முயற்சி திருவினையாக்கும்
என்று சொல்லிக்கொண்டே
சிலர் முயற்சிப்பதில்லை..
---------------------------------
---------------------------------
இழந்த நாட்களுக்காக
ஏக்கப்பட வேண்டாம்..
இருக்கும் நாட்களுக்கு
வாக்கப்படுவோம்..
-----------------------------------
இதுவரை நாட்களை
நாம் கடந்து வந்தோம்..
இனிமேல் நாட்கள்
நம்மை கடந்து செல்லப் போகிறது..
-----------------------------------
------------------------------------
உரக்க கத்தியும்
விளக்கமுடியாத விசயத்தை
சில சமயங்களில்
'மௌனம்' விளக்கிச் சொல்லிவிடுகிறது..
---------------------------------
தினமும்
பொழுது போக்கும்
மணித்துளிகளை
கூட்டிப் பார்த்தால்
சில வருடங்களைக் காட்டுகிறது!..
---------------------------------
நமக்கானதென்று
எதையும் தேடிப்போக வேண்டாம்..
நமக்கானது எதுவோ-அது
நம்மைத் தேடிவரும்..
---------------------------------
Arumai Sir. Arputhamana Sinthanaigal.
ReplyDeleteTM 1.
நல்ல கவிதை.
ReplyDeleteவாழ்த்துகள்.
காத்திரமான கவிதை வரிகள் வாழ்த்துக்கள்
ReplyDeleteசொல்ல வேண்டிய கருத்தைமிக மிக அழுத்தமாகவும்
ReplyDeleteஅதே சமயம் மிக மிக அழகாகவும் நேர்த்தியாகவும்
சொல்லிப் போகிறீகள்.
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 4
மௌனம் மிகப்பெரிய அரிய ஆயுதம்,
ReplyDeleteசாதிக்க முடியாததை எல்லாம் சாதித்த
சாணக்கியம்.
அருமையான துளிப்பாக்கள் மௌனம் பற்றி நீங்கள் கொடுத்தது.
அழகு அழகு.
அருமை நண்பரே.உண்மையில் முயற்சி திருவினையாக்கும் என்று சொல்லி முயற்சிக்காதவர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள்..
ReplyDelete///நமக்கானதென்று
எதையும் தேடிப்போக வேண்டாம்..
நமக்கானது எதுவோ-அது
நம்மைத் தேடிவரும்..///
மேற்கண்ட வரிகளில் எனக்கு உடன்பாடு இல்லை.. நமக்கு எது தேவையோ அதை நாம் தான் தேடி ஓட வேண்டியிருக்கும்.. நமக்கானது நம்மைத் தேடி வரும் என்று இருந்தால், வாழ்க்கையில் நிச்சயம் முன்னேற வாய்ப்பே இல்லாமல் போகும்.. இதில் மட்டும் முரண்பட்டு நிற்கிறேன்.
இது தொடர்பான எமது தளத்தில் தன்னம்பிக்கை பதிவுகளைப் படிக்க அழைக்கிறேன்..
பகிர்வுக்கு நன்றி!!!
அருமை! த.ம.7
ReplyDelete"இழந்த நாட்களுக்காக
ReplyDeleteஏக்கப்பட வேண்டாம்..
இருக்கும் நாட்களுக்கு
வாக்கப்படுவோம்.." சீரிய வார்த்தைகள்.... அருமை...
//உரக்க கத்தியும்
ReplyDeleteவிளக்கமுடியாத விசயத்தை
சில சமயங்களில்
'மௌனம்' விளக்கிச் சொல்லிவிடுகிறது..//
எவ்வளவு தெளிவான சிந்தனை! இது,..
ஒன்று மட்டுமல்ல அனைத்துமே சிந்திய சிந்தனை முத்துக்கள்!
புலவர் சா இராமாநுசம்
தமிழ்மணம்: 9
ReplyDelete//இழந்த நாட்களுக்காக
ஏக்கப்பட வேண்டாம்..
இருக்கும் நாட்களுக்கு
வாக்கப்படுவோம்..//
;))))) அருமை அனைத்துமே!
வாழ்த்துக்கள்.
இதுவரை நாட்களை
ReplyDeleteநாம் கடந்து வந்தோம்..
இனிமேல் நாட்கள்
நம்மை கடந்து செல்லப் போகிறது..
மிகவும் அருமையான வரிகள் .
அருமையான படைப்பு..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDelete/துரைடேனியல்/நண்டு@நொரண்டு/கவியழகன்/ரமணி/தங்கம் பழனி/
வருகைக்கும் கருத்துக்கும நன்றி...
ReplyDelete/மரு.சு/புலவர்/வை.கோ/சசிகலா/கருன்/
தினமும்
ReplyDeleteபொழுது போக்கும்
மணித்துளிகளை
கூட்டிப் பார்த்தால்
சில வருடங்களைக் காட்டுகிறது!..///
சில வருடங்கள் இல்லை நண்பா பல வருடங்கள் பொழுதுபோக்கியவையாக இருக்கும்.
''....இழந்த நாட்களுக்காக
ReplyDeleteஏக்கப்பட வேண்டாம்..
இருக்கும் நாட்களுக்கு
வாக்கப்படுவோம்..
உரக்க கத்தியும்
விளக்கமுடியாத விசயத்தை
சில சமயங்களில்
'மௌனம்' விளக்கிச் சொல்லிவிடுகிறது..
மிகத் தெளிவான கருத்துகள் சகோதரா.. இறுதி வரிகள் 100 விகிதம் என் வாழ்வில் சரியாகிறது...உங்களுக்கும் போல! மிகப் பிடித்துள்ளது. வாழ்த்துகள். இனிய நத்தார் வாழ்த்துகளும். சந்திப்போம்.
வேதா. இலங்காதிலகம்.
அழகுமிகு கவிதை. “இதுவரை நாட்களை
ReplyDeleteநாம் கடந்து வந்தோம்.. இனிமேல் நாட்கள் நம்மை கடந்து செல்லப் போகிறது..” என்ற வரிகள் மிகப் பிடித்தன எனக்கு. இனி புத்தாண்டில் கடந்து செல்லும் எல்லா தினங்களும் நல்ல தினங்களாக அமைய தங்களை அட்வான்ஸாக வாழ்த்துகிறேன் கவிஞரே...
அனைத்து கவிகளும் முத்துக்கள் - பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநமக்கானதென்று
ReplyDeleteஎதையும் தேடிப்போக வேண்டாம்..
நமக்கானது எதுவோ-அது
நம்மைத் தேடிவரும்..
உண்மை தான் நன்றி .
உரக்க கத்தியும்
ReplyDeleteவிளக்கமுடியாத விசயத்தை
சில சமயங்களில்
'மௌனம்' விளக்கிச் சொல்லிவிடுகிறது..
அருமை தொடரட்டும்
அருமை ...அருமை ...அருமை ...
ReplyDeleteஇன்றய ஸ்பெஷல்
ReplyDeleteநடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு
சிந்திக்கத்தூண்டும் சிந்தனைத்துளிக்கவிதை அழகு நண்பரே!
ReplyDeleteமெளனம் பல விடயங்களைச் சொல்லும்!
அனைத்துமே மிக அருமையான சிந்தனை வரிகள்..
ReplyDelete//இனிமேல் நாட்கள்
நம்மை கடந்து செல்லப் போகிறது..//
யதார்த்தம்!
//உரக்க கத்தியும்
விளக்கமுடியாத விசயத்தை
சில சமயங்களில்
'மௌனம்' விளக்கிச் சொல்லிவிடுகிறது//
மிக மிக உண்மை!
கடந்து சென்றதை நினைத்து வாழாதே கடக்கப்போவதை என்னி வாழு
ReplyDeleteகண்னத்தில் தட்டிச்செலகிறது வரிகள்
ஏதாச்சும் சொல்லவேண்டுமே என்பதற்காக சொல்லவில்லை.உண்மையில் அனைத்துமே அற்புத வரிகள்.வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete//உரக்க கத்தியும்
ReplyDeleteவிளக்கமுடியாத விசயத்தை
சில சமயங்களில்
'மௌனம்' விளக்கிச் சொல்லிவிடுகிறது//
மிக மிக உண்மை!
//உரக்க கத்தியும்
ReplyDeleteவிளக்கமுடியாத விசயத்தை
சில சமயங்களில்
'மௌனம்' விளக்கிச் சொல்லிவிடுகிறது//
மிக மிக உண்மை!
நமக்கானதென்று
ReplyDeleteஎதையும் தேடிப்போக வேண்டாம்..
நமக்கானது எதுவோ-அது
நம்மைத் தேடிவரும்..
இந்த செய்தி இன்றைய
காலத்துக்கு மிக அவசியமானது .
அருமை வாழ்த்துக்கள் .....
"தினமும் பொழுதுபோக்கும் நேரங்களை கூட்இப்பார்த்தால் சில வருடங்களைகாட்டுகிறது"
ReplyDeleteவாஸ்தவம்தான் நிமிடங்களின்,வினாடிகளின் கரைதலில் வருடங்கள் அருகில் வருவதுகூட நமக்கு தெரியாமல்/
இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.
ReplyDeleteதினமும்
ReplyDeleteபொழுது போக்கும்
மணித்துளிகளை
கூட்டிப் பார்த்தால்
சில வருடங்களைக் காட்டுகிறது!.
அட.. ஆமா!
திருக்குறளின் பொருண்மைபோல இருக்கிறது உங்கள் கவிதைகள். கவிதைக்கு எளிமையும் ஆழமும் அவசியம். அதை உணர்த்திய கவிதைகள். நன்றி. அருமை.
ReplyDeleteஃஃஃஃசில சமயங்களில்
ReplyDelete'மௌனம்' விளக்கிச் சொல்லிவிடுகிறது..ஃஃஃ
உண்மை தான் சகோ அதைத் தானே.. மொழி திரைப்படப்பாடல்களில் அழுத்தமாய் சொன்னார்கள்...
மணியான் சிந்தனைகள் அடிநாதமாய் நிற்கும் சுவையான கவிதைகள்.
ReplyDelete