மழையின் போது
வெயிலை நோக்கி ஒரு பயணம்..
வெயிலின் போது
மழையை நோக்கி ஒரு பயணம்..
பயணங்கள் முடிந்தபாடில்லை..
மழையும் வெயிலும் தீர்ந்தபாடில்லை..வெயிலின் போது
மழையை நோக்கி ஒரு பயணம்..
பயணங்கள் முடிந்தபாடில்லை..
இரவின் போது
பகலை நோக்கி ஒரு பயணம்..
பகலின் போது
இரவை நோக்கி ஒரு பயணம்..
பயணங்கள் முடிந்தபாடில்லை..
இரவும் பகலும் தீர்ந்தபாடில்லை..
துன்பத்தின் போது
இன்பத்தை நோக்கி ஒரு பயணம்..
இன்பத்தின்போது
துன்பத்தை நோக்கி ஒரு பயணம்..
பயணங்கள் முடிந்தபாடில்லை..
இன்பமும் துன்பமும் தீர்ந்த்பாடில்லை
ஆண்மைக்காக
பெண்மை தேடி ஒரு பயணம்
பெண்மைக்காக
ஆண்மை தேடி ஒரு பயணம்
பயணங்கள் முடிந்தபாடில்லை
ஆண்மையும் பெண்மையும் தீர்ந்தபாடில்லை..
---------------------------------------------------------------------
அருமை...அருமை...
ReplyDeleteவாழ்க்கைப் பயணம் மட்டும் ஒருநாள் முடிந்துவிடும்! ஆனால், வாழ்க்கை முழுவதும் தேடலுடன் தொடரும் பயணங்கள் முடிவதில்லை! அதிலும் சுவாரஸ்யம் இருக்கத்தானே செய்கிறது! உங்கள் சொல்லாடல் பிரமாதம் கவிஞரே...
ReplyDeleteமாப்ள தேடல் இருக்கும் வரைக்கும் தானே வாழ்கை!
ReplyDeleteபயணங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன..தேவைகள், தேடல்கள் தீர்ந்துவிடாததால்! அருமை!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDelete/நண்டு@நொரண்டு/கணேஷ்/விக்கி/ஜீ/
பயணத்தின் சிறப்பையும் , எதிர்பார்ப்பின் தேவையும் இன்றைய சூழலுக்கு தகுந்த மாதிரி கவிதை புனைந்த உங்களுக்கு பெரிய நன்றிகள் கவிஞரே ..
ReplyDeleteவாழ்க்கையில் பயணங்கள் நிச்சயம் தேவை.அதுதான் வாழ்வை நகர்த்தும் சுவாரஸ்யம் !
ReplyDeleteமழையின் போது
ReplyDeleteவெயிலை நோக்கி ஒரு பயணம்..
வெயிலின் போது
மழையை நோக்கி ஒரு பயணம்..
மனம் இங்கு வந்தால் அங்கு செல்வதும் அங்கு சென்றால் கவனம் இங்கு வருவதும் ஒரு குழப்பத்தின் அடையாளமே
கவிதை அருமை நண்பரே