2012 ம் வருடத்தின் இறுதியில் இருக்கிறோம்.இந்த ஆண்டில் கிட்டத்தட்ட 150 தமிழ்ப்படங்கள் வெளியாயின.இதில் பிரபல நடிகர்கள் நடித்த படங்களைக் காட்டிலும் புது முகங்கள் நடித்து வெளியான படங்களே அதிகம்.இந்த வருடம் வெற்றி பெற்ற படங்களைப் பற்றி பார்ப்போம்.. 9 படங்கள் வெற்றிப்படங்கள் பட்டியலில் இணைகின்றன்.
9.வழக்கு எண் 18/9
பாலாஜி சக்திவேல் இயக்கிய படம் 'வழக்கு எண் 18/9'. டைரக்டர் லிங்குசாமி வழங்க, திருப்பதி பிரதர்ஸ் சார்பில் சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்தார். எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வந்த இந்த படத்தில், புதுமுகங்கள் மிதுன், மனிஷா யாதவ், ஸ்ரீ-ஊர்மிளா மகந்தா ஆகிய நான்கு பேரும் கதை நாயகன். நாயகியாக நடித்து இருந்தார்கள். இவர்களையும், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரையும் சுற்றி கதை பின்னப்பட்டு இருந்தது.காதலை வேறொரு கோணத்தில் காட்டியிருந்தார்.மிகப்பெரிய வெற்றி இல்லையென்றாலும் வெற்றிப்பட்டியலில் இணைகிறது.
8.கலகலப்பு
விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'கலகலப்பு @ மசாலா கபே'. நீண்ட நாட்களுக்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் இப்படம் திரைக்கு வந்தது. 'கண்டேன்' படத்திற்கு இசையமைத்த விஜய எபினோசர் இசையமைத்து இருந்தார். சுந்தர்.சி உடன் முதன் முறையாக இணைந்து இருக்கிறார் சந்தானம். நகைச்சுவை நாயகர்களாக விமல், மிர்ச்சி சிவா, கிளாமரான கதாபாத்திரங்களில் அஞ்சலி, ஓவியா, இவர்களுடன் இணைந்து சந்தானத்தின் காமெடி இருந்ததால் படம் தொய்வில்லாமல் சென்றது.வழக்கம் போல தனது படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்பதை நிரூபித்தார்.குஷ்புவின் 'அவ்னி சினிமேக்ஸ்' நிறுவனம் தயாரிக்க யு.டிவி நிறுவனம் இப்படத்தினை பிரம்மாண்டமாக வெளியிட்டது.
7.நான் ஈ
இப்படம் தெலுங்கில் ஈகா என்ற பெயரில் வெளியானது. இந்தப் படத்தில் நானி, சமந்தா, சுதீப் ஆகியோர் நடித்தனர். எஸ்.எஸ். ராஜமௌலி கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார்ர்.
வில்லனால் கொல்லப்படும் நாயகன் ஈயாக மீண்டும் பிறக்கிறான். முற்பிறவியில் நடந்தவை அவனுக்கு நினைவில் நிற்கிறது. வில்லனை சித்ர வதை செய்து எப்படி அவன் பழி தீர்க்கிறான் என்பது கதை. அறிவியல் திரில்லருடன் எளிமையான கதை, அசத்த லான ஸ்பெஷல் எபெக்ட்ஸ் களில் படமாக்கியிருந்தார் இயக்குனர்.

பி.வி.பி. சினிமா சார்பில் பிரசாத் வி. பொட்லூரி நான் ஈ என்ற படத்தை தயாரித்திருந்தனர்.
6.சுந்தரபாண்டியன்
சுப்பிரமணியபுரம், பசங்க, ஈசன், போராளி படங்களை தயாரித்த எம். சசிகுமார் தனது கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் அடுத்து தயாரித்த படம் ‘சுந்தரபாண்டியன்’.
இப்படத்தில் சசிகுமாரே கதாநாயகனாகவும் நடித்தார். லஷ்மி மேனன் நாயகியாக நடித்தார். இவர் ‘கும்கி’ படத்தில் அறிமுகமாக இருந்தவர். சேது, ஈகோ, அப்புக்குட்டி, சூரி, நரேன், தென்னவன், துளசி, சுஜாதா ஆகியோரும் நடித்திருந்தனர்.இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கியிருந்தார். இவர் சசிகுமாரிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். ஆக்சன், காமெடி, நட்பு, காதலுடன் கூடிய ஜனரஞ்சக படமாக வெளிவந்திருந்தது.
5.கும்கி
விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்து இருக்கும் படம் 'கும்கி'. பிரபு சாலமன் இயக்க, இமான் இசையமைத்து இருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
'கும்கி' படம் துவங்கப்பட்டதில் இருந்து எதிர்ப்பார்ப்பு தான். பிரபு சாலமன் இயக்கம் மட்டுமன்றி, நடிகர் திலகத்தின் பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நடிக்கும் முதல் படம் என்பதாலும் கூடுதல் கவனத்தைப் பெற்றது.யானைகள் ஏன் காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வருகின்றன? அதனை தீர்க்க என்ன வழி என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி சொல்லி இருக்கிறார்கள்.திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தினை தற்போது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டது.படம் வெளியாகி சில நாட்களே ஆகிறது.வெற்றிப்படமாய் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது.

4.நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தைத்தான் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். இவருடைய ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் வேத்சங்கரின் பின்னணி இசையும் படத்திற்கும் மேலும் பலம் சேர்த்திருக்கின்றன. நண்பன் அடிக்கும் பந்தை பறந்து வந்து பிடிக்கும்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு விடுகிறது. இதனால் கடந்த ஓரிரு வருடங்களில் நடக்கும் அத்தனை சம்பவங்களும் மறந்து போய்விடுகிறது. தற்போதும் அவரிடம் எது சொன்னாலும் அதனையும் உடனுக்குடன் மறந்து போகிறார்.
இந்த பிரச்சினை பெண் வீட்டுக்குத் தெரிந்தால் திருமணம் நடக்கவிடமாட்டார்கள் என நண்பர்கள் நினைக்கிறார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதிக்கும், காயத்ரிக்கும் திருமணம் நடந்ததா? என்பதை படம் முழுக்க சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார்கள்.விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வருகிறார் காயத்ரி. சீரியசான கதையை இப்படி காமெடியாக சொல்லமுடியுமா? என்னும் கேள்விக்கு சொல்லமுடியும் என சாதித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.

3.பீட்சா
‘அட்டக்கத்தி’ படத்தை தயாரித்த திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கும் படம் ‘பீட்சா’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்தவர்.நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் குறும்படம் எடுத்தவர்.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
கதாநாயகனாக நடித்த விஜய் சேதுபதி நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருந்தார். பீட்சா கடையில் வேலை பார்க்கும் இளைஞனுக்கும், காலேஜ் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருக்கும் இளம் பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதலை ரொமான்டிக் மற்றும் த்ரில்லர் கதையாக உருவாக்கியிருந்தார்கள்.ரசிக்கும்படியாக படம் அமைந்திருந்தது.
2.நண்பன்
இந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற '3 இடியட்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக் இந்த 'நண்பன்'. இதுவரை கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்துவந்த விஜய் இப்படத்தில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
முதன் முதலாக ஷங்கர் - விஜய் இணைந்தனர்."விஜய்யை எல்லாருக்கும் பிடிக்கும்.. இந்த படத்துக்கப்பறம் அவரை பிடிக்காதவங்க யாராவது இருந்தாலும், அவங்களுக்கும் விஜய்யை பிடிக்கும் " என்று படவிழாவில் சங்கர் தெரிவித்திருந்தார்.படத்தில் விஜய்யின் பெயர் பஞ்சவன் பாரிவேந்தன், ஜீவாவின் பெயர் சேவற்கொடி செந்தில், ஸ்ரீகாந்தின் பெயர் வெங்கட்ராம கிருஷ்ணன், இலியானாவின் பெயர் ரியா, சத்யராஜின் பெயர் விருமாண்டி சந்தனம்.

வித்தியாசமான விஜய்யை பலதரப்பினரும் ரசிக்க படம் நல்லதொரு வெற்றி பெற்றது.
1.துப்பாக்கி
விஜய், முருகதாஸ் இணையும் படம், தயாரிப்பு தாணு. இந்த மூன்று விஷயங்களுக்காக முதல்நாள் தியேட்டர்கள் அல்லோலப்பட்டது.விஜய் மும்பை தமிழராக நடித்திருந்தார். படத்தில் இவரது பெயர் ஜெகதீஷ். இவரை காதலிக்கும் காஜல் அகர்வாலின் பெயர் நிஷா. ஜெகதீஷ் ராணுவ வீரர், நிஷா ஜெகதீஷைக் காதலிக்க மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.
ஒரு குறும்பான காதலோடு அதிரடியான ஆக்சனையும் ரசிக்கும்படி செய்திருந்தார் முருகதாஸ்.பலதரப்பினரும் படம் தோல்வியடையும் என்று எதிர்பார்த்த நிலையில் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று கலெக்சனையும் அள்ளியது.
இந்தப் படத்தில் வேறொரு விஜயை அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரும் பார்த்து ரசித்தனர்.படத்தின் திரைக்கதை வெற்றிக்கான முக்கிய காரணம்.
வாசித்துவிட்டீர்களா?
கவிஞரே விமர்சகராகவும்,பாடநூல் ஆசிரியராகவும் எப்படி உங்களால் இத்துணை அற்புதமாக எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள முடிகிறது .அத்தனையும் அருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteசென்னியாருக்கு சபாஷ்..சரியான போட்டி தான்!
ReplyDeleteநன்று..! வாழ்த்துகள்!
you are missing ok ok
ReplyDeletewhere is OK OK
ReplyDelete