அடுத்தவனின்
அந்தரங்கத்தை
கண்டுகளிக்கவே
கண்கள்
கரிசனப்பட்டுக் கிடக்கிறது..
----------------------------
பாலியல் பற்றிய
பக்கங்களை
படித்துச் சுவைக்கும்போது
நாவது
நாட்டியமாடித்தான் திளைக்கிறது..
-----------------------------
பூவையும்
பூவையையும்
முகர்ந்து பார்க்கவே
மூக்கது முண்டியடிக்கிறது..
----------------------------
வாய் கூசும்
வார்த்தைகளை
கேட்பதற்காகத்தான்
காதுகளும்
கூர்தீட்டப்படுகின்றன..
------------------------------
வியர்வைத் துளிகளும்
விரசமாகும் அளவிற்கு
எந்நேரமும் உடலது
உஷ்ணப்பட்டுக் கிடக்கிறது..
----------------------------
தேகம்
தேன் கூடாய் மாற
ரோமங்கள்
தேன் பூச்சிகளாய் ஊற
தீண்டுதலில்
திண்டாடித் திளைக்கவே
தொடுதலை
தொண்டாக நினைக்கவே
உடலது
உளமாற நினைக்கிறது..
-----------------------------
அதற்காக மட்டுமே
அய்ம்புலன்களும்
அடிமையாகும்போது-அந்த
அய்ம்பூதங்கள் கூட
தற்கொலைதான்
செய்துகொள்ளும்..
----------------------------
அந்தரங்கத்தை
கண்டுகளிக்கவே
கண்கள்
கரிசனப்பட்டுக் கிடக்கிறது..
----------------------------
பாலியல் பற்றிய
பக்கங்களை
படித்துச் சுவைக்கும்போது
நாவது
நாட்டியமாடித்தான் திளைக்கிறது..
-----------------------------
பூவையும்
பூவையையும்
முகர்ந்து பார்க்கவே
மூக்கது முண்டியடிக்கிறது..
----------------------------
வாய் கூசும்
வார்த்தைகளை
கேட்பதற்காகத்தான்
காதுகளும்
கூர்தீட்டப்படுகின்றன..
------------------------------
வியர்வைத் துளிகளும்
விரசமாகும் அளவிற்கு
எந்நேரமும் உடலது
உஷ்ணப்பட்டுக் கிடக்கிறது..
----------------------------
தேகம்
தேன் கூடாய் மாற
ரோமங்கள்
தேன் பூச்சிகளாய் ஊற
தீண்டுதலில்
திண்டாடித் திளைக்கவே
தொடுதலை
தொண்டாக நினைக்கவே
உடலது
உளமாற நினைக்கிறது..
-----------------------------
அதற்காக மட்டுமே
அய்ம்புலன்களும்
அடிமையாகும்போது-அந்த
அய்ம்பூதங்கள் கூட
தற்கொலைதான்
செய்துகொள்ளும்..
----------------------------
ஒண்றும் இல்லாத விஷயத்திற்கு தான் இந்த உலகே அடிமை கவிஞரே...
ReplyDeleteஉள் நுழைந்து ஆய்ந்து அனுபவித்து ஒன்று இல்லை என்ற பிறகே அவற்றின் அடிமைத்தனத்தில் இருந்து மீள்கிறது...
அழகிய கவிதை
மாப்ள அருமையான வரிகள்..தமிழ் விளையாடுது!
ReplyDeleteசத்திய வார்த்தைகள் கவிஞரே... நன்று.
ReplyDeleteசிறப்பான கவிதை வாழ்த்துக்கள் பாஸ்
ReplyDeleteஅதற்காக மட்டுமே
ReplyDeleteஅய்ம்புலன்களும்
அடிமையாகும்போது-அந்த
அய்ம்பூதங்கள் கூட
தற்கொலைதான்
செய்துகொள்ளும்..//
நல்ல ஆதங்கம் நண்பரே
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDelete/கவிதை வீதி சௌந்தர்/விக்கி/கணேஷ்/
K.S.S.Rajh/M.R/
உண்மை தான் - இந்த ஐம்புலனுக்கும் அறிவே இல்லை
ReplyDeleteஅருமை...அருமை..
ReplyDeleteஇன்றைய வார இதழ்களின் கதைகள் கூட வாசகர்களின் ரசனைகளை கொச்சயாக்கி வருகிறது.. வருத்தமே..
ReplyDeleteசிந்திக்குமாறு சொன்னீர்கள் கவிஞரே..
ReplyDeleteஉண்மைதான்..