முத்தங்களே
மொத்தத்திற்கும்
முதற்படி..
முத்தங்கள் தீர்ந்து போனபின்
மொத்தத்தையும் தேடி
பயணிக்க வேண்டியிருக்கிறது..
உன் உதடுகள்
என் உதட்டை
உட்படுத்திக்கொள்ளும்போதுதான்
எச்சில்கூட சூடாகிப்போகும்
வேதியியல் மாற்றத்தை உணர்கிறேன்..
உறங்கிக் கொண்டிருந்த
உண்ர்ச்சிகள்
விழித்தெழுந்தென்னை
விழுங்க ஆரம்பித்துவிட்டது..
உணர்வுகள் உறங்க ஆரம்பித்துவிட்டது..
இருவரது
மூச்சுக்காற்றும்
முத்தமிட்டுக் கொள்கிறது..இல்லை
யுத்தமிட்டுக்கொள்கிறது..கண்ணிமைகள் நான்கும்
கைகுலுக்கிக் கொள்கின்றன..
மூக்கு நுனிகள்கூர்தீட்டப்படுகின்றன..
இடைவெளியில்லாமல்
உருவங்கள் உள்வாங்கிக்கொள்கின்றன..
கருவிழியிரண்டும்
தாறுமாறாய்
சுழன்று கொண்டிருக்கின்றன..
வெட்கங்கள்
ஒவ்வொன்றாய்
கழன்று கொண்டிருக்கின்றன....
உடுத்தியிருக்கும் உடைகள்
தானாக களைந்துபோக எத்தனிக்கின்றன..
பூமிதனை தொட்டணைக்கின்றன..மேடு பள்ளங்களைக் கடந்து
ஊர்ந்து உயிர்வரை நனைக்கிறது..
தனக்கிதுதான் மோட்சம் என்றுவியர்வை நினைக்கிறது..
இருவருக்கும் இடையில்
காற்று புக முயன்று
தோற்றுப் போகிறது..அக்
காற்று வேகிறது.
இரண்டு ஒன்றாகிறது..
-------------------------------------------------
முத்தமே
ReplyDeleteமொத்தத்திற்கும்
முதற்படி..
முத்தங்கள் தீர்ந்து போனபின்
மொத்தத்தையும் தேடி
பயணிக்க வேண்டியிருக்கிறது..
>>
மறுபடியும் முதல்லில்ருந்தா?
அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
//முத்தமே
ReplyDeleteமொத்தத்திற்கும்
முதற்படி..//
சபாஷ்....உதட்டில் ஆரம்பித்து.....கவிதை த்தீயா இருக்கு
முத்து முத்தான முத்தங்களா!
ReplyDeleteமுத்தங்கள் தீர்ந்து போன பின்... முத்தங்கள் தீருமா என்ன கவிஞரே... தொடர்கதை அல்லவோ... கவிதை மோகத் தீயை கொளுந்துவிட்டு எரிய வைக்கிறது.
ReplyDeleteநல்லதொரு கவிதை பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஇருவருக்கும் இடையில்
ReplyDeleteகாற்று புக முயன்று
தோற்றுப் போகிறது..அக்
காற்று வேகிறது.
இரண்டு ஒன்றாகிறது..// அருமையான வரிகள்..
மூச்சுமுட்டுகிறது...:) அருமை தோழரே..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDelete/சி.பி/நண்டு/மனசாட்சி/விக்கி/கணேஷ்/ராஜி/கருன்/மயிலன்/
மொத்தமும் தீர்ந்துப்போக யுத்தம் தொடுத்தாலும் தீராது உள்ளுணர்வுகள் பயணிக்க உயிர்பிக்கும் அன்பில் வளர்பிக்கும் என்றும் ........
ReplyDeleteமுத்தச் சத்தம் எங்கும்...சந்தோஷம் !
ReplyDeleteமுத்த மழை.
ReplyDeleteநனைந்து ஜலதோஷம் பிடித்து விட்டது கவிஞரே.
இந்த முத்தங்களையும் சுவையுங்கள்
http://sivakumarankavithaikal.blogspot.com/2011/01/8.html
என்னமா எழுதிரிங்க சார்... சான்சே இல்லை. கவிதை எழுதறவங்களை பார்த்த பொறாமையா இருக்கு சார் , கதை , கட்டுரை எப்படியோ ஒப்பேதிறலாம். ஆனா கவிதை நமக்கெல்லாம் சுட்டு போட்டாலும் வராது.
ReplyDeleteஇன்று.
காதல் கதைகள் - எனக்கு 55 உனக்கு 25
///கருவிழியிரண்டும்
ReplyDeleteதாறுமாறாய்
சுழன்று கொண்டிருக்கின்றன..
வெட்கங்கள்
ஒவ்வொன்றாய்
கழன்று கொண்டிருக்கின்றன..///
சந்தவரிகள்
காந்த வரிகளாய்....
கண்ணிமைகள் நான்கும்
ReplyDeleteகைகுலுக்கிக் கொள்கின்றன..//
இதுவே நான் மிக ரசித்து நகரமறந்த இடம்.
பாராட்டுக்கள் தோழர்.
சத்தமில்லாமல் சிந்தை கலைக்கும் ஒரு உன்னத படைப்பு ... வாழ்த்துக்கள் அன்பரே
ReplyDeleteகவிதை அருமை
ReplyDeleteவேதியல் மாற்றத்தை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள் கவிஞரே..
ReplyDeleteMuththa Mazhai
ReplyDeleteMohana Mazhai.
TM 8.
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
ReplyDeleteபோகப் படாஅ முயக்கு.
கலக்கல் வரிகள்!
ReplyDelete