாராட்டுறதுன்னு தெரியல. எதாவது சொல்லலாம்னா மத்தவங்க எல்லாத்தையும் சொல்லி முடிச்சுட்டாங்க... (இனிமே லேட்டா வருவியாடா கணேஷ்?) அதனால நான் ரொம்ப ரொம்ப ரசிச்சேன்னு மட்டும் சொல்லிட்டு கழண்டுக்கறேன் கவிஞரே...
ReplyDeleteசார் மதுமதி!
ReplyDeleteகொன்னுடீங்க!
வரிகள் துளைத்தது-
அருமை!
ரசித்தேன்!
எதை மிக ரசித்தேன் என்று தெரியவில்லை அனைத்துமே அழகான அருமையான வரிகள்.அண்ணா
ReplyDeleteஉன் நினைவுகளால் எனக்குத் தூக்கம் வரவில்லையென்பதை கவித்துவமாய்ச் சொன்னவிதம் அழகு. காதலில் ஊறித்திளைத்த கவி வரிகள் அனைத்துமே அருமை. பாராட்டுகள்.
ReplyDeleteகாதலின் இனிய உணர்வுகளை அழகுற சொல்லியைருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteயாருக்கோ கொடுத்துவச்சிருக்குண்ணே..! ஹிஹி..
ReplyDeleteஇதுதன் காதல்!அருமை.
ReplyDelete