குடிசைவாசிகளும்
மனிதர்கள்தான் என்ற
உண்மையை
பொய்யென்று
சொல்லிச் செல்கிறது
வளர்ந்த சமூகம்..
தான் சுவாசித்தது போக
மிச்சக் காற்றை
சுவாசிப்பவன்தான்
குடிசைவாசி என்று
எவனோ ஒருவன்
இலக்கணம் சொல்லிவிட்டு
செத்திருக்கிறான்..
குடிசைவாசியை
வேற்றுகிரக வாசியாய்த்தான்
இவனும் இவன் பெற்ற
பிள்ளைகளும்
பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்..
தூரத்தில் நின்றபடி..
குடிசைவாசியும்
சேர்ந்ததுதான் சமூகம் என
பொய்ச்சத்தியம்
செய்துகொண்டிருக்கிறோம்..
சமூகத்தை விட்டு
வெளியேதான்
அந்தச் சமூகம்
நின்று கொண்டிருக்கிறது..
எனது ஓட்டுவங்கி
அதோ பார்! என்று
அரசியல்வாதியின்
சுட்டுவிரல் சுட்டும் பக்கம்
குடிசைப்பகுதிதான் இருக்கிறது.
தேர்தல் நேரங்களில் மட்டுமே
குடிசைப்பகுதிக்குள்
கதர்ச்சட்டைகளும்
காக்கிச்சட்டைகளும்
பயணிக்கிறது!
மற்ற நேரங்களில்
பாதை ம(றை)றந்து
விடுகிறது போலும்!
அடிப்படை உரிமைகள்
ஆறு என வரையறுக்கிறோம்..
ஆறில் ஒன்றையாவது
குடிசைவாசிக்குக் கொடுக்கிறார்களா?
அந்த ஆறினையும்
தனது அடிமைகளாகத்தான்
வைத்துக்கொண்டிருக்கிறது
வளர்ந்த சமூகம்..
வளர்ந்த சமூகம்
வளர்ந்துகொண்டேயிருக்கிறது.
இழந்த சமூகம்
இழந்து கொண்டேயிருக்கிறது...
-----------------------------------------------------
குடிசைகளில் வசிக்கும் ஏழை எளியோரின் கண்ணீர் !
ReplyDeleteசிந்திக்க வைக்கும் வரிகள் !
தொடர வாழ்த்துகள்...
நன்றி..
Deleteஇதுதான் நம்தேசத்தின் எழுதப்படாத வரலாறு...
ReplyDeleteஉண்மைதான் தோழரே..
Deleteதேர்தல் நேரங்களில் மட்டுமே
ReplyDeleteகுடிசைப்பகுதிக்குள்
கதர்ச்சட்டைகளும்
காக்கிச்சட்டைகளும்
பயணிக்கிறது!
மற்ற நேரங்களில்
பாதை ம(றை)றந்து
விடுகிறது போலும்!
//
கொடுமையான ஆனால் உண்மையான வரிகள்
நன்றி தோழரே..
Delete:( உண்மை! கசக்கும், உள்ளத்தைக் கசக்கும்! :( :(
ReplyDeleteஅழகாகச் சொன்னீர்கள்..
Deleteகடைசி வரிகள் நச்சென்று இருக்கிறது சகோ
ReplyDeleteநிலவரம் அபபடித்தானே..
Deleteநாட்டின் உண்மை நிலையைக் கவிதை காட்டுகிறது மதுமதி!
ஆமாம் ஐயா..
Deleteவின்வெளியில் தேடத் தேவையில்லை வேற்றுக் கிரகவாசிகளை..
ReplyDeleteதினமுன் கண் முன்னே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்...
ஆய்வுக்குப் பயன்படுத்தும் பணத்தை இந்த வேற்றுக் கிரகவாசிகளுக்குக் கொடுத்தால் புண்ணியமாவது மிஞ்சும்
அழகான வரிகள்
வலுத்தவன் ஜெயித்தான் இளைத்தவன் தோற்றான் என்பதுபோல் அரசியல்வாதிக்கு தேர்தல் நேரத்தில் மட்டுமே தெரியும் ,குடிசை வாசிகளைபற்றி பேசவும் மனது வேண்டும் உங்களைப்போல
ReplyDelete// வளர்ந்த சமூகம்
ReplyDeleteவளர்ந்துகொண்டேயிருக்கிறது.
இழந்த சமூகம்
இழந்து கொண்டேயிருக்கிறது...//
Rich gets richer poor gets poor என சுஜாத்தா அவர்கள் எழுதிய வசனம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.. சமூதாயத்தில் மாறவேண்டிய எத்தனையோ நிகழ்வுகள் இதுபோன்று.. பகிர்வுக்கு நன்றி நண்பரே..