அதிகாலையில்
எனை எழுப்பிவிட்ட
சேவலைத்தான்
மதியமாய்
சாப்பிட்டு முடித்தேன்..
----------------------
வெயில் நேரத்தில்
எனக்கு நிழலிட்ட
மரங்களைத்தான்
வெட்டி விற்றேன்..
----------------------
நிலத்ததை அழித்துதான்
குடியிருக்க
குடிலை அமைத்தேன்..
-------------------------
சிற்றின்பம்
பெறவேண்டி கருவிட்டேன்..
பெருந்துன்பமென
கருதியே கலைத்திட்டேன்..
-------------------------------
இருக்கும்வரை
ஈன்றோருக்கு
செலவிட மறந்துவிட்டேன்..
இறந்தபின்பே
கல்லறைக்கு செலவிட்டேன்..
-----------------------------------
ஆஹா அருமை அருமை நண்பரே....!!!
ReplyDeleteஒவ்வொரு வரியும் சுளீர்.
ReplyDeleteரசிப்பதா.. செய்வதில் நோவதா..
அனைத்து வரிகளிலும் சாட்டையடி நன்றாக விழுகிறது.
ReplyDeleteவிழுந்த அடிகளில் எனக்கு மிகவும் வலிப்பதோ:
//சிற்றின்பம்
பெறவேண்டி கருவிட்டேன்..
பெருந்துன்பமென
கருதியே கலைத்திட்டேன்..//
தமிழ்மணம்: 2
இண்ட்லி: 2
யூடான்ஸ்: 4
வாழ்த்துக்களுடன் vgk
ந்ல்ல கவிதை..... ரசித்தேன்.. என்னை ம்றேந்தேன்...
ReplyDeleteசில கடுமையான உண்மைகளை எளிமையாய் சொல்லிவிட்டீர்...அருமை...
ReplyDelete..தங்களின் வருகையை எதிர்நோக்கி என் வலையில்....மயில் அகவும் நேரம் 03:00...
பெரும்பாலோர் செய்கிற தவறுகளை சுருக்கென உரைக்கும் விதமாய் நன்று உரைத்திட்டீர். ரிஷபன் சார் சொன்னது உண்மை. ரசிப்பதை விட வேதனைதான் ஏற்படுகிறது! வாழ்த்துக்கள் கவிஞரே...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDelete/நாஞ்சில் மனோ/ரிஷ்வன்/மயிலன்/
/வை.கோ/
ReplyDelete//சிற்றின்பம்
பெறவேண்டி கருவிட்டேன்..
பெருந்துன்பமென
கருதியே கலைத்திட்டேன்..//
ஆமாம் நடப்பில் இருக்கிறதென நினைக்கும்போது உங்களைப்போலவே எனக்கும் வலிக்கத்தான் செய்கிறது..
/ரிஷபன்/கணேஷ்/
ReplyDeleteஆமாம் வேதனைப் பட வேண்டிய விசயம் தான்..வாழ்க்கைச் சூழல் அனைத்தையும் அடித்துச் செல்கிறது..
ஒன்றை இழந்து தானே மற்றதை அடைகிறோம் ஆனால் இழந்ததன் பெறுமதி உணருவதில்லையே..
ReplyDeleteஅருமை சகோதரம்..
அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
முதலில் இருந்து முடிவு வரை உண்மையை உரக்க சொல்லும் கவிதை...!
ReplyDeleteஎனக்கு உணவளித்த
ReplyDeleteநிலத்ததை அழித்துதான்
குடியிருக்க
குடிலை அமைத்தேன்..
>>>
அப்போ சாப்பாட்டுக்கு எங்க போறது? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Arumaiyana Kavithai Sir.
ReplyDeleteTM 8.
Arumaiyana Kavithai Sir.
ReplyDeleteTM 8.
ஒவ்வொரு வரிகளும் நெத்தியடி
ReplyDeleteமிகவும் அற்புதமாக இருக்கிறது. முரண்பட்ட வாழ்வினை வாழும் மனிதர்கள் பற்றிய செதுக்கல். நன்றி.
ReplyDeleteவலிக்கிற நிஜங்களை
ReplyDeleteவரிகளாக்கி தந்தபோதும்
வாசிக்க வலிக்கிறது.
மனிதர்கள்
ஆறறிவு படைத்தவர்களென
சொல்ல வெட்கமாயிருக்கிறது.
இந்த கவிதையிடம்.
அழித்துக் கொண்டிருக்கிறோம்
நம்மை நாமே.
ஆக்கிக் கொண்டிருக்கிறோம்
நாளை மனிதர்கள்
வாழமுடியாத பூமியை.
தீபிகா.
http://theepikatamil.blogspot.com/
இருக்கும்வரை
ReplyDeleteஈன்றோருக்கு
செலவிட மறந்துவிட்டேன்..
இறந்தபின்பே
கல்லறைக்கு செலவிட்டேன்.
நிஜம் சுட்டது .
இருக்கும்வரை
ReplyDeleteஈன்றோருக்கு
செலவிட மறந்துவிட்டேன்..
இறந்தபின்பே
கல்லறைக்கு செலவிட்டேன்..
உண்மையின் தரிசனம் அழகிய
கவிதை உருவில் !.....வாழ்த்துக்கள்
என் கவிதை காத்திருக்கின்றது
தங்கள் கருத்திற்காகவும்.மிக்க
நன்றி சகோ பகிர்வுக்கு .