உயிரைத்தின்று பசியாறு
க்ரைம்..க்ரைம்..க்ரைம்
-மதுமதி
2011 ம் வருடம் ராணிமுத்து நாவலில் வெளியான எனது க்ரைம் நாவலை இங்கே தொடராக எழுதுகிறேன்.
நன்றி
ராணிமுத்து
அத்தியாயம்-1
சென்னை மெரினா கடற்கரை.
மே மாதம் என்பதால் அதிகமாக உழைத்த ஆதவன் தனது இருப்பிடம் நோக்கிச் சென்று ஒரு மணி நேரம் ஆகி இருந்தது.
நகத்தைக் கடித்து துப்பிக் கொண்டே திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டிருந்த பூஜாவை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்தான் அலெக்ஸ்..
அவன் அருகில் வந்ததும் இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்தவாறு அவனை ஒரு முறை முறைத்துவிட்டு,
நகத்தைக் கடித்து துப்பிக் கொண்டே திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டிருந்த பூஜாவை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்தான் அலெக்ஸ்..
அவன் அருகில் வந்ததும் இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்தவாறு அவனை ஒரு முறை முறைத்துவிட்டு,
''என்ன அலெக்ஸ்..கொஞ்சம் முன்னாடியே வரக்கூடாதா..எவ்வளவு நேரம் வெயிட் பண்றது"
என்று கோபத்துடன் சொன்ன பூஜா, அவனைப் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
"ஸாரி பூஜா.ஆறரை மணிக்கு வந்துடலாம்ன்னு எவ்வளவோ முயற்சி பண்ணினேன்..முடியல லேட்டாயிடுச்சு.''
''நான் ஒரு மணிநேரத்துக்கு முன்னாடியே வந்துட்டேன் .வர்றவங்க போறவங்க எல்லாம் எப்படி கமெண்ட் பண்ணிட்டு போறாங்க தெரியுமா? ''
என்று அவனைப் பார்த்து சொல்லிவிட்டு மீண்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
என்று அவனைப் பார்த்து சொல்லிவிட்டு மீண்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
''ஸாரி பூஜா இனிமேல் சொன்ன நேரத்துக்கு முன்னாடியே வந்துடுறேன்.ப்ளீஸ்..ப்ளீஸ்''
என கெஞ்சியபடி அவளது முகத்தை திருப்பினான்..
'' ஆமா ஆறு மணிக்கு வரச்சொன்னா ஏழு மணிக்கு வர்றது அப்புறம் ஸாரி ப்ளீஸ் ன்னு சமாதானம் பண்ணவேண்டியது....அங்கப்பாரு பீச்சுல இருக்கிற கூட்டம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிக்கிட்டே இருக்கு.எல்லாம் வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்காங்க. நீ இப்போ வர்றே"
''எல்லோரும் போகட்டும் பூஜா..அப்பத்தானே நமக்கு வசதி"
குறும்பு கொப்பளிக்க அவன் சொல்ல செல்லமாய் முறைத்த பூஜா அவனது தலையில் சின்னதாய் குட்டிவிட்டு,
''இங்கப்பாரு அலெக்ஸ்..இன்னும் அரை மணிநேரம் தான் இருப்பேன் .அதுக்குள்ள என்ன பேசணுமோ பேசி முடிச்சிடனும்..அதுக்கு மேல என்னால இங்க இருக்க முடியாது"
"சரி பூஜா.இங்க வேண்டாம்..வா அப்படி ஓரமா போய் உட்காருவோம்"
இருவரும் மணலில் மெதுவாய் பத்து நிமிடங்கள் நடந்து ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அமர்ந்தனர்...நல்ல இருட்டு..தூரமாய் எரிந்து கொண்டிருக்கிற மின்சார விளக்குகளின் பார்வை படாத இடம்.
""ஏய் அதை அப்படி ஓரமாய் வச்சாத்தான் என்னவாம்?ஏன் இன்னும் சுமந்துட்டு இருக்கே?''
அவன் சொன்னதும் சின்னதாய் புன்னகைத்த பூஜா மார்போடு அணைத்திருந்த நோட்டு புத்தகங்களை ஓரமாய் வைத்தாள்..
"அலெக்ஸ்..யாருமில்லாத இடத்தில் வந்து உக்காந்திருக்கோம் பயமாயிருக்கு..அதுவுமில்லாம இருட்டா வேற இருக்கு .. வெளிச்சம் இருக்குற பக்கம் போயிடலாமே"
"ஆமா வெளிச்சம் வேணுமின்னா அரைக்கிலோ மீட்டர் நடக்கணும் பரவாயில்லையா? நாளைக்கு அமாவாசைன்னா இன்னைக்கும் இருட்டு இருக்கத்தான் செய்யும்..நாம் என்ன விடியற வரைக்குமா இருக்கப்போறோம்..
இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பிடப்போறோம்''
இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பிடப்போறோம்''
"சரி அலெக்ஸ் அதவிடு வீட்டுல என்னைபத்தி சொல்லிட்டியா?
"இங்கப்பாரு பூஜா நான் தான் அடிக்கடி சொல்றேனே ,எங்க வீட்டுல எந்த பிரச்சனையும் இல்லைன்னு"
"சரிதான் அலெக்ஸ்..இருந்தாலும் உங்க வீட்டுல ஒரு வார்த்தை சொல்லிடு அதான் நல்லது"
"நான் சொல்றது இருக்கட்டும்.உங்க வீட்டுல நீ சொன்னியா?"
"இன்னும் இல்ல அலெக்ஸ்"
"ஏன்"
பட்டென கேட்டான்.
பட்டென கேட்டான்.
"பயமா இருக்குடா"
என்று சொன்னவளின் முகம் சோகத்தைக் காட்டியது..
என்று சொன்னவளின் முகம் சோகத்தைக் காட்டியது..
"மனசுல இருக்கிறதைச் சொல்ல என்ன பயம்"
"சொல்றது ஒரு பிரச்சனையே இல்ல அலெக்ஸ்..உன்னைப் பத்தி சொல்ல ஒருவேளை வீட்டுல ஒத்துக்காம போய் உன்னைப் பார்க்க முடியாத அளவுக்கு என்னை வீட்டுல சிறை வச்சுட்டாங்கன்னா..அதான் பயமா இருக்கு அலெக்ஸ்
எங்கப்பாவைப் பத்திதான் உனக்கு நல்லாவே தெரியுமே..உன்னை ஏதும் பண்ணிட்டார்ன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் அலெக்ஸ்"
எங்கப்பாவைப் பத்திதான் உனக்கு நல்லாவே தெரியுமே..உன்னை ஏதும் பண்ணிட்டார்ன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் அலெக்ஸ்"
சொல்ல சொல்லவே அழ ஆரம்பித்தாள்.
"ஏய்..எதுக்கு இப்ப நீ அழறே?"
சொன்னவன் அவளது கண்களைத் துடைத்துவிட்டு அவளைத் தன் மார்மீது அப்படியே சாய்த்துக் கொண்டான்.
"சரி பூஜா என்ன பண்ணலாம்ன்னு நீயே சொல்லு"
"முதல்ல நீ உங்க வீட்டுல நம்ம காதலைப் பத்தி சொல்லி அவுங்களை சமாதானப்படுத்து. அப்புறம் உங்க அப்பா அம்மாவை எங்க வீட்டுக்கு வந்து முறைப்படி என்னை பொண்ணு கேட்கச்சொல்லு"
"அதுக்கு உங்க வீட்டுல சம்மதிப்பாங்களா பூஜா''
அப்பாவியாய்க் கேட்டான் அலெக்ஸ்..
''சம்மதிப்பாரா மாட்டாராங்கறது அடுத்த பிரச்சனை..மொதல்ல உங்க வீட்டுல பேசு"
''ஓ.கே பேசிடுறேன்"
"எப்போ பேசப்போற"
ஆர்வமாய்க் கேட்டாள்.
ஆர்வமாய்க் கேட்டாள்.
"உடனே வேண்டாம்.கொஞ்சம் யோசனை பண்ணிட்டு .."
அவன் முடிக்கவில்லை இடைமறித்த பூஜா,
"என்ன.. யோசனை பண்ணிட்டா.. நீ யோசனை பண்றத்துக்குள்ள எனக்கு கல்யாணமே ஆயிடும்" என்று சொல்ல,
அவன் முடிக்கவில்லை இடைமறித்த பூஜா,
"என்ன.. யோசனை பண்ணிட்டா.. நீ யோசனை பண்றத்துக்குள்ள எனக்கு கல்யாணமே ஆயிடும்" என்று சொல்ல,
"பூஜா என்ன சொல்றே''
கேட்டவன் அவள் முகத்தையே பார்த்தான்.
கேட்டவன் அவள் முகத்தையே பார்த்தான்.
"ஆமாம் அலெக்ஸ் திருச்சியில் இருக்கிற எங்க மாமா அவரோட பையனுக்கு என்னை பொன்ணு கேட்டு வர்றதா சொல்லியிருக்காரு..அந்த சம்பந்தம் எங்க அப்பாவுக்கு பிடிக்கலை.இந்த நேரம்பாத்து உங்க வீட்டுல பொண்ணு கேட்டு வந்தாங்கன்னா
எங்கப்பா சரின்னு சொல்லிடுவாரு.நமக்குதான் மதமோ ஜாதியோ தடையா இல்லையே"
"சரி பூஜா அப்படின்னா நான் இன்னைக்கே வீட்டுல பேசிடுறேன்''
அலெக்ஸ் சொல்ல பூஜா நிம்மதி பெருமூச்சு விட்டாள்..
"சரி பூஜா,இந்த இனிமையான நேரத்துல சந்தோசமா ஏதாவது பேசலாமே"
"பேசலாம்..ஆமா வரும்போது 'உனக்கு ஒண்ணு வாங்கிட்டு வரேன்'னு வாய் கிழிய சொன்ன!என்ன வாங்கிட்டு வந்தேன்னு தெரிஞ்சிக்கலாமா?"
அவனது பேண்ட பாக்கெட்டைப் பார்த்தவாறே பூஜா கேட்க,
முழங்காலிட்டு தன் வலது புற பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை விட்டு எதையோ எடுத்து கை விரல்களை மடக்கியபடி அவளை நோக்கி நீட்டிய அலெக்ஸ்,
"என்னோட உள்ளங் கையில இருக்கு.உனக்கு இது வேணும்ன்னா என்னோட கையைப் பிரிச்சு நீயே எடுத்துக்கோ" என்றான்.
"அப்படியா முயற்சி பண்றேன்.அதுக்கு முன்னாடி அது என்னன்னு சொல்லேன்..ப்ளீஸ்"
"நான் சொல்ல மாட்டேன்..விரலைப் பிரிச்சு நீயே பாத்துக்கோ..வேணும்ன்னா எடுத்துக்கோ"
சொன்ன அவனது விரல்களைப் பிடித்து பூஜா இழுக்க முற்பட, கையை உருவிக் கொண்டு எழுந்த அலெக்ஸ் மணற்பரப்பில் மெதுவாக ஓடினான்.இருபது அடி இடைவெளியில் நின்று கொண்டான்..
"வா..ஓடிவந்து பிடி"
"வா..ஓடிவந்து பிடி"
"ஏய்..அலெக்ஸ் ஓடாதே நில்லு..உன் உருவமே தெரியல..அங்க ரொம்ப இருட்டா இருக்கு அங்க வேண்டாம் வா..''
'' இருட்டா இருநதாத்தான் த்ரில்லா இருக்கும்...உனக்கு இது வேணுமின்னா என்ன ஓடி வந்து பிடி"
பூஜா சுற்றிலும் பார்த்தாள்..ஆள் நடமாட்டம் அறவே இல்லை..
"என்ன பூஜா கிஃப்டு வேண்டாமா?''
''அலெக்ஸ் போதும் விளையாட்டு. தனியா விட்டு போகாதே பயமாயிருக்கு"
"அப்படியா பயமா இருந்தா ஓடி வந்து என்னை இறுக்கி கட்டிப் பிடுச்சிக்க"
"ஓஹோ அதுக்குத்தான் இருட்டான ஏரியாவுக்கு போனியா?இதோ வர்ரேன் வந்து முதுகுலயே ஒண்ணு வக்கிறேன்"
என்று சொன்ன பூஜா குனிந்து மணற்பரப்பிலிருந்த தனது நோட்டு புத்தகங்களை அள்ளி மார்போடு அணைத்துக்கொண்டு அலெக்ஸை நோக்கி மெதுவாக ஓடினாள்..அவனும் ஓடினான்..இருபதடி ஓடியிருப்பாள் பூஜா. அவளை ஏதோ ஒன்று தடுக்கி விட குப்புற விழுந்தாள் ..
அவளது நோட்டுப் புத்தகங்கள் சிதறி விழுந்தன..
"பூஜா என்னாச்சு"
அலெக்ஸ் அவளிடம் ஓடி வந்தான்..
"என்னாச்சு பூஜா''
"ஏதோ தடுக்கி விட்டுடுச்சு''
சொல்லிக்கொண்டே எழுந்த பூஜா சுடிதாரில் அப்பிய மணலை உதறினாள்..
''என்ன தடுக்கி விட்டுச்சு வா பார்க்கலாம்"
என்று அலெக்ஸ் சொல்ல இருவரும் ஒருசேர அந்த இடத்தில் குனிந்து பார்க்க இருவருமே பயங்கரமாய் அதிர்ந்தனர்..
அங்கே..
ரத்தம் சிந்திய வயிறோடு ஒரு பிணம் மல்லாந்து கிடந்தது..
ரத்தம் சிந்திய வயிறோடு ஒரு பிணம் மல்லாந்து கிடந்தது..
----------------------------------------------
(கொலைவெறி தொடரும்)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டாவது அத்தியாயம் வாசிக்க இங்கே செல்லவும்..
------------------------------------------------------------------------------- இந்த அத்தியாயத்தை தரவிறக்கம் செய்ய கீழே இருக்கும் இணைப்பில் செல்லவும்.
வணக்கம்.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டில் நான் தான் முதலாவதாய் வந்திருக்கிறேன் போலிருக்கிறது?ஹிஹி.
ஆரம்பத்திலிருந்து நான் நினைத்ததற்கும் தாங்கள் நிருட்தியிருக்கும் இடத்திற்கும் சம்பந்தமே இல்லை.மேலே நல்ல பொருத்தமான அனிமேஷன் ஒன்று வைத்திருக்கிறீர்கள்.மிரட்டலாகவுள்ளது.
ReplyDeleteதொடர்ந்தும் படிக்க படிக்கதான் மேலதிகமாக கருத்து சொல்லமுடியும் என்று நினைக்கிறேன்.
எனக்கும் க்ரைம் கதைகளிலும் சரித்திரக் கதைகளிலும்தான் ஆர்வம் அதிகம்.இந்தக்கதை ஏற்கெனவே வெளியான கதை என்று கூறியிருந்தீர்கள்.ஆனால் நான் வாசித்திருக்கவில்லை.
அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
கவிஞரே... உங்களுக்குள் ஒரு ராஜேஷ்குமார் ஒளிந்திருப்பதை இப்போதுதான் காண்கிறேன். நல்ல ஆரம்பம், ‘திடுக்’ தொடரும் என கலக்கறீங்க. (நானும் உங்களுக்குப் போட்டியா ஒரு க்ரைம் கதைதான் இப்ப எழுதிட்டிருக்கேன்) தொடரும் பகுதிகளுக்கு ஆவலோட காத்திருக்கேன். உங்களுக்கு என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிறுவிறுப்பாகப் போகிறது.... waiting for the next part.. ராஜேஷ்குமார் க்ரைம் நாவலை நினைவுபடுத்துகிறது!
ReplyDeleteஒரு வாரம் காத்திருக்க வெக்கறீங்களே...!!!! வாரம் 2னு போட கூடாதா நண்பரே?
ReplyDelete/சுவடுகள்/
ReplyDeleteக்ரைம் நாவல் வாசிக்கும் வாசகர் யாராயிருந்தாலும் படிக்கும்போது தான் ஒரு கதையை யூகித்துக் கொண்டுதான் படிப்பார்கள்.அதைப் போல நீங்களும் யூகித்திருக்கிறீர்கள்..ஆனால் வாசகர்களின் யூகங்களை ஏமாற்றி வேறு பாதையில் பயணிக்க வைப்பது தானே க்ரைம் எழுத்தாளனின் வேலை..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..காத்திருங்கள்..
/கணேஷ்/
ReplyDeleteஐய்யயோ ராஜேஷ்குமார் பெரிய க்ரைம் மன்னன்..அவர் எனக்குள் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறார்..
விரைவில் உங்களது க்ரைம் கதையை எதிர்பார்க்கிறேன்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
/சுபத்ரா/
ReplyDeleteஆம்..ராஜேஷ் குமார் எனது மானசீக குரு..அதனால் நினைவு படுத்தலாம்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
/மரு.சு/
ReplyDeleteவாரம் இரண்டுன்னு போடலாம்தான் ஒண்ணப் படிக்கவே தோழர்களுக்கு பொருமை இருக்கிறதா என பார்த்துக் கொள்கிறேன்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
/ரமணி/
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா.
புத்தாண்டு வாழ்த்துக்கள்...நன்றி பகிர்விற்கு...
ReplyDeleteவிறுவிறுப்பாகப் போகிறது திகில். பொருத்தமான அனிமேஷன்.
ReplyDeleteதூரிகையின் தூறலில் நனைவது நான் முதல் தடவை..
உலகிலுள்ள அனைத்து நெஞ்சங்களும். எந்நாளும். எந்நேரமும் நிம்மதியென்னும் நீரில் நீந்த எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி வேண்டுகிறேன்..
சுவாரசியமாகப் போகிறது. அடுத்த பாகம் படிக்கக் காத்திருக்கிறேன்.
ReplyDeleteஉங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தொடருங்கள் தொடர்ந்து வாசிக்கிறேன்
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே
மிகவும் அருமை புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteபுது வருட வாழ்த்துக்கள் சகோ..!!
ReplyDeleteநல்ல முயற்சி கவிஞரே..
ReplyDeleteநன்றாகவுள்ளது தொடருங்கள்.
ரொம்பவும் பயமுறுத்தாம கதை சொல்லுங்க மதுமதி !
ReplyDeleteஒரு கவி இங்கே கதை வடிக்கிறார்...
ReplyDeleteதங்களின் மாற்றுருவை வரவேற்கிறேன்
புத்தாண்டு வாழ்த்துக்களுடன்.
பக் பக்... கதையின் கொலைவெறி தொடரட்டும்...
விறுவிறுப்பான ஆரம்பம். அந்த அனிமேஷன் படம் த்ரில்லைக் கூட்டுது.
ReplyDeleteஆரம்பமே எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிரது. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
ReplyDeleteஅங்கே..
ReplyDeleteரத்தம் சிந்திய வயிறோடு ஒரு பிணம் மல்லாந்து கிடந்தது..//
ஆஹா அடுத்த ராஜேஷ்குமார், திகிலா இருக்கு....!!!!
உங்கள் பதிவில் இன்டலி, தமிழ்பத்தில் ஓட்டு போடமுடியலையே ஏன் நண்பா...?
ReplyDeleteஅமர்க்களமான தொடக்கம்
ReplyDeleteதொடருங்கள், தொடர்கிறோம்
/அன்புடன் மாலிக்கா/
ReplyDeleteவருகைக்கு நன்றி..வேண்டுதலுக்கும் நன்றி..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDelete/எம்.ஆர்/இமா/ரிஷ்வன்/சசிகலா/காட்டான்/
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDelete/முனைவர்/ஹேமா/அமைதிசாரல்/மகேந்திரன்/லட்சுமி அம்மா/ராஜகோபாலன்/
/நாஞ்சில் மனோ/
ReplyDeleteஇன்ட்லியிலும் தமிழ் 10 லும் ஏன் ஓட்டு விழ மாட்டேங்கிறதென்று தெரியவில்லை தோழர்....அடிக்கடி இப்படித்தான் ஆகிவிடுகிறது..ஏதோ கோளாறு என்று நினைக்கிறேன்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
கதையின் பக் பக் நொடிகளுடன் முடித்து விட்டிர்கள் ..
ReplyDeleteவிரைவில் அடுத்த பகுதியை படிக்கும் ஆர்வம் நெஞ்சில் தாண்டவமாடுது தோழமையே ..
வாழ்த்துக்கள் மேலும் தொடர ..
என்னுடைய கிரைம் தொடர் (சிறுதொடர்-மூன்று பதிவுகள் மட்டுமே..) கவனிக்க படாதபோது கொஞ்சமாய் வலித்தது..மறுபதிவு செய்யலாம் இன்று கூட யோசித்தேன்...உங்களின் கதையில் உள்ள நடை அதில் இல்லை என்பதை உணர்கிறேன்...கற்றுகொண்டேன்...நன்றி ஒரு இலவச பாடத்திற்கு..
ReplyDeletem...m...m.....payathoda padikkiren. Shhh..h..h..
ReplyDeleteTM 12.
/அரசன்/
ReplyDeleteவருகைக்கு நன்றி..
அடுத்த அத்தியாயம் படிக்க ஆர்வமாயிருக்கிறதா..மகிழ்ச்சி..
/மயிலன்/
ReplyDeleteஆம் தோழர்..பொதுவாக க்ரைம் கதைக்கென்று ஒரு நடை இருக்கிறது..வாசகர்களை கடைசி வரை யூகிக்க விடக்கூடாது என்பதில் எழுத்தாளன் குறியாக இருக்க வேண்டும்..உங்கள் தொடரை நான் வாசிக்க வில்லை..கட்டாயம் வாசிக்கிறேன்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
/துரை டேனியல்/
ReplyDeleteபயத்தோட படிக்கிறீங்களா..மகிழ்ச்சி.
உங்கள் வருகைக்கு நன்றி..
சுவாரசியமாய் இருக்கிறது தொடர்.
ReplyDeleteஆர்வமுடன் தொடர்கிறேன்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
"வி"யை விட்டு விட்டு இப்படியும் அவதாரமா ? அட.. கவிதையை மாற்றி கதை எழுதுவது பற்றி சொல்கிறேன். விறுவிறுப்பான தொடக்கம். மர்மம் இன்னும் சில்லிட வைக்குமா அல்லது சூடாகுமா என அறிய காத்திருக்கிறேன். பாராட்டுகள்.
ReplyDelete/சிவகுமாரன்/
ReplyDeleteஆர்வமாயிருக்கிறதா தோழர்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
/அர்விந்த் கார்த்திக்/
ReplyDeleteவாஙக வாங்க தளத்திற்கு வந்து கருத்து சொல்வீங்கன்னு எதிர் பார்க்கவில்லை. கவிதை நிறைய வாசகர்களுக்கு கொடுத்தாச்சு அதனால ஒரு தொடர்கதை கொடுக்கலாம்ன்னு நினைத்தேன்..வேறொன்றுமில்லை..
நல்ல கதை.
ReplyDeleteதொடருங்கள்.
வாழ்த்துகள்.
மாப்ள ஒரு கொலையில் ஆரம்பிச்சி இருக்கீங்க கலக்குங்க!
ReplyDeleteகவிஞர் எப்போ கதாசிரியர் ஆனார். ஆஹா முதற்பகுதியிலேயே திரில் ஆரம்பிச்சிடிசே.
ReplyDeleteகதாசிரியர் என்ற பெயர் வாங்கி பத்து வருடங்கள் தாண்டி விட்டது ஐயா..த்ரில்லா இருந்ததா மகிழ்ச்சி..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Deleteநண்பா.... ஆரம்பத்தில் வாசிக்கும் போது என்ன கிரைம் வரபோகுதுன்னு ஆர்வமா வாசிச்சேன்....
ReplyDeleteகடைசியில திருப்பத்துல ஆர்வத்தை கூட்டறிங்க...
தொடருங்கள்.
அப்படியா தோழர் மகிழ்ச்சி..தொடருகிறேன்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDeleteசகோதரா குறை நினைக்க வேண்டாம் எனக்கு சிறுகதை , தொடர்கதை வாசிப்பதில் ஆர்வம் இல்லை.மன்னிப்பீர்கனா? பணி தொடர வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com