முகம் தெரியாத
மனிதர்கள் தான்
நம் முகத்தைப் பலருக்கும்
தெரிய வைக்கிறார்கள்..
----------------------------------
நாட்கள் போதவில்லை..
வாழ்வதற்கல்ல..
எப்படி வாழ்வது என்று
சிந்திப்பதற்கு..
-----------------------------------
எதிர்காலத்தில்
எப்படி வாழவேண்டுமென்று
இறந்தகாலமே
கற்றுக் கொடுக்கிறது..
-----------------------------------
-----------------------------------
இருப்பதை வைத்துக்கொண்டு
வாழ் என்கிறார்கள்..
இருக்கிறதா இல்லையா என்று
எப்போதுமே கேட்பதில்லை..
-----------------------------------
தெருவில்
பணத்தைக் கண்டெடுத்தபோது
ஏற்பட்ட சந்தோசம்
பொய்யானதென்று
அதே தெருவில் பணத்தை
தொலைத்தபோதுதான் தெரிந்தது.
---------------------------------
படுக்கையில் படுத்தவுடன்
இன்று என்னென்ன செய்தோம் என்று
யோசிப்பதை விட நாளை
என்னென்ன செய்யப்போகிறோம் என்று
யோசித்தல் சிறப்பு..
-------------------------------------
எளிமையான வரிகளில் மனித வாழ்க்கையை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்... அருமை..
ReplyDeleteஅனைத்துமே அருமை.
ReplyDeleteபாராட்டுக்கள். vgk
ஆமா, நாளைக்கு என்ன செய்யப்போறோம்?
ReplyDelete///இருப்பதை வைத்துக்கொண்டு
ReplyDeleteவாழ் என்கிறார்கள்..
இருக்கிறதா இல்லையா என்று
எப்போதுமே கேட்பதில்லை..///
நிதர்சனத்தைச் சொல்லிப் போகும் வரிகள்..!!!
தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்களே.. அதுபோலதான்.. பணத்தை இழந்தவனுக்கும், பணத்தை கண்டெடுத்தவனுக்கும் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் வரிகள்...!!!
பகிர்வுக்கு நன்றி நண்பரே..!!!
சீரிய சிந்தனைகள்...
ReplyDeleteமுகம் தெரியாத | மனிதர்கள் தான் | நம் முகத்தைப் பலருக்கும் | தெரிய வைக்கிறார்கள்..
ReplyDelete-இந்த வரிகள் மனதில் ஒட்டிக் கொண்டன கவிஞரே... உண்மையில் தோய்ந்த வரிகள். பிரமாத்ம். உங்களுக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//இருப்பதை வைத்துக்கொண்டு
ReplyDeleteவாழ் என்கிறார்கள்..
இருக்கிறதா இல்லையா என்று
எப்போதுமே கேட்பதில்லை..//
அருமை
////படுக்கையில் படுத்தவுடன்
ReplyDeleteஇன்று என்னென்ன செய்தோம் என்று
யோசிப்பதை விட நாளை
என்னென்ன செய்யப்போகிறோம் என்று
யோசித்தல் சிறப்பு..////
சிறப்பான வரிகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளது காரணம் நான் எப்பவும் இப்படி சிந்திப்பவன் தான் இன்று என்ன செய்தேன் என்பதை விட நாளை என்ன செய்யப்போகின்றேன் என்று
வாழ்த்துக்கள் பாஸ்
வாழ்வியல் ஒன்றைவிட ஒன்று அருமையாக இருக்கிறது !
ReplyDeleteயோசிப்போம்.
ReplyDeleteஇருப்பதை வைத்துக்கொண்டு
ReplyDeleteவாழ் என்கிறார்கள்..
இருக்கிறதா இல்லையா என்று
எப்போதுமே கேட்பதில்லை..
-----------------------------------
தெருவில்
பணத்தைக் கண்டெடுத்தபோது
ஏற்பட்ட சந்தோசம்
பொய்யானதென்று
அதே தெருவில் பணத்தை
தொலைத்தபோதுதான் தெரிந்தது.
---------------------------------
அழகாக
ஆழமாக
சிந்திக்கும்விதமாகச் சொன்னீர்கள் கவிஞரே..
"நாளை
ReplyDeleteஎன்னென்ன செய்யப்போகிறோம் என்று
யோசித்தல் சிறப்பு.."
>>>
இது தான் மாப்ள டாப்பு...இதை சிந்த்திதாலே பல விஷயங்கள் நன்றாக நடக்கும்!
உரத்த சிந்தனை
ReplyDeleteபடிப்போரையும் சிந்திக்கச் செய்து போகும் பதிவு
பகிர்வுக்கு நன்றி
த.ம 7
இயற்கைபோல மிக எளிமையாக சிந்தித்து தந்து இருக்கின்றீர்கள் பாராட்டுகள்
ReplyDelete