புது வரவு :
Home » , , , , , » டி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34

டி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34

                                   பிரித்தெழுதுக          வணக்கம் தோழர்களே..பாகம் 33  ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவது எப்படி எனப் பார்த்தோம்.இப்பகுதியில் வார்த்தையை பிரித்தெழுதுவது எப்படி எனப் பார்ப்போம்.
             நாம் ஆரம்பப்பள்ளியிலேயே பிரித்தெழுதுதல் எப்படி என்பதை கற்றிருப்போம்.ஆனாலும் கூட சில வார்த்தைகளை பிரித்து எழுதுவது என்னமோ சற்று சவாலாகத்தான் இருக்கிறது. அப்படியான சில சொற்களையும் அவற்றை எப்படி பிரித்தெழுதுவது என்பதையும் காண்போம்.

மொய்யிலை     -     மொய் + இலை
வாயினீர்     -     வாயின் + நீர்
வெந்துலர்ந்து     -     வெந்து + உலர்ந்து
காடிதனை     -     காடு + இதனை
கருமுகில்     -     கருமை + முகில்
வெண்மதி     -     வெண்மை + மதி
எழுந்தெதிர்     -     எழுந்து + எதிர்
அறிவுண்டாக     -     அறிவு + உண்டாக
இயல்பீராறு     -     இயல்பு + ஈறு + ஆறு
நன்மொழி     -     நன்மை + மொழி
எனக்கிடர்     -     எனக்கு + இடர்
நல்லறம்     -     நன்மை + அறம்
பைந்தளிர்                    - பசுமை + தளிர்
புன்மனத்தார்              - புன்மை + மனத்தார்
மெல்லடி                      - மென்மை + அடி
சிற்றில்                         - சிறுமை + இல்
வெந்தழல்                    - வெம்மை + தழல்
நற்செங்கோல்           - நன்மை + செம்மை + கோல்
தன்னொலி                  - தன்மை + ஒலி
தீந்தமிழ்                         - தீம் + தமிழ்
தீஞ்சுடர்                         - தீமை + சுடர்
பூம்புனல்                       - பூ + புனல்
அந்நலம்                        - அ + நலம்
எந்நாள்                           - எ + நாள்
உடம்பெல்லாம்     -     உடம்பு + எல்லாம்
திருவமுது     -     திரு + அமுது
மனந்தழைப்ப     -     மனம் + தழைப்ப
நற்கரிகள்     -     நன்மை + கறிகள்
இன்னமுது     -     இனிமை + அமுது
வாளரா     -     வாள் + அரா
அங்கை     -     அம் + கை
நான்மறை     -     நான்கு + மறை
பாவிசை     -     பா + இசை
காரணத்தேர்     -     கரணத்து + ஏர்
நாற்கரணம்     -     நான்கு + கரணம்
நாற்பொருள்     -     நான்கு + பொருள்
இளங்கனி     -     இளமை + கனி
விண்ணப்பமுண்டு     -     விண்ணப்பம் + உண்டு
பிநியறியோம்     -     பிணி + அறியோம்
எந்நாளும்     -     எ + நாளும்
நாமென்றும்     -     நாம் + என்றும்
பணிந்திவர்     -     பணிந்து + இவர்
சிரமுகம்     -     சிரம் + முகம்
பெருஞ்சிரம்     -     பெருமை + சிரம்
தண்டளிர்ப்பதம்     -     தண்மை + தளிர் + பதம்
திண்டிறல்     -     திண்மை + திறல்
எண்கினங்கள்     -     எண்கு + இனங்கள்
வீழ்ந்துடல்     -     வீழ்ந்து + உடல்
கரிக்கோடு     -     கரி + கோடு
பெருங்கிரி     -     பெருமை + கிரி
இருவிழி     -     இரண்டு + விழி
வெள்ளெயிறு     -     வெண்மை + எயிரு
உள்ளுறை     -     உள் + உறை
நெடுநீர்     -     நெடுமை + நீர்
அவ்வழி     -     அ + வழி
தெண்டிரை     -     தெண்மை + திரை
அன்பெனப்படுவது     -     அன்பு + எனப்படுவது
பண்பெனப்படுவது     -     பண்பு + எனப்படுவது
பற்றில்லேன்     -     பற்று + இல்லேன்
போன்றிருந்தேன்     -     போன்று + இருந்தேன்
ஆரிடை                          - ஆ + இடை
முன்னீர்                          - முன் + நீர்
வழியொழுகி     -     வழி + ஒழுகி
எள்ளறு     -     எள் + அறு
புள்ளுறு     -     புள் + உறு
அரும்பெறல்     -     அருமை + பெறல்
பெரும்பெயர்     -     பெருமை + பெயர்
அவ்வூர்     -     அ + ஊர்
பெருங்குடி     -     பெருமை + குடி
புகுந்தீங்கு     -     புகுந்து + ஈங்கு
பெண்ணணங்கு     -     பெண் + அணங்கு
நற்றிறம்     -     நன்மை + திறம்
காற்சிலம்பு     -     கால் + சிலம்பு
செங்கோல்     -     செம்மை + கோல்
வெளியுலகில்     -     வெளி + உலகில்
இருகரை                        - இரண்டு + கரை
மூவைந்தாய்                - மூன்று + ஐந்தாய்
கீழ்க்கடல்                      - கிழக்கு + கடல்
கட்புலம்                         - கண் + புலம்
எஞ்ஞான்றும்              - எ + ஞான்றும்
அங்கயற்கண்              - அம் + கயல் + கண்
வாயிற்கெடும்             - வாயால் + கெடும்
நீனிலம்                          - நீள் + நிலம்
தெண்ணீர்                      - தெள் + நீர்
ராப்பகல்                         - இரவு + பகல்
தேவாரம்                        - தே + ஆரம்
முட்டீது                          - முள்+ தீது
வான்மதி                        - வானம் + மதி
பன்னலம்                       - பல + நலம்
சீரடி                                   - சீர் + அடி
அன்பகத்தில்லா     -     அன்பு + அகத்து + இல்லா
வன்பாற்கண்     -     வன்பால் + கண்
நாற்றிசை     -     நான்கு + திசை
ஆற்றுணா     -     ஆறு + உணா
பலரில்     -     பலர் + இல்(வீடுகள்)
தாய்மையன் பிறனை     -     தாய்மை + அன்பின் + தனை
சுவையுணரா     -     சுவை + உணரா
வாயுணர்வு     -     வாய் + உணர்வு
செவிக்குணவு     -     செவிக்கு + உணவு
தந்துய்ம்மின்     -     தந்து +உய்ம்மின்
வில்லெழுதி     -     வில் + எழுதி
பூட்டுமின்     -     பூட்டு + மின்
மருப்பூசி     -     மறுப்பு + ஊசி
எமதென்று     -     எமது + என்று
சீறடி                                  - சிறுமை + அடி
உண்டினிதிருந்த          - உண்டு + இனிது + இருந்த
மருட்டுரை                      - மருள் + உரை
இன்னரும்பொழில்      - இனிமை + அருமை + பொழில்
மைத்தடங்கண்             - மை + தட + கண்
போதிலார்                        -போது + இல் + ஆர்
வேறல்                              - வெல் + தல்
முன்றில்                          -முன் + இல்
வேப்பங்காய்                  - வேம்பு + காய்
ஆண்டகை                      - ஆண் + தகை
இலங்கருவி                   - இலங்கு + அருவி
செந்தமிழ்     -     செம்மை + தமிழ்
ஊரறியும்     -     ஊர் + அறியும்
எவ்விடம்     -     எ + இடம்
அங்கண்     -     அம் + கண்
பற்பல     -     பல + பல
புன்கண்     -     புன்மை + கண்
மென்கண்     -     மேன்மை + கண்
அருவிலை     -     அருமை + விலை
நன்கலம்     -     நன்மை + கலம்
செலவொழியா     -     செலவு + ஒழியா
வழிக்கரை     -     வழி + கரை
வந்தணைந்த     -     வந்து + அணைந்த
எம்மருங்கும்     -     எ + மருங்கும்
எங்குரைவீர்     -     எங்கு + உறைவீர்
கண்ணருவி     -     கண் + அருவி
சாந்துணை                      - சாகும் + துணை
கடிதீங்கு                           - கடிது + ஈங்கு
வேர்கோட்பலவின்     - வேர் + கோள் + பலவின்
மாயங்கொல்லோ        - மாயம் + கொல் + ஓ
தங்கால்                             - தன் + கால்
கொங்கலர்தார்               - கொங்கு + அலர் + தார்
நட்பாடல்                          - நட்பு + ஆடல்
பாம்பெள்ளெனவே       - பாம்பு + எள் + எனவே
முயற்காதிலை              - முயல் + காது + இலை
செங்காலன்னம்             - செம்மை + கால் + அன்னம்
பதினோராண்டுகள்       - பதின் + ஓர் + ஆண்டுகள்
கேளிர்                                 - கேள் + இர்
உண்ணிகழ்                       - உள் + நிகழ்
தீதொரீஇ                           - தீது + ஓரீஇ
 -------------------------------------------------------------------------------------------------------------
பகிர்ந்து கொள்ளுங்கள் தோழர்களே..படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
--------------------------------------------------------------------------------------------------------------
                                                                                                                                        அன்புடன்இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

2 comments:

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com