2012 ல் பல நடிகர்களின் நடிப்பில் படங்கள் வெளிவந்திருந்தாலும் ரசிகர்களையும் தயாரிப்பாளர்களையும் விஜய்யும் விஜய் சேதுபதியும் மட்டுமே மகிழ்வித்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
இந்த வருடத்தில் இருவரும் தலா இரண்டு படங்கள் நடித்தனர்.இரண்டும் வெற்றி பெற்றிருக்கிறது.இந்த வருடத்தில் பெரிதாக வெற்றி பெற்ற படங்கள் என்று சொன்னால் விஜய் நடித்த நண்பன், துப்பாக்கி மற்றும் விஜய் சேதுபதி நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்றவைதான். பெயரில் இருவருக்கும் ஒற்றுமையிருக்கிறது.இருவரது பெயரிலும் 'ஜெய்' இருப்பதனால் வென்றார்கள் என்று சொல்லும் நியூமராலஜிகாரன் சொல்வதைக் கேட்பதற்கு ரசிகர்கள் முட்டாள்களில்லை.நல்ல கதையும் தொய்வில்லாத திரைக்கதையும் நல்ல இயக்கமும் இந்த இருவரையும் இந்த வருடத்தின் வெற்றி நாயகர்களாக்கியது என்பதே உண்மை.
விஜய்:
தமிழகத்தில் செல்வாக்கு மிகுந்த நடிகர். தன் அப்பாவின் முயற்சியினால் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி இப்போது தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்று தமிழின் முக்கிய நடிகராகத் திகழ்பவர்.தமிழகம் விடுத்து கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலும் செல்வாக்கு மிக்க நடிகர்.இவர் நடிப்பில் சென்ற ஆண்டில் வெளிவந்த 'சுறா' 'காவலன்' போன்ற படங்கள் வந்த வேகத்தில் பெட்டிக்குள் சுருண்டதால் வெற்றிப்படம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயாத்தில் இயக்குனர் ஷங்கருடன் ஜோடி சேர்ந்து 'நண்பன்' படத்தில் நடித்து வெற்றி கண்டார்.தொடர்ந்து வெற்றிப்படம் கொடுக்கும் முனைப்போடு வெற்றிப்பட இயக்குனர் முருகதாஸோடு இணைந்து துப்பாக்கி படத்தில் நடித்தார். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று திரையுலகத்திற்கும் நடிகர் விஜய்க்கும் புத்துணர்ச்சியைத்தந்தது.
விஜய் சேதுபதி:
கூத்துப்பட்டறையில் கேஷியராக இருந்து சினிமா வாய்ப்புகளைத் தேடி சிறு சிறு வேடங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருந்த விஜய் சேதுபதி சீனு ராமசாமியின் 'தென் மேற்கு பருவக்காற்று' படத்தில் நாயகனாகி வெற்றி கண்டவர்.அதைத்தொடர்ந்து 'நாளைய இயக்குனர்' கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'பீட்சா' படத்தில் நடித்தார்.படம் வெற்றி பெற்றது.சசிக்குமாரோடு பிரபாகரன் இயக்கத்தில் 'சுந்தரபாண்டியன்' படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.அப்படமும் வெற்றி பெற்றது.அதைத்தொடர்ந்து பாலாஜியின் இயக்கத்தில் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் நடிக்க அதுவும் வெற்றிகரமாக இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது.
ஒப்பீடு:
விஜய், விஜய் சேதுபதி தலா இரண்டு படங்களையும் வெற்றிப்படங்களாக்கியிருந்தாலும் அதிக வசூலை வாரிக்கொடுத்தது விஜய் நடித்தப் படங்களே.மாறாக இருவர் நடித்தப் படங்களும் தோல்வியை சந்தித்து இருந்தால் பெரும் நஷ்டத்தை அடைந்திருப்பதும் விஜய் நடித்த இரண்டு படங்களுமே ஆகும்.இரண்டுக்கும் காரணம் பட்ஜெட்.
ரசிகர் பட்டாளம் கொண்ட பெரிய நடிகர் விஜய்.அவர் நடித்த இரண்டு படங்களையும் இயக்கி இருப்பவர்கள் இந்தியாவின் முதல் இரண்டு இயக்குனர்களான ஷங்கர் மற்றும் முருகதாஸ்.இந்த இரண்டு படங்களிலும் பணியாற்றிய தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்திய அளவில் புகழ் பெற்றவர்கள்.இந்த இரண்டு படங்களும் கோடிகளில் தயாரிக்கப்பட்டவை.ஆதலால் இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.மாறாக தோல்வியைச் சந்தித்திருந்தால்தான் ஆச்சர்யப்படவேண்டும்.
எந்தவொரு ரசிகர்கனுக்கும் பழக்கப்படாத நடிகர் விஜய் சேதுபதி.அவர் நடித்த இரண்டு படங்களையும் இயக்கியது புதுமுக இயக்குனர்கள்.திரையுலகத்திற்கு அடையாளம் தெரியாதவர்கள்.இப்படங்களில் பணியாற்றிய தொழில் நுட்பக்கலைஞர்கள் அனைவரும் புதியவர்கள்.இரண்டு படங்களும் லட்சங்களில் எடுக்கப்பட்டவை கோடிகளில் அல்ல.ஆனாலும் இந்தப் படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது என்பது ஆச்சர்யம்தான்.தோல்வியடைந்திருந்தால் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
அப்படி பார்க்கும்போது ஷங்கர் மற்றும் முருகதாஸைக் காட்டிலும் சுப்புராஜ் மற்றும் பாலாஜி போன்றவர்கள் 2012 ம் ஆண்டில் பாராட்டப் படவேண்டிய இயக்குனர்கள். படைபலங்களைத் திரட்டி வெற்றி பெற்ற விஜய்யைக் காட்டிலும் எந்தவொரு படையும் பலமும் இல்லாமல் வெற்றியைக்கண்ட விஜய் சேதுபதியை ஒரு படி தாண்டி பாராட்டலாம்.
விஜய் சேதுபதி இனி தேர்ந்தெடக்கும் பாதை தான் அவர் வெற்றியைத் தீர்மானிக்கும்
ReplyDeleteabsolutely correct
ReplyDeleteரெண்டு பேரையும் compare பண்ணுறது தவறு... விஜய் ஆரம்ப காலத்துல பட்ட கஷ்டங்கள் அதிகம் ... அப்பா டைரக்டர் னா மட்டும் படம் ஓடாது .
ReplyDeleteஅன்பின் மதுமதி - விஜய் சேதுபதி மேன்மேலும் முன்னேறுவார் - இது நிச்சயம் - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete# //படைபலங்களைத் திரட்டி வெற்றி பெற்ற விஜய்யைக் காட்டிலும் எந்தவொரு படையும் பலமும் இல்லாமல் வெற்றியைக்கண்ட விஜய் சேதுபதியை ஒரு படி தாண்டி பாராட்டலாம்.// நிச்சயமாக .
ReplyDeleteவேண்டுகோள் : எழுத்துகள் படிப்பதுக்கு சிரமமா இருக்குன்னேன் . வெள்ளை கலர அதிகப்படுத்துங்க ....