புது வரவு :
Home » , » பதிவர் சந்திப்பில் என்னைத் தாக்கிய பதிவர்களும் என்னை நோக்கிய பதிவர்களும்

பதிவர் சந்திப்பில் என்னைத் தாக்கிய பதிவர்களும் என்னை நோக்கிய பதிவர்களும்

    ணக்கம் தோழமைகளே.. நல்லபடியாக பதிவர் சந்திப்பு நடந்து முடிந்தது. உடனுக்குடன் பல பதிவர்கள் சூடான இடுகைகளை இதைப் பற்றி இட்டு வந்ததால் இப்போது இதைக்குறிப்பிடுகிறேன். எனக்கு நேர்ந்த இரு பிரச்சனைகளைப் பற்றி இங்கே குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டும்.

என்னைத் தாக்கிய பதிவர்கள்:

      பதிவர் சந்திப்பிற்கு இரண்டு நாட்களுக்கும் முன்னால் பல பதிவர்கள் என்னை திட்டி திட்டியே பதிவு போட்டனர்.பல பதிவுகளில் எனது பெயர் அடிபட்டது.மதுவை ஒழிக்காமல் விடமாட்டோம்.மதுவை அரங்கிற்குள் அனுமதிக்காதீர்கள் என்று கிட்டத்தட்ட அனைத்து பதிவர்களுமே எழுத ஆரம்பித்து விட்டார்கள்.ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டு விட்டேன்.பிறகு உற்று நோக்கும் போது தான் தெரிந்தது அவர்கள் கிழித்தது இந்த மதுவை அல்ல அந்த மதுவை என்று.அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன்.

       இரண்டு நாட்களாய் எழுந்த பரபரப்பில் 'என்னங்க இந்த சந்திப்பு முடியறவரைக்கும் பேசாம பேரை மாத்தி வச்சுக்குங்க இந்த கிழி கிழிக்கிறாங்க' என்று என் மனைவி கிண்டலாக சொல்லிக் கொண்டிருக்க அருமை நண்பர் மெட்ராஸ்பவன் சிவக்குமார் தன்னுடைய ஒரு பதிவில் பிளாஷ் நியூஸ் என தலைப்பிட்டு எனது பெயரையும் மாற்றி உலகிற்கு அறிமுகப்படுத்தி என் நிலையையும் சொல்லிவிட்டார்.

      பதிவர் சந்திப்பு ஏற்பாட்டு குழுவில் உள்ள மதுமதி என்கின்ற அவரது பெயரை 'மோர்'மதி  என்று தற்காலிகமாக மாற்றியுள்ளோம்.இந்த மாற்றங்களைக் கண்டு கலவரம் அடையாமல் தோழர் மோர்மதி தொடர்ந்து விழா ஏற்பாடுகளில் இயங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். (பாவம் மனுஷன் சீக்கிரம் சந்நியாசம் வாங்கிட்டு நேபாளம் போயிடுவார் போல)

        இதை வாசித்தவுடன் ஹாஹாஹா என்று சிரித்தேன்.சிரிப்பு வந்தால் நீங்களும் சிரிக்கலாம்.

          ஒரு வழியாக மதுவை எல்லோரும் சேர்ந்து அன்றைய நாளில் ஒழித்து விட்டோம்.

என்னை நோக்கிய பதிவர்கள்:

நேற்றைய மதுமதி
இன்றைய மதுமதி
       
       விழாவிற்கு வந்திருந்த 90 சதவீத பதிவர்கள் என முகத்தை புகைப்படம் வாயிலாக பார்த்திருப்பார்கள். வந்தவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்றேன்.என்னை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை போலும் 'நான் தான் மதுமதி நான் தான் மதுமதி' என்று சொல்லி அறிமுகமாக எல்லோரும் என்னை மேலும் கீழுமாக பார்க்க ஆரம்பித்துவிட்டனர். ஏன் இப்படி ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் பார்க்கிறார்கள் என யோசித்த போது ஒரு பெண் பதிவர் சொன்னார்.

        "ஆறடி உயரத்தில் முகம் முழுவதும் தாடி வைத்த படி மதுமதி இருப்பார் என்று நான் உள்ளிட்ட எல்லோருமே எதிர்பார்த்தோம். இப்படி தாடியும் இல்லாமல் 5 அடி உயரத்தில் இப்படி வந்து நின்னா யாருக்கு அடையாளம் தெரியும்..அடையாள அட்டையை பாக்கெட்ல மாட்டாம அதைக் கழட்டி நெத்தியில் ஒட்டிக்கங்க"

       என்று சொல்லி ஒரு பெண் பதிவர் சிரிக்க 'ஆஹா தாடி கூட வளர்த்துக்கலாம்.இன்னும் ஒரு அடி வளராமல் போய் விட்டோமே' என்று என்மேல் கோபமே வந்தது(வாய்ப்பில்லை அவ்வளவுதான்)இதை விட காமெடி என்னவென்றால் மருத்துவர் மயிலனோடும் மனிதாபிமானி ஆஷிக்கோடும் கைகுலுக்கி அவர்களை அண்ணார்ந்து பார்த்து எனது கழுத்து சுளுக்கிக்கொண்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

       இன்னுமொரு  கூத்தென்றால் மாலை விழா முடிந்து ஒரு பதிவர் என்னிடம் வந்து 'சார் மதுமதி சார் இதுல யாரு'ன்னு கேட்டாரு பாருங்க..நான் அப்படியே ஷாக்காயிட்டேன். 
     
        அசிங்கமா தாடியோடு இருக்க வேண்டாம் அழகா அஜீத்குமார் மாதிரி விழாவுல கலந்துக்கலாமுன்னு தாடியை துறந்து 250 ரூபா செலவு பண்ணி 'பேஷ் பிளீச்சிங்' பண்ணிணதெல்லாம் வீண் என்று நினைக்கும் போது 'அடடா வடை போச்சே' என்று நினைக்கத்தான் தோன்றுகிறது.

         2 வருஷமா பதிவுலகில் டி.ஆராய் வலம் வந்தவர் திடீரென்று தாடியை எடுத்துவிட்டு மாப்பிளை கெட்டப்புல வந்த மர்மம் என்னன்னு சி.பி.செந்தில் குமார் அவரோட பதிவுல கேட்டிருந்தார். அதெல்லாம் ஒண்ணுமில்லை புதிய தோற்றத்துத்துல காட்சி அளிக்கலாம்ன்னு முயன்றேன்.காட்சிப்பிழை ஆயிடுச்சு..

        கடந்த பத்து வருட காலங்களில் தாடியில்லாமல் இருந்தது மொத்தமே பத்து நாட்கள் தானிருக்கும் அதில் அன்றைய நாளும் ஒன்று.

         அதற்குப்பிறகு தான் ஒன்றை தெரிந்து கொண்டேன்.மேடை ஏறி பேச ஆரம்பித்தபோதே 'மக்களே நான் தான் மதுமதி' என்று இரண்டுமுறை கூவியிருக்கலாம்.யாரோ ஒருவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கிறார் என்றே வந்த பதிவர்கள் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.இப்ப சொல்றேன்..மக்களே நான் தான் மதுமதி நான் தான் மதுமதி.

                                                                                                                                         நன்றியுடன்,
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

81 comments:

 1. //மாலை விழா முடிந்து ஒரு பதிவர் என்னிடம் வந்து 'சார் மதுமதி சார் இதுல யாருன்னு கேட்டாரு பாருங்க..நான் அப்படியே ஷாக்காயிட்டேன்.//

  படிக்கிறப்ப சிரிப்பு தாங்கலை :)

  //இதை விட காமெடி என்னவென்றால் மருத்துவர் மயிலனோடும் மனிதாபிமானி ஆஷிக்கோடு கைகுலுக்கி அவர்களை அண்ணார்ந்து பார்த்து எனது கழுத்து சுளுக்கிக்கொண்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்//

  மயிலனோடு உங்களை சேர்த்து ஒரு படம் எடுக்க துடித்தேன். நீங்க தப்பா நினைசுப்பீங்க என தான் கேட்கலை

  //ஆறடி உயரத்தில் முகம் முழுவதும் தாடி வைத்த படி மதுமதி இருப்பார் //

  ஆமாங்க உங்க ப்ளாகில் டாப்பில் உங்க படம் பார்த்தால் நீங்க செம ஹைட் என்று தான் தோனுது

  //மேடை ஏறி பேச ஆரம்பித்தபோதே 'மக்களே நான் தான் மதுமதி' என்று இரண்டுமுறை கூவியிருக்கலாம்//

  க்கும்...நீங்க ஏறி எல்லாரையும் இன்ட்ரோடியூஸ் பண்ணீங்க. உங்களை யாரும் அறிமுகம் பண்ணலை; உங்களுக்கு முதலில் யாராவது ஏறி தொகுப்புரை வழங்க தோழர் மதுமதியை அழைக்கிறேன்னு சொல்லிருக்கணுமோ ? :)

  ReplyDelete

 2. //மக்களே நான் தான் மதுமதி நான் தான் மதுமதி.//

  உங்க நிலைமை அச்சச்சோ......


  'மோர்'மதி மீண்டும் மதுமதி வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. எப்படியோ நீங்க டென்ஷனில் இருந்து விடுபட்டது இந்த பதிவில் தெரிகிறது மகிழ்ச்சி. உங்களுக்கு எல்லா விதத்திலும் ஊக்கம் தரும் உங்க மனைவியை நீங்க விழாவுக்கு அழைச்சிட்டு வந்திருக்கலாம். அட்லீஸ்ட் மதியத்துக்கு மேலாவது வர சொல்லிருக்கலாம். வீடு பக்கத்தில் தானே?

  ReplyDelete
  Replies
  1. அவர் ஆங்கில பதிவர் என்ற காரணத்தினால் அவரும் வர விரும்பவில்லை நானும் வற்புறுத்தவில்லை.

   Delete
  2. அட அவங்க பதிவரா? இது தெரியாதே? குடும்ப உறுப்பினர் பதிவரா இருந்தா தான் வரணுமா என்ன? சரி விடுங்க

   Delete
 4. ஹா..ஹா..ஹா... உண்மையில் அடையாளம் தெரியவில்லை.

  ReplyDelete
 5. அற்புறம் தாடியை எடுத்த பிறகு மாப்பிள்ளை மாதிரியா...

  அதுக்கு ஒரு ரைட்டு...

  ReplyDelete
  Replies
  1. ஹலோ..அதை நான் சொல்லலைங்க சி.பி.சொன்னாரு..

   Delete
 6. இப்படியெல்லாகூட மதுவை ஒழிக்கலாமா...

  அப்படியென்றால் மதுவை ஒழிக்க முதல் கட்டமாக தங்கள் பெயரில் உள்ள மதுவை நிரந்தரமாக நீக்குமாறு தீர்மானம் போடப்படுகிறது...

  ReplyDelete
 7. நீங்க தாடி எடுத்துவிட்டு வருவீர்கள் என்ற தகவல் எனக்கு கிடைத்தது அதனால்தான் நான் பயந்து போய் விழாவிர்கு வரவில்லை

  ReplyDelete
 8. பதிவர் விழாவின் வெற்றிக்கு வாழ்த்துகள்.

  //"ஆறடி உயரத்தில் முகம் முழுவதும் தாடி வைத்த படி மதுமதி இருப்பார்//
  ஆதியில் இருந்த மதுமதியாக இல்லாமல் நடிகர் ‘ஆதி’ போல் இருக்கிறீர்கள் (புகைப்படத்தில்).

  மது என்றால் தேன் என்றும் பொருள் உண்டு. நீங்கள் அந்த வகை என்று அனைவரும் அறிவார்கள். அதனால் ’மது’விலக்குத் தேவையில்லை.

  ReplyDelete
  Replies
  1. அஜித் போல் இருக்கிறேன் என நினைத்தேன்.ஆதி போல இருப்பதாய் சொல்லிவிட்டீர்கள்.எப்படியோ நாயகனைப்போல இருக்கிறேன்..ஹாஹாஹா..

   Delete
 9. ஐயொ அதென்ன நான் அடிச்ச கமெண்ட் அடிச்சுட்டு இருக்கும்போதே விட்டலாச்சாரியார் படம் போல மறைந்து காணாமல் போகிறதே :( என்னாச்சு?

  ReplyDelete
  Replies
  1. கண்டுபிடிச்சு கீழே போட்டுட்டீங்களே..

   Delete
 10. உங்களை கண்டு எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனக்கென்னமோ தாடியில்தான் நீங்க சினிமா பாடலாசிரியர் போல இருக்கீங்க. தாடியில்லாம ஒரு டீச்சர் போல இருக்கீங்க

  ReplyDelete
  Replies
  1. ஆம்..செய்யும் தொழிலுக்கான தோற்றம் தேவை ராஜி..

   Delete
 11. ஒரு மகளுக்கு தகப்பன் எப்படி திருமணத்தை பொறுப்பா நடத்தி முடிப்பானோ! அதுப்போல விழாவை மிகச்சிறப்பா நடத்தி முடிச்சுட்டீங்க. நன்றிகளுடன் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க..என் மகள் கல்யாணத்திற்கு முன்னோட்டமாக எடுத்துக் கொள்கிறேன்.

   Delete
 12. ஹா ஹா ஹா செம காமெடி போங்க.... நான் நிக்கிறேன் நான் நிக்கிறேன் நான் நிக்கிறேன் மாதிரி இருக்கு உங்க முடிவு

  ReplyDelete
 13. தோழருக்கு வயச குறைக்கனும்னு மனசு சொல்லுச்சோ..?

  இந்த வயசான பதிவர்களை உள்ள விடாதிங்கப்பா...

  ReplyDelete
  Replies
  1. அப்படின்னா என்னையும் உங்களையும் இனிமே உள்ள விடமாட்டாங்க..ஹாஹாஹா..

   Delete
 14. சார் விழாவை நேரலையில் கண்டேன்
  விழா சிறப்பாய் அமைந்ததில் மகிழ்ச்சி
  உங்கள் பங்களிப்பும் மற்ற தோழிகளின் பங்களிப்பும்
  வியக்கத்தக்கது சார்

  ReplyDelete
 15. உயரமோ, அழகோ, மற்றவைகளோ தேவையில்லை... சிறப்பாக விழாவை நடத்தி முடித்தீர்கள் சார்... அதற்கு பெரிய சல்யூட்...

  ReplyDelete
 16. உண்மையில் உங்களை நேரில் பார்த்தபோது, (தாடியை எடுத்துவிட்டதால்) அடையாளம் தெரியவில்லை. நீங்கள் வந்து அறிமுகப்படுத்திக் கொண்டிராவிட்டால் மேடையில் நீங்கள் பேசும்போதுதான் யாரெனத் தெரிந்திருக்கும். மீண்டும் தாடி வளர்க்க உத்தேசமா? ஏனெனில் தாடியில் நீங்கள் மேலும் அழகாக இருக்கிறீர்கள் என்பது என் கருத்து.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா.. உங்கள் சொல்படி நடக்கிறேன்.இனி தாடி வைத்துக் கொள்கிறேன்..

   Delete
 17. மதுமதி என்ற அழகான பெயரை ஆளாளுக்கு மதுவை ஒழிப்போம்னு சொல்லி சொல்லி உங்களை ஒரு வழி பண்ணிட்டது சிரிப்பு வந்துவிட்டது மதுமதி படிக்கும்போதே..

  ஆமாம் உங்க இந்த பதிவு படிக்கும்போது வலது பக்கம் ஒரு தம்பி இருக்காரே யாருப்பா அது?? உங்களைப்போல என்று சொல்லவே முடியலையே.. அப்படியே பயங்கர வித்தியாசம்பா நேற்றைய மதுமதிக்கும் இன்றைய மதுமதிக்கும்... அதுக்கு நீங்க எடுத்துக்கிட்ட சிரத்தை எல்லாம் செம்ம எக்ஸ்பளனேஷன் தான் போங்க... அஜீத் போல கஷ்டப்பட்டு உருமாறி வந்ததால் தான் மதுமதியைப்பற்றி மதுமதி கிட்டயே கேட்டிருக்காங்க...

  இயல்பே அழகு... பொன்னை புடம் போட்டது போல் கொஞ்சம் ஃபேசிங் ப்ளீச்சிங் எல்லாம் செய்து வந்தாலும் அழகு தான்.. என்ன ஒன்னு நீங்க ரெண்டு பேருமே ஒன்று தான் என்று அறிய கொஞ்சம் இல்ல அதிகமாவே சிரமப்பட்டுட்டிருப்பாங்கப்பா... எனக்கு அடையாளமே தெரியலை உங்கள் இந்த புதிய தோற்றம்.. ஆனாலும் அருமைப்பா...

  நான் வந்திருந்தாலும் இதே போல சொதப்பி இருந்திருப்பேன் கண்டிப்பா.. உங்கக்கிட்டயே வந்து மதுமதியை எங்காவது பார்த்தீர்களா அப்டின்னு.... ஆகமொத்தம் “ டாக் ஆஃப் த டவுன் “ ஆகிவிட்டதே மதுமதி உங்க வித்தியாசம்.... ஆனாலும் மதுமதி நம்ம மதுமதி தான்...

  இத்தனை சிறப்பாக மாநாடு அதுவும் முதல் முறை குறைகளின்றி செய்ய எத்தனை உழைத்திருக்கவேண்டும்.. உங்களோடு சேர்ந்து இந்த மாநாட்டுக்காக பங்காற்றிய அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்பா....

  இயல்பாவே எந்த ஒரு விழாவோ அல்லது கல்யாணக்காட்சியோ நடக்கும்போது கண்டிப்பா உரசலோ சண்டையோ வாக்குவாதமோ பிரச்சனையோ எழும்... அப்ப தான் அந்த வைபோகம் முடிந்தமாதிரி ஒரு கணக்கு இருக்கும்னு பெரியவங்க சொல்வாங்க.... என் கல்யாணமும் இதில் தப்பவில்லை....

  ஆனால் அப்படி பிரச்சனை மனஸ்தாபம் குறை எதுவுமே எழாமல் பார்த்துக்கொள்ள எத்தனை சிரமப்பட்டிருப்பீங்கன்னு பதிவர் மாநாடு முடிந்ததும் எல்லோரும் சந்தோஷப்பதிவு போட்டப்போது உணரமுடிந்தது... அதற்கு காரணம்... கல்யாணம்னா ரெண்டு வீட்டினர் கலந்துக்கொள்ளும் வைபோகமா இருப்பதால் தான் பிரச்சனை... ஆனால் இந்த பதிவர் மாநாடோ ஒரே குடும்பத்து உறவுகளின் திருவிழா அல்லவா? அங்க எப்படி பிரச்சனை வரும்? குறைகள் எழும்? மனஸ்தாபம் வரும்?

  சந்தோஷ அலைகள் எல்லோர் முகத்திலும்.... பதிவர் மாநாடு நிறைவாய் முடிந்தபோதே எல்லோர் மனதிலும் கண்டிப்பாக எழுந்த வார்த்தை என்னவாக இருக்கும் தெரியுமா மதுமதி?

  இனி ஒவ்வொரு வருடமும் இப்படி ஒரு விழா நடந்து நம் எல்லோர் உறவுகளையும் அன்பால் இணைக்க வழி வகுத்த இந்த பதிவர் மாநாடு நடக்குமா என்ற ஏக்கம் தான் எல்லோர் மனதிலும் இருந்திருக்கும் கண்டிப்பா.....

  இந்த பதிவர் மாநாட்டில் நான் உள்பட கலந்துக்கொள்ளாதவர் மனதில் எழுந்த ஏக்கம் என்னவாக இருந்திருக்கும் தெரியுமா? அடுத்த பதிவர் மாநாட்டிலாவது நாம் கலந்துக்கொண்டு நம் உறவுகளை காணும் வாய்ப்பு கிடைக்குமா என்பது தான்....

  அத்தனை சிறப்பு மதுமதி, இதற்காக உழைத்த உங்களுக்கும், கணேஷ், இன்னும் பெயர் தெரியாத முகம் தெரியாத அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த அன்பு நன்றிகள்பா....

  நிஜம்மா அடுத்த பதிவர் மாநாடு நடக்கும் தானே? அப்ப கண்டிப்பா நாங்க எல்லோரும் கலந்துப்போம் தானே?

  ReplyDelete
  Replies
  1. //நிஜம்மா அடுத்த பதிவர் மாநாடு நடக்கும் தானே? அப்ப கண்டிப்பா நாங்க எல்லோரும் கலந்துப்போம் தானே?//

   நிச்சயம் சகோதரி.அடேங்கப்பா.இவ்வ்வ்வ்வ்வ்வ்ளோ பெரிய கமென்டா?
   இவ்ளோ பெருச எப்டீங்க காக்கா தூக்கும்.?

   Delete
  2. காக்கா ஊச் தாம்பா.... மறுபடி டைப் செய்து தான் போட்டேனாக்கும்...

   உங்க பதிவும் உங்க படங்களும் என் கணவருக்கும் அம்மாவுக்கும் காண்பித்தேன். இருவரும் சிரிச்சுட்டே இருந்தாங்கப்பா..

   அடுத்த மாநாடு ப்ளீஸ் ப்ளீஸ் ஜுன் மாசத்துல வைங்கப்பா எங்களுக்கு அப்ப தாம்பா லீவ் கிடைக்கும்...

   Delete
 18. மதுமதி அவர்களுக்கு வணக்கம்! இந்த பதிவர் சந்திப்பிற்கு துவக்கால சிந்தனைகளைத் தூவி செயல்பட்ட உங்களுக்கும் மற்றும் பாலகணேஷ், சென்னை பித்தன், புலவர் இராமானுசம், தென்றல் சசிகலா ஆகியோருக்கும், சிறப்பாகச் செய்த அனைவருக்கும் நன்றி!

  பதிவர் சந்திப்பு ஏற்பாட்டில் முழ்கியதால் நீங்களே உங்களை அடையாளம் காட்டாமல் இருந்து விட்டீர்கள். நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே உங்கள் வலைப் பதிவின் தலைப்பிலுள்ள தாடியோடு உள்ள புகைப்படத்தை மாற்றி இருந்தால் இந்த குழப்பம் வந்து இருக்காது. “ TO BE OR NOT TO BE “ என்பது போல, இனி நீங்கள் தாடியுடன் அல்லது தாடி இல்லாமல், எவ்வாறு என்பதனை குடும்பத்தாருடன் முடிவு செய்து கொள்ளவும்.

  ReplyDelete
  Replies
  1. //பதிவர் சந்திப்பு ஏற்பாட்டில் முழ்கியதால் நீங்களே உங்களை அடையாளம் காட்டாமல் இருந்து விட்டீர்கள். நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே உங்கள் வலைப் பதிவின் தலைப்பிலுள்ள தாடியோடு உள்ள புகைப்படத்தை மாற்றி இருந்தால் இந்த குழப்பம் வந்து இருக்காது//

   ஆமாம் ஐயா.நீங்கள் சொன்னது போல செய்திருக்க வேண்டும்.

   Delete
 19. வணக்கம் தோழர்... ஹி ஹி ஹி...தலைப்பை பார்த்து என்னமோ ஏதோ நினைத்தேன்...கலாய்த்து விட்டீர்கள்

  ReplyDelete
 20. ம்ம்ம்.. தாடி இல்லாம பார்க்கும் போது அடையாளம் தெரியலை தான்!

  ReplyDelete
  Replies
  1. தாடி வளத்திட்டா போச்சு.

   Delete
 21. தாடியோட பார்க்கறப்ப ஒரு தாகூர் கலை தெரியுது..

  ReplyDelete
 22. அந்த மது நீங்க தானா ? சொல்லியிருந்தா அன்னைக்கே மேடையில ஒரு விவாதம் வச்சிருக்கலாம் சார் ..

  ReplyDelete
 23. நானும் பதிவர் சந்திப்பு பற்றிய புகைப்படங்கள் பார்த்தேன்.
  முதலில் தாடியில்லாத உங்களை அடையாளம் தெரியவில்ல.
  பெயர்களைப் படித்தபின் தான் தெரிந்தது.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் குழப்பமா?

   Delete
 24. ஹாஹாஹா.......... மோர் மதி. தாடியில்லாமல் ஒகேதான். கலக்குங்கள். ஆனால் அஜித் என்பதெல்லாம் எங்களுக்கு நீங்கள் கொடுக்கும் `ஷாக்’ நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன். பதிவு பயங்கர நகைச்சுவை.

  ReplyDelete
 25. அடடா என் சகோவை இப்பயெல்லாமா கிண்டல் செய்தார்கள் .

  ReplyDelete
 26. நல்ல நகைச்சுவையான பதிவு! நன்றி!

  இன்று என் தளத்தில்!
  கழுதை கௌரவம் கிடைக்கலேன்னா!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_29.html
  ஹன்சிகா ரகசியங்கள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_7318.html

  ReplyDelete
 27. ஒருபக்கம் சிரிப்பு இன்னொரு பக்கம் கவலையாகவும்
  இருக்கிறது தங்கள் பகிர்வைக் கண்டு .அதிலும் மது
  மோராய் மாற்றப்பட்ட செய்தி கேட்டு தாங்க முடியவில்லை
  சிரிப்பு :):) வாழ்த்துக்கள் சகோ நீங்கதான் மதுமதி என
  இந்நேரம் ஒத்துக்கொண்டிருப்பார்கள் :)

  ReplyDelete
  Replies
  1. அப்ப நீங்களும் சிரிச்சீங்களா?

   Delete
 28. இரசிக்கும்படியான பதிவு !!! மது சர்ச்சையில் உங்க பேர் அடிப்பட்டதன் மர்மம் இதுதானா ?

  தாடியில்லாமல் நல்லாத் தான் இருக்கீங்க ! ஆனால் அடையாளமே தெரியவில்லை என்பது தான் உண்மை ... !!! டி.ஆரே தாடி இல்லாமல் வந்தால் நாம் நம்ப மாட்டோம் தானே !!!

  ReplyDelete
 29. வேர் இஸ் மை முதல்ல போட்ட கமெண்ட் மிஸ்டர் மதுமதி?... எனி காக்கா பிராப்ளம்?...

  ReplyDelete
  Replies
  1. காக்காவும் இல்ல குருவியும் இல்ல..இதுதான் உங்க முதல் கமெண்ட்..

   Delete
 30. அப்படியா... அப்ப வேற எங்கயோ போட்டுட்டு இங்க தேடிட்டிருந்திருக்கேன் போல...

  நீங்க தாடியெடுத்துட்டு மாறுவேசத்துல வந்ததால உங்களை தெரிஞ்ச பலபேருக்கு உங்கள அடயாளம் தெரியல... நான் மொட்டயடிச்சி தலைக்கு தொப்பி போட்டுகிட்டு மாறுவேசத்துல வந்ததால, என்னை திஞ்ச சிலபேருக்கும் என்னை அடயஆளம் தெரியல... என்னத்த சொல்ல மனச தேத்திக்க வேண்டியதுதான்....

  ReplyDelete
  Replies
  1. //என்னை திஞ்ச சிலபேருக்கும்//
   அப்படின்னா என்னங்க?

   Delete
  2. ஆமாங்க மனச தேத்திக்க வேண்டியதுதான்.

   Delete
  3. திஞ்ச=தெரிஞ்ச .. மிஸ்டீக்கு ஆயிடுச்சி

   Delete
  4. ஓ ஓ மிஸ்டீக்கா?

   Delete
 31. விழாவை சிறப்புடன் நடத்தியமைக்கு பாராட்டுக்கள் சார்

  ReplyDelete
  Replies
  1. மதிய உணவு சிறப்பாக செய்தமைக்கு பாராட்டுக்கள் சார்

   Delete
 32. விழா சிறப்பாக நடத்ததாக அனைவரும் சொன்னார்கள் .. தவிர்கமுடியாத காரணத்தால் வர இயலவில்லை ..( திடிரென வைத்து விட்டனர் ) உங்களுக்கு அன்று மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன் ... ஆனால் நீங்கள் கிடைக்கவ்வில்லை

  ReplyDelete
 33. //'நான் தான் மதுமதி நான் தான் மதுமதி' என்று சொல்லி அறிமுகமாக எல்லோரும் என்னை மேலும் கீழுமாக பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.//

  சார் உங்க நிலைமை இப்படி ஆகிவிட்டதே!!!விழாவை சிறப்பாக நடத்தியமைக்கு பாராட்டுக்கள் சார்...

  ReplyDelete
 34. நிறைய பதிவுகள்-ல மதுமதின்னு பேர் போட்டு வேற யாரோட படத்தையோ போடறாங்களேன்னு நினைச்சேன்... :))

  விழா சிறப்பாக நடந்தது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி நண்பரே... விரைவில் சந்திக்க முயல்கிறேன்.

  ReplyDelete
 35. தாடி இல்லாமல் உங்களை கற்பனையில் பார்க்கும் எனக்கே இந்த சந்தேகம் என்றால் அந்த பதிவர் யார் சார் மதுமதி என்று கேட்டதில் தப்பில்லை அடிக்கடி படத்தை மாற்றுங்கள்§ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ!

  ReplyDelete
 36. தோழரே...
  இனி தாடி வைக்கும் எண்ணம் இருக்கா? அப்படின்னா அதன் ரகசியம் என்ன?


  பிரபல பதிவர் கேபிள் சங்கரின் பேட்டி நமது தமிழ்வாசியில் விரைவில் வெளியாக உள்ளது. அவரிடம் கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். மேலும் விவரங்களுக்கு:

  கேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Cable Sankar Exclusive Interview

  ReplyDelete
 37. அட..ஆமாங்க..நானும் தாடி வச்ச டி ஆர் தான் நம்மளை வரவேற்பார்ன்னு நினைச்சேன்..ஆனா நடந்தது வேற..எங்களை ஏமாத்தி புட்டீர்..தாடி வைங்க..அதுதான் உங்களுக்கு அழகா இருக்கு...ஏன்னா நீங்க தான் கவிஞர் ஆச்சே...
  அப்புறம் உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி..சிறப்பாய் ஏற்பாடு செய்து இருக்க்ரீர்கள்..சக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 38. அட்டகாசமான எழுத்து. ரசிச்சு படிச்சேன் சார். எப்படி இவ்வளவு நாள் உங்கள மிஸ் பண்ணேன் தெரியலை.

  ReplyDelete
 39. உண்மைதான் நண்பரே மதுமதி... நானே உங்களை அப்படித்தான் கேட்டேன்...உங்களுக்கு ஞாபகம் இருக்குமென்று நினைக்கிறேன்...இருந்தாலும் நீங்க நீங்கதான்...பாராட்டுக்கள்...

  ReplyDelete
 40. அன்பின் மதுமதி - தலைப்பினைப் பார்த்த உடன் பயந்தேன் - படித்த வுடன் மகிழ்ந்தேன் . நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

கணித பாடத்திட்டம்

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

காலமும் வேலையும்

எண்ணியல்

Followers

மீ.சி.ம

Popular Posts

சராசரி

Google+

Tips Tricks And Tutorials

வயது கணக்கு

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com