நீ சொல்ல சொல்ல
நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்..
நீ என்ன சொல்கிறாய் எனத்தெரியவில்லை..
நான் என்ன கேட்கிறேன் எனத்தெரியவில்லை..
--------------------------------------
நீ செல்ல செல்ல
நான் வந்துகொண்டே இருக்கிறேன்..
நீ எங்கு செல்கிறாய் எனத்தெரியவில்லை..
நான் எங்கு வருகிறேன் எனத்தெரியவில்லை..
--------------------------------------
நான் செத்துக்கொண்டே இருக்கிறேன்..
நீ எதற்கு கொல்கிறாய் எனத்தெரியவில்லை..
நான் எதற்கு சாகிறேன் எனத்தெரியவில்லை..
-----------------------------------
நீ தள்ள தள்ள
நான் நகர்ந்து கொண்டே இருக்கிறேன்..
நீ எங்கு நகர்த்துகிறாய் எனத்தெரியவில்லை..
நான் ஏன் நகர்கிறேன் எனத்தெரியவில்லை..
----------------------------------
எதுவும் தெரியவில்லை..
தெரிந்தாலும் கூட
தெரியாததைப் போலவேதான்
காட்டிக்கொள்கிறேன்..
புரிந்தாலும் கூட
புரியாததைப் போலவேதான்
காட்டிக்கொள்கிறேன்
.--------------------------------
.--------------------------------
******.
அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
>>*நீ தள்ள தள்ள
ReplyDeleteநான் நகர்ந்து கொண்டே இருக்கிறேன்..
நீ எங்கு நகர்த்துகிறாய் எனத்தெரியவில்லை..
நான் ஏன் நகர்கிறேன் எனத்தெரியவில்லை..
hi hi கிளூ கிளூப்பு
//புரிந்தாலும் கூட
ReplyDeleteபுரியாததைப் போலவேதான்
காட்டிக்கொள்கிறேன்//
nice!
// எதுவும் தெரியவில்லை..
ReplyDeleteதெரிந்தாலும் கூட
தெரியாததைப் போலவேதான்
காட்டிக்கொள்கிறேன்..
புரிந்தாலும் கூட
புரியாததைப் போலவேதான்
காட்டிக்கொள்கிறேன்.//
ஏதோ ஒர் ஏக்கம் உங்கள் கவிதையில் எதிரொலிக்கிறது சகோ!
புலவர் சா இராமாநுசம்
******.
நீங்கள் கவிதை எழுத எழுத படித்துக் கொண்டே இருக்கிறேன். என்ன சொல்கிறீர்கள் எனத் தெரிந்தே ரசிக்கிறேன். நான் பாராட்டாக என்ன சொல்வது எனத் தெரியவில்லை.
ReplyDeleteஎதுவும் தெரியவில்லை..
ReplyDeleteதெரிந்தாலும் கூட
தெரியாததைப் போலவேதான்
காட்டிக்கொள்கிறேன்..
புரிந்தாலும் கூட
புரியாததைப் போலவேதான்
காட்டிக்கொள்கிறேன்.// அருமையான வரிகள்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDelete/நண்டு@நொரண்டு/சி.பி/ஜீ/கருன்/
அருமையான வரிகள் சிறப்பாக இருக்கு
ReplyDelete/கணேஷ் அவர்கள்/
ReplyDeleteநீங்கள் தொடர்ந்து தளத்திற்கு வந்து வாசித்து கருத்திடுவதே பெரிய மகிழ்ச்சி..
/புலவர் அவர்கள்/
ReplyDeleteஆமாம் ஐயா எனக்கே தெரியாமல் என் எழுத்துகளில் ஏதோ ஒரு ஏக்கம் ஒளிந்து கொண்டுதானிருக்கிறது..நன்றி.
புரிதலுக்கும் புரியாததற்கும் இடைப்பட்டதுதான் காதல்
ReplyDelete//*நீ தள்ள தள்ள
ReplyDeleteநான் நகர்ந்து கொண்டே இருக்கிறேன்..
நீ எங்கு நகர்த்துகிறாய் எனத்தெரியவில்லை..
நான் ஏன் நகர்கிறேன் எனத்தெரியவில்லை..//
சதுரங்கத்தின் நகர்த்தல்கள் போலத்தானே இந்த காதலும்.
அருமை சார்.
தமிழ்மணம் வாக்கு 8.
உங்களின் எழுதுகோல் மை சிந்த சிந்த நான் வளர்த்துக்கொண்டே இருக்கிறேன் என் இரசனையை...
ReplyDeleteநல்லதோர் பகிர்வு...நன்றி தோழர்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDelete/கவிதை வீதி/துரை டேனியல்/மயிலன்/
you lines are simply super super super. i written some tamil kavithai in my blog.
ReplyDeleteplease check and give ur comments
http://alanselvam.blogspot.com/
இனிமை கூட்டும் வரிகள் ..
ReplyDeleteஇயல்பான நடையில் அழகிய கவிதை ..
வாழ்த்துகள் அன்பரே
புரியாமல்ப் போகும் காதல் தரும் உணர்வு கவிதை அலையாகி இங்கு விளையாடுகின்றதே....
ReplyDeleteஅருமை!.....வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
தெரியவில்லை என்கிற மாதிரி தெரியவில்லை. தெரிந்தேதான் உடன்படுகிற மனசு தெரிகிறது!
ReplyDeleteஅருமையான கவிதை
ReplyDeleteசராசரி மனிதனின் நிலை இதுதானென்றாலும்
பிரச்சனையின்றி வாழ இப்படி இருப்பதுதான்
சரியான நிலையெனப் படுகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 7
////நீ எங்கு நகர்த்துகிறாய் எனத்தெரியவில்லை.///
ReplyDeleteசகோ என்ன இது இந்தளவு யதார்த்தத்தை மிஞ்சிய ஆளமா.. ரசிக்கிறேன் சகோ...
சொல்வதைக் கேட்பதும்,
ReplyDeleteசெல்வதை தொடர்வதும்
கொல்வதால் சாவதுமாய்
காதல் தள்ளுகிறது
நாட்கள் நகர்கிறது.
அருமை அருமை மதி.
''..தெரிந்தாலும் கூட
ReplyDeleteதெரியாததைப் போலவேதான்
காட்டிக்கொள்கிறேன்..
புரிந்தாலும் கூட
புரியாததைப் போலவேதான்
காட்டிக்கொள்கிறேன்...''
அன்பின் மேலது நிலை தானே.. அறியாத அவஸ்தையும் கூட..அருமை..வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
இதற்கு மெல்லிய மெட்டொன்று இட்டு பாடத் தோன்றுகிறது..! அழகிய வரிகள்..!:)
ReplyDelete