புது வரவு :
Home » , » இறப்பதை எதிர்பார்க்கிறோம்..

இறப்பதை எதிர்பார்க்கிறோம்..


பிறந்ததை
எதிர்பார்க்கவில்லை..
இறப்பதை
எதிர்பார்க்கிறோம்..
-------------------------------
---------------------------------
உதாரணமாக மற்றவரை 
நாம் சொன்னது போதும்..
மற்றவர் நம்மை 
உதாரணமாகச் சொல்ல உழைப்போம...
---------------------------------
இருக்கிறது என்பதனால்
தேடிச் செல்கிறோம்..
தேடிச் சென்றுவிட்டு
இருக்கிறது என்கிறோம்!..
----------------------------
கால்கள் 
செல்லுமிடமெல்லாம்
மனசு செல்கிறது..
மனசு செல்லுமிடமெல்லாம்
காலகள் செல்வதில்லை..
-----------------------------
---------------------------
வாழ்க்கையை
நாம் துரத்துகிறோம்..
சில நேரங்களில் 
வாழ்க்கை
நம்மையே துரத்திவிடுகிறது..
-----------------------------
வாழ்க்கையைத் தேடி
பயணித்த பின்புதான் தெரிந்தது..
முதலில் அதற்கான பாதைகளை 
அமைத்துக் கொள்ள வேண்டுமென்பது..
--------------------------------
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

37 comments:

 1. ஒவ்வொரு படைப்பிலிருந்தும் மனதை
  வெட்டி எடுத்துக் கொண்டுதான் போக வேண்டியிருக்கிறது
  வாழ்வியல் குறித்த உரத்த சிந்தனை
  எம்முள்ளும் பல சிந்தனைகளை
  பற்ற வைத்துப் போகிறது
  மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
  த.ம 1

  ReplyDelete
 2. நல்ல பதிவு
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. //உதாரணமாக மற்றவரை
  நாம் சொன்னது போதும்..
  மற்றவர் நம்மை
  உதாரணமாகச் சொல்ல உழைப்போம...//

  ஆத்மார்த்தமான வரிகள்...:)

  ReplyDelete
 4. கால்கள்
  செல்லுமிடமெல்லாம்
  மனசு செல்கிறது..//
  கால்கள் ஒரு பக்கமும் மனசு அதற்கு நேர் எதிர் பக்கமும் செல்கிறதே! அது தான் பெரிய தொல்லையே

  ReplyDelete
 5. >>வாழ்க்கையை
  நாம் துரத்துகிறோம்..
  சில நேரங்களில்
  வாழ்க்கை
  நம்மையே துரத்திவிடுகிறது..

  குட் ஒன்

  ReplyDelete
 6. வாழ்க்கையை
  நாம் துரத்துகிறோம்..
  சில நேரங்களில்
  வாழ்க்கை
  நம்மையே துரத்திவிடுகிறது..//
  யதார்த்தத்தை சொல்லும் வரிகள்..

  அற்புதமான கவி வரிகள்..

  ReplyDelete
 7. தொடக்கம் மகிழ்ச்சியானது....முடிவு(இறுதி)பொருள் என்றாலும் உயிர் என்றாலும் துக்கம்தானே......

  ReplyDelete
 8. மற்றவர் நம்மை உதாரணமாகச் சொல்ல உழைப்போம்... நல்ல சிந்தனை விதையை விதைத்துள்ளீர் கவிஞரே... நன்றி.

  ReplyDelete
 9. சில வாழ்வியல் தத்துவங்களை
  மெல்லிய வார்த்தைகளால்
  படிக்கும் போது இன்னும் தெளிவாகிறது.

  ReplyDelete
 10. "மற்றவர் நம்மை
  உதாரணமாகச் சொல்ல உழைப்போம..."

  >>

  மாப்ள எனக்கு பிடித்த வரிகள்!

  ReplyDelete
 11. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகள்..
  /ரமணி/நண்டு/மயிலன்/ரூபினா/சி.பி/கருன்/வீடு/கணேஷ்/கோகுல்/விக்கி/

  ReplyDelete
 12. உதாரணமாக மற்றவரை
  நாம் சொன்னது போதும்..
  மற்றவர் நம்மை
  உதாரணமாகச் சொல்ல உழைப்போம...//

  ஆஹா செமத்தனமான வரிகள், ரசித்தேன் ருசித்தேன்....!!!

  ReplyDelete
 13. கால்கள்
  செல்லுமிடமெல்லாம்
  மனசு செல்கிறது..
  மனசு செல்லுமிடமெல்லாம்
  காலகள் செல்வதில்லை..//

  செல்லவும் முடியாது, மனம் ஒரு குரங்காச்சே, அருமை...!!!

  ReplyDelete
 14. வாழ்க்கையைத் தேடி
  பயணித்த பின்புதான் தெரிந்தது..
  முதலில் அதற்கான பாதைகளை
  அமைத்துக் கொள்ள வேண்டுமென்பது..//

  அதற்குள் வயதும் கடந்து விடுவதுதான் வேதனை...!!!

  ReplyDelete
 15. தமிழ்பத்து, இன்ட்லியில என் ஓட்டு விளமாட்டேங்குது ஏன்???

  ReplyDelete
 16. வாழ்க்கையை பிரிதிபலிக்கும் கவிப்பாக்கள்...

  அத்தனையும் அழகு

  ReplyDelete
 17. அனைத்தும் அருமை.

  மிகவும் பிடித்தது:

  //மனசு செல்லுமிடமெல்லாம்
  காலகள் செல்வதில்லை..//

  vgk

  ReplyDelete
 18. மிகவும் சுவைத்தேன் நறுக்கான படைப்பு பாராட்டுகள் தொடர்க ...

  ReplyDelete
 19. வாழ்க்கையைத் தேடி
  பயணித்த பின்புதான் தெரிந்தது..
  முதலில் அதற்கான பாதைகளை
  அமைத்துக் கொள்ள வேண்டுமென்பது..
  --------------------------------
  மனம் கவர்ந்த பதிவு

  ReplyDelete
 20. ---------------------------
  வாழ்க்கையைத் தேடி
  பயணித்த பின்புதான் தெரிந்தது..
  முதலில் அதற்கான பாதைகளை
  அமைத்துக் கொள்ள வேண்டுமென்பது..
  --------------------------------


  அழகான வரிகள் அர்த்தம் நிறைந்தது

  ReplyDelete
 21. உதாரணமாக மற்றவரை
  நாம் சொன்னது போதும்..
  மற்றவர் நம்மை
  உதாரணமாகச் சொல்ல உழைப்போம...///

  ithu arumai

  ReplyDelete
 22. //வாழ்க்கையை
  நாம் துரத்துகிறோம்..
  சில நேரங்களில்
  வாழ்க்கை
  நம்மையே துரத்திவிடுகிறது..//
  முற்றிலும் உண்மை!
  ஒவ்வொன்றும் ஒரு முத்து.

  ReplyDelete
 23. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

  கவிதை வீதி/வை.கோ/மாலதி/சசிகலா/எம்.ஆர்/ரஹீம்/சென்னை பித்தன்/துரைடேனியல்..

  ReplyDelete
 24. /நாஞ்சில் மனோ/

  தமிழ்பத்து, இன்ட்லியில என் ஓட்டு விளமாட்டேங்குது ஏன்???

  ஆமாம் தோழர் தமிழ் 10 ல் ஏதோ கோளாறு போல..

  இனி வாக்களிக்கும் தோழர்கள் தமிழ்மணத்தில் வாக்களிக்கவும்..

  ReplyDelete
 25. அழகிய வாழ்வியல் தத்துவம் வளமான
  கவிதை வரிகளில் தொகுத்த விதம் அருமை!...
  வாழ்த்துக்கள் சிறப்பான கவிதைப் பகிர்வுக்கு .மிக்க நன்றி ..............

  ReplyDelete
 26. அழகாகச் சொன்னீர்கள் கவிஞரே..

  நம் கனவில் பாம்பு நம்மை விரட்டுகிறது நாம் ஓடுகிறோம்...

  பாம்பாட்டியின் கனவில் பாம்பை அவன் விரட்டுகிறான் பாம்பு ஓடுகிறது..

  ReplyDelete
 27. படங்களே கவிதையாகவும்,கவிதைகளே படங்களாகவும் விரிகிற அதிசமாக உங்களது கவிதை.நன்றாக இருந்தது.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. //பிறந்ததை
  எதிர்பார்க்கவில்லை..
  இறப்பதை
  எதிர்பார்க்கிறோம்..//

  அருமையான வரிகள்.

  ReplyDelete
 29. உங்கள் ஒவ்வொரு கைதையிலும் வாழ்வின் அர்த்தங்களை வாழ்வியலை எதோ ஒருவிதத்தில் சொல்லிச் செல்வது பாராட்டிற்குரியது

  ReplyDelete
 30. அருமையான வரிகள்!
  பகிர்விற்கு நன்றி Sir!
  சிந்திக்க :
  "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

  ReplyDelete
 31. மது,

  மனதைத்தொடும் மந்திர வரிகள்.

  ReplyDelete
 32. /அம்பாளடியாள்/முனைவர் குணா/விமலன்/அம்பலத்தார்/தனபாலன்/சத்ரியன்/

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

  ReplyDelete
 33. அனைத்து வரிகளும் அசத்தல்... தோழரே...

  வாழ்த்துகள்...

  ReplyDelete
 34. பிறந்ததை
  எதிர்பார்க்கவில்லை..
  இறப்பதை
  எதிர்பார்க்கிறோம்..
  >>
  ரசித்த வரிகள்

  ReplyDelete
 35. வாழ்வைத் தொலைத்தபின்தானே தவறிய பாதைகளும் புரிகின்றன்.அற்புதம் மதுமதி !

  ReplyDelete
 36. பிறந்ததை
  எதிர்பார்க்கவில்லை..
  இறப்பதை
  எதிர்பார்க்கிறோம்...
  வாழ்க்கை தந்து விட்டுப்போகும் வலிகள் மற்றெல்லாவற்றையும் பறித்துவிட்டு இறப்பின் மேலான ஈடுபாட்டை நிறைத்துப்போகிறது......
  உங்களின் ஒவ்வொரு வரிகளும் உண்மை..வாழ்த்துக்கள்

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com