சென்னை பதிவர் திருவிழா 2012
வணக்கம் தோழமைகளே! பதிவர் சந்திப்பைப் பற்றி பதிவுகள் குவிந்த வண்ணமே உள்ளது.சந்திப்பு வெற்றிகரமான சந்திப்பு என எல்லோரும் எழுதி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.இந்த வெற்றியின் காரணகர்த்தாக்கள் பற்றி சொல்லவே இந்த பதிவு.ஏனென்றால் குறைகள் ஏதுமின்றி இந்த விழா நடந்து முடிந்திருக்கிறது.இந்த வெற்றிக்கு பின்னால் யார் யார் இருந்தார்கள் யாரெல்லாம் உழைத்தார்கள் என்பதை உங்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.. கீழ்க்கண்டவர்கள் தம் சொந்தப் பணியையும் தள்ளி வைத்துவிட்டு சில நேரங்களில் இதற்கான பணிகளில் ஈடு பட்டார்கள் என்பது குறிப்பிடப்பட்டது.
மகிழ்ச்சியில் விழாக்குழுவினர் |
புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)
முன்னிலை வகித்து உரையாற்றும் புலவர் ஐயா |
வயது 81 முடியப்போகிறது என்றாலும் கூட இன்னும் இளைஞனாய் இருப்பவர்.பதிவர் சந்திப்பு முடியும் வரை தூக்கத்தை துரத்தியடித்து விட்டு இதைப் பற்றியே சிந்தித்தவர்.இவ்வாறான ஒரு சந்திப்பை நடத்தலாம் என அடிகோலியவர்.ஆரம்பத்தில் ஒரு நாள் முழுவதும் மண்டபம் தேடுவதற்காக என் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து 60 கி.மீ வேகத்திலும் ஓயாமல் என்னோடு பயணித்தவர்.மற்றவர்களோடு ஓடியாடி வேலை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவர் முகத்தில் அவ்வப்போது வெளிப்படும்.விழா நடந்தேற முக்கிய காரணகர்த்தா.
======================================================================================தலைமையுரை ஆற்றும்போது சென்னைப்பித்தன் |
ஆரம்ப நேரத்தில் அடிக்கடி கூடி இதை பற்றி பேச.இவரது இல்லத்திற்கு செல்வோம்.அப்படி ஒரு நாள் நான்,புலவர்,பால கணேஷ்,ரிஷ்வன் சென்று கலந்து பேசிவிட்டு வந்தோம்.அன்று மாலை அவரது கால் விரலில் காயம் ஏற்பட அடுத்தடுத்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளமுடியாமல் அவதிப்பட்டவர்.தொலை பேசி வாயிலாக அவவப்போது ஆலோசனையில் கலந்து கொண்டதோடு நின்று விடாமல் இறுதி ஆலோசனைக் கூட்டத்திற்கும் விழாவிற்கும் காயத்தோடே வந்து சிறப்பித்தவர்.இவ்விழா நடைபெற முக்கியமானவர்களில் ஒருவர்.
======================================================================================சுய அறிமுகத்தின் போது பாலகணேஷ் |
இப்படியான ஒரு பேச்சு எழுந்ததிலிருந்து என்னை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லி எப்போது அழைத்தாலும் வருவதற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டவர்.விழாவிற்கு தேவையான அடையாள அட்டை, பேனர், அழைப்பிதழ் போன்றவற்றை சிரத்தையெடுத்து டிசைன் செய்து கொடுத்தவர்.சிறப்பு அழைப்பாளர் ப.கோ.பி யை விழாவிற்கு அழைத்து வந்த பெருமை இவரைச் சாரும்.இறுதி வரை எம்மோடு பயணித்தவர்.
====================================================================================== சுய அறிமுகத்தின் போது சசிகலா |
எங்களோடு ஆரம்பத்தில் இருந்து அனைத்திலும் பங்கு கொண்ட ஒரே பெண் பதிவர் இவரது கவிதை தொகுப்பு இன்றைய நாளில் வெளியாக வேண்டும் மனதார ஆசைப்பட்டவர்.ஆணுக்கு பெண் சமம் என்பதை எம்மோடு பயணித்து நிரூபித்தவர். பெண் பதிவர்களை தொடர்பு கொண்டு பேசி அவர்களுக்கு தங்கும் இடம் ஏற்பாடு செயதுது வரை இவர் இவ்விழாவில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
====================================================================================சுய அறிமுகத்தின் போது ஜெயக்குமார் |
முதல் ஆலோசனைக் கூடத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பத்து வருஷம் பழகியதைபோல அனைவரிடத்தில் பேசி மகிழ்ந்து விழாவின் பொருளாளராக நியமிக்கப்பட்டவர்.சென்ற மாதம் அறுவை சிகிச்சை முடித்து ஓய்வெடுக்க வேண்டுய நேரத்திலும் அதை விடுத்து விழா பணிகளில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.பொருள் சார்ந்த கணக்கு வழக்குகளையும் விடுத்து எம்மோடு இறுதி வரை களப்பணியிலும் ஈடுபட்டவர். விழா வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தா ஜெயக்குமார்.தினமும் இரவு அனைவருக்கும் கணக்கு வழக்குகள் மின்னஞ்சலில் அனுப்பி வைத்தது சிறப்பு.
========================================================================================சுய அறிமுகத்தின் போது சிவக்குமார் |
சென்னையில் யூத் பதிவர் சந்திப்பு நடத்திய அனுபவம் கொண்டவர்.அந்த அனுபவத்தை அப்படியே முன்னிருத்தி இந்த விழாவில் என்னென்ன செய்யலாம் எப்படியெல்லாம் செய்யலாம் என எந்த நேரமும் சிந்தித்துக் கொண்டு எந்த நேரமானாலும் அலைபேசியில் தொடர்பு கொண்டு விழாவைப் பற்றியே பேசுபவர்.ஆரம்ப நாட்களிலிருந்து விழா முடியும் வரை வேறெதையும் இவர் சிந்தித்திருக்க மாட்டார் என நினைக்கிறேன்.எல்லா ஆலோசனைக் கூடத்திலும் பங்கெடுத்து கருத்துக்களை தயங்காமல் சொல்லி திடடமிடுதலில் மிகப் பெரிய பங்கெடுத்தவர். ஆரம்பத்தில் எழுத ஆரம்பித்த பதிவர்களுக்கும் இப்போது எழுதி வரும் பதிவர்களுக்கும் பாலமாக இருப்பவர். புதிய பதிவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்.
========================================================================================சுய அறிமுகத்தின் போது செல்வின் |
வாராவாரம் நடைபெறும் ஒவ்வொரு ஆலோசனைக்கூட்டத்திற்கும் யோசிக்காமல் வடசென்னையில் இருந்து வந்து செல்வார்.இரவு பத்து மணியானாலும் அவசரப்படாமல் இருந்து அனைத்தும் பேசி முடிக்கப்பட்டபிறகே கிளம்பிச் செல்வார்.விழா அன்று விருந்தினர்கள வரவேற்பதிலிருந்து நேரலை ஒளிபரப்பு சரியாக வேலை செய்கிறதா எல்லோருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டதா என்பது வரை அங்கும் இங்கும் ஓடியாடி வேலை பார்த்தவர்.
========================================================================================சுய அறிமுகத்தின் போது ஆரூர் மூனா செந்தில் |
தன் மீதான விமர்சனங்களை தூக்கி எறிந்து விட்டு தான் ஜென்டில்மேன் என்பதை நிரூபித்தவர். வரவேற்கு குழுவில் இடம் பெற்று வெளியூர் பதிவர்களுக்கு தங்க அறை ஏற்பாடு செய்யும் தனது பணியை திறம்படச் செய்தவர்.இறுதி ஆலோசனைக் கூடத்தில் அரங்கிற்குள் மது அருந்தி வந்து ரகளை செய்பவரை அப்புறப் படுத்தும் பணிக்கு ஆரூர் மூனாவை நியமித்திருந்தோம்.அதை ஏற்று அன்றைய நாள் முழுவதும் அரங்கத்திற்குள் வரும் ஒவ்வொரு பதிவரையும் ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தவர். அப்படி யாரும் மது அருந்தி ரகளை செய்யாததால் இவரது வேலை மிச்சம்.
========================================================================================சிரிப்புடன் சிராஜ் |
பதிவர்களின் சுய அறிமுகத்தில் ஆரம்பித்து வந்தவர்களை அன்பாய் வரவேற்று தான் ஏற்றுக் கொண்ட உணவுத்துறையில் முழுமனதாய் பணியாற்றியவர். அன்றைய நாளில் அரங்கத்திற்குள் இவர் இருந்ததை விடவும் சாப்பாடு அறையில் இருந்த நேரமே அதிகம்.இவரோடு சிவக்குமார்,செல்வின்,பிரபாகர் என அனைவரின் உணவு உபசரிப்பு அருமை.இவர் புன்னகை மாறாத முகத்தோடு பதிவர்களை உபசரித்தது உணவருந்த சங்கடப்பட்ட பதிவர்களர்களின் சங்கடத்தையும் போக்கியது என்றே சொல்லலாம். உணவுத்துறையை கவனிப்பதில் பிசியாக இருந்ததால் இவரை அதிகளவில் புகைப்படங்களில் காணமுடியவில்லை.கிடைத்த படத்தை இங்கே இட்டிருக்கிறேன்
========================================================================================சுய அறிமுகத்தின் போது பிரபாகர் |
செல்வின் என்னென்ன செய்தாரோ அதை எல்லாவற்றையும் செய்தவர்.தான் யார் என்பதை தன் எழுத்துகளில் காட்டிவிட்டு ஓரமாய் பச்ச புள்ள மாதிரி நின்று கொள்பவர். தன் திருமண நிச்சயதார்த்த வேலைகளுக்கிடையில் வட சென்னையில் இருந்து வந்து விழா சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளிலும் பங்கெடுத்தவர்.விரைவில் திருமணம் செய்து கொள்ள் இருக்கிறார்.இவருக்கு முன்கூட்டியே தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளலாம்.
========================================================================================
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு கொண்டும் தான் பங்கு கொள்ள முடியாத போது அலைபேசியில் தொடர்பு கொண்டும் விபரங்களைக் கேட்டுக்கொண்டு எம்மோடு பயணித்தவர்.அந்நாளில் மக்கள் தொலைக்காட்சியை வரவழைத்து விழாவை படம் பிடிக்க வைத்த பெருமை இவரைச் சாரும். விழாக்குழு தனியாக நிகழ்ச்சிகளை படம் பிடிக்க முடியாமற்போன குறையை தீர்த்து அனைத்தையும் தன் புகைப்படக் கருவியில் படம் பிடித்தவர்.
========================================================================================
சுய அறிமுகத்தின் போது சௌந்தர் |
சுய அறிமுகத்தின்போது அரசன் |
========================================================================================
சுய அறிமுகத்தின் போது சீனு |
========================================================================================
சுய அறிமுகத்தின்போது டி.என்.முரளிதரன் |
=======================================================================================
சுய அறிமுகத்தின்போது ரஹீம் கஸாலி |
கேபிள் சங்கர்
சுய அறிமுகத்தின்போது கேபிள் சங்கர் |
சுரேகா
இந்த விழா கொஞ்சம் கூட தொய்வில்லாமல் கலகலப்பாக சென்றதற்கு காரணமாக விளங்கியவர் தோழர் சுரேகா.அவருக்கான பாணியில் நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்கினார். அவரது வேலைப் பளுவின் காரணமாக ஆரம்பத்தில் இருந்து எம்மோடு கலந்து கொள்ள முடியாமற் போனாவிட்டாலும் அன்றைய நாளில் எம்மோடு கலந்து விழாவை வெற்றி பெற வைத்ததில் முக்கிய பங்காற்றியவர்.
===================================================================================
சுய அறிமுகத்தின் போது மதுமதி |
நிகழ்ச்சித் தொகுப்பாளர் கவிஞர் சுரேகாவுடன் விழாக்குழுவினர் |
அடுத்த பதிவில் மேடையில் பெரும்பங்களித்தவர்களுக்கு நன்றியைக் கூறிக்கொள்கிறோம்.
வாசித்துவிட்டீர்களா?
என்னை தாக்கிய பதிவர்களும் என்னை நோக்கிய பதிவர்களும்
நன்றியுடன்,
உங்கள் அனைவரின் உழைப்பிற்கும்,அர்ப்பணிப்பிற்கும் பணிவான என் வணக்கம் கலந்த மரியாதைகள் உரித்தாகுக.
ReplyDeleteநிச்சயமாய்..
Deleteஅனைவரையும் பணியையும் அழகாக விவரித்து எழுதி அவர்களை கெளரவித்திருக்கிறீர்கள்!
ReplyDeleteஇதில் தங்களின் பணியும் மிகச்சிறப்பானது...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
எங்க போட்டோவெல்லாம் போடமாட்டீங்ளோ..
ReplyDeleteமிஸ்டர் மதுமதி நான் எழுதி டிராப்ட்ல இருக்கிறதுல 80% இங்க நீங்க எழுதிட்டீங்க இப்ப நான் என்ன எழுத....ட்ராப்ட்ல உள்ளத ரப்பர் வச்சி அழிச்சிட்டு புதுசா யோசிக்கனுமே ... ஆண்டவா.....
ReplyDeleteஇனி உங்களைப் பத்தி மீதியச் சொல்லிட்டு மத்த உதவிகள் செய்தவங்கள பத்தி எழுதனும்.
கணேஷ் இரண்டு தடவை ஆபீஸுக்கு அரைநாள் லீவு போட்டு அழைப்பிதழ் மற்றும் பேனர் டிசைன் செய்ததை கூடுதலாக பதிவு செய்கிறேன்.
விழாக்குழு நண்பர்களுக்கு மதுமதி எழுதிய இந்தப் பதிவை நான் எழுதியதாக ஏற்றுக் கொள்ளவும். நன்றி. :)
நல்ல தொகுப்பு சார்... தனக்கு கொடுத்த வேலைகளை அனைவரும் சிறப்பாக செய்தார்கள்... தங்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteஒருவரை விடாமல் அனைவரையும் பாராட்டி எழுதி விட்டு உங்களின் சின்னப் படத்தை மட்டுமே போட்டுக் கொண்ட தன்னடக்கம் வாழ்க கவிஞரே. நாங்களெல்லாரும் விழாவிற்கு அலைந்ததைவிட அதிகம் மனதாலும் உடலாலும் உழைத்தவர் தாங்களேயல்லவா? தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
ReplyDeleteதிரு பால கணேஷ் அவர்களின் கருத்தை நான் வழிமொழிகின்றேன். பதிவர் சந்திப்பை சிறப்பாக நடத்திமைக்கு தங்களுக்கும் தங்கள் குழுவினருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்!
ReplyDeleteஎங்கெங்கு காணினும் பதிவர் சந்திப்பு குறித்த பேச்சு நடைபெறுமளவுக்கு, திருவிழாக்கோலம் பூணவைத்த அனைவருக்கும் நன்றி சொல்வதோடு நின்று விட விரும்பவில்லை. அனைவருக்கும் அவர்களின் அயராத உழைப்புக்காக எனது பணிவார்ந்த வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஎப்படிப் பாராட்டினாலும்
ReplyDeleteஎத்தனை முறை பாராட்டினாலும் தகும்
அந்த அளவு மிகச் சிறப்பாக நேர்த்தியாக
விழாவினை நடத்திக்கொடுத்த அனைவருக்கும்
எங்கள் மனமார்ந்த நன்றி
tha.ma 8
ReplyDeleteஅனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்....
ReplyDeleteஅனைவரது கூட்டு முயற்சி + கடின உழைப்பின் பலன் இதில் தெரிகிறது ...
ReplyDeleteஉங்க எல்லாருடைய உழைப்பையும் சந்திப்பின் ஒவ்வொரு கணமும் உணர்ந்தேன். தாய் வீட்டுக்கு சென்று வந்த சந்தோசமும், எதையோ சாதித்த மனநிறவும் வீட்டுக்கு திரும்புகையில் மனதை நிறைத்து இருந்தது. பேருந்தில்கூட பதிவர் சந்திப்பை நினைச்சு சிரிச்சுக்கிட்டே வந்தேன். அம்மா! லூஸ் ன்னு நினைச்சுக்கு போறாங்க. சிரிக்காதம்மா. பிளீஸ்ன்னு மகன் எச்சரிக்கையும் மீறி!
ReplyDeleteவிழா இனிதே நடைபெற்றமைக்கு அனைவரது பங்களிப்பும் மிக முக்கியமானது.
ReplyDeleteபிரபல பதிவர் கேபிள் சங்கரின் பேட்டி நமது தமிழ்வாசியில் விரைவில் வெளியாக உள்ளது. அவரிடம் கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். மேலும் விவரங்களுக்கு:
கேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Cable Sankar Exclusive Interview
நம் நட்பு தொடரட்டும். இன்னும் பல நல்ல விஷயங்கள் நாம் இணைந்து செய்வோம் ! இங்கு சொல்லாமல் விட்ட உங்கள் உழைப்பு மிக மகத்தானது
ReplyDeleteஉங்களுடைய உழைப்பு,பொறுமை,அனவைரையும் அணைத்துச் செல்லும் பாங்கு இவையே சந்திப்பு வெற்றிகரகமாக அமைந்ததற்கு முக்கியக் காரணம் என்றால் மிகையாகாது.
ReplyDeleteசிந்தித்ததும் சந்தித்ததும் தித்தித்தது
சகோ மதுமதி...
ReplyDeleteஎல்லோரையும் அழகாக பட்டியலிட்டுள்ளீர்கள்.. ஆனால் "திடம்கொண்டு போறாடு" சீனு என்னை விட மேல் இடத்தில் இருக்க மிக்க தகுதியானவர்...இவரை பாராட்டி தனி பதிவெழுத நினைத்து இருந்தேன்... ரொம்ப அற்புதமா, கமிட்மெண்டோட வேலை பார்த்தார்.. குட் வொர்க் சீனு...
இந்த விழா வெற்றியடைய உழைத்த அணைந்து அன்பு உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்! நல்ல நிகழ்வு.. இது மதி அண்ணா...
ReplyDeleteஒரு விழா சிறப்புற நடைபெற என்னென்ன முன்னேற்பாடுகள் செய்யவேண்டியிருக்கும்? அத்தனையும் செய்து விழாவையும் அழகுற நடத்தி, தமிழ்ப் பதிவர்களிடையே ஒரு அற்புதமான புரிதலுணர்வை உண்டாக்கிய அனைத்து உள்ளங்களுக்கும் அன்பு நன்றிகள். தொடர்ந்து இதுபோன்ற விழாக்களும் சந்திப்புகளும் நடந்தேறி, நம்மிணைப்பு வலுக்கட்டும். அனைத்து நண்பர்களுக்கும் நன்றியோடு பாராட்டுகள்.
ReplyDeleteஅனைவரின் பங்களிப்பிற்கும் என் சிறம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகலும்
ReplyDeleteமதுமதி என்றால் மதுமதி தாங்க எழுத்துக்களில் மது கலந்து தருபவர் அடடா என்ன ஒரு சுறுசுறுப்பு விழா நடந்து முடிந்ததோடு விட்டுவிடாமல் அழகாக அதனை தொகுத்து வழங்குவது போன்ற பதிவு மிகவும் அருமை. நன்றியோடு சசிகலா.
ReplyDeleteஅனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteபதிவர் விழா நடந்து முடிந்து இந்தனை நாளாகியும் இன்னும் அந்த நினைவுகளில் இருந்து நான் விடுபடவே இல்லை.
ReplyDeleteமிகச் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தீர்கள் நீங்களும் உங்கள் நண்பர்களும்.
மாலையில் உங்களிடம் சொல்லிக் கொண்டு விடை பெற முடியவில்லை; அன்று இரவே ஊர் திரும்ப வேண்டியிருந்ததால். இப்போது மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
அன்புடன்,
ரஞ்ஜனி
ranjaninarayanan.wordpress.com
கவிஞரே அருமயான பதிவு ,
ReplyDeleteவிழாவிற்கு உழைத்த அனைவருக்கும் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன் :)
வாழ்த்துக்கள்..திறம் பட செயல் படுத்தியமைக்கு////
ReplyDeleteவிழா இனிதே நடைபெற்றதற்கு காரணமான அனைவருக்கும் வாழ்த்துகள் மதுமதி.
ReplyDeleteஎல்லோருக்கும் பாராட்டும், நன்றியும், நல்வாழ்த்தும்
ReplyDeleteதவிர வேறு எதைக் கூறமுடீயம் நான்.
பதிவிற்கும் நன்றி.
வேதா. இலங்காதிலகம்.