குழந்தை
தொழிலாளர்களை ஒழிக்கும்
அலுவலக அதிகாரிகளுக்கு
தொழிலாளர்களை ஒழிக்கும்
அலுவலக அதிகாரிகளுக்கு
'டீ' கொடுத்துவிட்டு வருகிறான்
டீக்கடைச் சிறுவன்..
-----------------------------
விதவைத் திருமணத்தை
வலியுறுத்தி மேடையில் முழங்கும்
அந்தப் பேச்சாளன் முடித்த
மூன்று திருமணத்திலும்
ஒரு விதவை கூட
இடம் பெறவில்லை..
------------------------------
பத்து திருக்குறளுக்கு மேல்
மனப்பாடமாக சொல்லத்தெரிவதில்லை
திருக்குறள் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்
சில தமிழாசிரியர்களுக்கு..
-----------------------------------------
இல்லத்திலாவது
தமிழைக் கட்டாயம் பேசுவோம்..
இருபது வருடங்களாக
மேடையில் முழங்கும்
மூத்த தமிழரிஞரின் பேத்தி
அவரை 'க்ரேன்பா' என்றே அழைக்கிறதாம்..
------------------------
ரத்த புற்றுநோய்க்காக
தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப் பட்டிருக்கிறார்..
மருத்துவத்துறை அமைச்சராகப்போகும்
அரசியல்வாதி.
---------------------------------------
காவல் துறை
'உங்கள் நண்பன்'
அந்த 'உங்கள்'
தவறாமல் மாமூல் கொடுக்கும்
ஏரியா ரவுடிகளும் தாதாக்களும்.
-------------------------------------
-----------------------------
விதவைத் திருமணத்தை
வலியுறுத்தி மேடையில் முழங்கும்
அந்தப் பேச்சாளன் முடித்த
மூன்று திருமணத்திலும்
ஒரு விதவை கூட
இடம் பெறவில்லை..
------------------------------
பத்து திருக்குறளுக்கு மேல்
மனப்பாடமாக சொல்லத்தெரிவதில்லை
திருக்குறள் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்
சில தமிழாசிரியர்களுக்கு..
-----------------------------------------

தமிழைக் கட்டாயம் பேசுவோம்..
இருபது வருடங்களாக
மேடையில் முழங்கும்
மூத்த தமிழரிஞரின் பேத்தி
அவரை 'க்ரேன்பா' என்றே அழைக்கிறதாம்..
------------------------
ரத்த புற்றுநோய்க்காக
தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப் பட்டிருக்கிறார்..
மருத்துவத்துறை அமைச்சராகப்போகும்
அரசியல்வாதி.
---------------------------------------
காவல் துறை
'உங்கள் நண்பன்'
அந்த 'உங்கள்'
தவறாமல் மாமூல் கொடுக்கும்
ஏரியா ரவுடிகளும் தாதாக்களும்.
-------------------------------------
அருமை...அருமை...
ReplyDeleteதிரும்பிக் கிடப்பவைகளை
ReplyDeleteஅன்றாடம் காணும் முரண்களை
சொல்லிப் போகும் விதம் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள் த.ம 2
முதல் கவிதையும் முடிவுக் கவிதையும் அருமை சகோ!
ReplyDeleteஇடையில் ஒன்று சற்று நெருடல்!
புலவர் சா இராமாநுசம்
/புலவர்/
ReplyDeleteஐயா தாங்கள் சொன்ன நெருடல் எதுவென்று தெரிகிறது..நான் கண்ணால் கண்டிருக்கிறேன்..
கருத்துக்கு நன்றி..
நன்றி..
ReplyDeleteநண்டு@நொரண்டு/ரமணி/
//பத்து திருக்குறளுக்கு மேல்
ReplyDeleteமனப்பாடமாக சொல்லத்தெரிவதில்லை
திருக்குறள் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்
சில தமிழாசிரியர்களுக்கு..///
சத்தியமா உண்மை..
அனைத்துமே அருமை. மிகவும் யோசிக்க வைப்பவை. பதிவுக்கு நன்றிகள், பாராட்டுக்கள்.
ReplyDeleteஅன்புடன் vgk
ஒவ்வொன்றும் நாலு வரி அல்ல - நெத்தியடிகள்
ReplyDelete//ரத்த புற்றுநோய்க்காக
ReplyDeleteதனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப் பட்டிருக்கிறார்..
மருத்துவத்துறை அமைச்சராகப்போகும்
அரசியல்வாதி.//
இதுல எதுவும் உள்குத்து இல்லையே
நாட்டு நடப்பு.மாற்றவே முடியாது மதுமதி !
ReplyDeleteமது,
ReplyDeleteஊருக்கு உபதேசம் தான் நம் சமூக தலைவர்களின் தலையாயக் கடமை.
அதை,
விலாசிப் போகிறது கோபம் கொண்ட கவிஞனின் சொற்கள்.
ஒவ்வொரு குட்டிக்குட்டி கவிதையும் நச் ரகம் தலைவரே
ReplyDeleteசங்கப் பதிவின் கூட்டத்திற்குத்
ReplyDeleteதாங்களும் மற்ற நண்பர்களும் உறுதி செய்து என் வலையில் மறு மொழி
யிட வேண்டி யுள்ளேன் கவனிக்க!
புலவர் சா இராமாநுசம்
ஊருக்கு தான் உபதேசம் உனக்கில்லை கண்ணே ,என்பது போல தங்கள் கவிதை நல்ல கருத்தை தாங்கிஉள்ளது நண்பரே
ReplyDeleteஅருமை
பத்து திருக்குறளுக்கு மேல்
ReplyDeleteமனப்பாடமாக சொல்லத்தெரிவதில்லை
திருக்குறள் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்
சில தமிழாசிரியர்களுக்கு..
உணமையிலும் உண்மை
ஊருக்குத்தான் உபதேசம் எனக்கில்லை என்பது போன்ற நிகள்வுகளின் தொகுப்பினை அருமையான எடுத்துக்காட்டுக்கவிதைகளாக்கிய கவிஞருக்கு வாழ்த்துகள் அருமை சார்
ReplyDeleteஅழகான கவிதைகள்.
ReplyDeleteமற்றவருக்குச் சொல்லும் எதையும் நாம் செய்யாமல் விடுகிறோமே...
ReplyDeleteஅழுத்தத்தோடு சொல்லியிருக்கிறீர்கள்...
அருமை...