புது வரவு :
Home » » வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..

வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..

            'தூரிகையின் தூறல்' வலைப்பூவைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுக்கும் வலைப்பூவைத் தொடருகின்ற அன்பு நண்பர்களுக்கும் வணக்கம்..
மதுமதி
          நான் வலைப்பூ ஆரம்பித்து ஒரு மாத காலத்தை நிறைவு செய்து இரண்டாவது மாதத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறேன்.. ஒருமாத காலமாக நான் எழுதி வந்த கவிதைகளையும்,கொக்கரக்கோ என்ற தலைப்பில் எழுதி வந்த நாட்டு நடப்பினையும் படித்து கருத்திட்டு வாக்களித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி..
ராணிமுத்து
           நான் எழுத்துலகுக்கு அறிமுகமானது 2001 ம் ஆண்டு..என்னை எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தியது குமுதம்-மாலைமதி..ஆம் 'வந்து விடு காயத்ரி' என்ற க்ரைம் நாவல் மூலம் தான் நான் குமுதம்-மாலைமதியில் நாவலாசிரியராக அறிமுகம் ஆனேன்..பின்பு திரைபடத் துறையை நோக்கி பயணம் செல்ல நாவல்,சிறுகதை என் பத்திரிக்கைகளுக்கு எழுதுவது தடைப்பட்டது..ஆனாலும் அவ்வப்போது எழுதிதான் வருகிறேன்..
தெய்வப்புலவர்
            வலைப்பூ ஆரம்பிக்கும்போதே இதில் ஒரு தொடர்கதை எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது..அப்போதே 'வள்ளுவம்' என்ற பெயரில் வசன கவிதை நடையிலே திருக்குறளுக்கான விளக்கம் எழுதி வருவதை பார்த்திருப்பீர்கள்..அதைத் தொடர்ந்து இன்னும் இரண்டு தொடர்கள் எழுதலாமென முடிவெடித்துள்ளேன்..
             ஒன்று சென்ற செப்டம்பர் மாதம் 'ராணி முத்து'  இதழில் நான் எழுதிய 'உயிரைத்தின்று பசியாறு' என்ற க்ரைம் நாவலை தொடராக எழுத முடிவெடுத்துள்ளேன்..விறுவிறுப்பான் கதை இது..
வெண்தாடி வேந்தர்
             மற்றொன்று 'பெரியாரியல்' என்ற தலைப்பின் கீழ் 'ஈரோட்டு சூரியன்' வெண்தாடி வேந்தர் ஈ.வெ.ரா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கவிதை நடையில் தொடராக எழுத இருப்பது..அனைத்தும் தயார் நிலையில் உள்ளது..
              ஞாயிறு தோறும் 'உயிரைத் தின்று பசியாறு'   க்ரைம் தொடர்கதை
              புதன்தோறும் 'ஈரோட்டு சூரியன்' வாழ்க்கைத்தொடர்
              வெள்ளிதோறும்'வள்ளுவம்' வசன கவிதையில் திருக்குறள்
              இதர நாட்களில் கவிதைகள்,கொக்கரக்கோ
என திட்டமிட்டுள்ளேன்..வலைப்பதிவு வாசகர்கள்,தொடரும் தோழர்கள் என தொடர்ந்து தங்களது ஆதரவைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்..

தினத்தந்தி விளம்பரம்

நன்றி..
ராணி முத்து மாத நாவல்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி வணக்கம்.


Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

37 comments:

 1. உங்கள் எழுத்துப் பணி சிறக்க என் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் உங்கள் தரமான ஆக்கங்கள் பல் வழிகளிலும் எக்குறையும் இன்றி உங்கள் எண்ணம்போல் வெற்றிவாகை சூடட்டும் .இதற்கு என்றும் இப் புத்தாண்டு பொலிவு தரும் ஆண்டாக மலர என் மனமார்ந்த பாராட்டுகளும்
  வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 3. எழுத்துலகம் உங்களால் பேறு பெறட்டும்... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. புதிய வருடம்,புதிய முயற்சிகள் சிறக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. Eluthunga Sir!

  Aatharavu thara Naanga irukkom. Kalakkunga.

  TM 3.

  ReplyDelete
 6. எழுதுங்க படிக்க ஆவலாக இருக்கிறோம்.......


  புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!!

  இந்த புத்தாண்டில் சில வார்த்தைகள்..

  ReplyDelete
 7. புது வருஷம் புது தெம்போடு வாருங்கள் கவிஞரே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...!!!

  ReplyDelete
 8. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
  /ரிஷபன்/அம்பாளடியாள்/மரு.சுந்தரபாண்டியன்/கோகுல்/துரை டேனியல்/எனக்குப் பிடித்தவை/நாஞ்சில் மனோ/

  ReplyDelete
 9. புத்தாண்டுப் பரிசாக தங்கள் தொடர்கள்
  தொடர்வது குறித்து மிக்க மகிழ்ச்சி
  தங்களுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
  த.ம 5

  ReplyDelete
 10. மகிழ்ச்சி மகிழ்ச்சி..

  அன்பு நண்பரே தங்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது தங்கள் பெரியாரியர் சிந்தனைகள்தான்..

  தொடர்க..

  ReplyDelete
 11. மிக அருமை தங்கள் வலைப்பூ.. வாழ்த்துக்கள். தொடருங்கள்.

  ReplyDelete
 12. /ரமணி/

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

  ReplyDelete
 13. /குணா தமிழ்/

  உண்மையில் மகிழ்ச்சி தோழர்..

  தங்கள் வருகைக்கு நன்றி தோழர்..

  ReplyDelete
 14. தொடருங்கள் நண்பரே..
  நாங்களும் தொடர்கிறோம்
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. மனம் நிறைந்த வாழ்த்துகள் மதுமதி.இன்னும் நிறைவான எழுத்துக்களை எதிர்பார்க்கிறோம் !

  ReplyDelete
 16. பன்முகத்திறமையாளருக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

  தொடருங்கள்.

  தமிழ்மணம்: 9
  யூடான்ஸ்: 4
  இண்ட்லி: 4

  அன்புடன் vgk

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் சார்

  ReplyDelete
 18. மகிழ்ச்சி,
  தொடருங்கள் ...தொடர்கிறேன் ...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. வாழ்த்துக்கள் நண்பரே ,பதிவிடுங்கள் நண்பரே படித்து மகிழ வருகிறோம்

  த.ம 12  இன்று நமது தளத்தில்

  ஆட்டிறைச்சி குணங்கள் அறிந்துகொள்ளுங்கள்

  ReplyDelete
 20. தொடருங்கள்... தொடர்கிறோம். (ராணிமுத்து நாவல் போஸ்டர்ல இருக்கறது உங்க சின்ன வயசுப் படமா கவிஞரே...)

  ReplyDelete
 21. மகிழ்ச்சி தொடருங்க அன்பரே ..
  நாங்க காத்து இருக்கோம்...

  ReplyDelete
 22. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
  /தேனம்மை/மகேந்திரன்/ஹேமா/வை.கோ/கவி அழகன்/ரத்னவேல்/நண்டு@நொரண்டு/எம்.ஆர்/கணேஷ்/அரசன்/

  ReplyDelete
 23. தொடர்ந்து கலக்குங்க வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 24. வாழ்த்துக்கள்...!உங்கள் எழுத்துப்பணி சிறக்கட்டும்!கண்டிப்பாக படிப்போம்!

  ReplyDelete
 25. வெற்றிகரமாக தொடங்குங்கள் மதுமதி...

  தங்களின் எல்லா முயற்சிக்கும் என் ஆதரவு உண்டு...


  தங்களின் படைப்புளை காண காத்திருக்கிறேன்

  ReplyDelete
 26. தங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 27. வாழ்த்து கூற வயதின்றி வணங்குகிறேன் .

  புத்தாண்டு வாழ்த்துக்களுடன் .

  ReplyDelete
 28. வாழ்த்துகள். தொடர்ந்து சொல்லுங்க காத்துகிட்டிருக்கோம் படித்து ரசிக்க.

  ReplyDelete
 29. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
  /கருன்/வீடு சுரேஷ்/கவிதைவீதி சௌந்தர்/சசிகலா/லட்சுமி அம்மாள்/

  ReplyDelete
 30. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
  /கருன்/வீடு சுரேஷ்/கவிதைவீதி சௌந்தர்/சசிகலா/லட்சுமி அம்மாள்/

  ReplyDelete
 31. /கணேஷ்/

  தொடருங்கள்... தொடர்கிறோம். (ராணிமுத்து நாவல் போஸ்டர்ல இருக்கறது உங்க சின்ன வயசுப் படமா கவிஞரே...)

  மலேரியாவால் பாதிக்கப் பட்டபோது எடுத்த படம்..(நான் இன்னும் யூத்துதான் )

  ReplyDelete
 32. உங்கள் எழுத்துப் பணி சிறக்க என் நல்வாழ்த்துகள்.

  இன்று என்னுடைய வலைப்பூவில் ஜிமெயிலின் அரட்டை பெட்டியினை நீக்க

  ReplyDelete
 33. வாழ்த்துக்கள் நண்பரே..உங்களின் எழுத்துலகை பின்தொடர்வதில் மகிழ்ச்சி.....

  ReplyDelete
 34. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், திருக்குறளின் இறை வணக்கம், பெரியாரிய சிந்தனையில் எழுதி இருப்பீர்கள் என்று நினைத்து ஏமாந்தது தான்... புத்தாண்டு உங்கள் எழுத்துக்களை செதுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து எனக்கு இல்லை

  ReplyDelete
 35. /சூர்யஜீவா/

  கருத்துக்கு நன்றி..

  இறை வணக்கத்தை பெரியாரிய சிந்தனையில் எதிர்பார்த்தது சரிதான்..

  வள்ளுவன் என்ன சொன்னாரோ அதன் பொருள் மாறிவிடுமோ என்று கருதியே ஓரளவு இறைவன்,பகவான் போன்ற வார்த்தைகளை பயன் படுத்த வேண்டியதாய்ப் போயிற்று..
  முடிந்தவரை பெரியாரிய சிந்தனைகள்தான் பிரதிபலிப்பேன் என்பதில் ஐயமில்லை..

  ReplyDelete
 36. கலக்குங்க.. தூரிகையின் தூறலில் தொடர்ந்து நனைய ஆவல்.

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com