புது வரவு :
Home » , » அழுகையும் அழ ஆரம்பிக்கிறது

அழுகையும் அழ ஆரம்பிக்கிறது

அடிக்கடி நான் 
கோபப்படுகிறேன் என்று
கோபத்திற்கும் 
கோபம் வந்துவிடுகிறது..

பொறுமையாக
இருக்கலாம் என்று முடிவெடுத்தால்
என் பொறுமையைக் கண்டு
பொறுமை தன் 
பொறுமையை இழக்கிறது..சிந்திக்கும்போதெல்லாம்
ஏன் இவன்
சிந்தனை செய்தபடியே
இருக்கிறான் என்று
சிந்தனையே சிந்திக்க 
ஆரம்பித்துவிடுகிறது..

நான் சோகமாய் 
இருப்பதைப் பார்த்து
அந்த சோகமும்
என்னோடு சேர்ந்து
சோகம் கொள்கிறது..

எனக்கு 
அழுகை வந்தால்
அந்த அழுகைக்கும் 
பொறுக்க முடிவதில்லை
ஒரு ஓரமாய் நின்று
அழ ஆரம்பித்துவிடுகிறது..


இப்போது
சிரித்துக்கொண்டிருக்கிறேன்..
எனது சிரிப்பும் என்னைப் பார்த்து
சிரித்துக் கொண்டுதான் இருக்கிறது..

இன்பம் கொள்ளும்போது
அந்த இன்பம்
என்னை விட்டுச் செல்லாமல்
என்னுடனேயே 
இருந்துவிடுகிறது என்று
சந்தோசிப்பதில்லை..

துன்பம் கொள்ளும்போது
அந்த துன்பம்
என்னோடு இல்லாமல் 
என்னை விட்டு 
ஓடிச்சென்றுவிடுகிறது என்றே
சந்தோசிக்கிறேன்..
----------------------------------
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

26 comments:

 1. //துன்பம் கொள்ளும்போது
  அந்த துன்பம்
  என்னோடு இல்லாமல்
  என்னை விட்டு
  ஓடிச்சென்றுவிடுகிறது என்றே
  சந்தோசிக்கிறேன்..//

  மனிதனின் உணர்வுகளை தாங்கி நிற்கிறது

  த.ம 1

  ReplyDelete
 2. பெரிய விஷயம் கவிஞரே... துன்பத்தைக் கண்டு சிரிக்கப் பழகி விட்டால் எதையும் வெல்லும் மனநிலை சித்தித்து விடும். பிரமாதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்! நன்று!

  ReplyDelete
 3. அருமை அருமை
  சிந்தனை வேகத்திற்கு வார்த்தைகளும் ஈடுகொடுத்து
  கவிதையை உச்சத்திற்கு இட்டுச் செல்கிறது
  மனம் கவர்ந்த மீண்டும் மீண்டும் படிக்கது தூண்டும்
  அருமையான பதிவு
  வாழ்த்துக்கள்
  த.ம 4

  ReplyDelete
 4. கவிதை வித்தியாசமாக இருக்கு

  ReplyDelete
 5. மது!
  தங்கள் கவிதைகள், அழகு, புதுமை,சிந்தனை வளம்,சொற்சிலம்பு
  என, பல்சுவை நிறைந்தவை!
  ஆனால் ஏதோ ஒரு சோகம் அதில் மெல்லிய இழையாக ஓடுவது
  போல் நான் உணர்கிறேன்!
  சரியா...

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 6. அட என்னமா எழுதுரய்யா!

  ReplyDelete
 7. வணக்கம் சகோ,
  உணர்ச்சிகளின் உணர்வுகள் மனிதனின் உணர்வுகளைப் பார்த்து எப்படி வலி கொள்ளும் என்பதனை இந்தக் கவிதை சொல்லி நிற்கிறது.

  இதனைப் படிக்கையில் எனக்கு எங்கே நிம்மதி எனும் பாடலில் கவியரசர்...
  எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது எனும் வரிகள் தான் நினைவிற்கு வந்து போகின்றது.

  வித்தியாசமான சிந்தனையில் ஓர் கவிதை.

  ReplyDelete
 8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
  /சம்பத்குமார்/கணேஷ்/நண்டு@நொரண்டு/ரமணீ/மனசாட்சி/புலவர்/விக்கி/நிரூபன்/

  ReplyDelete
 9. //துன்பம் கொள்ளும்போது
  அந்த துன்பம்
  என்னோடு இல்லாமல்
  என்னை விட்டு
  ஓடிச்சென்றுவிடுகிறது என்றே
  சந்தோசிக்கிறேன்..// -நானும் அப்படித்தான் சந்தோசிக்கிறேன்!
  http://vethakannan.blogspot.com/2011/12/blog-post_25.html

  ReplyDelete
 10. நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்..!!

  ReplyDelete
 11. ! Arumai. Pudhumai. Vithiyasamaana Sinthanai Sir. Azhagu kavithai.

  TM 9.

  ReplyDelete
 12. துன்பத்துக்கு மட்டும் விதிவிலக்கு..

  அருமையான கவிதை..

  ReplyDelete
 13. //சிந்திக்கும்போதெல்லாம்
  ஏன் இவன்
  சிந்தனை செய்தபடியே
  இருக்கிறான் என்று
  சிந்தனையே சிந்திக்க
  ஆரம்பித்துவிடுகிறது..// - நானும் இப்படி அடிக்கடி சிந்தித்தது உண்டு!

  ReplyDelete
 14. இடுக்கண் வருக்கால் நகுக! என்று வள்ளுவரின் குறள் நினைவுக்கு வந்தது. நன்றி!
  தங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  த.ம.11

  ReplyDelete
 15. இடுக்கண் வருங்கால் நகுக...
  துன்பத்தையும் நேசிக்கப் பழகிக்கொள்ளச்
  சொல்லும் தங்களின் கவிவரிகள் அழகு நண்பரே.

  ReplyDelete
 16. துன்பத்தையும் நேசிக்கப் பழகிக்கொள்ள....

  அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு...

  ReplyDelete
 17. இடுக்கண் வருங்கால் நகுக, அருமையா சொல்லி இருக்கீங்க, சூப்பருய்யா சூப்பர்ப்...!!!

  ReplyDelete
 18. அருமையான கவிதை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 19. உணர்வுகளுக்கும் உணர்ச்சி!
  கவிதை அருமை!
  சொற்களைக் கையாண்டுள்ள விதம் அழகு; ரசித்தேன்.

  ReplyDelete
 20. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
  /கருணாகரன்/காட்டான்/துரைடேனியல்/கருன்/

  ReplyDelete
 21. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
  /வேதகண்ணன்/தனபாலன்/மகேந்திரன்/ரிஷ்வன்/மனோ/ரத்னவேல்/இமா/

  ReplyDelete
 22. துன்பம் கொள்ளும்போது
  அந்த துன்பம்
  என்னோடு இல்லாமல்
  என்னை விட்டு
  ஓடிச்சென்றுவிடுகிறது என்றே
  சந்தோசிக்கிறேன்..
  >>>
  துன்பம் உங்ககிட்ட நிக்காமல் ஓடிவிடுவது எவ்வளவு நல்ல விஷயம். கவிதை அருமை. ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 23. #துன்பம் கொள்ளும்போது
  அந்த துன்பம்
  என்னோடு இல்லாமல்
  என்னை விட்டு
  ஓடிச்சென்றுவிடுகிறது என்றே
  சந்தோசிக்கிறேன்..#

  அருமை...வாழ்த்துகள்...!

  ReplyDelete
 24. மனிதனின் உணர்வுகளை் அவனை மிஞ்சும் இடங்களை அருமையாக அருமையாக வார்த்தைகளுக்குள் அடக்கி இருக்கிறீர்கள் சகோ.. நன்றி..

  ReplyDelete
 25. நீர் எழுதும் போதெல்லாம், உமது எழுத்துக்களே உம் கவிதையின் மீது காதல் கொள்வதில், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை..!:)

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com