காலம் வரும்வரை
நாம் காத்துக்கொண்டிருக்கிறோம்..
நாம் வரும்வரை
காலம்தான்
காத்திருக்க மறுக்கிறது.
---------------------------------
இளமையில்
தூக்கிடத் துணிந்தவன்
முதுமையில்
உயிர் வாழத்துடிக்கிறான்.!..
---------------------------------
இறந்தபின்புதான்
தெரிய வந்தது..
இன்னும் உயிர்வாழ ஆசைப்பட்டது
எவ்வளவு முட்டாள்த்தனமென்று..
----------------------------------
நாட்களைத் தேடித்தேடியே
இருந்த நாட்களும்
தொலைந்து போனது..
---------------------------------
தெருவில்
பணத்தைக் கண்டெடுத்தபோது
ஏற்பட்ட சந்தோசம்
பொய்யானதென்று
அதே தெருவில்
பணத்தை தொலைத்தபோதுதான்
தெரிந்தது.
----------------------------------
நாட்கள் போதவில்லை..
வாழ்வதற்கல்ல..
எப்படி வாழ்வது என்று
சிந்திப்பதற்கு..
--------------------------------
--------------------------------
யதார்த்தமான வாழ்கையை சொல்லும்படியான கவிதைத்துளிகள்...
ReplyDeleteஅத்தனையும் அமிர்தம்...
//நாட்கள் போதவில்லை..
ReplyDeleteவாழ்வதற்கல்ல..
எப்படி வாழ்வது என்று
சிந்திப்பதற்கு..//
- அருமையான வரிகள்.
தஓ 3.
கவிதை வானில் ஒளிவிடும்
ReplyDeleteநட்சத்திரப் பூக்கள் அனைத்தும் மதி!
புலவர் சா இராமாநுசம்
முரண்களின் தொகுப்பு தானே வாழ்க்கை
ReplyDelete//நாட்கள் போதவில்லை..
ReplyDeleteவாழ்வதற்கல்ல..
எப்படி வாழ்வது என்று
சிந்திப்பதற்கு..//
அழகானவை அனைத்துமே!
vgk
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDeleteகவிதை வீதி/நண்டுநொரண்டு/துரைடேனியல்/புலவர்/சூர்யஜீவா/வை.கோ/
////இறந்தபின்புதான்
ReplyDeleteதெரிய வந்தது..
இன்னும் உயிர்வாழ ஆசைப்பட்டது
எவ்வளவு முட்டாள்த்தனமென்று..
////
அருமையான வரிகள்
வாழ்வின் யதார்த்தத்தை சொல்லி நிற்கும் கவிதை வரிகள் பாஸ்
யதார்த்தத்தையும், முரண்பாட்டையும் காட்டுகிறது கவிதைகள்..
ReplyDeleteநிதர்சமான உண்மை. உண்மையான வரிகள்
ReplyDeleteஇழப்புதனை பற்றி சிந்திக்கும் போதெல்லாம் என்ன என்ன பெற்றோம் என்பது மறந்துதான் போகிறது! அருமையான கவிதை துளிகள் மதுமதி. நன்றி.
ReplyDelete//தொலைந்து போன
ReplyDeleteநாட்களைத் தேடித்தேடியே
இருந்த நாட்களும்
தொலைந்து போனது..//
Super boss!
மரணம் மட்டுமே மனிதனுக்கு கடைசி பகிரமுடியாத அனுபவம்....
ReplyDeleteஉங்கள் பாணியில் தொகுத்து வழங்கியிருக்கும் விதம் அருமை!
ReplyDeleteமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நடுநிலை தவறும் புதியதலைமுறை T.V
இறந்தபின்புதான்
ReplyDeleteதெரிய வந்தது..
இன்னும் உயிர்வாழ ஆசைப்பட்டது
எவ்வளவு முட்டாள்த்தனமென்று..////
உண்மையான வரிகள்....
நாட்கள் போதவில்லை..
ReplyDeleteவாழ்வதற்கல்ல..
எப்படி வாழ்வது என்று
சிந்திப்பதற்கு.
>>
வாழ்வின் யதார்த்தை சொல்லும் வரிகள். கவிதை அருமை
தொலைந்து போன
ReplyDeleteநாட்களைத் தேடித்தேடியே
இருந்த நாட்களும்
தொலைந்து போனது..//
அநேகம் பேர் இதை செய்து தான் வாழ்வை தொலைக்கிறார்கள்
தொலைந்து போன | நாட்களைத் தேடித் தேடியே | இருந்த நாட்களும் | தொலைந்து போனது..
ReplyDelete.நான் மிக ரசித்த அருமையான வரிகள். கவிதைகள் அனைத்துமே யதார்த்தம் பேசின கவிஞரே...
அருமை
ReplyDeleteகவிதை அருமை!..பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள் ..........
அருமையான வரிகள் நண்பரே!http://vethakannan.blogspot.com/
ReplyDeleteஅருமையான வரிகள் நண்பரே!http://vethakannan.blogspot.com/
ReplyDeleteநன்றாக உள்ளது பாஸ்.. நாலு வரி, வீரியமோ மிக அதிகம்...
ReplyDeleteஎதார்த்தமான வரிகள்.......
ReplyDeleteநல்ல கவிதை.
ReplyDeleteஅத்தனை வரியும் முத்துக்கள் ...
ReplyDeleteவாழ்கை வாழ பழகுவதற்குள் முடிந்தேவிடுகிறது. :(
உங்களின் வேறு ஒரு படைப்பை நான் வலைச்சரத்தில் தொடுக்க எண்ணியிருந்தேன். இடுகையிட்டதும் வருவேன். :)
தொலைந்து போன
ReplyDeleteநாட்களைத் தேடித்தேடியே
இருந்த நாட்களும்
தொலைந்து போனது..//
உண்மை.நல்ல வரிகள்.
குட்டிக் குட்டிச் சிந்தனைகள்.அத்தனையும் நிதர்சனம் !
ReplyDelete''...தெருவில்
ReplyDeleteபணத்தைக் கண்டெடுத்தபோது
ஏற்பட்ட சந்தோசம்
பொய்யானதென்று
அதே தெருவில்
பணத்தை தொலைத்தபோதுதான்
தெரிந்தது...'''
ஆகையால் உழைத்துச் சேர்க்கும் பணமே தம்மோடு ஒட்டும்...
வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.
அருமையான வரிகள்...
ReplyDeleteநாட்கள் போதவில்லை..
ReplyDeleteவாழ்வதற்கல்ல..
எப்படி வாழ்வது என்று
சிந்திப்பதற்கு..
உண்மையான வரிகள் .
இளமையில் தொலைத்ததை முதுமையில் தேடும் பொல்லாதா உலகம்.
ReplyDeleteஅழகான கவிதை.வாழ்த்துகள்