புது வரவு :
Home » , , , , » கிறித்தவர்களின் கல்வித் தொண்டு-டி.என்.பி.எஸ்.சி

கிறித்தவர்களின் கல்வித் தொண்டு-டி.என்.பி.எஸ்.சி

       ந்தப் பதிவை நேற்று கிறித்துமஸ் தினத்தன்று வெளியிடலாம் என இருந்தேன்.நேரமின்மையால் இயலாமற்போய்விட்டது. கிறித்தவர்கள் தமிழர்களுக்கு கல்வியைத் தந்தார்களா? இந்தக்கேள்வி நிறைய பேரை யோசிக்க வைக்கும்.ஆம் என்ற பதிலைத் தருவதா? இல்லையென்ற பதிலைத் தருவதா? என குழப்பம் வரும்.அதெப்படி தமிழர்களுக்கு கிறித்தவர்கள் கல்வியைத் தந்தார்கள் என்று சிலர் கேட்பார்கள்.

           15 மற்றும் 16 ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக்குப் பிறகு ஐரோப்பிய கண்டத்தைச் சார்ந்த போர்த்துகீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வந்தார்கள். இந்தியாவில் அவர்கள் கிறித்தவ சமயத்தை பரப்பத் தொடங்கினார்கள்.மேலும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கிறித்தவ குருமார்கள் பல பள்ளிகளை நிறுவினார்கள்.
மதுரை அமெரிக்கன் கல்லூரி


                       16 ம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் தான் தமிழ்நாட்டில் முதல் முதலாக கிறித்துவ மதத்தை பரப்பியவர்கள்.அவர்கள் 'ஏசு சங்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.அதில் முக்கியமானவர் அருட்தந்தை பெர்ணான்ட்ஸ் ஆவார்.இவர் 1567 ல் புன்னைக்காயல் என்னுமிடத்தில் ஒரு பள்ளியையும் தேவாலயத்தையும் நிறுவினார். இந்த சங்கத்தின் சார்பாக சென்னை, நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல என தமிழகத்தின் பல இடங்களிலும் பல பள்ளிகள், கல்லூரிகள் நிறுவப்பட்டன.
                               மதுரை சமய பரப்புக்குழு கல்வி வளர்ச்சி ஆற்றிய சேவை குறிப்பிடத்தக்கது.சிறந்த அறிவாற்றல் கொண்ட ராபர்ட்-டி-நொபிலி என்ற பாதிரியார் 1605 ம் ஆண்டு தமிழ் நாட்டிற்கு வந்தார்.அவர் மதுரையில் தனது சமய பரப்புப் பணியை ஆரம்பித்தார்.ஓர் இந்து துறவியாக தன்னை மாற்றிக்கொண்டு இந்துக் கலாச்சாரத்தைப் பின்பற்றி கிறித்தவ மதத்தைப் பரப்பினார்.மதுரை சமய பரப்புக் குழுவில் இவரோடு வீரமா முனிவரும் இந்தக் குழுவில் இருந்து தமிழில் பல இலக்கண நூல்களையும் அகராதிகளையும் எழுதியுள்ளார்.
               அதேபோல அமெரிக்க யாழ்ப்பாண சமய பரப்புக் குழு என்ற அமைப்பு 1834 ம் ஆண்டு நிறுவப்பட்டது.ஐந்த அமைப்பு மதுரை, திண்டுக்கல மற்றும் இராமநாதபுரம் ஆகிய இடங்களில் பள்ளிகளைத் திறந்தது.அமெரிக்காவைச் சார்ந்த ஸ்கட்டர் சகோதரர்களால் ஆற்காடு சமய பரப்புக்குழு 1853 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.அந்தக் குழு பல மருத்துவமனைகளையும் தர்ம ஸ்தாபனங்களையும் நிறுவி அடித்தட்டு மக்களிடையே நற்பெயர் பெற்றது.ஆற்காடு மாவட்டத்தில் ஊரீஸ் கல்லூரியையும் பல பள்ளிகளையும் நிறுவினர்.
சென்னை லயோலா கல்லூரி
               இக்னேஷியஸ் லயோலா என்ற சமய பரப்புக்குழு சென்னையில் லயோலோ கல்லூரியை நிறுவியது.தாம்பரத்தில் சென்னை கிறித்தவக் கல்லூரி, நாகர்கோவிலில்   ஸ்காட் கிறித்தவக் கல்லூரி, மதுரையில் அமெரிக்கன் கல்லூரி, திருச்சியில் புனித ஜோசப் கல்லூரி, பாளையங்கோட்டையில் புனித சேவியர் கல்லூரி மற்றும் சென்னையில் பெண்கள் கிறித்தவக் கல்லூரி போன்றவற்றை கல்வி வளர்ச்சிக்காக ஏற்படுத்தியது.

         தமிழ்நாட்டில் கிறித்துவ சங்கங்கள் மேலை நாட்டுக்கல்வி முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது.கிறித்துவ குருமார்களால் திறக்கப்பட்ட பள்ளிகளில் ஜாதி, இன, மத வேறுபாடுகளின்றி அனைத்து தரப்பினரும் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்த கிறித்தவ குருமார்கள் தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு முதன்மையான  பணியாற்றினர். தமிழகத்தில் கிறித்துவ மதம் ஓரளவு வளர்ச்சி பெற்றதற்கு இவர்களின் கல்விச் சேவையே காரணம் ஆகும்.

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

22 comments:

  1. அப்படியா
    தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  2. அன்று, கல்வியை வளர்த்த தோடு, தங்களின் மதத்தையும் வளர்த்தார்கள்! ஆனால், இன்று,,,,?

    ReplyDelete
    Replies
    1. புரிந்து கொள்ள முடியவில்லை ஐயா..

      Delete
  3. வணக்கம் நண்பரே,
    நம் தமிழர்களின் மதச்ச்சார்பின்மையின் அள்வு எல்லை மீறியது என்பதை அறிவோம். ஐரோப்பியனின் மதம் ஏன் குறிப்பிட வேண்டும்?

    அவனுக்கு பணி செய்ய,நாட்டை நிர்வகிக்க சில பணியாளர்கள் தேஎவைப் பட்டனர் என்பதால் கல்வி தந்தான். சில பாதிரிகள் மதம் பரப்ப தமிழில் வேதம் முதலில் அச்சிட்டனர்.

    அவர்களின் நொக்கம் வேறு என்றாலும் ,புல்லுக்கு பாய்ந்த நீர் நெல்லுக்கும் பாய்ந்தது போல் சில நல்ல விளைவுகளும் ஏற்பட்டன. அவ்வளவுதான்.
    http://www.columbia.edu/itc/mealac/pritchett/00generallinks/macaulay/txt_minute_education_1835.html

    [33] To sum up what I have said. I think it clear that we are not fettered by the Act of Parliament of 1813, that we are not fettered by any pledge expressed or implied, that we are free to employ our funds as we choose, that we ought to employ them in teaching what is best worth knowing, that English is better worth knowing than Sanscrit or Arabic, that the natives are desirous to be taught English, and are not desirous to be taught Sanscrit or Arabic, that neither as the languages of law nor as the languages of religion have the Sanscrit and Arabic any peculiar claim to our encouragement, that it is possible to make natives of this country thoroughly good English scholars, and that to this end our efforts ought to be directed.

    [34] In one point I fully agree with the gentlemen to whose general views I am opposed. I feel with them that it is impossible for us, with our limited means, to attempt to educate the body of the people. We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern, --a class of persons Indian in blood and colour, but English in tastes, in opinions, in morals and in intellect. To that class we may leave it to refine the vernacular dialects of the country, to enrich those dialects with terms of science borrowed from the Western nomenclature, and to render them by degrees fit vehicles for conveying knowledge to the great mass of the population.


    நம்ம ஆளு கொஞ்சப் பேரு சாதிக் கொடுமையில் அந்தப் பக்கம் போயிட்டான்.கிறித்தவத்தில் சாதி இன்னும் அப்படியே இருக்கிறது என்பதும் உண்மையே!!

    விட்டால் அரபு,ஆஃப்கானியன்,வெள்ளையன் ஆகியோர் இந்தியாவை திருத்தவே படை எடுத்த்னர்,ஆக்கிரமித்தனர் என்று கூட சொவீர்கள்.

    மத சார்பின்மை ஒவெர் டோஸ் தவறு சகோ ஹி ஹி

    அளவான மத ச்சார்பின்மை, வளமான மனிதநேயம் வளர்ப்போம்

    நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. தோழர் சார்வாகன்.. மதங்கள் மனிதனை முட்டாளாக்கும் போது அதை விமர்சிக்கிறோம்.அதே மதங்கள் மனிதனுக்கு பயனுள்ள செயல்களைச் செய்யும்போது அதைக் குறிப்பிட்டு சொல்லித்தான் ஆக வேண்டும் தோழரே..

      பலரிடம் அடிமைப்பட்ட பிறகே இந்திய நாடு அனைத்தையும் முறையாகப் பெற்றது என்பதையும் மறந்திட வேண்டாம் தோழரே.. ஆங்கிலேயன் இந்தியா வராமற்போயிருந்தால் இன்னும் நாம் கோவணத்தைதான் உடுத்திக்கொண்டிருப்போம்..இல்லையா தோழரே.. வெள்ளையனே வெளியேறு என்று சொன்னாலும் வெள்ளையனே அனைத்தையும் கற்றுக் கொடுத்துவிட்டு போனதற்கு நன்றி என்றுதான் உள்ளாரச் சொல்லுகிறோம்.ஆனால் அடிமைப்படுத்தியமைக்கு நன்றி என நாம் சொல்லவில்லை.

      கிறித்தவர்கள் தங்கள் மதத்தைப் பரப்பவே கல்வியைக் கற்றுக்கொடுத்தார்கள் என்பது அனைவருக்குமே தெரியும்.அவன் காரியம் வெற்றி பெற்றது.உயர்சாதி மக்களுக்கு மட்டுமே குருகுலக்கல்வி என இருந்த காலத்தில் சாதி மதம் இனம் பாராமல்
      அனைவருக்கும் கல்வி கற்றுக்கொடுத்தவர்களை குறிப்பிட்டு காட்டுவதில் எந்த தவறும் இல்லையென நினைக்கிறேன் தோழரே..

      Delete
    2. ஆங்கிலேயன் இந்தியா வராமற்போயிருந்தால் இன்னும் நாம் கோவணத்தைதான் உடுத்திக்கொண்டிருப்போம்..இல்லையா தோழரே.. வெள்ளையனே வெளியேறு என்று சொன்னாலும் வெள்ளையனே அனைத்தையும் கற்றுக் கொடுத்துவிட்டு போனதற்கு நன்றி என்றுதான் உள்ளாரச் சொல்லுகிறோம்
      //////////////////////////

      உண்மை உண்மை உண்மை

      Delete
  4. விரிவான பகிர்வு
    த.ம.5

    ReplyDelete
  5. அவர்களின் நோக்கம்? நிறைவேறியது

    ReplyDelete
  6. கண்டிப்பாக கிறித்தவர்கள் பள்ளிகளை மட்டும் அல்ல மருத்துவமனைகளையும் நூறாண்டுகளுக்கு முன் சேவை மனப்பான்மையோடு ஆரம்பித்தவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தோழரே.. அடுத்தமுறை பின்னூட்டம் இடும்போது பெயரோடு வாருங்கள்.. பெயரில்லா பின்னூட்டங்களை தளத்தில் அனுமதிப்பதில்லை.

      Delete
  7. 3 மணிநேரம் யோசிச்சீங்களோ?::))

    ReplyDelete
  8. தோழர் மதுமதி ...

    கிருஸ்தவர்கள் இன்றைய சூழலில் பெரும்பாலான பள்ளிகளை நிர்வகிகின்றனர்..அதன் ஆரம்ப கால நோக்கம் எனக்கு தெரியாது ..வெளிப்படையாக இன்று தங்களது மதம் பரப்பவே பயன்படுத்துகின்றனர்..குழந்தைகளின் நர்சரி பள்ளிகளை பெருமளவில் தொடக்கி காலை வேளையில் ஜெபம் செய்வது கட்டாயம்..நீதிக்கதைகள் என்ற புத்தகம் ஒன்றை மேலதிகமாக பாடமாக்கி பைபிளில் வரும் கதைகளை மனனமிட செய்கின்றனர்..நாம் படித்ததும் ஒரு கிருஸ்தவ கல்லூரியே..அங்கு கிறிஸ்மஸ் முதல் புத்தாண்டுவரை ஒரு வாரம் விடுமுறை விடுவர்..மத பண்டிகைகளில் ரம்ஜான் பக்ரித் பண்டிகைகளுக்கும் மட்டும் விடுமுறை கிடையாது...நான் வேலை பார்த்ததும் ஒரு கிருஸ்தவ முதலாளிக்கு உரிய கம்பனியே ! அங்கும் இஸ்லாமிய பண்டிகைக்கு மட்டும் விடுமுறை கிடையாது..விடுமுறை எடுத்தாலும் லாஸ் ஆப் பே.. திட்டமிட்டு ஒரு பிரிவினையையே உண்டாக்குகின்றனர்...கருத்து திணிப்பு எங்கு நடந்தாலும் கண்டிக்க தக்கது..பள்ளியில் பாடங்களை கற்க செல்கிறோமா..இல்லை மதங்களை படிக்க செல்கிறோமா..?? மதசார்பின்மைக்கும் அவர்களுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் கிடையாது என்பதே எம்முடைய கருத்து...

    ReplyDelete
    Replies
    1. நானும் கிறித்தவப் பள்ளியில்தான் தோழரே படித்தேன்.வலுக்கட்டாயமாகத்தான் பைபிளை படிக்க வைத்தார்கள்.பாடலைப் பாட வைத்தார்கள்.இல்லையென சொல்லமுடியாது.ஆனால் கிறித்தவ மதத்தில்தான் சேர வேண்டும் என யாரையும் நிர்பந்தப் படுத்தவில்லை.விருப்பப்பட்டவர்கள் மதம் மாறினார்கள்.பலர் மாறவில்லை.அப்பள்ளியில் படிக்க விருப்பம் இல்லாதவர்கள் வேறு பள்ளிக்குச் சென்று விட்டார்கள்.

      இசுலாம் மத பண்டிகைகளுக்கு விடுமுறை இல்லை என்பது ஆச்சர்யமளிக்கிறது.அதைக் கண்டிக்கத்தான் வேண்டும்.

      Delete
  9. ஆரம்ப கால கிருஸ்தவர்களின் வருகையில் மதம்பரப்பும் நோக்கம் குறைவே..நாட்டிலுள்ள வளங்களைச் சுரண்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டுதான் ஆசிய தேசங்களை நோக்கிய அவர்களின் வருகை இருந்தது..

    பிற்பட்ட காலங்களில் மதம் பரப்பும் நோக்கம் அவர்களிடம் தளிர்விட்டிருந்த நிலையில் அதனை புரிந்து கொள்வதற்கான அறிவினை எம் மக்கள் கொண்டிருக்கவில்லை எனவே அவர்கள் கல்வியின் மூலம் தங்களது பணிகளைச் செய்தார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்துதான் தோழரே..

      Delete
  10. கிறித்தவர்கள் கல்வி கற்க மிகவும் உதவினார்கள் என்பது உண்மை. அதுவும் குறிப்பாக தென் மாவட்டங்களில் அவர்களது கல்விப்பணி அளப்பரியது. அவர்களது நோக்கம் தங்கள் சமயத்தைப் பரப்புவதாக இருந்திருக்கலாம். ஆனால் பலரின் கல்விக் கண்ணைத் திறக்க அவர்கள் காரணமாக இருந்தார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி! நல்ல பதிவு.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஐயா..மகிழ்ச்சி.

      Delete
  11. அருமையான பகிர்வு

    ReplyDelete
  12. திரு . நாகூர் மீரான்

    இஸ்லாமியர்களுக்கும் மத சார்பின்மைக்கும் எந்த அளவு சம்பந்தம் இருக்கிறது என்று இங்கே கூறினால் நாங்கள் தெளிவடைவோம். கிறிஸ்தவர்கள் செய்யும் மத மாற்ற நிகழ்சிகள், செயல்கள் வெளிப்படையானவை. ஆனால் இஸ்லாமியர்களின் மத மாற்றம் வெளிப்படையாக தெரிவதில்லை ஆனால் கிறிஸ்தவர்களை விட அதிக அளவில் நடந்து கொண்டிருக்கும் ஓன்று. இந்த நாட்டை கிறிஸ்தவ் நாடாக்க வேண்டும் என்று எந்த கிறிஸ்தவனும் விரும்பியது இல்லை, அப்படி இருந்தாலும் அது வெகு சொற்பமே, ஆனால் இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக்க வேண்டும், இங்கே ஷரியா என்னும் இஸ்லாமிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் பள்ளிவாசல்களில் கொடுக்கப்படும் போதனை. தங்கள் பள்ளிவாசல்களில் பிற மதத்தவரை அனுமதிக்காத நீங்கள் மத சார்பின்மை பற்றி பேசுவது வியப்பு தான்.

    ஒருவரை குறை கூறுமுன் தன்னை பார்த்து கொள்வது எல்லோர்க்கும் நலம், இஸ்லாமியர்களும் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும், நிறுவனங்களையும் நடத்தவே செய்கிறார்கள். அங்கே பிற சமயத்தவரின் பண்டிகைகளுக்கு எல்லாம் விடுமுறை கொடுக்கிறீர்களா. குரானையும், ஹதீஸ்களையும் பிற மத குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கும் இஸ்லாமிய பள்ளிகள் எங்கள் மாவட்டமான கன்னியாகுமரியில் இருக்கின்றன. விலாசம் சொல்லட்டுமா?. திட்டமிட்டு இங்கே பிரிவினை உண்டாக்குவது யார் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும்

    ReplyDelete
  13. //வலுக்கட்டாயமாகத்தான் பைபிளை படிக்க வைத்தார்கள்.பாடலைப் பாட வைத்தார்கள்.//
    ம்...அந்த அளவு துன்புறுத்தல்களுடன் கிறிஸ்தவர்கள் நிறுத்தி கொண்டார்கள். ஆனால் உங்களை மதம்மாற்றவில்லை.கல்வியை தந்தார்கள்.
    அரபியர்களாக இருந்தால் உங்களுக்கு கல்வியை தரமாட்டார்கள். குரானை மட்டும் படிப்பித்து கட்டாய மத மாற்றம் செய்திருப்பார்கள். நீங்கள் இப்போ எழுதுவது போல் பகுத்தறிவு கருத்துக்கள் எழுத மாட்டீர்கள். இந்தியாவை இஸ்லாமிய நாடகமாற்றி மன்னர் அப்துல்லாவின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்வருவதற்கான பிரசாரங்களை செய்து கொண்டிருப்பீர்கள்.

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com