இன்று வகுப்பில்
புறநானூறு தான் பாடமாம்
அகநானூறு படிக்க
உன்னோடு வந்து விட்டேன்.
--------------------------------------
அதிகாலையில்
கடிகாரத்தில் தான்
அலாரம் அடிக்கும்.
இன்று கடிகாரம் மௌனிக்க
என் இதயத்தில் அலாரம் அடித்தது.
---------------------------------------
------------------------------------------
உனக்கு கொடுப்பதற்காக
வைத்திருந்த முத்தத்தை
உனக்கு முன்னதாக
இன்றைய தேதியைக் காட்டிய
என் வீட்டு காலண்டருக்கு
கொடுத்துவிட்டேன்
மன்னிக்கவும்.
-------------------------------------
நாம் இருவரும்
கடற்கரையில்
அமர்ந்திருக்கிறோம்..
நம் நினைவுகளை
அழைத்துக்கொண்டு
காதல்
சுற்றுலா சென்றிருக்கிறது.
-------------------------------------
-----------------------------
உன்னோடு இருக்கும்போது
வீட்டு ஞாபகம் வருவதில்லை.
வீட்டில் இருக்கும்போது
உன் ஞாபகத்தைத் தவிர
வேறொன்றுமில்லை..
--------------------------------------
பத்து நிமிடங்கள்
பேசினால் போதுமென
வந்த எனக்கு
பத்து மணி நேரங்களும்
போதவில்லை.
---------------------------------------
------------------------------------------
நீ பேசிக்கொண்டே இருக்கிறாய்
உன் உதடுகளும்
என் செவிகளும்
ஓய்ந்தபாடில்லை
வார்த்தைகள் இன்னும்
தீர்ந்தபாடில்லை
என்ன பேசுகிறாய்
எனத் தெரியவில்லை
என்ன கேட்கிறேன்
எனத் தெரியவில்லை.
உதடுகளும் செவிகளும்
தத்தம் பணிகளை
செய்துகொண்டேயிருக்கின்றன.
--------------------------------------
காதலர் தின வாழ்த்துகளை
நண்பர்கள் எல்லோரும்
நமக்குச் சொன்னார்கள்
நாம் அதை
காதலுக்குச் சொல்கிறோம்..
---------------------------------------
புறநானூறு தான் பாடமாம்
அகநானூறு படிக்க
உன்னோடு வந்து விட்டேன்.
--------------------------------------
அதிகாலையில்
கடிகாரத்தில் தான்
அலாரம் அடிக்கும்.
இன்று கடிகாரம் மௌனிக்க
என் இதயத்தில் அலாரம் அடித்தது.
---------------------------------------
------------------------------------------
உனக்கு கொடுப்பதற்காக
வைத்திருந்த முத்தத்தை
உனக்கு முன்னதாக
இன்றைய தேதியைக் காட்டிய
என் வீட்டு காலண்டருக்கு
கொடுத்துவிட்டேன்
மன்னிக்கவும்.
-------------------------------------
நாம் இருவரும்
கடற்கரையில்
அமர்ந்திருக்கிறோம்..
நம் நினைவுகளை
அழைத்துக்கொண்டு
காதல்
சுற்றுலா சென்றிருக்கிறது.
-------------------------------------
-----------------------------
உன்னோடு இருக்கும்போது
வீட்டு ஞாபகம் வருவதில்லை.
வீட்டில் இருக்கும்போது
உன் ஞாபகத்தைத் தவிர
வேறொன்றுமில்லை..
--------------------------------------
பத்து நிமிடங்கள்
பேசினால் போதுமென
வந்த எனக்கு
பத்து மணி நேரங்களும்
போதவில்லை.
---------------------------------------
------------------------------------------
நீ பேசிக்கொண்டே இருக்கிறாய்
உன் உதடுகளும்
என் செவிகளும்
ஓய்ந்தபாடில்லை
வார்த்தைகள் இன்னும்
தீர்ந்தபாடில்லை
என்ன பேசுகிறாய்
எனத் தெரியவில்லை
என்ன கேட்கிறேன்
எனத் தெரியவில்லை.
உதடுகளும் செவிகளும்
தத்தம் பணிகளை
செய்துகொண்டேயிருக்கின்றன.
--------------------------------------
காதலர் தின வாழ்த்துகளை
நண்பர்கள் எல்லோரும்
நமக்குச் சொன்னார்கள்
நாம் அதை
காதலுக்குச் சொல்கிறோம்..
---------------------------------------
வாழ்த்துக்கள்
ReplyDelete//உன்னோடு இருக்கும்போது
ReplyDeleteவீட்டு ஞாபகம் வருவதில்லை.
வீட்டில் இருக்கும்போது
உன் ஞாபகத்தைத் தவிர
வேறொன்றுமில்லை..///
ரசித்த வரிகள்
புறநானூறு, இந்த கவிதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது.....நானும் இன்று பதிவிட்டு உள்ளேன் நேரம் கிடைப்பின் படிக்கவும்....
ReplyDeletehttp://eththanam.blogspot.in/2012/02/blog-post_14.html
புறநானூறு கவிதை எனக்கு மிகவும் பிடித்தது...நேரம் கிடைப்பின் எனது பதிவையும் படிக்கலாம்....
ReplyDeletehttp://eththanam.blogspot.in/2012/02/blog-post_14.html
அவர்களும் சேர்ந்து படித்தார்களா ?
ReplyDeleteகாதலர் தின வாழ்த்து சொல்லி அலாரம் எழுப்பியதா ?
ஏன்? இனியவளின் புகைப்படம் கைவசம் இல்லையா ?
மெதுவாக வரட்டும் . அவசரமில்லை.
அப்போ 24 /7 காதல் பித்து தானா ?
ஏன் , உங்கள் ப்ளாக் வாசித்துக் காட்ட
10 மணி நேரம் தானா ஆனது ?
கண்களும் , கரங்களும் கூட .....
வாழ்க உண்மைக் காதல் ....
[ கருத்தில் எதாவது தவறு எனில் மன்னிக்கவும் சகோ ...]
ஹஹ்ஹஹா..தவறேதும் இல்லை.சகோதரி..ஆழமாய் படித்திருக்கிறீர்கள் போலும்..
ReplyDeleteஅகநானூறு படிக்கும் காதலர் தின வாழ்த்துகள். கவிதையில் காதல் மிளிர்கிறது.வாழ்த்துகள்
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
இன்று வகுப்பில்
ReplyDeleteபுறநானூறு தான் பாடமாம்
அகநானூறு படிக்க
உன்னோடு வந்து விட்டேன்.
இந்த இடம் நான் மிகவும் ரசித்தேன் சகோ.. :)
//அதிகாலையில்
ReplyDeleteகடிகாரத்தில் தான்
அலாரம் அடிக்கும்.
இன்று கடிகாரம் மௌனிக்க
என் இதயத்தில் அலாரம் அடித்தது.//ம்ம்ம் உண்மை உண்மை
//பத்து நிமிடங்கள்
பேசினால் போதுமென
வந்த எனக்கு
பத்து மணி நேரங்களும்
போதவில்லை.//தினமும் நடக்கிற கதை ரெம்ப அழகா சொல்லிடீங்க கவிஞரே
ரெம்ப அற்புதமாக அழகான காதல் கவிதைகள்
வரிகளில் காதல் அமிர்தமாய் இனிக்கிறது
எல்லா கவிதையும் அழகு
அழகிய காதல் கவிதை தந்த கவிஞருக்கு என் காதலர் தின வாழ்த்துக்கள்
அனைத்துமே அழகாக எழுதப்பட்டுள்ளன.
ReplyDelete//இன்று வகுப்பில் புறநானூறு தான் பாடமாம் அகநானூறு படிக்க உன்னோடு வந்து விட்டேன்.//
மிகவும் ரஸிக்கும்படி இருந்தது.
பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றி.
மாப்ள கவிதை நல்லா இருக்குய்யா நன்றி!
ReplyDeleteஇதயத்துக்குள் ஊடுருவி காதலை விதைத்து செல்லும் அழகிய காதல் கவிதைகள் ..
ReplyDeleteவாழ்த்துக்கள் கவிஞரே ...
பேசினால் போதுமென
ReplyDeleteவந்த எனக்கு
பத்து மணி நேரங்களும்
போதவில்லை.
நான் ரசித்த வரிகள் . அருமையான பதிவு அழகு ..அழகு .
very nice..
ReplyDeleteமதுமதிங்கற உங்க பெய்ர்க்காரணம் கேட்டாங்க தோழி ஸ்ரவாணி. நான் கண்டுபிடிச்சுட்டேன்... மதுவை மதியில வெச்சுக்கிட்டு, அதை கவிதையில ஊத்தி, ப(கு)டிக்கற எங்களை தள்ளாட வெச்சுடறீரே... அதனாலதானே மதுமதின்னு பேரு, ரைட்?
ReplyDeleteஆதாம் ஏவாளில் தொடங்கிய உலகம் இன்னும் உயிர் கொண்டிருக்கும் ரகசியம்...
ReplyDeleteகாதல்...
தங்களின் அனைத்து கவிதைகளிலும் காதல் விளையாடுகிறது...
ReplyDeleteகாதலர் தின சிறப்புப் பதிவு அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்
À நீ பேசிக்கொண்டே இருக்கிறாய்
ReplyDeleteஉன் உதடுகளும்
என் செவிகளும்
ஓய்ந்தபாடில்லை
வார்த்தைகள் இன்னும்
தீர்ந்தபாடில்லை// கவிஞரின் கற்பனை வரிகள் இன்னும் மயக்கின்ற காதல் வரிகள். வாழ்த்துக்கள்.
//உன்னோடு இருக்கும்போது
ReplyDeleteவீட்டு ஞாபகம் வருவதில்லை.
வீட்டில் இருக்கும்போது
உன் ஞாபகத்தைத் தவிர
வேறொன்றுமில்லை..//
அருமை சகோதரா.ஆழமான காதல் வரிகள்.உணர்ந்து மகிழ்ந்தேன்.மிக்க நன்றி.
நல்ல காதல் கவிதைகள்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteகாதலர் தினத்தில் எல்லா காதலர்களும் காதலிக்கு சொல்கின்ற, நினைக்கின்றவைகளை அழகான குறுங்கவிதைகள் மூலம் வாழ்த்தாக சொல்லியிருக்கிறீர்கள். அருமை!
ReplyDeleteவண்ணத்தமிழ் கோர்த்த காதலர்தினப் பதிவு அருமை.காதல் வாழ்த்துகள் மதி !
ReplyDeletekavithai kavithai!(guna kamal pol padikkavum)
ReplyDeletevaarthai katti pottu vittathu!
//இன்று வகுப்பில் புறநானூறு தான் பாடமாம் அகநானூறு படிக்க உன்னோடு வந்து விட்டேன்.//
ReplyDeleteரசித்தேன்! தொடர்க!
காரஞ்சன்(சேஷ்)
//இன்று வகுப்பில் புறநானூறு தான் பாடமாம் அகநானூறு படிக்க உன்னோடு வந்து விட்டேன்.//
ReplyDeleteஇரசித்தேன்!
காரஞ்சன்(சேஷ்)
நீ பேசிக்கொண்டே இருக்கிறாய்
ReplyDeleteஉன் உதடுகளும்
என் செவிகளும்
ஓய்ந்தபாடில்லை
வார்த்தைகள் இன்னும்
தீர்ந்தபாடில்லை
என்ன பேசுகிறாய்............ எனக்குப்பிடித்த அருமையான வரிகள் அண்ணா
கவிஞன் எனில் காண்பதெல்லாம் காதலாகும். காதலன் எனில் காண்பதெல்லாம் கவிதையாகும். இங்கே காதலும் கவிதையும் ஒன்றாய் இணைந்து இரட்டை விருந்தளித்து இதயம் இளக்குகிறதே....பாராட்டுகள் மதுமதி.
ReplyDeleteஉனக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த முத்தத்தை
ReplyDeleteஉனக்கு முன்னதாக
இன்றைய தேதியைக் காட்டிய
என் வீட்டு காலண்டருக்கு
கொடுத்துவிட்டேன்
மன்னிக்கவும்.
>>
அடடா வட போச்சே
நீ பேசிக்கொண்டே இருக்கிறாய்
ReplyDeleteஉன் உதடுகளும்
என் செவிகளும்
ஓய்ந்தபாடில்லை காதலும் கவிதையும் அருமை .
வாழ்த்துக்கள்
லவ்வர்ஸ் டேன்னா பச்சைக்கலர் டிரெஸ் தான் போடனும், அதுக்காக பிளாக்ல லெட்டர்ஸூம் பச்சையா? அவ்வ்வ்வ்
ReplyDeleteமதுமதியின் அகநானுறு படித்த
ReplyDeleteதேவதை யாரோ....?
சூப்பர்
ReplyDeleteஅனைத்தையும் இரசித்தேன்!
ReplyDeleteஒன்றை மட்டும் குறிப்பிடின் மற்றவை சற்று
தாழ்ந்து விடும்!
தம்பி, கணேஸ் சொன்னது போல மது உண்ட
வண்டாகி மயங்கினேன்!
நன்று நன்றி!
சா இராமாநுசம்
அழகான கவிதை,, வாழ்த்துக்கள் காதலுக்கு..
ReplyDelete@மனசாட்சி
ReplyDeleteநன்றி..
தன்னைக் கொண்டாடுவார்கள் என்பதை விடவும்
ReplyDeleteகாதல் கவிதைகளைச் சுவைக்கவென்றே காதலர் தினம் வருகிறது போல!
அனைத்து கவிதைகளும் மிகவும் கவர்ந்தன, மதுமதி.
வணக்கம் நண்பரே தங்களது வலைப் பதிவினை வலைசரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன் .நன்றி
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2012/03/blog-post_02.html