வணக்கம்
தோழர்களே.. மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மனமகிழ்கிறேன். சென்ற பதிவில்
சில பாடங்களையும் தேர்வு குறித்த செய்திகளையும் பதிவில் சொல்வதோடு
நிறுத்திக்கொள்ளாமல் காணொளி வாயிலாக சொல்லலாம் என்று எண்ணி முதல் காணொளியை
தங்களிடம் பகிர்ந்துகொண்டு பயனுள்ளதாய் இருக்கிறதா எனக் கருத்து
கேட்டிருந்தேன்..பயனுள்ளதாய் இருக்கிறது இதைத் தொடருங்கள் என்று தொடர்ந்து
மின்னஞ்சல் வந்து கொண்டிருக்கிறது.
ஒரு
சிலர் கருத்துரையிலும் சொல்லியிருந்தீர்கள்.சிலர் முகநூல் உரையாடலிலும்
சொல்லிவருகின்றனர்.இன்னும் சிலர் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு
தொடர்ந்து காணொளியை வெளியிடும்படி சொல்லி வருகிறார்கள்.ஆனாலும் நம்
தளத்திற்கு தொடர்ந்து வந்து வாசித்துக்கொண்டிருக்கும் மின் அஞ்சல் வாயிலாக
தளத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் 1900 தோழர்களையும் இந்தக் காணொளி
சென்றடைந்ததா எனத் தெரியவில்லை.நீங்கள் தான் எல்லோரிடமும் இதைக் கொண்டு
செல்ல வேண்டும். டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான தளத்தை பலர்
தேடிக்கொண்டிருக்கிறார்கள்.அப்படி தேடி முதல் முறையாக நம் தளத்திற்கு
வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.எனவே தோழர்களே.. பதிவையும்
காணொளியையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.
இந்தத் தளத்தில் பாடங்கள் குறித்து பகிர்ந்து கொண்டாலும் மாதிரி
வினாத்தாள் மற்றும் முக்கிய வினாக்கள் என பாட ரீதியாக பிரித்து வெற்றி
நிச்சயம் என்னும் மற்றொரு தளத்தில் பகிர்ந்து வருகிறேன்.சிலருக்குத்
தெரியும்.தெரியாதவர்கள் வெற்றி நிச்சயம் தளத்திற்கு சென்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாளை முதல் பதிவுகளையும் காணொளிகளையும் தொடர்ந்து வெளியிட
திட்டம்.மின்னஞ்சல் வாயிலாக தளத்தை தொடருபவர்களுக்கு புதிய பதிவுகள்
உங்களைத் தேடி வந்துவிடும்.மற்றவர்கள் தங்கள் மின்னஞ்சலையும்
இணைத்துக்கொண்டு புதிய பதிவுகளைப் பெறுங்கள்..
காணொளியை உடனுக்குடன் பெற விரும்பும் தோழர்கள் இங்கே சென்று
தங்களை இணைத்துக்கொள்லுங்கள்.மொத்த காணொளியையும் தேடிப் படிக்கும் வகையிலே
விரைவில் தனியாக தளம் அமைக்க இருக்கிறேன்.அது குறித்து தங்களுக்கு
அறிவிப்பு வரும்..
மூன்றாவது காணொளிளை இங்கே இணைத்திருக்கிறேன்..
காணொளி-3
ரொம்ப சந்தோஷம் தொடருங்கள், காத்திருக்கிறோம்.
ReplyDelete