புது வரவு :
Home » , , , , » தமிழ் சினிமாவை உலக சினிமாவோடு ஒப்பிடலாமா?

தமிழ் சினிமாவை உலக சினிமாவோடு ஒப்பிடலாமா?

    
         சிலர் உலக சினிமா பார்க்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு ஆங்கில மசாலா படங்களைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். உலக சினிமா என்றால் என்ன என்று தெரியாமலேயே அதைப் பற்றி விவரித்துக் கொண்டிருப்பார்கள்.சிலர் ஓரிரு கோடிகளில் எடுக்கும் சாதாரண தமிழ்ப்படத்தை சில நூறு கோடிகளில் எடுக்கும் ஆங்கிலப் படத்திற்கு இணை வைத்து பேசுவார்கள்.உலக திரைப்பட தொழில் நுட்பத்தோடு தமிழ்ப்படங்களை எப்படி ஒப்பிடுகிறார்கள் எனத் தெரியவில்லை.

    தமிழில் தமிழ்க்கலாச்சாரத்தோடு தயாராகும் படம் சென்னையில் 4 தியேட்டர்களில் வெளியாகிறது என்றால் தமிழுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத நேரடி ஆங்கிலப்படம் இதே சென்னையில் 15 தியேட்டர்களில் வெளியாகிறது.இதைத் தமிழ்த் திரையுலகம் விரக்தியாய்த்தான் பார்க்கிறது.

         தமிழ்ப்படங்கள் என்பது இந்தியாவில் ஒட்டு மொத்த உலக அரங்கில் உள்ள 8 கோடி தமிழர்களுக்காக எடுக்கப்படும் படம் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.உலக அரங்கில் கோலிவுட் ஒன்று உண்டு என்பதே இப்போதுதான் சிலருக்கு தெரிந்திருக்கும்.அதற்கு காரணமானவர்கள் இயக்குனர் மணிரத்னம் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் போன்றவர்கள்.ஆங்கிலப் படங்கள் அப்படியில்லை உலக முழுக்க உள்ள மொத்த மக்கள் தொகையையும் கணக்கில் கொண்டு எடுக்கப்படுகின்றன்.ஆதலால் அவை பல கோடிகளில் பிரமிக்கத்தக்க தொழிநுட்பங்களை பயன்படுத்தி ஆங்கிலப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.ஆனால் தமிழ்ப்படங்களின் நிலை அப்படியில்லை இப்போதுதான் குடிசைத் தொழில் என்பதைத்தாண்டி  தனது அடுத்த அத்தியாயத்தை தமிழ் சினிமா ஆரம்பித்திருக்கிறது.

          தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்கிறோம் என நிறைய இயக்குனர்கள் கூக்குரலிடுவதைக் கேட்க முடிகிறது.உலக அரங்கிற்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.அப்படிதான் மணிரத்னம் எடுத்துச் சென்றார்.ஆனால் உலக வர்த்தகத்திற்கு எடுத்துச் செல்வது என்பது இப்போதைக்கு இயலாத காரியம் என்றே படுகிறது.முதலில் தமிழ் சினிமாவுக்கு இந்தியா முழுவதும் வர்த்தகத்தை ஏற்படுத்துவோம்.பிறகு உலக வர்த்தக்லத்திற்கு எடுத்துச் செல்வோம்.ஏன் ரஜினிகாந்த் நடித்த படங்கள் வெளிநாட்டிலும் வர்த்தகம் செய்யப்பட்டதே என்று கேட்கலாம்.வெளிநாடு என்று சொல்வதைக் காட்டிலும் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு வர்த்தகம் செய்யப்பட்டது எனலாம்.அயல் நாடுகளில் படம் வெளியானது என்று சொல்லும்போது வெளிநாட்டினர் படத்தைப் பார்க்கிறார்களா? ஆமாம் என்று சொல்ல முடியாது.அங்கே வசிக்கும் தமிழர்கள்தான் படத்தைப் பார்க்கிறார்கள்.இதே நிலைதான் உலக அரங்கில் வெளியாகும் ஹிந்தி படங்களுக்கும்.அதை வைத்துக்கொண்டு உலக அரங்கில் தமிழ் சினிமா கால் வைத்துவிட்டது என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.முதலில் இந்திய அரங்கில் தமிழ் சினிமா கால் ஊன்றட்டும்.

            உலகம் முழுவதும் ஆங்கிலப் படங்களுக்கு வரவேற்பு இருக்கிறது.அதற்குக் காரணம் உலகம் முழுவதும் ஆங்கிலத்தை அவர்கள் பரப்பிச் சென்றதுதான் காரணம்.அதற்காக உலகம் முழுவதும் உள்ளவர்கள் ஆங்கிலம் தெரிந்தவர்களா? இல்லை.ஆனாலும் ஆங்கிலப் படத்தை பார்க்கத்தான் செய்கிறார்கள்.சிலர் ஆங்கிலப் படத்தைப் பார்ப்பது கௌரவம் என்றுதான் நினைக்கிறார்கள்.கவுண்டமணி பாணியில் அனைவரும் கை தட்டும்போது கைதட்டுபவர்கள் நம்மில் நிறைய பேர்.அப்படி தமிழ்ப்படங்களை தமிழர்களை விடுத்து வேறு மொழியினர் எத்தனை பேர் பார்க்கின்றனர்.ஆனால் ஹிந்திப்படங்கள் இந்தியா முழுவதும் ஹிந்தியில் வெளியானாலும் பார்ப்பதற்கு ஆட்கள் உண்டு.நிறைய ஹிந்திப் படங்கள் ஹிந்தியிலேயே 100 நாட்கள் தமிழ்நாட்டில் ஓடியிருக்கிறது.ஆனால் தமிழ்ப்படம் மொழிபெயர்க்கப்படாமல் வடமாநிலங்களில் 50 நாட்களாவது ஓடுமா? வேண்டாம்.இந்தியா முழுவதும் முதலில் தமிழ் படம் மொழிபெயர்க்கப்படாமல் வெளியாகட்டும்.அதற்குப் பிறகு உலக சினிமா அரங்கில் கால் வைக்க முயற்சிக்கட்டும்.




    ஆங்கிலப் படத்திற்கு தமிழ்ப்படத்தை ஒப்பிடுவது எவ்வளவு முட்டாள்த்தனம் என்பது இதன் மூலம் புலனாகிறது.உலக நாயகன் என்று பட்டம் சூட்டிக்கொண்டால் கமல்ஹாசனை உலக முழுக்க தெரிந்துவிடாது.அதை உணர்ந்த அவரே இப்போது ஆங்கிலப் படத்தில் நடிக்கிறார்.அதனால் அவர் இனி உலக அரங்கில் அறியப்படலாம்.தவிர்த்து தமிழ்ப் படத்தில் நடித்தால் உலக நாயகன் என்ற வெறும் பட்டத்தோடு தமிழ் சினிமாவில் நடித்தால் உலக அரங்கில் கொடி நாட்ட முடியுமா? இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்று உலக அளவில் இன்று பிரபலமாகி இருக்கும் ஏ.ஆர் ரஹ்மான் தமிழன் என்று நாம் பெருமை பட்டுக்கொள்ளலாமே தவிர அந்தப் பெருமையை அவருக்குக் கொடுத்தது தமிழ்ப்படமல்ல. 'ஸ்லம் டாக் மில்லினர்' என்ற மும்பையில் எடுக்கப்பட்ட ஆங்கிலப்படம்தான்.


    உலக அரங்கில் இந்தியத் திரைப்படம் என்றால் ஹிந்திப்படம் என்றுதான் அயல்நாட்டினர் இன்றும் சொல்லுகிறார்கள்.அதை முதலில் மாற்றியமைக்க முயற்சிப்போம்.பிறகு உலக சினிமாக்களோடு தமிழ் சினிமாவை ஒப்பிட்டு பேசுவோம்.முதலில் இந்திய அரங்கில் முக்கிய வர்த்தகமாக தமிழ் சினிமாவைக் கொண்டு செல்வோம்.அடுத்து உலக அரங்கிற்குச் செல்லலாம்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்கள் நடிக்கும் மசாலாப் படங்கள் வெளியானாலும் சில நல்ல தமிழ்ப்படங்களும் இப்போதுதான் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.இந்த நிலையில் உகல சினிமாவோடு தம்ழ் சினிமாவை ஒப்பிட்டு தமிழ்ப் படத்தின் தரத்தை குறைத்துவிட வேண்டாம் என்பது என் கருத்து.

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

4 comments:

  1. உகல சினிமாவோடு தம்ழ் சினிமாவை ஒப்பிட்டு தமிழ்ப் படத்தின் தரத்தை குறைத்துவிட வேண்டாம் என்பது என் கருத்து.//உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்

    ReplyDelete
  2. \\உலக அரங்கில் கோலிவுட் ஒன்று உண்டு என்பதே இப்போதுதான் சிலருக்கு தெரிந்திருக்கும்.அதற்கு காரணமானவர்கள் இயக்குனர் மணிரத்னம் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் போன்றவர்கள்.\\ அநியாயத்துக்கும் அப்பாவியா இருக்கீங்களே சார்!! ஏ.ஆர் ரஹ்மான் சரி ஒத்துக்கறேன், அதென்னது மணிரத்னம்? இவரு எடுத்த படங்களின் கதைகள் எங்கேயிருந்து வந்தன என யோசித்தீர்களா? பல ஆங்கிலப் படங்கள்/உலக மொழிப் படங்களில் இருந்து சுட்டவை. உதாரணம் The Godfather லிருந்து சுடப் பட்ட நாயகன். ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டாள் எல்லா அதே ரகம்தான். அல்லது நமது புராணக் கதைகளை கோக்கு மாக்காக மாற்றி எடுக்கப் பட்டவை. உதாரணம் தளபதி, சீதைக்கு இராவணன் மேல் அன்பு வந்ததாகக் காட்டப் பட்ட "இராவணன்". இந்த மூஞ்சியை வச்சிக்கிட்டு இது உலகத் தரத்துக்கு போகுதா? வெட்கக் கேடு.

    இவர் ஒருத்தர் மட்டுமல்ல கமலஹாசனில் இருந்து ஷங்கர் வரை அத்தனை பேருக்கும் தொழிலே இதுதான். சொல்லப் போனால் கமலஹாசனின் ராஜபார்வையில் இருந்தே [அதற்க்கு முன்னரகக் கூட இருக்கலாம், யார் கண்டது] கதைத் திருட்டு நடந்து வந்திருக்கிறது. இது குறித்து கருந்தேள் அவர்கள் , காட்சிக்கு காட்சி ஒப்பிட்டு அருமையான பதிவு போட்டார், நாதாரிங்க தூக்கிட்டானுங்க. எவனும் இந்த நிலையில் உலகத் தரம் பற்றி பேசவே லாயக்கற்றவர்கள் என்பதே உண்மை, இது தொடரும் வரையில், சொந்தமாகச் சிந்திக்காத வரையில் உலகத் தரம் என்பது வெறும் கனவுதான், அது நடக்கப் போவது இல்லை.

    ரஜினி படம் ஜப்பானில் ஓடியது அங்குள்ள தமிழர்களால் தானா? ரஜினிக்கு ஜப்பாம் முழுவதும் ரசிகர்கள், அவர்கள் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள், அதனால் தான் அந்தப் படம் அங்கு வெற்றி பெற்றது!! நடுவு நிலைமை உங்களுக்கு இன்னம் நிறைய வேண்டும் சார்!!

    ReplyDelete
  3. எந்தப் படத்தை எங்கிருந்து காப்பி அடித்தார்கள் என்பதைப் பற்றிய பதிவல்ல தோழரே இது.உலக சினிமாவோடு தமிழ் சினிமாவை ஒப்பிடுவது தவறு என்பதைச் சார்ந்தது.மணிரத்னம் படங்களின் கரு எங்கிருந்து எடுக்கப்பட்டவை என சின்னப்பிள்ளைக்குக்கூட தெரியும் அது இங்கு தேவையில்லாதது.உலக அரங்கில் தமிழ் சினிமாவை கொண்டு சேர்த்த பெருமை மணிரத்னத்தை சாரும்..

    ஜப்பானில் ஏதோ ஒரு பகுதியில் ரஜினிக்கு சொற்ப ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக உலக அரங்கில் தமிழ் படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்வது நகைச்சுவைக்குரியது தோழரே.. முத்து படத்தைத்தானே சொல்கிறீர்கள்..அதுக்கப்புறம் என்னாச்சு தோழரே.. இன்னும் தமிழ் சினிமா வளர வேண்டும் தோழரே.. வளர்ந்து கொண்டிருக்கிறது.அதை உலக சினிமாவோடு ஒப்பிட்டு வளர்ச்சியை மட்டுப்படுத்திவிடுவார்கள் போலிருக்கிறது..

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com