வணக்கம் தோழமைகளே..
வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பதிவை முடித்துக் கொள்ள எண்ணுகிறேன்..
பதிவர்கள் நிறைந்த இந்த சிங்கார சென்னையில் கருத்தொற்றுமை நிலவாத காரணத்தினால் பெரிய அளவில் பதிவர் சந்திப்பு நடத்தப் படமாலேயே இருந்து வந்தது. அதைப் போக்கும் வகையிலே கருத்தொற்றுமையோடு ஒரு குழு முன் வந்து சிறப்பானதொரு சந்திப்பை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது.இதை உலகமெங்கும் இருக்கும் தமிழ் வலைப்பதிவர்களில் 95 சதவீதம் பேர் மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்கள். நாம் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளமுடியவில்லையே என்று ஏங்கியவர்கள் அதிகம்.
நான்,ஜாக்கி சேகர்,சி.பி,கேபிள் சங்கர்(குகன் சுய அறிமுகத்தின் போது) |
இந்த சந்திப்பில் 180 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதில் பதிவர்கள் மட்டுமே 150 பேர்.குடும்பத்தோடு கலந்து கொண்டவர்கள் 10 பேர்.வயதானவர்கள் 13 பேர்.பெண் பதிவர்கள் கிட்டத்தட்ட 30 பேர்.இதுவரை முந்ததைய பதிவர் சந்திப்புக்களில் இத்தனை பெண் பதிவர்கள் கலந்து கொண்டார்களா எனத் தெரியாது.இந்த சந்திப்பில் கலந்துகொண்ட பெண் பதிவர்கள் பாதியில் சென்றுவிடாமல் மாலை வரை இருந்துவிட்டு சென்றது சிறப்பு.இதில் வெளியூரிலிருந்து வருகை தந்த பெண் பதிவர்கள் 10 பேர்.வந்திருந்த பதிவர்கள் அனைவருமே அடடா அதற்குள் விழா முடிந்து விட்டதே என்று ஏமாற்றம் அடைந்ததை அதிகமாக காண முடிந்தது. முகம் காட்டத்துணியா பெண் பதிவர்களும் இங்கே முகம் காட்டியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் இந்த குழு மீது இருபால் பதிவருக்கும் இருந்த நம்பிக்கை தான். இந்த குழுவிற்கு ஒரு தலைவர் இருந்திருக்கலாமே தவிர குழுமத்திற்கு தலைவரென்று ஒன்றில்லை.இப்படி ஒரு குழு உருவானதே ஆலோசனைக்கூட்டத்தில் தான்.
இந்த சந்திப்பிற்கு நான்கு நாட்களுக்கு முன்னால் பதிவுலகில் நடந்த சர்சைகளையும் மீறி பெண் பதிவர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து வந்து கலந்து கொண்டார்கள் என்றால் என்ன காரணம்? எங்கள் குழுவின் மீது அவர்கள் வைத்திருந்த மரியாதையும் நம்பிக்கையும் தான். ஏனென்றால் இந்த குழுவில் இருப்பவர்கள் பதிவுலக அரசியல் தெரிந்திருந்தும் அதில் ஈடுபட விருப்பமில்லாதவர்கள்.பிரபல பதிவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பதிவர்களால் பிரபலமில்லாத பதிவர்கள் என்று எள்ளி நகையாடப்பட்டவர்கள். ஆகவே மற்ற பதிவர்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை வந்தது. எங்களால் இந்த சந்திப்பை வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்தது என்பதை இங்கே சுட்டிக் காட்டுகிறோம். விழாக்குழுவினரின் விபரங்களைக் காண இங்கே சுட்டவும்.
தமிழ்வாசி பிரகாஷ்,நான்,சீனா ஐயா,புலவர் சா.இராமாநுசம்,சசிகலா,உண்மைத்தமிழன் |
சென்னையில் நடந்து முடிந்த பதிவர் சந்திப்பானது பதிவுலகத்தில் முக்கியமான நிகழ்வாகும்.கலந்து கொள்ள முடியாத பதிவர்களுக்காகவும் அயல் நாடுகளில் வசிக்கும் பதிவர்களுக்காகவும் இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்திருந்தோம்.அதை தானாக முன் வந்து வலையகம் திரட்டி செய்து கொடுத்தது.ஆரம்பத்தில் இது குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தபோது இவர்களால் சென்னையில் பதிவர் சந்திப்பு நடத்த முடியுமா? இவர்கள் பிரபலப்பதிவர்கள் இல்லையே என்று எள்ளி நகையாடியவர்களும் வியக்கும் வண்ணம் மாபெரும் நிகழ்வாக இது நடந்தேறிவிட்டது. எங்கள் குழுவின் மீது இருந்த நம்பிக்கையின் பேரில் சந்தை.காம் தானாகவே முன் வந்து பண உதவி செய்தது. பற்றாக்குறையைப் போக்க கொடுக்க விருப்பப்படும் தோழர்களிடம் மட்டுமே வசூலிக்கப்பட்டது. யாரையும் கட்டயாப்படுத்தவில்லை. நாங்கள் நாணயமானவர்கள் என்பதை நிரூபிக்க கணக்கு வழக்குகளை உலகத்திற்கே தெரிவித்திருக்கிறோம்.
பிரபல பதிவர்களால் நடத்த முடியாமற்போன இந்த பதிவர் சந்திப்பை பிரபலமில்லாத பதிவர்களைக் கொண்ட குழு முன்னெடுத்து அதிலும் வெற்றி கண்டிருக்கிறதென்றால் உண்மையில் ஆச்சர்யம் தான்.சரி பிரபல பதிவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இதை முன்னெடுத்து செய்திருந்தால் பிரபலமில்லாத பதிவர்கள் இதை செய்ய வேண்டி அவசியம் இருந்திருக்காது. ஏன் செய்யவில்லை.. மற்றவர்கள் செய்தால் அதை விமர்சிப்பதா.. விமர்சிகட்டும். மற்ற பதிவர்களுக்கு அந்த விமர்சனத்தின் உள்ளர்த்தம் தெரியும். அது வெளிப்பட்டதன் காரணமும் புரியும். இந்த பதிவர் சந்திப்பு நிகழ்வானது யாருக்கும் தெரியாமல் ஓரிரவில் ஏற்பாடு செய்யப்பட்டதல்ல. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக கூடி பேசி திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட நிகழ்வே.. இப்போது கருத்து சொல்லும் பதிவர்கள் அப்போது எங்கே போனார்கள்.
சர்புதீன்,குகன்,பலா பட்டறை சங்கர்,மணிஜி,ரோஸ்விக் |
வாராவாரம் ஞாயிறுகளில் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கூடிப் பேசியே அனைத்தையும் முடிவெடுத்திருக்கிறோம்.என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதையும் அடுத்த நாள் பதிவுகளில் வெளியிட்டிருக்கிறோம். ஆதலால் இப்படி ஒரு விழா நடப்பதே எனக்குத் தெரியாதே நான் பத்து பதினைஞ்சு வருமா பதிவுலகத்தில இருக்கிறேனே என்பதெல்லாம் தன்னையே ஏமாற்றிக் கொள்வதற்கான முயற்சியே.
சென்னையில் உள்ள பதிவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வாருங்கள் என்று பதிவுகளில் அழைத்திருந்தோம். அழைப்பின் பேரில் வருகை தந்தவர்கள்தான் ஒரு குழுவாக சேர்ந்து திட்டமிட்டு நடத்தினோம். யாருக்கும் தனிப்பட்ட அழைப்பில்லை.எப்படி ஒரு பதிவரை தனிப்பட்ட முறையில் அழைப்பது? ஆயிரக்கணக்கான பதிவர்கள் இருக்கிறார்கள்.
அப்படியானால் நீங்கள் கேட்கலாம். சென்னையில் உள்ள பிரபல பதிவர்களை அழைக்கலாமே என்று.யார் பிரபல பதிவர் யார் பிரபலமில்லாத பதிவர் என்று எப்படி வகைப்படுத்துவது? என்னென்ன தகுதிகள் வேண்டும் பிரபல பதிவர் ஆவதற்கு? ஏதேனும் பட்டியல் இருந்தால் அதை வைத்து இவர் பிரபல பதிவர் என்று வகைப்படுத்தலாம். சரி ஏதோ ஒரு கணக்கில் தானும் பிரபல பதிவர் என்று வகைப்படுத்திக்கொள்கிறார்கள் போலும்.அந்த பிரபல பதிவர்களின் பட்டியல் எமக்குத் தெரியாது.
பிரபல பதிவர்களை புறக்கணித்து விட்டு இந்த விழாவை நடத்தியிருக்கிறார்கள் என்று இந்த சந்திப்பிற்கு எந்த வகையிலும் பாத்தியப்படாத ஒருவர் சொல்லுகிறார். பிரபல பதிவர்களின் பட்டியலே தெரியாத போது எப்படி புறக்கணிக்க முடியும்.சரி பிரபல பதிவர்களை புறக்கணித்தோம் என்று வைத்துக் கொண்டால் கூட இந்த வாரம் ஆலோசனைக் கூட்டம் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடைபெற இருக்கிறதென்று நான் போட்ட பதிவை பார்த்து மட்டுமே கலந்து கொண்டார்கள் தோழர் உண்மைத்தமிழனும் தோழர் கேபிள் சங்கரும் அவர்கள் பிரபல பதிவர்கள் இல்லையா? அமெரிக்க செல்கிறேன்..என்னால் கலந்து கொள்ள முடியாது எங்களால் நடத்த முடியாததை நீங்கள் நடத்துகிறீர்கள் மகிழ்ச்சி.விழா சிறப்பாய் நடைபெற வேண்டும் என வாழ்த்து சொல்லி 5000 ரூபாய் நன்கொடை கொடுத்துவிட்டு போனாரே புதுவை அப்துல்லா.அவர் பிரபல பதிவர் இல்லையா? இந்த மாபெரும் சந்திப்பில் கலந்து கொண்டு சக பதிவர்களோடு மேடையேறி சுய அறிமுகம் செய்து கொண்டு இளைய பதிவர்களிடம் உற்சாகமா பேசி மகிழ்ந்தார்களே ஜாக்கி சேகர் ,மணிஜி, பலா பட்டறை சங்கர் ,அகநாழிகை வாசுதேவன்,சிறப்பாய் நிகழ்வை தொகுத்து வழங்கிய சுரேகா போன்றோர் பிரபல பதிவர்கள் இல்லையா? பதிவர் சந்திப்பை பாராட்டி தான் கலந்து கொள்ள முடியாததையும் குறித்து பதிவிட்டிருந்தாரே கே.ஆர்.பி. செந்தில் அவர் பிரபல பதிவர் இல்லையா?ஆக, விழாவிற்கு வந்த எந்த பதிவரையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை
பதிவுலகத் தோழமைகளே.. எல்லோரும் பதிவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே ஒன்று சேருவோம் ..ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் ,பிரபல பதிவர், பிரபலமில்லாத பதிவர் என்ற வேறுபாடு வேண்டாம். மாற்றுக்கருத்து வேண்டும்.எதற்கு வேண்டுமோ அதற்கு.இப்படியான கருத்துகளால் தான் இத்தனை பதிவர்கள் இருந்தும் சென்னையில் ஒரு விழா நடக்காமல் போய்விட்டது.
கவிக்கோ அப்துல் ரகுமான் 'கடவுள் இல்லையென்று சொல்பவனே அதிகம் கடவுளைப் பற்றி பேசுகிறான்' என்று சொன்னதைப்போல விழாவிற்கு வந்து மகிழ்ந்து சென்றவர்களை விட இதில் எந்த விதத்திலும் பங்கு கொள்ளாதவர்கள் விழா குறித்த விவாதத்தில் ஈடுபட்டிருப்பது நகைச்சுவைக்குரியது.
இந்த விழாவில் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களையும் இன்முகத்தோடே வரவேற்றோம்.விழா முடிந்து சென்றவர்களின் முகத்தில் மகிழ்ச்சியே நிறைந்திருந்தது.
இந்த விழாவில் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களையும் இன்முகத்தோடே வரவேற்றோம்.விழா முடிந்து சென்றவர்களின் முகத்தில் மகிழ்ச்சியே நிறைந்திருந்தது.
பதிவர் சந்திப்பினால் நன்மை என்ன? அங்கே நடந்தது என்ன? இதனால் லாபம் என்ன ? போன்றவற்வை கலந்து கொள்ள முடியாதவர்களும் கலந்துகொள்ள விருப்பம் இல்லாதவர்களும் தெரிந்து கொள்ள நேரலை செய்தோம்.அதைக் காணவில்லையா?என்றாலும் இதில் கலந்து கொண்டவர்கள் அவரவர் பதிவுகளில் புகைப்படங்களை போட்டே எழுதி வருகி இருக்கிறார்கள். அதையும் வாசிக்கவில்லையா?ஆம் எனில் சற்று பொறுங்கள்.இரண்டொரு நாளில் காணொளி வெளியிடுகிறோம்.தேவைப்பட்டால் நடந்தவற்றை தொகுத்து நாளை ஒரு பதிவிடலாம் என்ற எண்ணம் இருக்கிறது.
பின் குறிப்பு:
சினிமாத்துறையிலேயும் பத்திரிக்கை துறையிலேயும் பிரபலங்களோட மல்லுக்கட்டவேண்டியதா இருக்குன்னு இங்க வந்தா இங்கேயுமா? ..யப்பா.. இப்பவே கண்ணை கட்டுதே..
பின் குறிப்பு:
சினிமாத்துறையிலேயும் பத்திரிக்கை துறையிலேயும் பிரபலங்களோட மல்லுக்கட்டவேண்டியதா இருக்குன்னு இங்க வந்தா இங்கேயுமா? ..யப்பா.. இப்பவே கண்ணை கட்டுதே..
தள்ளி இருந்து கருத்துச் சொல்பவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம. நம்மைப் பொறுத்தவரை எடுத்த செயலை நிறைவாய்ச் செய்தோம் என்கிற திருப்தியும் மனநிறைவும் இருக்கிறது. நிறையத் தோழமைகள் வந்து நம்முடன் கை கோர்த்ததில் ஆனந்தம் கிடைத்திருக்கிறது. அது போதும் கவிஞரே!
ReplyDeleteநிச்சயம்.. எடுத்த செயலை நிறைவாய் செய்தோம்..
Deleteஅருமையாகச் சொல்லி விட்டீர்கள் சகோ!
ReplyDeleteநன்றி தோழரே..
Deleteபார்த்தேன்...அழகான நிகழ்ச்சியை அற்புதமாக அரங்கேற்றி விட்டீர்கள் நண்பரே... சொல்பவர்கள் ஆயிரம் சொல்லட்டுமே...சூரியனாய் நீங்கள் இருந்தால் அப்படித்தான் பேசுவார்கள்... நிலவாய் நீங்கள் இருந்தால் அப்படித்தான் பேசுவார்கள்... நல்லதை நீங்கள் செய்தால் அப்படித்தான் பேசுவார்கள்... எல்லோரும் பயனுற விருப்பு வெறுப்பு இல்லாமல் சிறிதும் சுயநலமில்லாமல் பொதுநலத்தோடு நீங்கள் செயல்பட்டால் அப்படித்தான் பேசுவார்கள்...
ReplyDeleteநீங்கள் அவர்களை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.... மயில் குறைவாக இருந்தாலும் அதுதான் நமது தேசியப்பறவை...
அப்படித்தான் நீங்கள் எதைப்பற்றியும் நினைக்காமல் உங்களது மனசாட்சி சொல்வதையும் நல்நண்பர்கள் சொல்வதையும் கேட்டு நடந்துள்ளீர்கள்... அதனால் நிம்மதியாக இருங்கள்.நல்லவர்கள் உங்களுக்கு நண்பர்களாக இருக்கும் வரை நீங்கள் செய்யும் அத்தனையும் மகத்தான இமாலய வெற்றியாகவே அமையும்... அதற்கு என் பாராட்டுக்கள் நண்பரே....
கருத்துக்கு நன்றி தோழரே..
Deleteபோற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும். விழா சிறப்பாக நடந்தேறியதற்கு மகிழ்ச்சி அடைவோம்.
ReplyDeleteஆமாம் ஐயா..
Deleteபதிவுலகில் அனைவரையுமே நட்பாக எண்ணுவதால் பொதுவில் எதிர்க்கருத்துகளை எங்கும் வைப்பது கிடையாது...! இருந்தாலும் இங்கு சில கருத்துகளை பதிக்க விரும்புகின்றேன்...! கிட்ட தட்ட 200 பேர்களை திரட்டி ஒரு நிகழ்ச்சி நடத்துவது அதுவும் பதிவுலகில் என்பது மகத்தான சாதனை..!இதன் பின்னனியில் உழைத்த நட்புகளை நினைத்தால் மலைப்பாக உள்ளது...! சாதரணமாக பதிவுலகில் எதிர்க்கருத்துகள் சகஜம்..! எதிர்க்கருத்து இல்லாவிட்டால்தான் ஆச்சர்யம்..! எதிர்க்கருத்து சொல்பவர்களும் ஒருகட்டத்தில் இணைந்து செயல்படுவார்கள் இதுவும் இங்கே இயல்பு..! எனவே இதனை ஊதி பெரிதாக்க வேண்டாம்..!
ReplyDeleteஆமாம் தோழரே..தங்கள் கருத்துக்கு நன்றி..
Deleteகுறைகளை எடுத்துச் சொல்லி நல்லதை வரவேற்பது என்பது
ReplyDeleteபெருந்தன்மை .குறைகளை மட்டுமே சிந்தித்து விமர்சிப்பது
என்பது ஆற்றாமை !!!......ஆற்றாமை ஆற்றோடு போகட்டும் சகோ .
உங்கள் முயற்சிமட்டும் தளராமல் மேலும் தொடர வாழ்த்துக்கள் .
சரியாகச் சொன்னீர்கள் சகோ..நன்றி..
Deleteமனதளவில் நிறைய காயப்பட்டிருக்கிறீர்கள் என புரிகிறது. நீங்களே எழுதிய மாதிரி 95% பேர் நம்மை புரிந்து கொண்டுள்ளனர். நூறு சதம் பேர் புரிந்து கொள்வது நடைமுறையில் சாத்தியம் இல்லை. "ஒரு விஷயத்தை செய்யும் போது எதிர்ப்பு வந்தால் தான் நாம் சரியான திசையில் பயணிக்கிறோம் என்று அர்த்தம்" என்பார் தந்தை பெரியார்.
ReplyDeleteஎந்த விஷயத்திலும் 100% பேரை திருப்தி படுத்த முடியாது. மிக அதிக பேரை திருப்தி படுத்துவதே மிக கடினமான விஷயம். அது நமக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. தொடர்ந்து செயல்படுவோம். தள்ளி நின்று பார்போரும், விமர்சிப்போரும் கூட நமது நல்ல எண்ணத்தை என்றேனும் ஒரு நாள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது
மிகச்சரியான கருத்து மோகன் ஜீ!
Deleteபெரியார் சொன்னதை முன்னிறுத்தி அழகாய் சொன்னீர்கள்..
Deleteவாழ்த்துக்கள் மதுமதி
ReplyDeleteநன்றி தோழர்..
Deleteவிடுங்க மதுமதி..!ஒரு நிகழ்வு அனைவரையும் மகிழ்விக்கும் என்று சொல்லமுடியாது...!எனக்கு வரமுடியவில்லையே என்கின்ற ஏக்கம் நிரம்பியிருந்தது. இவர்கள் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவேண்டும் என்று விரும்புகின்றார்கள் போலும்.
ReplyDeleteஅப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது.ஒவ்வொருத்தராய் தொடர்பு கொண்டு அழைத்திருந்தால் 1000 பேர் கூட வருவார்கள்.அப்படி அழைப்பதற்கு இது என்ன காது குத்தா? கல்யாணமா? நீங்கள் வருவீர்கள் என எதிர்பார்த்தேன்..கருத்துக்கு நன்றி..
Deleteநல்லதொரு விளக்கம்! அருமையாக சொன்னீர்கள்! சிறப்பாக நடத்தியமைக்கு வாழ்த்துக்கள்! நானும் கலந்து கொள்ள முடியவில்லை என்று வருந்தியவர்களில் ஒருவன்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
ருத்திராட்சம் சில தகவல்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_31.html
நன்றி தோழர்..
Deleteமிகச் சிறப்பாக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விமரிசையாக நடந்த விழா இது. எப்படி நம்மை அறிமுகம் செய்து கொள்வது என்ற யோசனையில் வந்த என்னை, நீங்கள் கொடுத்த அடையாள அட்டை நிம்மதிப் படுத்தியது. நீங்களாகவே வந்து நான்தான் மதுமதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டபோது பெரிய ஆசுவாசம். வயதானவர்களை எப்படி கவனிப்பர்களோ என்ற கவலை மறைந்தே போனது சிறிது நேரத்திலேயே!
ReplyDeleteசிலர் அப்படித்தான்.. எதற்கும் குறை சொல்லுவார்கள்! கவலைப்படாதீர்கள் சகோதரரே!
அடுத்த கட்டத்தைப் பற்றி சிந்திப்போம்!
மிக்க நன்றியம்மா..பெங்களூரிலிருந்து தனக்கு பாராட்டு நடக்கப்போகிறது என்று தெரியாமலே வந்தவர் நீங்கள்.பதிவர் சந்திப்பு ஒன்று இல்லையென்றால் உங்களைப் போன்றவர்களை எப்படி சந்திக்க இயலும்? இனி வருடா வருடம் சந்திப்பு மிகப் பிரமாண்டமாய் நடக்கும். அவசியம் கலந்து கொள்ளுங்கள்..
Deleteபிரபல பதிவர் பிரபலம் இல்லாத பதிவர் எல்லாம் கிடையாது. எல்லாரும் ஒண்ணுதான்.
ReplyDeleteஇல்லைங்க...இருக்குன்னு சொல்றாங்களே..
Deleteஇந்த விழாவின் வெற்றி உங்கள் அனைவரது அயராத உழைப்புக்கும், துல்லியமான ஒருங்கிணைப்புக்கும் கிடைத்த பலன். பதிவுலகில் மாற்றுக் கருத்துகள் எழுவது இயல்பானது தான். உங்களது இந்தப் பதிவு தெளிவுகளைத் தந்திருப்பதோடு, இனி வரும் காலங்களில் இந்தச் சந்திப்பில் விடுபட்டவர்களுடன் இணைந்து கொண்டாடுகிற நம்பிக்கைக்கும் வித்திட்டிருக்கிறது நண்பரே!
ReplyDeleteஇணைய விரும்பினால் இணைந்து செயல்படலாம்.
Delete//பதிவுலகத் தோழமைகளே.. எல்லோரும் பதிவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே ஒன்று சேருவோம் ..ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் ,பிரபல பதிவர், பிரபலமில்லாத பதிவர் என்ற வேறுபாடு வேண்டாம்.//
ReplyDeleteஇது தான் வேண்டும்.
இந்த விழாவில் கலந்துக்கொள்ள முடியாமல் போனது எனக்கும் வருத்தமே.
இனி, பதிவர்களிடம் கருத்து கணிப்பு கேட்டு ஒரு தேதியை நிர்ணயித்து ஒவ்வொரு ஆண்டும் ”பதிவர்கள் நாள்” என கொண்டாடினாலும் தகும்.
விழாவை வெற்றிகரமாக நிகழ்த்திய விழாக்குழுவினருக்கு பாராட்டுகளும், விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்களும்.
நீங்கள் கலந்து கொள்ளாதது எனக்கும் ஏமாற்றமே.. கண்டிப்பாக பதிவர் நாள் கொண்டாட ஏற்பாடு செய்யலாம்.
Deleteஎந்தக் குறையும் இல்லாமல் பதிவர் சந்திப்பு நடந்தது
ReplyDeleteஎன்கிற குறை இருக்கக்கூடாது என்பதற்காக
இப்படிப் பேசுகிறார்கள் என எடுத்துக் கொள்வோம்
உண்மையில் இத்தனை சிறப்பாக நடத்தப்படும்
என நான் எதிர்பார்க்கவில்லை வந்து கலந்து கொண்ட
எல்லோருக்கும் நம்முடைய இல்லத் திருவிழா என்கிற
உணர்வு ஏற்படும்படியாகத்தான் முன்னணியில் இருந்து
செயல்பட்ட சென்னைப்பதிவர்கள் அனைவர்களும்
நடந்து கொண்டார்கள்.பெண் பதிவர்கள் யாரும்
லேசாகக் கூட அன் ஈசியாக உணரவில்லை என்பது
பதிவர்கள் அனைவரும் கண்ணியம் காத்ததில் புரிந்தது
உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது
மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில்
பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்
உண்மையான உழைப்பிற்கு கிடைத்த வெகுமதி.. வாழ்த்துக்கள்.. அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
ReplyDeleteஅப்படியா மகிழ்ச்சி கோவி.
Deleteஎப்படி திட்டமிட்டோமோ அப்படியே விழா வெகு சிறப்பாய் நடந்தேறியது ...
ReplyDeleteசிலரது கருத்துக்கள் எதிர்ப்பை தந்தாலும் பொருட்டாக எண்ணாமல் நம் அடுத்த கட்டத்தை
நோக்கி நகரவேண்டியது தேவையான ஒன்று ..
இதற்கு இதில் விளக்கம் தேவை படாது என்பது என் கருத்து , சிறப்பான பதிவு ...
நன்றிங்க சார் ...
//இதில் விளக்கம் தேவை படாது என்பது என் கருத்து//
Deleteஅப்படித்தான் நானும் நினைக்கிறேன் நண்பா..
வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி...
ReplyDeleteபிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி...
மனிதன் என்ற போர்வையில், மிருகம் வாழும் நாட்டிலே...
நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் பதிவிலே... - எழுதி வைப்பார் பதிவிலே...
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும், அது ஆணவச் சிரிப்பு...
இங்கே நீங்கள் சிரிக்கும் புன்சிரிப்போ, ஆனந்தச் சிரிப்பு...
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வந்த பிறகு...
அங்கே சிரிப்பவர் யார்...? அழுபவர் யார்...? தெரிகிறது இப்போது....
(திரைப்படம் : ரிக்க்ஷாக்காரன்)
வரிகள் சிறிது மாற்றத்துடன்...
நன்றி சார்...
தேவையான நேரத்தில் தேவையான வரிகள்.நன்றி
Deleteரைட்டு.
ReplyDeleteரைட்டு இல்லையாங்க தப்பாம்.
Deleteதமிழ் அமுதன், மோகன் குமார் இருவரின் கருத்தை வழிமொழிகிறேன்.
ReplyDeleteஇதுவும் கடந்து போகும் .....
கடந்து போகும் என எதிர்பார்ப்போம் தோழர்.
Deleteமதுமதி,
ReplyDeleteநாம் எடுத்த எல்லா முடிவுகளும் கூட்டாக எடுத்தவை. ஆலோசனைக் கூட்டத்தி ல் சொன்ன அனைவரின் கருத்துக்களும் ஆலோசனைகளும் விவாதிக்கப்பட்டு அதை செயல்படுத்தினோம். ஆலோசனை சொல்ல அனைவருக்கும் பொதுவான அழைப்பை பதிவிட்டு வெளிப்படுத்தினோம்.
இப்போது மாற்றுக்கருத்தும் ஆலோசனைகளையும், சொல்லும் நண்பர்கள்,அங்கு வந்து கருத்துக்களை சொல்லி நடைமுறைபடுத்த முயற்சித்திருக்கலாம். இந்த முயற்சியே எங்களுக்கு தெரியாது என்று சொபவர்களுக்கு சொல்ல் ஒன்றும் இல்லை.
அதே சமயத்தில் மாற்றுக்கருத்து சொல்பவர்களை பொருட்படுத்தாமல் அவர்களின் கருத்தில் , ஆலோசனையில் ஏற்றுக்கொள்ளா ஏதும் இருந்தால் அடுத்து இதுபோல் எடுக்கும் முயற்சியின் போது சேர்ர்த்துக்கொள்ளலாம்.
5000த்துக்கு போட்ட செலவு பட்ஜெட் , இடம் தேடி அலைந்த போது , சில ஹோட்டல்களில் ஹால் இலவசம் என்று சொன்னாலும் உணவுக்கான(100 பேருக்கு) தொகை மட்டும் இப்போது செய்த செலவைவிட(இப்போது 165 பேர் உணவு சாப்பிட்டும் செலவு அதைவிட கம்மிதான்) அதிகம் கேட்டார்கள், பல கல்யாண மண்டபங்களில் காலை மாலை இரண்டு நிகழ்ச்சிகளுக்குதான் ரேட் என்று முழு நாளுக்கு அதிகம் சொன்னார்கள், இருப்பதிலேயே குறைத்து சொன்ன மண்டபத்தைதான் நாம் வாடகைக்கு எடுத்தோம்.
லேப்டாப் விசயத்தில் சில நண்பர்கள் தங்களதை குடுக்க முன்வந்தாலும், 4GB RAM வேண்டும் என்றதில் அதை உபயோகிக்க முடியாமல் வாடகைக்கு எடுக்க வேண்டியதாகிவிட்டது. நேரடி ஒலி/ஒளி பரப்புக்கு தேவையாட டேட்டாகார்டுகூட பதிவர் பிரதாப்(இவரது சிம்மில் அவரே 1500 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து குடுத்தார்) தானாக முன்வந்து உதவினார், பதிவர் சீனுவும் தனது டேட்டா கார்டை இலவசமாக குடுத்து உதவினார்.
பணம் குடுத்து உதவியவர்களில் யாரையும் குழுவின் சார்பாக குடுங்கள் என்று கேட்கவில்லை, அவர்களாகத்தான் குடுத்தார்கள், சில நண்பர்கள் எனக்கு நெருக்கமானவர்களிடம், நான் தனியாகக் கேட்டிருக்கிறேன் என்று சொன்ன போதுகூட, அவர்களுக்கு தர விருப்பம் இருக்கிரதா என்பதை குறைந்தபட்சம் குறிப்பால் அறிந்துகொண்டு கேளுங்கள் இல்லையென்றால், குடுக்க இயலாத நிலையில் அவர் இருந்தால், அவர் அதன்பொருட்டே சந்திப்புக்கு வராமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நாம் அந்த நபரிடம் சொன்னோம்.
மேலும் பணம் குடுத்த அனைத்து நண்பர்களுக்கும் ஆரம்பம் முதல் இதுதான் பட்ஜெட், இதற்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கிறது என்று தெளிவாகச் சோல்லியிருந்தோம். அனைத்து நண்பர்களும் இன்முகத்தோடையே பணம் குடுத்தார்கள்.
இன்று மாறுக் கருத்து சொல்லும் அல்லது கேள்விகள் கேட்கும் நண்பர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்டு அல்லது ஏதாவது வகையில் தொடர்புகொண்டு சொல்லியிருந்தால் அதை நிச்சயம் நம் அனைவரும் பரிசீலித்திருப்போம். ஆனால் தற்போது சிலர் உள்நோக்கத்தோடு கேட்கிறார்கள் சிலர் வேறுவகையான வெறுப்புகளில் வெளிப்படுத்துகிறார்கள். பத்தி வாட்டி கேள்வி கேட்டால் ஒருதடவையாவது ஏதும் கோப வார்த்தை பயன்படுத்த மாட்டார்களா அதைவைத்து நாம் ஞாயம் பேச வாய்ப்புகிடைக்காதா என்று கூட முயல்கிறார்கள்.
இதுமாதிரியான விசயங்கள் பதிஉலகத்திற்கு புதிதல்ல என்பதால் அதை புரந்தள்ளி பல நண்பர்கள் அளித்த ஊக்கத்துடனும் ,, அவர்கள் சொன்ன ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டும் அடுத்த கட்டத்தை நோக்கி அடுத்த ஆலோசனைக் கூட்டத்த நகர்த்திச் செல்லுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். என்னால் ஆன உதவி இதற்கான முயற்சிகளுக்கு எப்போதும் உண்டு...
என்னங்க தோழரே.,ஒரு தனி பதிவா போட தயாரா வெச்சு இருந்த மேட்டர அள்ளி கமெண்டா போட்டுட்டீங்களே.சபாஷ்! சரியான விளக்கம்.
Deleteஇங்கு தூற்றுவோர் சிலரே.போற்றுவோர் பலர்.எனவே பின்வாங்க வேண்டாம்.இணைந்து செயல்படுவோம்.
அந்த 5% பதிவர்களின் பொருமலுக்காக, 95% பதிவர்களின் மகிழ்ச்சியை கோட்டை விட்டுடாதீங்க சகோ. வந்தவர்கள் யாரேனும் குறை சொல்லியிருந்தால், அடடா, நாம இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்களாமோன்னு நினைச்சு வருந்தலாம். நிகழ்ச்சிக்கு வரவே வராதவங்களுக்கு அங்கு நடந்தவை எப்படி தெரியும். அதனால், வருத்தத்தை புறந்தள்ளி மகிழ்ச்சியை மனதில் வாங்கி சுறுசுறுப்புடன் அடுத்த சந்திப்புக்கு தயாராகுங்க சகோ.
ReplyDelete"பிறந்த வீட்டிற்கு வந்து சென்றதைப் போன்று இருந்தது இந்த பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்தது" என நீங்கள் சொன்னதைக் கேட்டு உண்மையில் நெகிழ்ந்து போனேன் ராஜி.
Deleteஎங்க அக்கா சொன்னதை நான் அப்படியே வழி மொழிகிறேன்
Deleteமதுமதி.
ReplyDeleteவணக்கம்,
உங்களுக்கும் குழுவினருக்கும் பாராட்டுக்கள்,மற்றும் வாழ்த்துக்கள்.
# பதிவர் குழுமம் தேவை என நினைப்பவன்.
#பதிவர் குழுமத்தினை நடத்த முன் நிற்பவர்கள் திறந்த மனதுடன், பொறுப்பானவர்கள் இருக்க வேண்டும் எனவும் நினைப்பதால் சில விடயங்களைப்பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
உங்கள் மீதோ குழுமத்தின் அவநம்பிக்கை எதுவும் எனக்கு கிடையாது, ஆனால் கொஞ்சம் கருத்து வேறுபாடு உண்டு.
நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் நான்கு பேர் மட்டும் முடிவு செய்து விழா அழைப்பிதழ் போட்ட அன்றே வந்து கருத்துக்குறியிருக்க மாட்டேன்.
ஆனால் அப்போ கொஞ்சம் கன்சர்வேட்டிவாக நீங்கள் சிந்தித்ததாக எனக்குப்பட்டதால் பின்னர் கருத்து எதுவும் சொல்லாமல் ஒதுங்கிவிட்டேன்.
நான்கு பேர் மட்டும் முடிவு செய்து இடம் ,விழா நிகழ்வுகளை முடிவு செய்த போது ,மாற்றவர்களிடமும் கலந்து ஆலோசித்து முடிவு செய்திருக்கலாம் என சொன்னபோது பதிலே சொல்லாமல் அடுத்தப்பதிவில் சிலர் சந்தேகப்படுகிறார்கள் எனப்பதிவு போட்டீர்கள்.
அதன் பின்னர் சிறிது நாள் கழித்தே ஆலோசனைக்கூட்டம் என அறிவித்தீர்கள், அப்போதும் நான் இதை தான் ஆரம்பத்தில் சொன்னேன் என்றப்போது எல்லாத்துக்கும் ஆலோசனை செய்தால் முடியாது என்றீர்கள் ,பின்னர் இடம் ,தேதி,நிகழ்வு எனப்பலவும் மாற்றத்திற்குள்ளாது , ஏன் , ஆலோசனை செய்த பின் தானே ரம்ஜான் என்பதே தெரிய வந்தது, ஆனால் ஆலோசனைக்கூட்டம் நடத்தலாம் என்றதற்கு தயங்கியதும் நீங்களே, இதனால் உங்களிடம் எத்அனை சொல்லவும் ஒரு தயக்கம் என்ன எல்லாவற்றுக்கும் சொல்வது யாரு பார்ப்பாரோ என தோற்றம் உண்டாகிவிட்டது.
குழுமம், சந்திப்பு வேண்டும் என நினைத்து சொல்லும் எனக்கு ஒரு தோற்றம் உண்டானது போல பலருக்கும் ஒரு தோற்றம் உண்டாகி இருக்கலாம் அது இயல்பே.
நீங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் அழைக்க தேவையில்லை, அது சாத்தியமும் இல்லை, ஆனால் தனிப்பட்ட முறையில் அழைத்து செயல்ப்பட்டதும் உண்மை ,அது தனி விருப்பம் ஆக இருக்கலாம் அல்லது குழுவின் பொது விருப்பம் ஆக இருக்கலாம், ஆனால் எல்லாம் பதிவினைப்பார்த்து தானாக வந்து உறுதி செய்தார்கள் என்பது "டிப்ளமோட்டிக் ஸ்டேட்மெண்ட்" ஆக இருக்கலாம்.
என்னுடைய கருத்து எனில் லாபநோக்கற்ற வலைப்பதிவர் குழுமம் போன்றவை "காச் எஃபெக்டிவ்" ஆக செயல்ப்பட வேண்டும். நிறைய முக்கியமானப்பதிவர்கள் என நீங்களே பட்டியலிட்டீர்கள் ,அப்படி இருக்கும் போது செலவினைக்குறைக்க தனிப்பட்ட முயற்சி செய்து இடம் போன்றவற்றிற்கு ஆகும் செலவினை குறைத்து இருக்கலாம்.
நீங்கலே ஒரு ஆசிரியர் என அறிகிறேன் , ஜாயிறு விடுமுறை என்பதால் ஏதேனும் பள்ளியில் இடம் பெற்று இலவசமாக நடத்தி அந்த 27,199 ரூபாயை சேமித்து ,குழுமத்தின் வளர்ச்சிக்கு செலவிட்டு இருக்கலாம்.
கணினியில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கடைசி வரையில் ஒரு பொது வலைப்பதிவை உருவாக்காமல் ஆள் ஆளுக்கு தனித்தனியே பதிவுப்போட்டுக்கொண்டு இருந்தார்கள்.
பின்னர் வேண்டுமானால் தனி டொமைன் வாங்கியிருக்கலாம்,சந்திப்பு நடக்கும் காலத்திற்கு பிளாக்கரில் உருவாக்க என்ன தடை?
இதனை பலரும் வெளிப்படையாக சொல்லாமல் எங்களால் சரியான விவரம் அறிய முடியவில்லை என கோடிட்டு காட்டியது.
தனிப்பதிவு உருவாக்க என்ன செலவாகிடும் என உருவாக்காமல் ஆள் ஆளுக்கு தனியே பதிவாக்கி வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள், முழுக்க விவரம் அறிய 10 பதிவு தேட வேண்டியதாக இருக்கு.
இதனை எல்லாம் முன்னரே சொன்னால் என்ன என்றால் இதெல்லாம் சொல்லித்தெரிய வேண்டியதா?
மேலும் முதலில் நான்கு பேர் வடசென்னையில் முடிவு செய்த போதே ஒரு கருத்து சொன்னதற்கு எனக்கு எதிர்மறை ரியாக்ஷன் போல கிடைத்தது என்பதனை மீண்டும் சொல்லிவிடுகிறேன்.
பலருக்கும் பல தயக்கங்கள் இருக்கும் சூழலில் ஆளுக்கு ஒன்று சொல்லத்தான் செய்வார்கள், பொதுவில் முன்னால் நிற்கும் போது பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம் ஆகிவிடுகிறது, உங்களுக்கு ,கணேஷ் ஆர், புலவரய்யா ஆகியோருக்கு பொறுமை உண்டு என்பது நிகழ்வினை நடத்தி முடித்ததே சான்று.
எனவே குழுமம் உருவாக்குவது உங்கள் கையில் இருக்கு என்பதால் விமர்சனத்திற்கு டென்ஷன் ஆக தேவையில்லை.
ஒரு அமைப்பு தேவை ,ஆனால் செலவீனங்களை குறைத்து செயல்ப்பட வேண்டும் அவ்வளவே, தொடர்ந்து செயல்ப்பட வாழ்த்துக்கள்.
தோழர் வவ்வால்,மகிழ்ச்சி.. உங்கள் கருத்தைக் கண்டேன்..உங்கள் கருத்தை என்றும் நான் புறக்கணித்ததில்லை..ஏனென்றால் சிலரைப் போல படிக்காமல் கருத்து சொல்லும் ஆள் நீர் இல்லை என்பதை அறிவேன்.விழா நடத்தலாமா வேண்டாமா என்பதற்கு சென்னையில் ஆலோசனை கூட்டம் ஒருவேளை வைத்திருந்தால் இந்த விழா நடந்திருக்காது என்பதில் ஐயமில்லை.அது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.இதோ.. முந்தைய நாட்களில் லட்சக்கணக்கில் பட்ஜெட் போட்டு பதிவர் சந்திப்பு நடத்தலாம் என்று முடிவான நிகழ்வு என்னவாயிற்று? சில பேரால் அது சிதைந்து போயிற்று.நானும் பதிவுலகில்தான் இருந்தேன்.எல்லோருக்குமே தேரில் அமரத்தான் ஆசை.தேரை இழுத்து தெருவில் விட யாரும் வர மறுக்கிறார்கள்.அதனால் முதற்கட்டமாக தேரை இழுத்து தெருவில் விட்டோம்.இந்த தேர் ஓடாது என்றே நினைத்தார்கள்.தேர் ஓடியது.அதற்கு பின் தேர் சக்கரம் கோணலாக இருக்கிறது முன்னமே சொல்லியிருந்தால் அதை நேராக நிமிர்த்தியிருப்போம் என்பது எந்த வகையில் நியாயம். நீங்கள் விழா நடத்துகிறேன் என்று முன் வந்து நான்கு பேரை முன்னிருத்திப் பாருங்கள்.அதன் பின் எல்லாம் வருவார்கள்.அதை விடுத்து விழா நடத்தலாம் வாருங்கள் என்று கருத்து கேட்டுப் பாருங்கள்.பலர் வருவர்.சிலர் பேசுவதால் பலரும் விலகிக்கொள்வர்.இப்படித்தான் இதுவரை நடந்திருக்கிறது. அதையும் தாண்டி சென்னையில் பெரிய அளவில் ஒரு சந்திப்பு நடந்திருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது நல்ல ஆலோசனைகள் தரும் வவ்வாலுக்கு நன்றி..
Deleteமதுமதி,
Deleteவணக்கம்,
தங்கள் புரிதலுக்கு நன்றி!
நீங்கள் சொன்னது சரியே,நானும் முதலில் ஒரு நிகழ்வு நடக்கட்டும் அப்புறமாக அடுத்தக்கட்டத்தில் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.
எப்பவுமே பேசி ,பரஸ்பரம் எல்லாம் புரிந்துக்கணும் ,பேசாமல் என்ன நினைப்பார்களோ என தனித்தீவாக போவதாலே புறக்கணிப்போ என நினைக்க வைத்துவிடுகிறது. அதனால் தான் நான் சம்பந்தப்பட்டவங்க பதிவுக்கே போய் பேசுவது, என் கருத்தை சொல்கிறேன் என பதிவுப்போட்டுக்கொண்டு இருப்பது ,பின்னால் பேசுவதாகிவிடும், இப்படி எல்லாரிடமும் பேசப்போய் எனக்கு கெட்டப்பேரும் உண்டு :-))
ஏற்கனவே ஒரு முறை குழுமம் உருவாகி ,சந்திப்பு நடந்து ,பின்னர் கொஞ்ச நாளில் கலைந்துவிட்டது சிலக்காரணங்களால்.
//அதை விடுத்து விழா நடத்தலாம் வாருங்கள் என்று கருத்து கேட்டுப் பாருங்கள்.பலர் வருவர்.சிலர் பேசுவதால் பலரும் விலகிக்கொள்வர்.இப்படித்தான் இதுவரை நடந்திருக்கிறது. //
அப்படி விழா நடத்த இருக்கிறோம் என ஆலோசித்து இருக்கலாம் என்றே இப்பவும் சொல்கிறேன்.
இப்ப நீங்க சொன்னாப்போல சிலர் வந்தாங்கள்,பலர் வரவில்லை என்ற சூழல் தானே, எனவே எப்படி செய்தாலும் சில கரைசல் வரவே செய்யும் எனும் போது ஆரம்பத்திலேயே ஆலோசித்து இருக்கலாம்.
---------
பேசுவதால் தவறே இல்லை. ஏன் இன்டி பிளாக்கர் மீட்டில் கேபிள்ஜி அங்கேயே கருத்து விவாதம் செய்யவில்லையா(அப்போதும் இரு வேறுக்கருத்து நிலவியது). எனவே மாற்றுக்கருத்து சொன்னால் ஆகாதவன் என்ற நிலை இருக்கக்கூடாது.
இங்கே எதாவது சொன்னால் நீ அன்னிக்கு வந்தியா ,அப்போவே சொன்னியா என்பதெல்லாம் அடக்கு முறை என்பது எனது எளியக்கருத்து.
இன்டி பிளாக்கரில் கேபிள்ஜி பேசியது போல ,பதிவர் சந்திப்பில் யாரேனும் பேசி இருந்தாலும் சுமுகமாக கொண்டு செல்லும் நிலை நிலவியதா? என எனக்கு தெரியவில்லை, ஆனால் சிலப்பொறுப்பாளர்கள் பேசும் தோரணையைப்பார்த்தால் கொலை செய்திருப்பார்களோ என தோன்றுகிறது :-))
எனவே பொறுப்பில் வருபவர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக திகழவேண்டும், உங்களுக்கு, கணேஷ் சார், புலவரய்யா,சுரேகாஜி போன்றவர்களுக்கு அத்தகைய பக்குவம் இருக்கிறது என்பது இப்பதிவினைப்படிப்பதன் மூலம் அனைவருமே (நானும் தான்)உணர்வார்கள்.
வெற்றியுடன் தொடர வாழ்த்துக்கள், சந்தர்ப்பம் வாய்க்கும் போது சந்திக்கிறேன்.
நன்றி!
//இப்ப நீங்க சொன்னாப்போல சிலர் வந்தாங்கள்,பலர் வரவில்லை என்ற சூழல் தானே, எனவே எப்படி செய்தாலும் சில கரைசல் வரவே செய்யும் எனும் போது ஆரம்பத்திலேயே ஆலோசித்து இருக்கலாம்//
Deleteஅந்த சிலர் தான் நமக்கு தேவை வவ்வால்.ஒவ்வொரு முறையும் 90 பேர் சரியென்று தலையசைத்தால் 4 பேர் வேண்டாம் என்றதன் பேரில் நிலுவையாகி விடுகின்றன்.இன்டி பிலாக்கர் மீட்டில் என்ன நடந்தது அதுதானே.. இதை செய்யலாமா என்பதைவிட இதுதான் இதை எப்படி செய்யலாம் என்பதே ஆரோக்கியமானது.அதனால் தான் இந்த சந்திப்பே நடந்தது. இல்லையேல் நடந்திருக்க கருத்துக்கு நன்றி..
சாதாரணமாக ஒரு திருமணம் நடந்தாலே அதில் குறை காண்பவர்கள் அதிகம். அதனால் இவைகளை கண்டுக்கொள்ள வேண்டாம். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் 180-க்கு மேற்பட்டவர்கள் என்றாலும், வரமுடியவில்லையே என்று ஏங்கியவர்கள் அதிகம், என்னையும் சேர்த்து.
ReplyDelete"பிரபலம்" என்பதை எதை வைத்து கணக்கிடுகிறார்கள்? என்பது தெரியவில்லை. குறை கூறுபவர்கள் இந்த வீடியோவை பார்க்கட்டும்.
http://www.youtube.com/watch?v=_d-gZTRIJpA
இதைவிட நமக்கு வேறு என்ன வேண்டும்?
speech less brother!
Deleteஅப்துல் பாஷித் ,
Deleteஅப்படியா?
"பிரபலம்" என்பதை எதை வைத்து கணக்கிடுகிறார்கள்? அதுதான் தெரியவில்லை.
விழாவை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் வாழ்த்துகள். புதிய முயற்சிகள் இன்னும் தொடரட்டும்.
ReplyDeleteகட்டாயம் தொடரும்..
Deleteஒரு மிகப்பெரிய நிகழ்ச்சியை நடத்தும் பொழுது இத்தகைய கருத்துகள் வரும் மதுமதி. இந்த பதிவர் சந்திப்புக்கு முன் உங்களில் பலரை(உங்களைக் கூட) எனக்குத் தெரியாது.
ReplyDeleteகுறை சொல்லுபவர்கள் எங்கும் எப்பொழுது இருப்பார்கள். போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் அந்த இறைவனுக்கே...
(ஒரு சின்ன யோசனை, பதிவு கலர் கண்ணை கட்டுதுங்க.. பக்கத்தில் இருக்கும் அந்த ஆரஞ்சு கருப்பை மாத்தி கண்ணுக்கு குளிர்ச்சியான கலரி வைங்க )
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும்.. ஆமாங்க.. நிறத்த மாத்திடுறேன் விடுங்க..
Deleteதக்காளி, இவனுங்க பொங்குனா பிரச்சனையாகிடுமா? நீங்க விடுங்க சகா, நான் பாத்துக்கிறேன். நேரடியா பேச துப்பில்லாம மூணாம் ஆள வச்சி பதிவு போடுற டுபாங் இவனுங்கள போயி. அன்றைக்கே ஒரு பதிவர் சொன்னார், எந்த பக்கத்திலிருந்து பிரச்சனை வரும் என்று. நாம் எதிர்பார்த்த திசையில் இருந்தே வந்திருக்கிறது. அடுத்த முறை இவனுங்க இந்த பக்கம் வந்தானுங்கன்னா முதல் வசவு என்னிடம் இருந்து தான் வரும். தேவைனா உள்ள பூந்து அவார்டு வாங்குவானுங்க. தேவையில்லைனா நான் பிச்சைக்காரன்னு டயலாக் விடுவானுங்க டூமாங்கோலி பசங்க.
ReplyDeleteமூனா,
Deleteஎன்ன இது பொறுப்பாளாராக இருப்பவர்கள்/இருந்தவர்கள், இருக்கப்போகிறவர்கள் , இப்படி எல்லாம் பேசுவது தேவை இல்லாத பிரிவினையை உருவாக்கும்.
மாற்றுக்கருத்தாயினும் ஏற்றுக்கொள்ள முடிந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லை எனில் நன்றி ,வணக்கம் என சொல்லிவிட்டு போயிடலாம்.
எந்த விதமான சார்பு தன்மையும் இல்லாமல் நடுவில் இருக்க நினைக்கும் பதிவர்கள் தான் இங்கே அதிகம், சென்னையில் மட்டும் ஆங்கிலம்,தமிழ் என சுமார் 7000 பதிவர்கள் இருக்கிறார்கள், தமிழ்ப்பதிவர்கள் மட்டும் 1000க்கும் மேல் , எனவே பொறுமையாக நடந்தால் ஒரு அமைப்பு உருவாகி நீண்ட நாட்கள் நிலைக்கும் இல்லை எனில் காளாண் போல ஆகிவிடும்.
மனிதர்கள் மாறினாலும் அமைப்பு என்பது பெயர் சொல்லி நிற்கவேண்டும் எனில் அரவணைத்து சென்றால் மட்டுமே முடியும்.
தனிப்பட்ட முறையில் பேசும் போது நீங்கள் எப்படி பேசினாலும் பெரிதில்லை, குழுமம் ,அமைப்பு உருவாக்க போகிறோம் என சொல்லிவிட்டு இந்த பக்கம் வந்தால் வசவு என்பதெல்லாம் தவிர்க்கவும்.
நன்றி!
/செந்தில்/
Deleteசெந்தில்..இது நடக்காதுன்னு நெனச்சாங்க.ஆனா இப்படி சிறப்பா நடக்கும்ன்னு அவுங்க எதிர்பாக்குல.விடுங்க.. நாம இல்லாம கமா நாம் மேடையில உட்காராம சென்னையில பதிவர் சந்திப்பாங்கற ஆதங்கம் இருக்கத்தான் செய்யும்.கோபப்பட வேண்டாம்.நாம் செய்யுறத செஞ்சிக்கிட்டே இருப்போம்.
வணக்கம் நண்பரே,
ReplyDeleteதொடர்ந்து பல பதிவுகள், பதிவர் சந்திப்பை பற்றி இன்று தான் படித்தேன்...
நண்பர் கணேஷ் சொன்னது போல தள்ளி நின்று கருத்து சொல்பவர்கள் பற்றி
கவலைப் படத்தேவையில்லை ....
சந்திப்பை நேரில் கண்டவன் என்ற முறையில் சொல்கிறேன்...
பதிவர் சந்திப்புகளின் வரலாற்றில் ஒரு மணிமகுடம் இந்த
சென்னை தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு...
இதுபோல நாமும் செய்வோம் என்று பல பதிவர்கள் இடையே
ஒரு வீரிய விதையை தூவிய விளைநிலம்....
அந்த வரலாற்று நிகழ்வுக்கு உழைத்தவர்கள் அத்தனை பேருக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்....
//சந்திப்பை நேரில் கண்டவன் என்ற முறையில் சொல்கிறேன்...
Deleteபதிவர் சந்திப்புகளின் வரலாற்றில் ஒரு மணிமகுடம் இந்த
சென்னை தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு//
துபாயில் இருந்து வந்து நிகழ்வில் கலந்து மனதார கருத்தை சொன்னமைக்கு நன்றி..
விடுங்க மதுமதி...
ReplyDeleteஅடுத்த சந்திப்பை அவர்கள் தலைமையில் நடத்தலாம்...
அதை முன்னமே பண்ணியிருந்தா இந்த பிரச்சனையே இல்லீங்க.அப்படி பார்த்தாலும் அவுங்கள புடிக்காத வேற யாராவது இந்த மாதிரி கிளப்பி விட்டுட்டெ இருப்பாங்க..
Deleteவிடுங்க பாஸ் பத்து பேர் ஒரே மாதிரியான கருத்தை விரும்புவாங்க என்று சொல்ல முடியாது. நான் அங்கே இல்லையே என்று ரொம்ப வருத்தப்பட்டேன். நல்லபடியா நடந்து முடிந்ததற்கு விழா குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த முறை கலந்து கொள்ள முயற்சிக்கிறேன் :)
ReplyDeleteஆமாம் தோழரே..அதை விட்டு விடுவோம்..வாழ்த்துக்கு நன்றி.அடுத்த முறை அவசியம் கலந்து கொள்ளுங்கள்..
Deleteவிடு மது.. நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் குறை சொன்னால் கணக்கில் எடுக்கலாம்... இல்லையேல் விட்டுத்தள்ளி அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிங்க...
ReplyDeleteஅப்புறம் பிரபல பதிவர் பிரபல பதிவர் அப்படிங்கறானுக அப்படின்னா என்ன... பிரபல பதிவர் என்றால் என்ன செய்து இருக்கவேண்டும்ன்னு ஒரு பதிவ போடுங்க மக்களே.....
//பிரபல பதிவர் பிரபல பதிவர் அப்படிங்கறானுக அப்படின்னா என்ன?//
Deleteஅதைத்தான் கேட்டுட்டே இருக்கேன் யாரும் பதிலை சொல்ல மாட்டேங்குறாங்க..
நண்பர்களே, அன்றைக்கு உங்களிடம் பகிர்ந்ததுதான் இங்கேயும் சொல்லுகிறேன்.
ReplyDeleteஇது உங்களுக்கு மட்டும் இன்றைக்கு புதியதாக நிகழ்வதல்ல, ஆர்வத்துடன் வரும் ஒவ்வொரு குழுவிற்கும் ஏற்படும் சிக்கல்தான்.
நல்ல ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்தை மட்டும் பார்த்தால் சிக்கலை எளிதாகத் தீர்த்து மீண்டும் உங்களுக்குப் பிடித்ததை நீங்கள் சிறப்பாக செயல்படுத்த முடியும்.
தமிழ், சென்னை, சங்கம், குழுமம் போன்ற ஒரே குடையின் கீழாக அனைவரையும் கொண்டுவருவதைப் போன்ற வார்த்தைகளில்தான் அன்றிலிருந்து இன்றுவரையில் ஆட்சேபனை இருக்கிறது. இனியும் இருக்கும்.
ஏன் என்று பொறுமையாக யோசித்தால் அதில் உள்ள சங்கடங்கள் உங்களுக்கும் புரியவரும்.
பதிவெழுவதால் மட்டுமே அனைவரும் ஒரே குடையில் வரமுடியுமா? வாசிப்பு தளத்திலிருந்து, அரசியல், உங்களுக்குத் தெரிந்தது, எனக்குத் தெரிந்தது மற்றவர்களுக்குத் தெரிந்தது என்று எவ்வளவு விஷயங்கள் வேறுபடும்? இப்படி வேறுபட்டவர்களின் சார்பாக ஒருவரோ அல்லது ஒரு குழுவோ எப்படிக் குரல் தரமுடியும்? அல்லது அத்தாரிட்டியாக இருக்கமுடியும்?
இதற்கு ஒரே வழி,
உங்கள் அமைப்பை பொதுவாக இல்லாமல், உங்கள் நண்பர்கள் இணைந்து வேறு பெயரில் நீங்கள் கலந்தாலோசித்துத் துவங்கலாம். டெர்ரர்கும்மி நண்பர்கள் கூட போட்டி எல்லாம் வைத்து அசத்துகிறார்கள், அதில் இல்லாத பல பொதுவான நண்பர்களும் கலந்துகொள்கிறார்கள். அதுபோன்று பல நல்ல விஷயங்களை நீங்கள் கூட்டாகச் செயல் படுத்த முடியும்.
சமூகசேவையோ, பொழுதுபோக்கோ, வாசிப்போ, உதவியோ எதுவேண்டுமானாலும் உங்கள் குறிக்கோளாக இருக்கலாம்.
அவசரத்தில் வார்த்தைகளை தெளித்து விடுவதற்கு, மாற்று வழி கண்டு முன்னோக்கிச் செல்வதே சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
உங்களின் பார்வைக்காக நமது நண்பர்கள் நடத்தும் சில அமைப்புகள், இதே போல் அல்லது இன்னும் சிறப்பாக யோசித்து நீங்களும் செயல்பட்டால் அதை யாரும் விமர்சிக்கப் போவதில்லை.
http://nesampeople.blogspot.in/
http://serdhalam.blogspot.in/
http://erodetamizh.blogspot.in/
இன்னும் பல நண்பர்கள் வெளிக்காட்டிக்கொள்ளாமல் பல உதவிகளையும் செய்து வருகிறார்கள்.
எனவே,
மேலும், மேலும் இதைக் கிளறுவதில் மிஞ்சப்போவது அனாவசிய வார்த்தைகள் மட்டுமே சில வருடங்கள் கழித்து அதை நாமே பார்க்கமாட்டோம் என்பதே காலம் பதிவர்களுக்கு உணர்த்திய உண்மை.
பிரச்சனைகளைத் தவிர்த்து நண்பர்களுடன் ஆலோசித்து அடுத்து என்ன செய்யலாம் என்று முன்னோக்கிச் செல்வீர்கள் என்ற நம்பிக்கையிலும், அன்பிலும் இதை இங்கே பகிர்கிறேன்.
நன்றி.
சங்கர் அண்ணே. உங்கள் கருத்து அனுபவத்தோட வெளிப்பாடு. கண்டிப்பா இத ஆலோசனை செய்வோம்.
Deleteநல்லதொரு கருத்து இதில் மறுப்பேதும் இல்லை. தனியாக கூட செயல்படலாம்.. இப்போதைய சூழலைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. நீங்கள் குறிப்பிட்ட பெயர்கள் பொதுவானது தானே அதை பயன்படுத்திக் கொள்வதில் தவறிருப்பதைபோல் தெரியவில்லை.ஆயினும் உங்கள் கருத்துக்கு செவி சாய்க்கிறோம்.தங்களின் விரிவான கருத்துக்கு நன்றி.
Deleteசென்னை என்பதையோ, வலைப்பதிவர் என்பதையோ தவிர்த்து மற்ற பெயரில் (சேர்தளம் போல்) இயங்க சொல்லி விழாவுக்கு வராத அல்லது வந்த ஒரு சில நண்பர்கள் சொல்கிறார்கள். சென்னை பதிவர்கள் என்றால் அவர்கள் மட்டும் தான் என்று நினைக்கிறார்கள் போலும் ! நம் நண்பர்களிடம் பேசி வழமை போல் நம்மில் பெரும்பாலானோர் கருத்து படி முன் எடுத்து செல்லலாம் என்பது என் தாழ்மையான கருத்து
Deleteமோகன் / ஜெ / மதுமதி
Deleteஷங்கர் சொல்லியது யோசிக்க வேண்டிய கருத்து. ஒரு வார இறுதியில்(சனிகிழமை/ஞாயிறு ) நாம் சந்திப்போமா இதை பற்றி மேலும் பேச .. மோகன் அவர்களிடம் என் நம்பர் உள்ளது மெயில் ஐடியும் உள்ளது... தொடர்பு கொள்ளுங்கள்
கட்டாயம் சந்திப்போம்.ஆனால் நாளை பதிவர் பிலாசபி பிரபாகரனது திருமண நிச்சயதார்த்ததிற்கு செல்ல இருக்கிறோம்.எனவே அடுத்த வார இறுதியில் சந்திப்போம்.
Deleteமுன்கூட்டியே உறுதி செய்யுங்கள் நண்பரே...
Deleteகட்டாயம் தோழரே..
Deleteயார் என்ன சொன்னாலும் பதிவர் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பதில் ஐயமில்லை.
ReplyDeleteசிந்தித்ததும் சந்தித்ததும் தித்தித்தது
நிச்சயம்..
Deleteதோழரே!! அனைவரின் க்ருத்துக்கும் தாங்கள் சரியான முறையில் பதில் அளிக்கும் பாங்கு பாராட்டத்தக்கது..
ReplyDeleteஇது தனி ஒரு குடும்ப விசயம் இல்லை,, எனவே உங்கள் குழு உறுப்பினர்களும் பொறுப்புடன் பிறர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற கடமைப்பட்டிருக்கிறார்கள்...
பேச்சிலும் செயலிலும் ஆற்றல் காட்டுங்கள்...
வாழ்த்துக்கள்!!
ஆமாம் தோழரே..நீங்கள் சொன்னது சரிதான்.
Deleteஇத்தனை கருத்துக்களும் உங்கள் முயற்சிக்கு கிடைத்த
ReplyDeleteபெரு வெற்றி இனியும் கவலை என்ன !...அடுத்த பதிவர்
சந்திப்பு இதை விடவும் அமோகமாக நடக்கப் போகிறது
என்பதற்கு இது சான்றாக அமைந்துள்ளது .வாழ்த்துக்கள்
சகோ மென்மேலும் உங்கள் முயற்சியால் இந்த வலைத்தள
உறவுகள் பெருமையோடு நன்றி கூறும் நாட்கள் இனிதே
மலரட்டும் .
நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..
Deleteஇந்த போட்டோவும் நல்லா இருக்கு.
ReplyDeleteஅப்படியா..இனிமே இதையே வச்சுக்கலாமா?
Deleteஇதை வாசித்து மனம் மகிழ்ந்தேன். மிக்க நன்றி பதிவிற்கு.
ReplyDeleteமுன் அறிமுகங்கள் பார்த்தேன் தொலைக்காட்சியில்.
வேதா. இலங்காதிலகம்.
கோவைக்கவி: மிக்க நன்றி எந்த டிவியில் விழா பற்றி பார்த்தீர்கள் என சொல்ல முடியுமா? பின்னால் வரப்போகும் நிகழ்ச்சிக்கு முன்னோட்டமாக காட்டினார்களா? நாங்கள் யாரும் பார்க்கலை அதனால் கேட்கிறோம்
Deleteவலைஉலகில் ஆரம்பகாலத்தில் யாரும் எழுத துவங்காத காலாத்தில் ஒரு சிலர் எழுத துவங்கினர். அப்போது அதிகம் பதிவாளர்கள் இல்லை அதனால் போட்டியில்லை அதனால் அவர் பக்கங்களை அதிக அளவில் படித்தனர். அந்த ஒரு காரணத்தினால் அவர்கள் தங்களை பிரபலம் என்று கருதி கொண்டனர். அதன் பிறகு பல தரம் வாய்ந்த பதிவாளர்கள் வந்து தரமாக எழுத துவங்கியது மட்டுமல்லாமல் இந்த பிரபல பதிவாளர்களின் பதிவுகளுக்கு எதிராக மாற்று கருத்துக்களை தர ஆரம்பித்ததும் இவர்கள் ஒதுங்க துவங்கி தனக்கென சிறு குருப்புகளை ஆரம்பித்து மெதுவாக விழக ஆரம்பித்தனர். இப்போது வரும் புதுப்பதிவாலர்களிண் ஒட்டத்திற்கு இவர்களால் வரமுடியவில்லை அதனால் இந்த புது பதிவாளர்கள் விழா நடத்தியதும் பழைய பிரபலம் என்று தங்களை தாங்களே அழைத்து கொள்ளுபவர்கள் பொறாமைத்தீயில் வெந்து இப்போது குறை சொல்ல ஆரம்பித்து இருக்கின்றனர். சூரியனை பார்த்து குறைக்கும் நாய்களுக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் மதுமதி
ReplyDeleteவிழா ஆரம்பிக்க ஆலோசனைகள் நடத்திய போது நடந்து கொண்டிருந்த போது ஒரு கருத்துக்களும் சொல்லாதவர்கள் முடிந்த பிறகு அப்போதுதான் தனக்கு தெரிய வந்தது போல நடிக்க ஆரம்பித்து கருத்துக்கள் சொல்ல ஆரம்பிக்கின்றனர். அவர்களை பொத்த வேண்டியைதை பொத்தி கொண்டு இருக்க சொல்லுங்கள்
சரியாகச் சொன்னீர்கள் தோழரே..தங்களின் மேலான கருத்துக்கு நன்றி.
DeleteI think you guys should keep quiet about the inner politics. I haven't heard any adverse comments from the organizers from Erode Bloggers association. I heard and some guys try to create some issues but the organizers didn't comment about this.
ReplyDeleteAs I pointed out they are also not mentioned any thing about the expenses. I think they got right person for each expenses (or collected money from their members) and didn't mentioned in open. hey submit their income & expense statement within their circle on
ஆங்கிலத்தில் கருத்திட்டதை தவிர்த்திருக்கலாம்..எனினும் தங்களின் கருத்துக்கு நன்றி.
Deleteநண்பர் மதுமதிக்கு ,,,,,,,,
ReplyDeleteசென்னை குழும நண்பர்களின் பணி சிறப்பானது வலையுலகின் சாதனைக்கான அடிகள் நட்டு இருக்கிறீர்கள் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ராஜி அவர்கள் சொன்னது போல நம் குடும்பத்தின் விழாவிற்கு வந்தது போலதான் இருந்தது உங்கள் ஒவ்வொருவரின் கவனிப்பும் அக்கறையும் மெய் சிலிர்க்க வைத்தது .....வர முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் சிலர் பேசுகிறார்கள் அவர்களை அடுத்த விழாவிற்கு அழைத்துவிட்டால் வாயடைத்து போவார்கள் ..........மேலும் எதிர்மறை கருத்துகளை வரவேற்று கொள்ளுங்கள் நாம் நேர் மறையாக செல்ல அவை எப்போதும் உதவும் ......உங்கள் அனைவர்க்கும் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்
ஆமாம்..சகோதரி.தங்களின் கருத்துக்கு நன்றி..
Deleteஅட...விடுங்க பாஸ்...அவங்க எதோ கலந்துக்க முடியல அப்படின்னு ஏக்கத்துல புலம்பறாங்க...அப்புறம்..உங்களோட சீரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஏக்கம் இருந்தால் பரவாயில்லை நண்பா.. அவர்கள் செய்வதை பார்த்தால் வயிற்றெரிச்சல் படுகிற மாதிரி அல்லவா இருக்கிறது.
Deleteசார் ரெம்ப சரியா சொனீங்க
ReplyDeleteபதிவர் சந்திப்பு சிறப்பாய் அமைந்ததில் மகிழ்ச்சி
சார் சிலர் அப்படித்தான் விடுங்க
நல்லதொரு விதை விதைக்கபட்டு இருக்கிறது
அதற்காகவே உங்களுக்கும் நம் தோழமை உறவுகளுக்கு என் நன்றிகள் பாராட்டுக்கள்
ஆமாம் தோழரே.. விதைத்த விதையை குழி தோண்டி எடுக்க சிலர் முற்படுகிறார்கள்.
Deleteத.ம. 2012
ReplyDeleteவாங்க யுவகிருஷ்ணா வணக்கம்.. அது என்னாதிது த.ம.2012?
Deleteவலைப்பதிவு எழுத ஆரம்பித்து அதில் எழுதி எழுதி அடுத்த கட்டமாக தன்னை ஒரு நல்ல எழுத்தாளனாக தரம் உயர்த்த முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்.உங்களின் எழுத்தை உங்கள் வலைக்கு வரும் வாசகர்கள் கவனித்து வருகிறார்கள்.இப்படி த.ம 2012 என்று சம்பந்தமே இல்லாமல் எழுதிக் கொண்டிருந்தால் உங்களின் எழுத்தின் தரம் குறையும் என்பதில் ஐயமில்லை.
தோழர் மதுமதி,
Deleteஎனக்கும் ‘த.ம’ என்றால் என்னவென்று தெரியாது. நிறைய பதிவுகளின் பின்னூட்டங்களில் ‘த.ம’ என்று போட்டு ஏதோ நம்பர் போடுகிறார்கள். அவ்வாறு பின்னூட்டம் போட்டால்தான் பிரபலப் பதிவர் ஆகமுடியும் என்றும் சில நண்பர்கள் சுட்டிக் காட்டியதாலேயே, நானும் பிரபலம் ஆகலாம் என்று போட்டிருக்கிறேன்.
மற்றபடி நான் ரைட்டர் எல்லாம் இல்லீங்க சார். அப்படி எங்கிட்டும் கிரெடிட் எடுத்துக்கிட்டதில்லை.
ஓ..அப்படியா.. த.ம என்றால் என்ன து.ம என்றால் என்ன என்று கேட்கவில்லை தோழரே..பதிவை படித்துவிட்டு கருத்தை சொல்லத்தான் கருத்துரை பெட்டி என்பதை நினைவு கொள்க.. சம்பந்தமில்லாத கருத்துரை உங்கள் கதாபாத்திரத்தை விளக்குவது போலவும் சம்பந்தமே இல்லாத ஒரு கருத்துரையிட வேறு ஏதோ காரணம் இருப்பதை போலவும் தோன்றுகிறது.தானாக முன் வந்து வெளிப்படுத்தியமைக்கு நன்றி. இந்த மாதிரி சம்பந்தமில்லாத கருத்துரைகளை இடுவதற்கான தளம் இது அல்ல என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.எனினும் தங்களின் முத்தான முதல் வரவிற்கு நன்றி..தொடர்ந்து வாருங்கள்..
Deleteசென்னையில் பதிவர் சந்திப்பை, சிறப்பாக ஒரு குழுவாக நின்று செய்து முடித்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்! பொது வாழ்க்கையில், யாராவது எதையாவது சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். உங்கள் சேவை தொடரட்டும்.
ReplyDeleteஆமாம் ஐயா.மூட்டை பூச்சிக்காக வீட்டைக் கொளுத்த முடியாது என்பது உண்மைதான்.
Deleteயார் என்ன சொன்னாலும் சரி. அதைப்பற்றிக் கவலைப் படாதீர்கள். ஒரு இமாலயச் சாதனையைச் செய்திருக்கிறீர்கள். பதிவுலகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும். இவர்கள் கூறும் இந்த பிரபல பதிவர்கள் யாரென்றுதான் எனக்குத் தெரியவில்லை. சிரிப்புதான் வருகிறது. தானும் மேயாமல் அடுத்த மாடுகளையும் மேயவிடாமல்...இவர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். புறக்கணியுங்கள். அடுத்த முறை கட்டாயம் நான் கலந்து கொள்வேன்.
ReplyDeleteகொஞ்சம் சத்தமா சொல்லுங்க தோழரே..சிலர் பதிவுலகமே நாங்கதான்னு சொல்லிட்டு இருக்காங்க..
Deleteபாராட்டும் விமர்சனமும் செய்பவர்கள் உண்மையான விமர்சகர்கள். விமர்சிப்பது ஒன்றே கொள்கையாக கொண்டவர்கள் விஷக் கொடுக்கு கொண்ட விஷத்தேள்கள். முன்னால் மட்டும் பார்த்து நடவுங்கள். சரிவில் நின்று புலம்புபவர்களை புறக்கணியுங்கள். மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் மது சார்.
ReplyDeleteஆழமான கருத்துக்கு நன்றி..
Delete// தனிப்பட்ட முறையில் பேசும் போது நீங்கள் எப்படி பேசினாலும் பெரிதில்லை, குழுமம் ,அமைப்பு உருவாக்க போகிறோம் என சொல்லிவிட்டு இந்த பக்கம் வந்தால் வசவு என்பதெல்லாம் தவிர்க்கவும்.
ReplyDelete//
வவ்வால்...
கண்ணியம் என்பது எந்த இடத்திலும் காக்கப்பட வேண்டும்...குழுமம் பற்றி பேசும் பொழுது மட்டும் அல்ல.... பொது இடத்தில் எங்கு பேசினாலும் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.... இது பொது விதி...இதை மாற்றி நமக்கு தேவையானதை பேசும் போது மட்டும் கண்ணியம் காக்கலாம் என்று புது விதி உருவாக்காதீர்கள்....
சிராஜ்,
Deleteஅட்ராசக்க,காற்றுள்ளப்போதே வா :-))
நான் தனிமனிதனாக என்ன வேண்டுமானாலும் பேசுவேன், ஆனால் ஒரு பொறுப்பில் உட்கார்ந்தால் என் வாலை சுருட்டிக்கொள்வேன், அதில் வெட்கப்பட ஏதுமில்லை.
என் சுய விருப்பு வெறுப்புகளை பொதுவில் நானும் பொறுப்பில் இருந்து நடக்கும் போது காட்டமாட்டேன்,நீங்கள் எப்படியோ?
வலையகம் சார்பாக சொன்னதையும் கவனியுங்கள்.
சிராஜ்,
Deleteநீங்க என்ன ரெண்டு பக்கமும் கோல் போடுறிங்க, மனிதாபிமானி பதிவில் வேற மாதிரி பேசினிங்க :-))
பிரச்சினையை ஊதுவதும்,உபதேசம் செய்வதும் அட அடா முடியலை அவ்வ்வ் :-))
மதுமதி....
ReplyDeleteகன்னி முயற்ச்சி தானே?? குறைகள் இருந்து இருக்கலாம்... அவர்கள் சொல்வதை மட்டும் குறித்து வைத்துக்கொள்வோம்.. அடுத்த முறை நடத்தும் பொழுது அந்த குறையும் இல்லாமல் செய்வோம்.. இன்ஷா அல்லாஹ்....மற்றபடி குறை சொன்னவர்கலை கண்டு கொள்ளத் தேவை இல்லை... குறிப்பாக குழுவில் இருப்பவர்கள் யாரையும் விமர்சிக்க வேண்டாம் என்பது என் தனிப்பட்ட கருத்து... பதிலுக்கு திட்டுவதை விட அமைதி காப்பதே நமக்கு பெருமை, சான்றார்களிடத்தில்...
ஆமாம் சிராஜ்.. நல்ல முறையில் குறைகளைச் சுட்டிக் காட்டினால் புதிய பதிவராக இருந்தாலும் "சொல்லுங்ண்ணா" என்று கையை கட்டிக்கொண்டு கேட்டுக் கொள்ளலாம்.அதில் தவறேதும் இல்லை.
Deleteபதிவுலகம் ஒரு கடல் மாதிரி. நெறையப்பேரு வந்து எழுதி உயர்ந்து அடுத்த நிலைக்குப் போறாங்க. பலர் பதிவை கொறைச்சுக்கிறாங்க. இல்லைனா திரட்டில இணைப்பதில்லை. புதிதாக வர்ரவங்களுக்கு பழைய பதிவர்களை சரியாத் தெரிவதில்லை. புதியவர்கள் இப்போது எழுதுபவர்களை ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டி, பதிவுலகம் நகர்கிறது. புதியவர்களிலும் பெரியவர்கள் மற்றும் திறமையானவர்கள் பலர் வந்து சிறப்பா எழுதுறாங்க. பழைய பதிவர்கள் ஆக்டிவிட்டி குறைவதால் பலருக்கு அவர்களை சரியாகத் தெரிவதில்லை. அதனால என்ன இப்போ? னு இந்த நிலைமையை பழைய பிரபலங்கள எளிதாக எடுத்துக்கொண்டால் பிரச்சினையே இல்லை. தன்னை பதிவர்கள் எல்லாரும் இன்றும் முதல்த்தரபதிவராக மதிக்கனும், தெரிது இருக்கனும்னு நெனச்சா கொஞ்சம் கஷ்டம்தான். ஒரு வகையில் இவர்களும், உ த, கேபில், ஜாக்கி போல பெரியமனது செய்து பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளலாம். இவர்கள் பெயரை நேற்றுவந்தவர்கள் கேட்டு யார் இவர்? என்று பார்த்து இவர்கள் தளம் சென்று, இவர்களுடிஅய உயர்தரம் அறிந்துகொள்வார்கள்.
ReplyDeleteசர்ச்சைகளுடன், எல்லாரும் ஒன்று கூடி, கொண்டாடி எல்லாம் சிறப்பா முடிந்தது நல்லாத்தான் இருக்கு. எந்த ஒரு நிகழ்விலும் ஆயிரம் குறை கண்டுபிடிக்கலாம்தான். யார் வளர்த்தா என்னங்க? தமிழை வளர்க்கனும், தமிழ் மென்மேலும் வளரனும், என்று "பெரியவர்கள்" நினைத்தால் நன்று. :)
பதிவுலகத்தைப் பற்றி மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள் தோழர்.
Delete//யார் வளர்த்தா என்னங்க? தமிழை வளர்க்கனும், தமிழ் மென்மேலும் வளரனும், என்று "பெரியவர்கள்" நினைத்தால் நன்று//
நாங்க மட்டும் தான் வளர்க்கணும்ன்னு நினைக்கிறவங்களப் பாத்து தமிழே சிரிக்குது.கருத்துக்கு நன்றி தோழர்..
அன்பின் மதுமதி
ReplyDeleteசென்ற மறுமொழி என்ன ஆனதெனத் தெரியவில்லை - வெள்ளைக் காக்கா தூக்கிச் சென்றதா புரியவில்லை.
எந்த ஒரு நல்ல நிக்ழ்வுகளிலும் இப்படி எல்லாம் நடைபெறும். கவலையினை விடுக - வந்திருந்த அனைத்து நண்பர்களூமே மன ம்கிழ்ச்சியுடன் தான் திரும்பிச் சென்றனர். கலந்து கொண்ட எவருமே முகம் சுளிக்க வில்லை. வெற்றிகரமாக நடைபெற்ற பதிவர் சந்திப்பு இது தான்.
நல்வாழ்த்துகள் மதுமதி
நட்புடன் சீனா
ஒரு வாரத்துக்குள்ளாக என்னன்னவோ நடந்துடுச்சே... ஒன்னும் புரியல! ஆனா நூத்துல அஞ்சு பேரு திட்டியிருக்காங்கன்னு மட்டும் புரியுது ஹி...ஹி..ஹி...
ReplyDelete//ஆம் எனில் சற்று பொறுங்கள்.இரண்டொரு நாளில் காணொளி வெளியிடுகிறோம்.தேவைப்பட்டால் நடந்தவற்றை தொகுத்து நாளை ஒரு பதிவிடலாம் என்ற எண்ணம் இருக்கிறது.//
பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகள் யாராச்சும் தொகுத்து ஒரு பதிவிடுங்களேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் !
இந்த விழா மட்டுமல்ல.. எந்த ஒரு பொதுக்கூட்டத்தையும் முன்னின்று நடத்துபவர்களுக்கும் இப்படிப்பட்ட கசப்பான அனுபவங்கள் நேரும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
ReplyDeleteபொதுவாக ஒரு செயலைச் செய்யும்போது நாலா பக்கமும் இருந்து விமர்சனங்கள் வரவே செய்யும். அவற்றிற்கு செவி சாய்க்காமல், நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதிலேயே கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு கவனம் செலுத்தி வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டாலோ, "காய்த்த மரம் கல்லடி படுவதுபோல" கல்லடியும், சொல்லடியும் பட்டுத்தான் ஆகவேண்டும்.
இத்தனை தடங்கல்-தடைகள் வந்தாலும் மனதை திடப்படுத்திக்கொண்டு, உறுதியுடன் செயல்பட்டால், உங்கள் மீது, உங்கள் குழுவின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் நாளடைவில் மறைந்தே போகும். விழாவில் கலந்துகொண்டவர்கள் உட்பட, ஒவ்வொரு நாளும் பதிவுகளைப் படித்து வருபவர்களுக்குத் தெரியும் உங்களின் உழைப்பு என்னவென்று..!
எனவே எந்த ஒரு விமர்சனத்திற்கு நீங்கள் பதிலுரைக்காமல் சென்றாலே போதும். காரணம் பதிலுரைத்து நீங்கள் பதிவெழுதுவதால் பயன் ஒன்றுமில்லை. இதனால் விமர்சித்தவர்களுக்கு மனதில் எழுமே ஒரு குரூர மகிழ்ச்சி.. அந்த மகிழ்ச்சியால் "நம் விமர்சனத்திற்கு பயந்து பதில் எழுதியிருக்கிறார்கள்" என எண்ணம் தோன்றும்.அந்த மாதிரியான எண்ணத்தை அவர்களுக்கு உருவாக்க நாம் ஏன் வாய்ப்புத் தர வேண்டும். ???
Just Leave it sir..! Take it Easy..!
விமர்சனங்களைப் புறந்தள்ளுங்கள்.. உங்கள் வழியில் நீங்கள் சென்று கொண்டே இருங்கள்..!!! அதுதான் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும்..!!
என்றும் அன்புடன்,
உங்கள் தங்கம்பழனி.
பிரபல பதிவர்களே என்ற லிஸ்ட்டில் எனது பெயரை சேர்க்காததால் தீக்கு....சே சே டி குடிப்பேன் எண்டு எச்சரிக்கிறேன்
ReplyDelete