புது வரவு :
Home » , , , » எதையும் செய்ய முற்படுகிறவர்கள்..

எதையும் செய்ய முற்படுகிறவர்கள்..



நாளை எதிர்பார்த்தது
இன்றே கிடைத்துவிட்டது.
இன்று கிடைக்கவிருந்தது
என்று கிடைக்குமெனத் தெரியவில்லை


******


இருக்கும்போதே
வாழ்ந்துவிடலாம்-இடையில்
இறந்துபோகிறவர்களை
பார்க்கும்போது தோன்றுகிறது


******

நேற்றைய பொழுதுகள்
கண்ணிற்கு தெரியவில்லை..
நாளைய பொழுதுகள்
கண்ணிற்கு தெரிவதில்லை


******

காணாமற்போனவர்களை
கண்டுகொண்டால்-அந்த
காணாமல்போன நாட்களெல்லாம்
காணாமலேயே போய்விடுகின்றன..


******

நால்வரை
உற்சாகப்படுத்துவோம்-அதில்
ஒருவராவது
நம்மை உற்சாகப்படுத்துவார்..


******

எதற்கும் தயாராக
இருப்பவர்கள்தான்
எதையும் செய்ய
முற்படுகிறவர்கள்....


******

சிலருக்கு
வாழ்க்கையில் பிரச்சனை..
சிலருக்கு
பிரச்சனையில் வாழ்க்கை..


******                                                                                           -என் முகநூலிலிருந்து

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

1 comment:

  1. முகநூல் வாசகமாயினும் அருமையான சிந்தனை மொழிகள்! தொகுத்து தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com