உன்னைக் காதலித்த
தருணங்களில்
நீதான் என் கணவனென்று
என்னை முழுவதுமாக
உன்னிடத்தில் ஒப்படைத்தேன்..
திருமணம் புரிந்து
ஓராண்டு கழிந்ததும்
என்னைத் திருப்பிக் கொடுத்துவிட்டாய்..
*****
நீ பிரிந்தால்
நான் இறந்து விடுவேன் என்று
நீ சொன்ன வார்த்தைகள்
செவிகளில் இப்போதும்
ஒலித்துக் கொண்டிருக்கிறது..
நான் தான் தவறாக
புரிந்து கொண்டேன்..
நீ பிரிந்தால்
நான் இருந்து விடுவேன் என்றே
சொல்லியிருக்கிறாய்..
*****
பெற்றோரைப் பகைத்து
உன்னோடு வரும்போது
அழுதுகொண்டேயிருந்தேன்..
"அழுது அழுது இப்போதே
கண்ணீரைத் தீர்த்து விடாதே
மிச்சம் வை" என்று
நீ விளையாட்டாய் சொன்னாய்.
உண்மையைத் தான் சொல்லியிருக்கிறாய்..
நீ சொன்னபடி மிச்சம் வைத்ததால் தான்
இப்போது கண்ணீர் சிந்த முடிகிறது..
நானும் நீயும்
ஐநூறு ஆண்டுகள்
சேர்ந்து வாழப்போகிறோம் என்றாய்.
ஐநூறு நாட்கள் என்பதற்கு பதிலாய்
அவரசத்தில் ஐநூறு ஆண்டுகள் என்று
சொல்லிவிட்டாய் போலிருக்கிறது..
*****
ஒருவரை ஒருவர்
புரிந்து புணர்வதுதான்
காதலுக்கு இலக்கணம் என்றாய்..
பாவம்..
இலக்கணத்தை
மறந்து விட்டாயென நினைக்கிறேன்..
*****
என்னோடு நீயில்லை என்றால்
செத்து விடுவேன் என்றாய்..
என்னோடு நீயிருந்தால்
செத்து விடுவேன் என்கிறாய்..
வார்த்தைகள் மட்டும் மாறவில்லை..
வாழ்க்கையே மாறிவிட்டது.
*****
என்னை உந்தன்
காதலியாக்கிக் கொள்ள
இரண்டு வருடங்களாய்
என்னப் பின் தொடர்ந்த உன்னால்
மனைவியாக்கிக் கொண்டு
இரண்டு வருடங்கள் கூட
என்னை பின் தொடரமுடியவில்லை..
காதலுக்குத்தான்
கண்ணில்லை போலும்..
*****
நீ சொல்வதை நான் கேட்பேன்..
பெற்றோரைப் பிரிந்து வா
திருமணம் செய்து கொள்ளலாம் என்றாய்..
வந்தேன் மனைவியானேன்..
பெற்றோரிடமே செல் என்றாய்..
நீ சொன்னதை நான் மறுக்கவில்லை
சென்றுவிட்டேன்..
*****
காதலித்து திருமணம் செய்பவர்களுக்கு
உதாரணமாய் வாழலாம் என்று
ஆசைப்பட்டிருந்தேன்..
காதலித்து மணமுடித்தால்
இப்படித்தான் என்பதற்கு
என்னை உதாரணமாக்கிவிட்டாய்..
*****
கல்யாணம் செய்யவும்
நீயாக முடிவெடுத்தாய்..
குடும்பம் நடத்தவும்
கூடியிருக்கவும்
உன் தாயைக் கேட்டு
முடிவெடுக்கிறாய்..
முதலிரவு அறையில்
உன் மடியில் என்னை சாய்த்துக் கொண்டு
நீதான் என் குழந்தை என
கொஞ்சி மகிழ்ந்தாய்..
உன் அன்பில்..
உன் அரவணைப்பில்..
அப்படியே செத்து விடலாம்
என்றே தோன்றியது..
தவறு செய்து விட்டேன்..
அப்போதே செத்திருக்க வேண்டும்..
அப்போதே செத்திருக்க வேண்டும்..
உன்னைத் தாயாக பார்க்கிறேன்
என்று என்மீது காதலை சொரிந்தாய்..
என்னைத் தாயாக்கி
பார்க்க முடியாததால் தானே
என் மீதான காதலை துறந்தாய்..
*****
காதலித்தேன்..
மனைவியாகச் சொன்னாய்..
மனைவியானேன்..
தாயாகச் சொன்னாய்..
தாயாகவில்லை..
உன் பெற்றோருக்கு
நீ குழந்தையாகவே இரு என்று
அனுப்பி வைத்தாய்..
*****
ஆனால்..
உனக்கு தந்தையாக ஆசை..
உன் குழந்தைக்கு தாயைத்தேட
நான் தடையாய் இருக்க
எனக்கு ஆசையில்லை..
*****
நீ எத்தனையோ
கடிதங்கள் எனக்கு எழுதியிருக்கிறாய்.,
என் காதலை கேட்டு...
கடைசியில் ஒரு கடிதம் எழுதியிருந்தாய்.,
உன் காதலைக் கேட்டு..
நானும் கொடுத்து விட்டேன்..
நாம் புரிந்த விவாகம் ரத்தாகிவிட்டதாம்..
*****
இதோ..
இருபத்தைந்து வருடங்கள்
ஓடிவிட்டன..
உன் வீட்டு முகவரியிலிருந்து
என் வீட்டு முகவரிக்கு
ஒரு கடிதம் வந்தது..
ஆவலாக பிரித்துப் பார்த்தேன்..
உன் மகளின்
கல்யாணப் பத்திரிக்கை..
சந்தோஷத்தில் மூச்சடைத்தது.
என் மகளின்
கல்யாணப் பத்திரிக்கையை
கண்டது போல பூரிப்படைந்தேன்..
*****
மணமகளின் பெற்றோரென
உனது பெயரையும்
உன் மனைவியின் பெயரையும்
நிறைய முறை வாசித்தேன்..
அன்றோர் நாள்
மிச்சம் வைக்கச் சொன்னாயே
அந்த கண்ணீரை
இப்போது முழுவதுமாய்
கொட்டித் தீர்த்தேன்...
*****
என் காதலும்
என்னோடு சேர்ந்து
கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது...
ரெம்ப அருமையான உணர்வுபூர்வமான க(வி)தை
ReplyDeleteசில நாட்களின் இடைவெளி இறந்தாலும்
மனதை வருடும் கவிதையோடு வந்து இருகிறீர்கள் கவிஞரே
நீங்கள் சொன்னதுபோல்
இங்கு நிறைய காதல் அப்படித்தான் இருக்கிறது
அதனால்தான் மனைவியை காதலிக்க முடிவெடுத்து
காதலித்துக் கொண்டு இருக்கிரும் நானும் என்னை போல் சிலரும்
கவிதையினுடாக ஒரு சிறுகதையும் சொல்லியிருக்கிறீர்கள். உணர்வுகள் மனதில் தைத்தன. நன்று.
ReplyDeleteஉங்களின் அஞ்ஞாத வாசம் ஏன் என்றுதான் புரியவில்லை கவிஞரே... எனினும் நீங்கள் பிஸியாக இருப்பதில் மகிழ்கிறேன் நண்பா...
உயிரைத் தின்று பசியாறுவும் கவிதை வடிவில் திருக்குறளும் படிக்க இயலவிலலையே என்ற ஆதங்கத்தில்தான் கேட்டேன். கோபிக்க வேண்டாம் தோழா...
ReplyDeleteஅட டா!
ReplyDeleteமிக மிக அருமை!
அந்த தாயோட-
கண்ணீரை போல-
எத்தனையோ கண்ணீர்கள்-
இந்த நிலை தொடர கூடாதுனுதான்-
பல தார மணம் எனும் முறை உள்ளது!
அதை கேவலமாக நினைப்பவர்களை-
என்ன சொல்வது!
கவிதையில்-
கலங்க வைத்து விட்டீர்கள்!
செய்தாலி..
ReplyDeleteரசித்தமைக்கும் உணர்ந்தமைக்கும் மிக்க நன்றி தோழர்..
நிகழ்காலத்தை உணர்த்தும் வரிகள் எத்தனை எத்தனை மலடிகளின் வாழ்வை படம் பிடித்து காட்டுகிறது வரிகள் .
ReplyDeleteகணேஷ்...
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கு நன்றி..
ஐயய்யோ..அஞ்ஞாதவாசம் எல்லாம் இல்லை..வெளிவேலை அதிகம் என்பதால் வலைப்பக்கம் வரமுடியவில்லை.நான் பிசியாக இருந்தால் நீங்கள் மகிழ்கிறீர்களே மிக்க நன்றி..
நாளை 'உயிரைத் தின்று பசியாறு' தொடரை பதிகிறேன்..அதைத் தொடர்ந்து திருக்குறளையும் இடுகிறேன்..உங்கள் எதிர்பார்ப்பிற்கு மீண்டும் நன்றி..
சீனி...
ReplyDeleteரசித்தமைக்கும் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தோழர்..
சசிகலா..
ReplyDeleteஆமாம் சகோதரி..வருத்தமாகத்தான் இருக்கிறது.
உணர்வுபுர்வமான உள்ளத்தை நெகிழ செய்த கவி.பாராட்டுக்கள்
ReplyDeleteஉணர்வு பூர்வமானக் கவிதை
ReplyDeleteமீண்டும் மீண்டும் படித்துத் துவண்டேன்
இழப்பின் சோகத்தை இதைவிட அழுத்தமாய்
சொல்வது கடினமே
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
காதலின் கொடுமையும்
ReplyDeleteமாமியார் கெடுபிடியையும் கவிதையில் உரித்து வைத்துளளீர்கள் அண்ணா.
அம்மாவின் செல்ல பிள்ளைகளுக்கு ஏன் காதல் ஏன் மனைவி?
என் காதலும்
ReplyDeleteஎன்னோடு சேர்ந்து
கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது...//கவி.பாராட்டுக்கள்
உணர்வுப்பூர்வமாக அருமையாக இருந்தது சார்.
ReplyDeleteபெண் கைகளில் அவள் வாழ்க்கை இல்லை என்பதை உங்கள் கவிதை உடைத்து சொல்லிவிட்டது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பதே காதல். ஆனால், இன்று?
ReplyDeleteவலி மிகுந்த கவிதை. கண்ணீர் சுரப்பை கட்டு படுத்த முடியலைங்க சகோ
ReplyDeleteஎன்னமோ சொன்னதெல்லாம் கேக்குற நல்ல பொண்ணுமாதிரி காதலிக்கச் சொன்னாய் காதலித்தேன் னு பேசுறீயே.....ஒங்க அப்பன்கூடத்தான் ஒழுங்கா படின்னு சொன்னாரு..படிச்சியா...???ஒங்க ஆத்தாகூடத்தான் ஒழுங்கா இருந்து எங்களோட மானம் மரியாதையைக் காப்பாத்துன்னு சொன்னா...கேட்டியா....???ஆனா எவனோ சொன்னாங்கிறதுக்காக காதலிச்சேன்னு சொல்லுறீயே...மவள ஒன்ன எல்லாம் வெட்டி போடனும்டீ....
ReplyDelete//நீ பிரிந்தால்
ReplyDeleteநான் இறந்து விடுவேன் என்று
நீ சொன்ன வார்த்தைகள்
செவிகளில் இப்போதும்
ஒலித்துக் கொண்டிருக்கிறது..
நான் தான் தவறாக
புரிந்து கொண்டேன்..
நீ பிரிந்தால்
நான் இருந்து விடுவேன் என்றே
சொல்லியிருக்கிறாய்..//
கவிதை மனதைக் கனக்க வைத்துவிட்டது சகோதரா.மிகவும் அருமை.
கண்ணீருடன்... பாராட்டுகிறேன்.
ReplyDeleteரமணி..
ReplyDeleteவருகைக்கும் ரசனைக்கும் நன்றி..
மனசாட்சி..
ReplyDeleteதங்கள் பாராட்டுக்கு நன்றி..
எஸ்தர்..
ReplyDeleteஆமாம் எஸ்தர் என்ன செய்வது..
மாலதி..
ReplyDeleteதங்கள் பாராட்டுக்கு நன்றி..
கோவை டூ தில்லி..
ReplyDeleteநன்றி சகோ..
ராஜி..
ReplyDeleteஆமாம் சகோ..எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பதே காதல்.ஆனால் இன்று?
சிரிப்பு சிங்காரம்..
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
சித்தாரா மகேஷ்..
ReplyDeleteதங்கள் ரசனைக்கு நன்றி..
இமா..
ReplyDeleteகண்ணீருடன் பாராட்டுகிறீர்கள்.. இந்நிலை சமுதாயத்தில் இன்னும் காணக்கிடைக்கிறது.என்ன செய்வது சகோ..
அந்தப்பெண்ணின் உணர்ச்சிகளை வெகு அழகாகக் கவிதை ஆக்கித் தந்துள்ளீர்கள். பலமுறைப் படித்தேன்.
ReplyDeleteபாவம் அந்தப்பெண். கண்ணீர் கவிதையாக உள்ளது.
பதிவுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள். நன்றிகள்.
பட்டம் உயர பறந்தாலும்
ReplyDeleteநூல் இன்னும் ஆண் கையில் தான்
இருக்கிறது ..........
பாரதியின் கனவு பலிக்கும் நாளை எதிர்பார்த்து காத்திருகிறது
பெண் மனம் .................
உணர்வுகளை வடிக்க தெரிந்திருக்கு உங்களுக்கு ............
வலிக்கிறது
வரிகளை
படிக்கும் போதே
நிகழ்வுகள்
கண்முன்
கனக்கிறது ............
தொடர்ந்து எழுதுங்கள் பாராட்டுக்கள் .....
இந்த உலகில் 99%
ReplyDeleteகாதல்
ஆண்களால் கொடுக்கப்பட்டு
ஆண்களால் பறிக்க படுகிறது...
எதார்த்த வாழ்க்கையை
எதார்த்த வார்த்தைகளால்
சொல்லிய உங்களுக்கு
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
அன்புடன்
ப.சுரேஷ்..