புது வரவு :

ஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி

          ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்கள் கேட்கப்படுகின்றன.நாம் அதை பலமுறைப் படித்திருந்தும் வினாத்தளைப் பார்த்தவுடன் முற்றிலும் குழம்பிப் போய்விடுகிறோம்.அதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால் படிக்கும் முறைதான் தவறு என்பது தெரிய வரும்.பெரும்பாலும் தேர்வுக்கு படிப்பவர்கள் வினா விடைகளைத்தான் பெரும்பாலும் படிக்கிறார்கள்.அப்படி படிப்பது தவறில்லை.முழுமையாய்ப் பாடங்களை படித்துவிட்டு அப்படி படிக்கலாமே தவிர பாடங்களைப் படிக்காமல் வினா விடைகளைப் படித்தால் மனதில் நிற்காது. ஆதலால் வெறும் நூலாசிரியர் மற்றும் நூல்களைத் தெரிந்து கொள்ளாமல் முழுமையாகத் தெரிந்து கொண்டால் எப்படி வினா வந்தாலும் விடையளிக்கலாம்.டி.என்.பி.எஸ்.வீடியோ விளக்கம் காண இங்கே செல்லவும்.

ஆசிரியர் குறிப்பு:

மதுமதி.காம்

1.திரு.வி.கலியாண சுந்தரனார்

(திருவாரூர் விருத்தாச்சலனார் மகனார் கலியாண சுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க)

பெற்றோர்     :விருத்தாச்சனார்-சின்னம்மையார்

பிறந்த ஊர்    :காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம்.இப்போது          தண்டலம் என்றழைக்கப்படுகிறது.சென்னை போரூருக்கு மேற்கே உள்ளது.சிறப்பு             :மேடைத்தமிழுக்கு பாடுபட்டார்.தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் நலனுக்கும் பாடுபட்டார்.

பணி                :சென்னை ராயப்பெட்டை வெஸ்லி பள்ளியில் தமிழாசியராகப் பணியாற்றினார்.நவசக்தி முதலான இதழ்களில் ஆசிரியராக பணியாற்றினார்.

படைபபுகள்:மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்,பென்ணின் பெருமை,தமிழ்த்தென்றல்,உரிமை வேட்கை,முருகன் அல்லது அழகு போன்றவை

காலம்:26.08.1883-17.09.1953

சிறப்புப் பெயர்:தமிழ்த்தென்றல்

2.வாணிதாசன்

மதுமதி.காம்

இயற்பெயர்           :எத்திராசலு

பிறந்த இடம்         :புதுவையை அடுத்து வில்லியனூர்

பெற்றோர்              :அரங்க.திருக்காமு-துளசியம்மாள்'

சிறப்பு                      :ரஷியம்,ஆங்கிலம் போன்ற மொழிகளில் இவரது பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர்.

இவரது நூல்கள்  :"தமிழச்சி", "கொடிமுல்லை" ஆகிய சிறு காப்பியங்களையும், 'தொடுவானம்', 'எழிலொவியம்', 'குழந்தை இலக்கியம்' ஆகிய கவிதை நூல்களை வழங்கியுள்ளார். எனினும் 'வாணிதாசன் கவிதைகள்' என்னும் தொகுப்பே பெரும் புகழ் பெற்றது.

சிறப்புப் பெயர்கள்:கவிஞரேறு,பாவலர் மணி,தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்

காலம்:22.07.1915-07.08.1974

இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..
                          

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

1 comment:

  1. தகவலுக்கு நன்றி அண்ணா.

    அன்புடன்,
    அமர்க்களம் கருத்துக்களம்,
    www.amarkkalam.net

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com