மேகங்கள்
தாகத்தை தணித்துக் கொண்டிருக்க
தேகங்களும்
தாகத்தை தணித்துக் கொள்ள
முயன்று கொண்டிருக்கின்றன..
மழை
தொடர்ந்து
பெய்து கொண்டிருக்கிறது..
எந்த மழை
முதலில் ஓயுமென
மழையில் நனைந்த மரமது
கிளைகளிடம் இலைகளிடமும்
விவாதித்துக் கொண்டிருக்கிறது..
குடையும் உடையும்
தத்தம் பணிசெய்து
தோற்றுப் போகிறது..
உதடும் உடலும்
முத்தம் தனை பெய்து
வெற்றி பெறுகிறது..
மண்ணிற்கு
மழை தரும் முத்தத்திற்கும்
பெண்ணிற்கு
அவன் தரும் முத்தத்திற்கும்
போட்டியென்னவோ
தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது...
---------------------------------------------------------------------
என்ன கவிஞரே... தொடர்ந்து ரொமான்டிக் கவிதைகள் மழையெனப் பொழிகின்றன... நல்ல ‘மூட்’ போலருக்கு... மழை, முத்தம் இரண்டுமே எனக்கு மிகப் பிடித்தவை. அதுபோலத்தான் உங்கள் கவிதையும். மிக ரசித்தேன்.
ReplyDeleteபோட்டிகள் இல்லை என்றால் சுவார்சம் இருக்காதல்லவா அருமை
ReplyDeleteஉடையும் குடையும் என்னையும் நனைத்துப்போனது
கணேஷ் கூறியது...
ReplyDeleteஎன்ன கவிஞரே... தொடர்ந்து ரொமான்டிக் கவிதைகள் மழையெனப் பொழிகின்றன... நல்ல ‘மூட்’ போலருக்கு... மழை, முத்தம் இரண்டுமே எனக்கு மிகப் பிடித்தவை. அதுபோலத்தான் உங்கள் கவிதையும். மிக ரசித்தேன்.
ஐய்யய்யோ அப்படியெல்லாம் ஒன்றுமில்லை..நாளை க்ரைம் கதையின் 2 வது அத்தியாயம்..சரி இன்று ஒரு அகக்கவிதை இருக்கட்டுமே என்று போட்டேன்..வேறொன்றுமில்லை..
sasikala கூறியது...
ReplyDeleteபோட்டிகள் இல்லை என்றால் சுவார்சம் இருக்காதல்லவா அருமை
உடையும் குடையும் என்னையும் நனைத்துப்போனது..
ஆம் சகோ..போட்டிகள் தான் சுவாரசியத்தைக் கொடுக்கும்..உங்களையும் நனைத்ததா மகிழ்ச்சி..நன்றி..
நல்லாயிருக்குங்க.
ReplyDeleteஅருமையான கவிதை வாழ்த்துகள்.
ReplyDeleteமது மதி @ செம போட்டிதான் போங்க..! கவிதை வரிகளூனூடே காதல் வழிகிறது.
ReplyDeleteபடத்துகேற்ற கவிதை சபாஷ்
ReplyDeleteபடமும் படத்திற்கான விளக்கக் கவியாக அமைந்த பதிவும்
ReplyDeleteமிக மிக அருமை
முத்த மழையும் மழை முத்தமும் தொடர்ந்து போட்டியிடட்டும்
நாடும் வாழ்வும் செழிக்கட்டும்
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்
த.ம 6
மழையை விட பெண்ணிற்கே வெற்றி வாய்ப்பு
ReplyDeleteஅதிகம்.
மண் மழையின் முத்தத்தில் குளிர்ந்து போகிறது!
ReplyDeleteபெண் ஆணின் முத்தத்தில் மேலும் சூடாகிறாள்!
அருமை மதுமதி.
Sabsh! Sariyaana Potti. Mega Mazhaikkum Moga Mazhaikkum. Arumai.
ReplyDeleteTM 8.
நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
ReplyDeleteநல்லாயிருக்குங்க..
நன்றிங்க..
dhanasekaran .S கூறியது...
ReplyDeleteஅருமையான கவிதை வாழ்த்துகள்.
நன்றி தோழர்..
dheva கூறியது...
ReplyDeleteமது மதி @ செம போட்டிதான் போங்க..! கவிதை வரிகளூனூடே காதல் வழிகிறது.
அப்படியா தோழர் மகிழ்ச்சி..
மனசாட்சி கூறியது...
ReplyDeleteபடத்துகேற்ற கவிதை சபாஷ்..
நன்றி..
Ramani கூறியது...
ReplyDeleteபடமும் படத்திற்கான விளக்கக் கவியாக அமைந்த பதிவும்
மிக மிக அருமை
முத்த மழையும் மழை முத்தமும் தொடர்ந்து போட்டியிடட்டும்
நாடும் வாழ்வும் செழிக்கட்டும்
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்
த.ம 6...
மனம் கவர்ந்ததா மகிழ்ச்சி ஐயா..நன்றி..
சேகர் கூறியது...
ReplyDeleteமழையை விட பெண்ணிற்கே வெற்றி வாய்ப்பு
அதிகம்.
அப்படியா பெண்ணிற்குதான் வாய்ப்பு அதிகமா..ரசிப்பிற்கு நன்றி..
சென்னை பித்தன் கூறியது...
ReplyDeleteமண் மழையின் முத்தத்தில் குளிர்ந்து போகிறது!
பெண் ஆணின் முத்தத்தில் மேலும் சூடாகிறாள்!
அருமை மதுமதி.
ஆமாம் ஐயா உண்மைதான்..நன்றி ஐயா..
துரைடேனியல் கூறியது...
ReplyDeleteSabsh! Sariyaana Potti. Mega Mazhaikkum Moga Mazhaikkum. Arumai.
ஆம் தோழர்..சரியான போட்டிதான்..நன்றி..
வாழ்வை ஈரமாய் சுவாரஸ்யமாய் வழிநடத்தும் மழையும் முத்தமும் மழையாய்.ரசனையின் உச்சம் மதுமதி !
ReplyDeleteஅன்பின் நண்பரே..உங்களது இந்த இடுகையை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரமிருக்கும் போது வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்
ReplyDeleteவலைச்சரத்தில் கவிதை சரம்
//குடையும் உடையும்
ReplyDeleteதத்தம் பணிசெய்து
தோற்றுப் போகிறது..//
சுவரஸ்யமான தோல்விகள்..!
simply superb
ReplyDelete