டி.என்.பி.எஸ்.சி-உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல் பாகம் 33 - மதுமதி.காம்
புது வரவு :
Home » , , , » டி.என்.பி.எஸ்.சி-உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல் பாகம் 33

டி.என்.பி.எஸ்.சி-உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல் பாகம் 33

Written By Madhu Mathi on Friday, June 22, 2012 | 6/22/2012 08:48:00 AM

17. உவமையால் விளக்கப்பெறும் பொருளைக் கண்டுபிடி
      
          வணக்கம் தோழர்களே..பாகம் 33 விடைக்கேற்ற வினாவை எழுதுதல் எப்படி எனப் பார்த்தோம்.இந்தப் பகுதியில் ஒரு உவமையைக் கொடுத்து அது வெளிப்படுத்தும் பொருள் என்ன என்பதைக் கண்டறிக என வினாக்கள் அமையும்.
            கொடுக்கப்பட்டிருக்கிற உவமையை நன்றாக புரிந்து கொண்டால் ஐந்திற்கும் எளிதாக விடையளிக்கலாம். இதில் பெரும்பாலும் புழக்கத்திலிருக்கும் பழமொழிகளில் இருந்து கேட்கப்படுகின்றன்.
            எளிமையான பகுதிகளில் இதுவும் ஒன்று.
            கிழே சில உதாரணங்களைக் கொடுத்திக்கிறோம். இவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள் .

வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை
நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை போல                             - நிலையாமை
காராண்மை போல ஒழுகுதல்                                         - வள்ளல் தன்மை
நிலத்தறைந்தான் கை பிழையாதற்று                          - துன்பம்
விழலுக்கு இறைத்த நீர் போல                                        - பயனற்றது
புதையல் காத்த பூதம் போல                                            - பயனின்மை
தாமரை இலை தண்ணீர் போல                                      - பற்றற்றது
பால்மனம் மாறா குழந்தை போல                                  - வெகுளி
கடல் மடை திறந்த வெள்ளம் போல                            - விரைவாக வெளியேறுதல்
உடுக்கை இழந்தவன் கைபோல                                     - நட்பு
இடியோசை கேட்ட நாகம் போல                                   - அச்சம், மிரட்சி
புலி சேர்ந்து போகிய கல்லனை போல                       - வயிறு
சிப்பிக்குள் முத்து போல - மேன்மை
உமிகுற்றி கை வருந்தல் போல                                      - பயனற்ற சொல்
நீரும் நெருப்பும் போல                                                        - விலகுதல்
வெள்ளத்தனைய மலர் நீட்டம்                                        - முயற்சிக்கேற்ற பலன்
எட்டாப்பழம் புளித்தது போல                                           - விலகுதல்
கடன்பட்டவர் நெஞ்சம் போல                                         - வேதனை
நவில்தோறும் நூல் நயம்போல                                     - பண்பாளரின் தொகுப்பு
உடுக்கை இழந்தவன் கை போல                                    - நட்பு
அன்றளர்ந்த தாமரை போல                                             - சிரித்த முகம்
பகலவனைக் கண்ட பனி போல                                     - நீங்குதல்
குன்றேறி யானை போர் கண்டது போல                     - செல்வத்தின் சிறப்பு
கனியிருப்ப காய்கவர்ந்தற்று                                           - இன்னா சொல்
உள்ளங்கை நெல்லிக்கனி போல                                   - தெளிவு
பகலவனை கண்ட பனிபோல                                         - துன்பம் நீங்கிற்று
சிறுதுளி பெரு வெள்ளம்                                                    - சேமிப்பு
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்                    - பாசம், பந்தம்
நகமும் சதையும் போல                                                     - ஒற்றுமை
நீர் மேல் எழுத்து போல                                                       - நிலையற்ற தன்மை
கண்ணைக் காக்கும் இமை போல                                  - பாதுகாப்பு
அடியற்ற மரம் போல                                                           - வீழ்ச்சி
செல்லரித்த நூலை போல                                                 - பயனின்மை
வேலியே பயிரை மேய்ந்தது போல                               - நம்பிக்கை துரோகம்
கிணற்றுத் தவளை போல                                                  - அறியாமை
செவிடன் காதில் ஊதிய சங்கு போல                           - பயனற்றது
அச்சில் வார்த்தாற் போல                                                   - உண்மைத் தன்மை
ஊமை கண்ட கனவு போல                                                - இயலாமை
மதில் மேல் பூனை போல                                                   - முடிவெடுக்காத நிலை
பசுத்தோல் போர்த்திய புலி                                                 - வஞ்சகம்
குரங்கு கையில் பூமாலை போல                                    - பயனற்றது
நீறு பூத்த நெருப்பு போல                                                      - பொய்த்தோற்றம்
இலைமறை காளிணி போல                                              - மறைபொருள்
அத்தி பூத்தாற்போல                                                               - எப்பொழுதாவது
பசுமரத்தாணி போல                                                               - ஆழமாக பதித்தல்
நாய் பெற்ற தெங்கப்பழம்                                                     - அனுபவிக்க தெரியாமை
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல                 - துன்பத்தை
மழை காணா பயிர் போல                                                   - வாட்டம் அதிகப்படுத்துதல்
திருடனுக்கு தேள் கொட்டியது போல                           - தவிப்பு
--------------------------------------------------------------------------------------------------------------
படித்ததை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------
                                                                                                                                           அன்புடன்

பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.


டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..


Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

4 comments:

 1. Tholare, pirithu yeluthuga eppadi kandupitipathu?

  ReplyDelete
 2. ஆனந்த் பாபு..

  அடுத்த பதிவை தவறாமல் காணுங்கள்..

  ReplyDelete
 3. பள்ளியில் படித்து மறந்தவையெல்லாம் மீண்டும் சொல்லிக் கொடுத்து விட்டீர்கள்.

  ReplyDelete
 4. sir, podhu tamil notes ennoda mailukku anuppa mudiyuma? pls i.d vasudev.dev2@gmail.com.

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Total Pageviews

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Recent Post

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

Random Posts

Best Blogger Tips

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com