புது வரவு :
Home » , , , , , » சரி நான் கிளம்புகிறேன் | காதல் கவிதை | மதுமதி கவிதைகள் | Madhumathi Kavitdhaigal |

சரி நான் கிளம்புகிறேன் | காதல் கவிதை | மதுமதி கவிதைகள் | Madhumathi Kavitdhaigal |



நகரத்தின்

பல தெருக்களை
அடையாளம் காட்டும்-உன்
இரு சக்கர வாகனத்திற்கு நன்றி..


உன்னோடு
இருக்கும்போது மட்டும்
காலை
தனது பெயரை மாலை என
வேகமாக மாற்றிக் கொள்கிறது..


இன்று முழுவதும்
உன்னோடுதான் 
பேசிக் கொண்டிருந்தேன்.
ஆனாலும் பார்
சொல்ல வந்த செய்திகளில்
இன்னும் நான்கு மீதம் இருக்கிறது..


நாம் இருவரும்
பேசி முடிக்க நாட்கள் போதாது..
வருடங்கள் பலவற்றை
வாடகைக்கு வாங்க முற்படுகிறேன்
..

சரி..
நான் கிளம்புகிறேன்..
தனியாய் செல்வதாய்
நினைக்க வேண்டாம்
உன் நினைவுகளை துணைக்கு
அழைத்துச் செல்கிறேன்.


வீடு திரும்பியவுடன்
கண்ணாடியைப் பார்த்தேன்.
கிளம்பும்போது
கொண்டு வந்திருந்த வெட்கத்தை
உன்னிடம் தந்து விட்டு
வந்திருக்கிறேன்..


குளிப்பதற்கு 
யோசிக்கிறேன்.
ஏனென்றால்
உன் கை ரேகைகள்
தண்ணீரில் கரைந்து போகும்.


இப்போது..
உன் வீட்டில் நீ.
என் வீட்டில் நான்.
நம் நினைவுகள் இன்னும்
கடற்கரையை விட்டு
எழுந்து வரவில்லை.


மாலை கடற்கரையில்
பேசிக் கொண்டிருந்தபோது
நீ செய்த குறும்புகளை
இரவு இல்லத்தில்
உறங்கும்போது
மனசு மறு ஒளிபரப்பு செய்கிறது.
 
சரி நான் உறங்குகிறேன்..




Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

29 comments:

  1. அருமை.அனுபவித்தவர்களுக்குத் தெரியும் அந்த ,அவஸ்தையும் சுகமும்!

    ReplyDelete
  2. அருமையான
    பசுமையான
    இனிமையான
    இன்பமான
    குதூகலமான
    நினைவுகள் தான் ! ;)))))

    ReplyDelete
  3. //நாம் இருவரும்
    பேசி முடிக்க நாட்கள் போதாது.
    பல வருடங்கள் தேவைப்படுகிறது//

    குஷியோடு
    “சரி நானும் கிளம்புகிறேன்”
    இப்போது.

    ReplyDelete
  4. மாலை கடற்கரையில்
    பேசிக் கொண்டிருந்தபோது
    நீ செய்த குறும்புகளை
    இரவு இல்லத்தில்
    உறங்கும்போது
    மனசு மறு ஒளிபரப்பு செய்கிறது.
    செய்யட்டும் செய்யட்டும் அப்போ தானே அதை நாங்க கவிதையாய் ரசிக்க முடியும் . அருமைங்க .

    ReplyDelete
  5. கண்ணாடியில் விட்டு வந்த வெட்கம் மிக அருமை. மற்ற கவிதைகளும் இனிமைதான். அசத்துறீங்க கவிஞரே...

    ReplyDelete
  6. சொல்லமுடியா உணர்வுகளை
    சொல்லமுடியாமல் விழுங்கி
    ஏதோ சொல்லிவிட்டு
    சொல்லாமல் சொல்லி
    பேசிய வார்த்தைகள் எல்லாம்
    கண்மணிக்குள் கருவாக நிற்கிறதே...

    அழகான கவிதை நண்பரே.

    ReplyDelete
  7. கவிதையை பாராட்ட நினைக்கிறேன்.முடியவில்லை. காரணம் இன்னும் நான் உங்கள் கவிதையின் தாக்கத்தில் இருந்து விடுபடவில்லை!

    ReplyDelete
  8. ''..நாம் இருவரும்
    பேசி முடிக்க நாட்கள் போதாது.
    பல வருடங்கள் தேவைப்படுகிறது...
    உண்மையும் அது தானே! இருமை நல்ல காதல் வாழகள் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  9. இப்போது..
    உன் வீட்டில் நீ.
    என் வீட்டில் நான்.
    நம் நினைவுகள் இன்னும்
    கடற்கரையை விட்டு
    எழுந்து வரவில்லை.
    >>>
    தனித்திருந்தாலும் சேர்ந்திருப்பதுதானே காதலுக்கு இலக்கணம்

    ReplyDelete
  10. அழகு
    மெண்மை
    கவிநயம் கவிதை கலக்கல் கவிஞரே

    ReplyDelete
  11. பேசிக் கொண்டிருந்தபோது
    நீ செய்த குறும்புகளை
    இரவு இல்லத்தில்
    உறங்கும்போது
    மனசு மறு ஒளிபரப்பு செய்கிறது.//
    நினைவுகள் பிடித்தவர்கள் பின் செல்லும் என்பதைச் சொல்லியிருக்கும் விதம் அழகு சகோ.

    ReplyDelete
  12. அழகான காதலின் ஆழமான உணர்வுகளை மெல்லிய மயிலிறகு வருடும் சுகத்தோடு அனுபவிக்கத் தருகிறீர்கள். அபாரம். பாராட்டுகள் மதுமதி.

    ReplyDelete
  13. மாலை கடற்கரையில்
    பேசிக் கொண்டிருந்தபோது
    நீ செய்த குறும்புகளை
    இரவு இல்லத்தில்
    உறங்கும்போது
    மனசு மறு ஒளிபரப்பு செய்கிறது.

    காதலின் இலக்கனம் இது தானோ...அருமையா இருக்கு..

    ReplyDelete
  14. //இரவு இல்லத்தில்
    உறங்கும்போது
    மனசு மறு ஒளிபரப்பு செய்கிறது//

    சரி சரி நானும் கிளம்புறேன்

    ReplyDelete
  15. வீடு திரும்பியவுடன்
    கண்ணாடியைப் பார்த்தேன்.
    கிளம்பும்போது
    கொண்டு வந்திருந்த வெட்கத்தை
    உன்னிடம் தந்து விட்டு
    வந்திருக்கிறேன்..


    அருமை வரிகள்.அருமைக் கவிதை வாழ்த்துகள்

    ReplyDelete
  16. காதல் கனவுகளில் மிதந்தால் கவிதை வரும் .
    உங்கள் கவிதைகளில் மிதந்தால் மீண்டும்
    காதல் கனவுகள் வரும்.
    sari , naan kilambugiren ......

    ReplyDelete
  17. // குளிப்பதற்கு
    யோசிக்கிறேன்.
    ஏனென்றால்
    உன் கை ரேகைகள்
    தண்ணீரில் கரைந்து போகும்//

    அருமை! கண் சிமுட்டினால் காதலன் (அந்த நொடி)
    மறைவானே என்ற காதலி போல் இங்கே கை ரேகைகள் கழுவினால் போய்விடும் என்ற யோசனை(கற்பனை) மிக மிக
    அருமை! பாராட்டுக்கள்!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  18. எனக்கு ஒரே ஒரு குறை அண்ணா ஆண்களின் காதல் கவி எழுத கஸ்ரப்படுவேன் உங்கள் கவி வாசித்து இப்போது அக்குறை மறைந்து போகிறது....

    ReplyDelete
  19. //குளிப்பதற்கு
    யோசிக்கிறேன்.
    ஏனென்றால்
    உன் கை ரேகைகள்
    தண்ணீரில் கரைந்து போகும்.//

    அனுபவபூர்வமான காதல் கவிதை. கலக்கல்.

    ReplyDelete
  20. எனக்கும் கவிதையை விட்டு வெளியேற
    மனம் வரவில்லை
    படங்களுடன் பதிவு அற்புதம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. சுகமாய் அனுபவித்து எழுதிய வரிகள் !

    ReplyDelete
  22. உங்கள் வரிகள் என்னைக் காதலிக்கத் தூண்டுகின்றன. அருமையான கவிதை வரிகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. சுகமான, அழகான காதல் கவிதை.... வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. டொமைன் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்...கவிதை அழகாக உள்ளது...

    ReplyDelete
  25. அண்ணா உங்களுக்கு நான் வெர்சாட்லைட் விருதை பரிந்துரை செய்து கொடுக்கிறேன்.தயைகூர்ந்து பெற்று கொள்ளுங்கள்

    ReplyDelete
  26. அருமையான் பதிவு படிக்குபோதே கிறங்கட்கும் வார்த்தைகள்.

    ReplyDelete
  27. //உன்னோடு
    இருக்கும்போது மட்டும்
    காலை
    தனது பெயரை மாலை என
    வேகமாக மாற்றிக் கொள்கிறது..//
    அழகான கற்பனை..!

    ReplyDelete
  28. இப்போது..
    உன் வீட்டில் நீ.
    என் வீட்டில் நான்.
    நம் நினைவுகள் இன்னும்
    கடற்கரையை விட்டு
    எழுந்து வரவில்லை.


    மாலை கடற்கரையில்
    பேசிக் கொண்டிருந்தபோது
    நீ செய்த குறும்புகளை
    இரவு இல்லத்தில்
    உறங்கும்போது
    மனசு மறு ஒளிபரப்பு செய்கிறது.

    வணக்கம் அன்புச் சகோதரரே தங்களின்
    கவிதை மிக அருமையாக உள்ளது .ஆரம்பமும்
    முடிவும் ஒரு நிகழ்வினை நேரடியாகக் கண்டு
    களித்ததுபோல் ஓர் உணர்வு மனதினில் எழுந்தது .
    மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com