புது வரவு :

தீர்த்தமாய் கண்ணீர்

                                                                                                   தமிழ்மண நட்சத்திர இடுகை-5

தீர்த்தமாய் கண்ணீர்

சுத்தம்
குடிகொண்ட மனது
புத்தம்
குடியிருந்ததே அன்று..

தீர்த்தமாய் என்னில்
ஊறிய கண்ணீர்
எதார்த்தமாய்
வழிகிறதே இன்று..

தத்தம் காதலில்
கரை புரண்டேன் 
அதன் மோதலில்
சிறை சுருண்டேன்..

முத்தம்
எதிர்பாராத
கன்னங்கள் - அதன்
சத்தம் குடியேறாத
காதுகளில்
அவளது
பொய் வார்த்தைகள்..

நித்தம் நூறுமுறை
என்னில் காதல்
சித்தம் ஊறும் வரை
நெஞ்சில் காதல்
யுத்தம் நேரும்வரை
தலையில் காதல்
பித்தம் ஏறும்வரை
உடலில் முழுதாய்
ரத்தம் நாறும்வரை
என்னுடல் முற்றிலும்
உலுத்துப் போனாலும்
காதலுக்கே என்னை
அலுத்துப் போனாலும்
காதலித்து காதலித்து
காலங்கடப்பேன்..

காதலோடு காதலாய்
மண்ணோடு மண்ணாய்
அமைதியின் அராஜகத்திற்குள்
வாழ்ந்து போகாமல்
வீழ்ந்து போய்
ஆழ்ந்து போவேன்..
புத்தி பேதலித்தும்
கத்தி காதல் சொல்வேன்

 (2000 ஆம் ஆண்டு வெளியான எனது "தலையெழுத்திலோர் பிழையெழுத்து" கவிதை நூலிலிருந்து)

                                                                                                              பழைய நினைவுகளுடன்,
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

19 comments:

 1. புத்தி பேதலித்தும் கத்தி காதல் சொல்வேன்! நல்லதொரு வரிகள்!
  சிறப்பான கவிதை!
  இன்று என் தளத்தில்
  ரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_12.html  ReplyDelete
 2. அற்புதமான கவிதை.. காதல் என்பது சுகத்தை விட, சுகமான வலியைத் தரக்கூடியது என்பதை உணர்ந்துள்ளேன் ... !!! உங்கள் கவிதை அதை மறு உறுதி செய்கின்றது சகோ... !!!

  ReplyDelete
 3. ஆஹா! அமைதியின் அராஜகம் புது சிந்தனை.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் எழுதியதா நம்ப முடியவில்லை இப்போது எழுதியதுபோல் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா..மகிழ்ச்சி.

   Delete
 4. நட்சத்திர பதிவராகத் தேர்வு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

  அபாரம்...பிரமாதம்..உருகி வரைந்த கவிதை! மிக நன்று!

  ReplyDelete
 5. அன்பின் மதுமதி - காதல் தோல்வியில் துவண்டு விடாமல் - புத்தி பேதலித்தும் கத்தி காதல் செய்வது நன்று. நல்ல சிந்தனை -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 6. வணக்கம் தோழரே,
  உன்னதமான அந்த காதல் வரிகள்
  நெஞ்சில் புதையுண்டு போயிற்று ....
  வைர வரிகள்...

  ReplyDelete
 7. எந்தக் காலத்திற்கும் பொருந்தும் போலிருக்கே... நன்றி சார்...

  ReplyDelete
 8. வார்த்தைக்கு வார்த்தை போட்டி கொண்டு
  முன்னே வருகிறது ..........எதுகைகள் கைகோர்த்து ஏகாந்தத்தை தருகிறது........அருமை

  ReplyDelete
 9. காதலித்து காதலித்து காலங் கடப்பேன். அருமை. சொல்லாடலில் அன்றிலிருந்து இன்று வரை மென்மேலும் மெருகேறி எங்கள் மனங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறீர கவிஞரே...

  ReplyDelete
 10. காதல் உணர்வுகளைச் சொல்லும் மிகவும் அழகான கவிதை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 11. அருமையாகவுள்ளது. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

  ReplyDelete
 12. கண்ணீரே எனக்கு உணவானது
  கனவுகள் காணுதல் நீரானது.
  என்ற என் கவி நினைவு வந்தது....

  சூப்பர்ர்ர் அண்ணா..............

  ReplyDelete
 13. புத்தி பேதலித்தும் கத்தி காதல் சொல்வேன்!

  அழுத்தமான வரிகள் அழுத்தமாய் மனதிலும்.

  ReplyDelete
 14. அருமையாகவுள்ளது.......பகிர்ந்தமைக்கு நன்றி........

  நன்றி,
  மலர்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 15. வணக்கம்!

  துாரிகையின் துாறலெனப் தொடங்கும் பக்கம்!
  துாபமென மணக்கின்ற கவியின் உச்சம்!
  பேரிகையின் முழக்கமெனக் கொட்டும் பாக்கள்!
  பெரியாரின் பாசறையைக் காக்கும் சிந்தை!
  ஆரியாரின் முகத்திரையைக் கிழித்துப் போட்டே
  அகவிருட்டை அகட்டுகின்ற போர்வாள்! சந்தக்
  காரிகையின் கடைக்குட்டிக் கவிஞன் யானும்
  கைகூப்பி வணங்குகிறேன்! தமிழே வெல்க!

  மதுமதி பாக்கள்! மகிழ்வொளி வீசும்
  முதுமதிப் பாக்கள்! பொதுமை பொலியும்
  புதுமதிப் பாக்கள்! புவியைப் புகட்டும்
  பொதுமதிப் பாக்கள்! புகல்!

  கவிஞா் கி.பாரதிதாசன்
  தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
  http://bharathidasanfrance.blogspot.fr/
  kavignar.k.bharathidasan@gmail.com
  kambane2007@yahoo.fr


  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com